இடுகைகள்

டிசம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மர்ம நாவல் நானடா-23 (முடிவுற்றது)

  அத்தியாயம்-23    யாஷிதா அவனின் முனங்கல் கேட்டு மாடி ஹாலில் நடந்தவள் திரும்ப, வேகமாய் வந்தவன் அவளை இடித்து, அணைத்து உருண்டப் பின்னே சுதாரித்தான்.    அவள் மீது தன் தேகத்தை மொத்தமாய் சரித்திருந்தான். அந்த களோபரத்திலும் அவள் தலைக்கு முட்டுக்கொடுத்து அவள் சிரத்தை தாங்கியிருந்தது வலது கை. இடது கையோ அவளது இடையை வளைத்திருந்தது.   அவளோ சுற்றம் மறந்திருக்க, ஹரிஷின் கணம் தாளாமல் எழ முயன்றாள். ஹரிஷே வேகமாய் பதறிவிட்டு எழுந்திட, இருவருக்கும் மூச்சு வாங்கியது.    "நான் என்ன இன்னும் இன்விசிபிளாவா இருக்கேன்." என்று யாஷிதா கேட்க, "இ.. இ..ல்லை என்று தலையாட்டவும் அவனது முகமாறுதல் அவளுக்குள் ரசிப்பை ஏற்படுத்த, அளவிடாத காதலை நெஞ்சில் எடுத்துரைத்தது.    இதற்கு மேல் மனக்கடலில் காதல், கடலணை  உடையவும், யாஷிதா அவன் காலரை பற்றி இழுத்து, அலமாரி கதவை திறந்து, உள்ளே நுழைந்து சாற்றினாள்.      "உன்கிட்ட நிறைய பேசணும். என்னால இதுக்கு மேல மறைக்க முடியலை.     ஏதாவது கிறுக்குதனமா பேசிட்டு பிறகு நீ பின்வாங்கிட்டா? அதனால கேட்கவே தயக்கமாயிருக்கு. ஆனா கேட்காமலும் இங்கிருந்து போக முடியலை. நானும் இந்த பேச

புகைக்கூட்டம்

மண்ணிலிருந்து விண்ணிற்கு மலர் தூவல் புகைப்போக்கி வழியாக !       --  பிரவீணா தங்கராஜ் .

இரவில் விமானம்

ஐந்து நிமிட எரிநட்சத்திரம் வானில் விமானம் .     --  பிரவீணா  தங்கராஜ் .

இயற்கையோடு என் வாழ்க்கை

அழகிய அருவி ,   அருகினில் ஓடம்  ஆகாய மேகம் ,        ஆளவரும் சூரியன் . இசைக்கும் குயில்கள்  , இன்சுவை கனிகள் . ஈரம் கொண்ட தாமரை -அதற்மேற் ஈர நிர் பனித்துளிகள் , உறங்க வைக்கும் தென்றல் ,       உரிமையிடும் மலர்வாசம் . ஊஞ்சலிடும் மர விழுது ,                         ஊர்ந்து செல்லும் வண்ணத்துப்பபூச்சி. என்னையே மறந்தேன். எழுதும் சில கவிகளில் , ஏற்றம் கொண்ட வானவில் , ஏணியாக உயர சொல்லும் .  ஐயம் இன்றி உளவுவேன் , ஐம்பூதம் துணையுடன் , ஒரு தனிமை உலகில் , ஒருத்தியாய் மண்ணில் , ஓங்கிய மூங்கில் , ஓதும் வண்டுகளின் ரிங்காரம் . ஔவை கூட வாழவில்லை  ஔவை கூட நினைக்கவில்லை  அஃ கணமே வாழ்வோம்  அஃதுவே வாழ்க்கை . -- பிரவீணா  தங்கராஜ் . 

அமாவாசை

களங்கமற்ற நிலவின் மீது பழி சுமத்திவிட்டனரோ ? வானில் புதைந்து கொண்டது .         --  பிரவீணா  தங்கராஜ் .

தந்தை மனம்

சாக்கடை தொழிலாளிக்கு மணக்கிறது , அவன் பிள்ளை கல்வி கற்பதால் .           --   பிரவீணா  தங்கராஜ் .

மது

இந்தியாவில் குடிமக்களும் இருக்கின்றனர் . மதுபானத்தை கையில் ஏந்தியப்படி .           --   பிரவீணா   தங்கராஜ் .

அரசியல் மேடை

பொய்களை மேடை போட்டும்  பேசலாம் வாக்குறுதி என்ற பெயரில் .            --  பிரவீணா  தங்கராஜ் .

கணிப்பொறி

படம்
வியத்தகு நிறைந்த உலகில் விஞ்ஞானம் விசித்திரம் படைக்கும் விளையாட்டு மானிடனின் மகத்துவம் மாசற்றதே சிறிதளவு மனித மூளையில் சீற்றமிகு உலகம் உருவாகும் தொலைக்காட்சி போன்றது ஒரு தோற்றம் தொட்டு  பழகினால் நாட்டில் ஏற்படும் முன்னேற்றம் இதிலும் சில சமூக விரோத செயல் என்னவென்று கூற இருப்பினும் இரண்டும் கலந்த படைப்பே ! கணிப்பொறியின் கண்டுபிடிப்பு நாட்டிற்கு கண்ட நாள் முதல் உயர்வு மட்டுமே அதிகம்.              -- பிரவீணா தங்கராஜ் .

குழந்தை தொழிலாளி

என் மகன் வேலைக்கு செல்கிறான் . பெருமைப்பட்டு அல்ல , வருத்ததுடன் பெற்றோர் .                 --  பிரவீணா  தங்கராஜ் . *ஏப்ரல் 2009 - இல் "மங்கையர் மலரில் " பிரசுரிக்கபட்டவை  .

காலம்

அடுத்த ஜென்மத்திலாவது சுறுசுறுப்பாக வாழா வேண்டும் காலத்தை போல .               -- பிரவீனா தங்கராஜ்.

இறைவன் ஒருவனே !

படம்
எங்கு இருக்கிறாய் என்பார் விஞ்ஞான மேதை எங்கும்  இருக்கிறாய் என்பார் மெய்ஞான மேதை எங்கும் இல்லை என்பார் அறியாமை பேதை  நீ படைத்த மனிதனுக்கு பலவித பெயர் நீ இன்றி அசையாதோ  உலகத்தில் உயிர் நினைப்பது எல்லாம் நடந்தால் உனக்கேது பேர் உன் அருளோ ஜாதி , மதம், பேதம் கடந்தது உன்னையும் பிரிப்பது மனிதனின் முட்டாள் தனமானது உண்மை அறிந்தேன் "கடவுள் ஒருவனே "என்று புரிந்தது உன்னை என்னில் ஏழுத வைத்ததும் நீயே என விளங்கியது                              --   பிரவீணா  தங்கராஜ் .

மழலை மொட்டே !

படம்
கொஞ்சும் மழலை பேச்சு பிஞ்சு பொன் விரலின் பஞ்சு தன்மை தன்னிலை உணரா நிலையில் தத்தி நடக்கும் பாதம் நடைப்பழகும் தங்க தேரே கை விரல் நீ கடிக்க வலிக்காது உன் பற்களின் வளர்வை கண்டு சிரிக்கும் மழலை மொட்டே! உன் அழுகையும் அழகு தான் பொம்மை வைத்து விளையாடும் கரும்பே! சுட்டி தனம் செய்யும் உன் குறும்பு உன்னிலை உணராது உறங்கையிலே தாயின் மனம் இரசிக்கும் உன்னையே! இப்படியே இருந்து விட கூடாதா? என என்னையும் ஏங்க செய்து வையகம் மறக்க செய்கிறதே !                                -- பிரவீணா  தங்கராஜ் . *ஜனவரி 16 -2009-இல் " ராணி முத்து " இதழில் சுருக்கமாக பிரசுரிக்கப்பட்டது .

வினோத கணக்கு

இருபது வருடத்தினை விட இரண்டு நிமிடம் பெரியது காதலில் மட்டும் .              --  பிரவீணா தங்கராஜ் .

கால சுழற்ச்சி

இமைகளின் திறப்பால் இரவு விடியாது .        --   பிரவீணா  தங்கராஜ் .

பொம்மை கூற்று

"பொம்மை ஒன்று சொன்னது" நானிலம் தேடினாலும்  என் மழலை தாய் போல் இல்லை  மலர் பாதத்தால் மிதிப்பாள் ஒற்றை விரலால் குடைந்து ஒரு விழியை பிதுக்குவாள் சிக்கிய சிகையின  சிங்காரமாக அலங்கரிபாள் எச்சி ஒழுகிய நிலையில் முத்தம் நூறு தருவாள் கண் , மூக்கு என வாயை தவிர  முகத்தில் சாதம் ஊட்டுவாள் "பொம்மை ஒன்று சொன்னது"   நானிலம் தேடியும்  என் மழலை தாய் போல் இல்லை                      --  பிரவீணா  தங்கராஜ்  .

மழைக்காதல்

படம்
பூமிப் பெண்ணை  வானம் காதலிக்க  மேகம் என்ற  கருமை கொடூரன் தடுக்க  இடி , மின்னல் கொண்டு  ஓர் யுத்தம் நடக்க  மழையாக வந்து  பூமியை கைப்பிடித்தானோ !                  --  பிரவீணா  தங்கராஜ் .

நேர்மையை பயிரிடு

படம்
                                  நேர்மையை பயிரிடு                                                          இன்று ஞாயிறு என கடற்கரை கூட்டம் சொல்லாமல் சொல்லியது. கதிரவனுக்கு வேலை தொடங்கும் நேரம். இன்று அவனது பஜ்ஜி கடையில் கூட்டமும் அதிகம். ஓரமாக தன் மகன் சிவானந்தம் எனும் சிவா விளக்கு ஓளியில் படித்திருக்க, கதிரவனுக்கு உதவியாக மனைவி கயல் வேலையில் செயல்பட்டாள்.                              அப்பொழது அங்கே வந்த பரணி புன்னகை புரிந்தவரே ,                  '' அண்ணே ! எனக்கு ஒரு பிளேட் பஜ்ஜி '' என்றான் . பரணி கடற்கரையை சுற்றி பார்க்க வந்த மக்களில் ஒருவன் அல்ல, மக்கள் ஏமாறும் போது அவர்களது உடமையை திருடும் குணம் உடையவன்.  இது கதிரவனுக்கும் தெரியும்.                                பரணியின் முதல் சந்திப்பு அவனது குணத்தை உறுதி படுத்தவில்லை. முதலில் அவனது வருகை  வேலை தேடி வரும் இளைஞனின் ஒருவனாக தான் சென்னைக்கு வந்தான். சென்னை வந்தவரை வாழா வைக்கும் அல்லவா? ஆனால் அந்த வாழ்வில் தான் எத்தனை? எத்தனை? கீழே விழும் நெல்லிக்காயை கூறு கட்டினால் பணம் . குப்பைமேனி கூட கூறு கட்டி சளிக்கு ஏற்

நீர்

படம்
உணவுக்கு அரசியே ! நீர் நீ அல்லவா !  தீயினை தனிக்க வந்தவளே !  நீர் நீ அல்லவா ! தரணி எங்கும் செழிப்பை தர  தன்னை தருபவளே ! நீர் நீ அல்லவா ! அகிலத்தின் முப்பகுதி ஆள்பவளே !  நீர் நீ அல்லவா ! காலத்தின் கட்டாயத்தினால்  ஆண்டவன் அன்பாய்  அருளும் மழையும்   நீர் நீ அல்லவா !  பூமியில் மறைந்து  புதுமைதனை செய்து  புரட்சி புரிபவளே ! நீர் நீ அல்லவா ! மலைகளின் மகுடத்திலிருந்து  மண்ணில் தவழ  வரும் நதியே !  நீர் நீ அல்லவா !   --  பிரவீணா  தங்கராஜ் .

பனித்துளி

படம்
புல்வெளி முகத்தில் பருக்கள் அதை நீக்க  தான் மஞ்சள் சூரியன் வந்ததோ !                --  பிரவீணா  தங்கராஜ் .

கண்ணாமூச்சி

கரை தொடும் வெற்றி வீரனாக , அலை . "ஒ " அதனால் தான் நுரை சிரிப்பு பொங்கி வழிகிறதோ !             -- பிரவீணா  தங்கராஜ்.

வினாத்தாள் (question paper)

படம்
தேர்வை எதிர் கொள்ளும்  நான் ​ - இன்று  தேர்வில் திணறும் மாணவியாக  உன்னைப் பார்த்தால்..!                --  பிரவீணா  தங்கராஜ் .

சவ ஊர்வலம்

இராஜ உபசரிப்பில்            மலர்வன தூவலில்                      பல வித ஆரவாரத்துடன்                                ஆடல் , பாடல் , வெடி சத்தத்துடன்                                            இன்னிசை கச்சேரி யுடன்                                                        வீதியில் உலா வருகிறது                                                                     இடுகாட்டில் புதைந்து கொள்ள !                                                                                                            --  பிரவீணா  தங்கராஜ் .

மலரே !

படம்
"பூக்களை பறிக்காதீர் " இது விளம்பரம் அல்ல என் மனதின் வேண்டுக்கோள் அது எப்படி? பறிக்கும் போது சிரிக்கின்ற மலரை கிள்ளி தலையில் சூடுவது மனித மனமே! யார் உனக்கு கற்று கொடுத்தார்? குழந்தை போல் சிரிக்கும் மலரை கிள்ளுவதற்கு  மலர் மீது படர்ந்திருக்கும் பனித்துளியை பார்  கூட்டு குடும்பமாக காட்சி தரும் மலர் தோட்டம் பார்  தொட்டு பார் மலரின் மென்மை புரியும் தன் வாழ்நாள்  ஒன்று என அறிந்த மலர் வருந்துவதில்லை பகுத்தறிவு கொண்ட மனிதனோ மலரை பறிக்கின்றான் பகுத்தறிவு அற்ற தேனியோ மலருக்கும் வலிக்காது தேனெடுக்கும் மனித மனமே ! உன் எண்ணத்தால் நாற்றம் வீசியது  உலகில் மலர் மணம் வீசியதால் உலகமே விசித்திர மயமானது . "பூக்களை பறிக்காதீர் " இது மனித மனதிற்கு மட்டும் அல்ல, கடவுளே உனக்கும் தான் வழிபடுதலுக்கும் கூட மலரை வஞ்சிக்காதே !                     -- பிரவீணா  தங்கராஜ் .

ஒன்றுபடு !

படம்
ஆறுகள்  ஒன்று பட்டதால்  வற்றாத நதிகள் கிடைத்தது  பாதைகள்  ஒன்று பட்டதால்  தெளிவான வழி கிடைத்தது  பூக்கள் ஒன்று பட்டதால்  வையகமே மணம்  கமழ்ந்தது  மேகம் ஒன்று பட்டதால் பூமிக்கு மழை வந்தது  ஐவிரல் ஒன்று பட்டதால்  உழைப்பின் உன்னதம் புரிந்தது  வையகத்தின் வாழ்வு செழிக்க  மனித மனமே ஒன்று படு !                           -- பிரவீணா  தங்கராஜ் .

zoo

படம்
வீட்டில் இருந்தபடியே ஒரே இனத்தை சார்ந்த பல முகம் கொண்ட பல குணம் கொண்ட மனித விலங்கை பார்க்கிறது உயிரியல் பூங்காவில் ...                 --   பிரவீணா  தங்கராஜ் .

உன் கையில் உலகம்

படம்
வெற்றியை பணிந்திடு  தோல்வியை இரசித்திடு ! உன் திறமை என்ன ? உனக்குள் யோசி ! சாதனையை தேடாதே  அதனை உருவாக்கு. உலகத்தில் உன்னை காணாதே  உலகம் உன்னை காணட்டும் . காயங்களை அனுபவமாக மாற்று  அனுபவம் உன் வாழ்வில் ஒளி வீசும் .             --  பிரவீணா  தங்கராஜ் .

கல்வி

பண்பில் சிறக்க பாங்காய் நடந்திட  பாரில் செழிக்க வேண்டுவது கல்வி இருளில் முழுகும் இந்தியாவை இனிதாய் மாற்ற வேண்டுவது கல்வி தன்னிலை உணர்ந்த மனிதராய்  தன் காலில் நிற்க வேண்டுவது கல்வி சமுதாய இன்னலை களைந்திட சரித்திர நூலை கற்றிட வேண்டுவது கல்வி முட் போன்ற வாழ்க்கை பாதையை முழுவதும் ரோஜாவனமாக மாற்றபடுவது கல்வி                                      -- பிரவீணா  தங்கராஜ் . *ஜூன் 2009 மாத " மங்கையர் மலரில்" பிரசுரிக்கப்பட்டவை .

நாளைய உலகம்

பார்த்து சென்று வா    என்றனர் பெற்றோர் படிக்கட்டில் பயணமா?    என்றனர் நடத்துனர் பார்த்து முறைத்தான்     படிக்கட்டு இளைஞன் பாரதாமோ இன்றைய     இளைஞன் கையில்  படிக்கட்டில் தொங்கியபடி     இளைஞன் அய்யகோ! பாலகனும் படிக்கட்டில  நாளைய உலகமும்?                           -- பிரவீனா  தங்கராஜ்