வழிச்சொல்
இமைமூடியும் விழிகள் நீரை நிறுத்துவதில்லை-நீ
இல்லையென்ற வெறுமையை மனம் ஏற்பதில்லை
உன் வாசமில்லா சுவாசம் கொல்லுதிங்கே
உன் காதலெனும் கடலில் கலந்தவள்
உன் குறும்பெனும் தேனில் ஊறியவள்
உன் அருகாமையில் அன்பை கண்டவள்
நீயில்லா வெற்றிடத்தில் வெறுக்கிறேன்
நீயெங்கே நீயெங்கே என பிதற்றுகின்றேன்
வானவில்லில் வண்ணங்கள் சேர்க்க
வாழ்க்கையெனும் கடலில் மூழ்க வழிச்சொல்.
- பிரவீணா தங்கராஜ்.
Comments
Post a Comment