நெஞ்சம் பொறுப்பதில்லையே...

மாடவீதியில் மதில்கள் பளபளக்க
மண்குடிசையில் உணவின்றி ஏழையுறங்க
அயலவர் ஆண்ட ஆட்சிப் போக
அரசியல்வாதிகளின் இன்னலாட்சி காண
எல்லாவளம் நாட்டில் பெற்ற நிலைமாறி
எல்லையில்லா கொடும்நோய் நிலைவந்து
வழியறியும் பலகையில் சுவரொட்டிபூச
வழிப்பாதையில் குப்பைவண்டி குப்பை வீச
பெண்மைப்போற்றும் கண்ணகி நாட்டில்
பெண்மைவிற்கும் விலை மாதுவாக
புண்ணிய செயல் புரியும் மருத்துவத்துறையில்
புதுமை களவு தான் செயல் உறுப்பு திருட்டும்
இரும்பாக இருக்க வேண்டும் இளைஞன்
துரும்பாக மாறுகிறான் போதை உண்டு
இறைவனிடம் புகார் அளிக்க இதயம் நாடுது
இயற்கை வடிவில் இறைவன் தரும்
துன்பம் கண்டு இதயம் நொறுங்குது.
நெஞ்சம் பொறுப்பதில்லையே இன்னும்
பல செயல்களை விழிகள் காண்பதால்...
                               -பிரவீணா தங்கராஜ்.
 

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1