நேர்மையை பயிரிடு
இன்று ஞாயிறு என கடற்கரை கூட்டம் சொல்லாமல் சொல்லியது. கதிரவனுக்கு வேலை தொடங்கும் நேரம். இன்று அவனது பஜ்ஜி கடையில் கூட்டமும் அதிகம். ஓரமாக தன் மகன் சிவானந்தம் எனும் சிவா விளக்கு ஓளியில் படித்திருக்க, கதிரவனுக்கு உதவியாக மனைவி கயல் வேலையில் செயல்பட்டாள்.
அப்பொழது அங்கே வந்த பரணி புன்னகை புரிந்தவரே ,
'' அண்ணே ! எனக்கு ஒரு பிளேட் பஜ்ஜி '' என்றான் . பரணி கடற்கரையை சுற்றி பார்க்க வந்த மக்களில் ஒருவன் அல்ல, மக்கள் ஏமாறும் போது அவர்களது உடமையை திருடும் குணம் உடையவன். இது கதிரவனுக்கும் தெரியும்.
பரணியின் முதல் சந்திப்பு அவனது குணத்தை உறுதி படுத்தவில்லை. முதலில் அவனது வருகை வேலை தேடி வரும் இளைஞனின் ஒருவனாக தான் சென்னைக்கு வந்தான். சென்னை வந்தவரை வாழா வைக்கும் அல்லவா? ஆனால் அந்த வாழ்வில் தான் எத்தனை? எத்தனை? கீழே விழும் நெல்லிக்காயை கூறு கட்டினால் பணம் . குப்பைமேனி கூட கூறு கட்டி சளிக்கு ஏற்றது , என்றாலும் விற்று விடும் . எதையும் கடை போட்டு பணம் பார்க்கலாம்.
பரணி இது போன்று யோசித்து இருந்தால் பரவாயில்லையே ............ அவனோ கடற்கரையில் நிறுத்தும் வண்டியின் பெட்ரோல் திருடுவது, பிக்பாக்கெட் என கற்று தேர்ந்தான்.
ஆனால் பரணியின் மாற்றம் அதிகமாகவே இருப்பதை கதிரவன் நன்கு உணர்ந்தான். ஒடிந்த தேகம் எவ்வித ஆபரணம் இன்றி ஒரு வேளை உணவிற்கு தவித்தவன் இன்று , புது ஆடை, நகை, வண்டி என வருவது வியப்பு. இது எல்லாம் மற்றவரை ஏமாற்றி பெற்றது . கதிரவனுக்கு நன்கு தெரியும் . பரணி வரும் பொழுது எல்லாம், ''வா அண்ணே ! எனக்கு ஒத்தாசையாக இரு பணம் பார்க்கலாம். நீயும் எவ்வளவு நாளா கஷ்டப்படுவ'' என கூருவது உண்டு.
ஏனோ இன்று கதிரவனுக்கும் இந்த மாற்றம் மனதில் ஏதோ ............ பிசைந்தது ஏன்? நாமும்? என்று எண்ணினான். மனம் ஒரு குரங்கு அல்லவா ? அனால் மனம் நல்லதை போதித்தது . இருப்பினும் உறக்கம் வர மறுத்து தூங்காது தவித்தான்.
காலை வேளை மந்தையாக விடிந்தது , இருப்பினும் வேலையில் குறை இல்லை. காலை இட்லி ,பூரி விற்பது வாடிக்கை என்பதால் வேலையை கவனித்தான் . தன் மகன் சிவாவை பள்ளியில் விட்டு விட்டு மெல்ல நடந்தான். நாமும் படித்திருந்தால்............படிப்பு முக்கியம் என அறிவின் ஓட்டம் சொல்லியது . இப்பொழுது என்ன செய்ய.
திடீரென அவனது காலில் ஒரு மணிபர்ஸ் தட்டியது. அதை எடுத்த போது 1000 ரூ, 500ரூ, தாள்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. மேலும் புகைப்படம், டிரைவிங் லைசன்ஸ் , ஏ .டி .எம் கார்டு, கார் சர்விஸ் பில் இருந்தன. கதிரவனுக்கு ஒன்றும் புரியவில்லை , குழப்பமாக இருந்தது . என்ன செய்ய? மனம் தவறு செய்யும் சூழலில் இருக்கும் போது அத்தவறை செய்யாது இருந்தால் மட்டும் மனிதன் யோக்கியவன் ஆவான். அவன் மனக்குழப்பம் தெளிந்த நீரோடையாக மாறியது.
பர்ஸில் உள்ள கார் சர்விஸ் பில்லில் கார் நம்பர் இருப்பதை பார்த்தான். அக்காரும் அருகே இருப்பதை கண்டு பிடித்தான் . அங்கே இருந்த கல் திண்டில் அமர்ந்தான் கால் மணி நேரம் கழித்து அந்த பர்ஸ்க்கு உரியவர் வருவதை கண்டான் . பர்ஸ் கீழே கிடைத்தது என கூறி ஒப்படைத்தான். அந்த பர்ஸை தொலைத்தவர் தன் செல்லில் கதிரவனை புகைப்படம் ஒன்றை எடுத்து கொண்டு பெயர் மற்றும் தொழில், இருப்பிடம் கேட்டு பெற்று கொண்டு நன்றி உரைத்து சென்றார்.
ஏதோ ஒரு பாரம் விலகிய சுழலை கதிரவன் உணர்ந்தான். நிம்மதியும், சந்தோஷமும் பின் தொடர்வதை கண்டான். பரணியின் நினைவு மறந்தே போயின.
தன் மனைவி கயலிடம் நடந்ததை கூறினான் . கயலும் , மனம் மகிழிந்தாள் . அடுத்தவரது உடைமை நம்மிடம் இருப்பது நெருப்பை மடியில் சுமப்பதும் ஒன்றே ! என்றாள் . எப்பொழுதும் போல நேரம் போனது . மாலை பஜ்ஜி கடையினை திறந்தான் . தன் மகன் சிவா வீட்டுப்பாடம் எழுதி கொண்டு இருந்தான்.
மீண்டும் பரணி அங்கே வந்து ,
''என்னோடு வாங்க கதிரவன் அண்ணே, பணம் சேர்க்கறது சுலபம் கொஞ்சம் ஏமாற்ற தெரிந்தால் போதும் உலகில் பணக்காரனாக வாழலாம் '' என ஆசை வார்த்தை கூறி ஆரம்பித்தான். கதிரவனோ அதற்கு,
'' நிறுத்து பரணி இனி , இது போல பேசிக்கிட்டு இங்கே வராதே . உன் நோக்கம் எனக்கு பிடிக்கலை . நீ உன் இஷ்டப்படி இரு . நான் நானாகவே இருக்க விரும்புகிறேன் '' என்றான். பரணி அதற்கு,
''பிழைக்க தெரில சரி சரி விடு. நான் இனி தொந்தரவு பண்ணவில்லை'' என்று கிளம்பினான் . இதை எல்லாம் சிவா எழுதி கொண்டே தந்தையை கவனித்தான் கதிரவன் அதை அறியவில்லை.
காலை பொழுது விடிந்தது. 'தெருவில் சிலர் கதிரவன் எங்கே? கதிரவன் எங்கே ?' என கயலிடம் விசாரித்தனர். உள்ளிருந்து கதிரவன் எழுந்து வெளி வந்தான். பேப்பர் கொடுத்து அனைவரும் கை குலுக்கினர்.
பேப்பரை பார்த்தவனுக்கு அதிர்ச்சி ஆம். கடற்கரையில் நிறுத்தப்படும் வண்டியில் இருந்து பெட்ரோல் திருட்டு கும்பல் கைது . இவர்களில் சிலர் பிக்பாக்கெட், செயின் திருடர்கள் உண்டு என பெயர்கள் வரிசையாய் ......... அதில் மூன்றாவது பெயர் பரணி. அந்த கும்பலில் ஒருவனாக முகம் காட்டி இருந்தான்.
அருகில் இருந்த சிலர் கதிரவனை நிலைக்கு கொண்டு வந்து , ''அண்ணே ! மேலே இருக்கிற செய்தியை பாரு'' என்று சுட்டி காட்டினர். அதில் நேற்று கடற்கரையில் கமிஷனர் பர்ஸ் தவறுதலாக தொலைந்தது. அது நேர்மையான பஜ்ஜி கடை காரரிடம் கிடைத்தது. அதில் கார் சர்வீஸ் பில்லில் உள்ள வண்டி நம்பரை கொண்டு கதிரவன் (பஜ்ஜி கடைக்காரர் ) ஒப்படைத்தார். கமிஷனர் அவரது நேர்மையை பாராட்டி அவருக்கு இன்று கடற்கரை காவல் நிலையத்தில் மாலை பரிசு தருவதாக கூறப்படுகிறது .
கூட்டதினர் கதிரவனை மனமாற பாராட்டினர் . அப்பொழுது ஓடி வந்து , அவனது மகன் அப்பா நான் உங்களை போலவே நேர்மையாக இருப்பேன் . அடுத்தவர் பொருளுக்கு ஆசை பட மாட்டேன். நேற்று நீங்க பரணி மாமா கிட்ட பேசின மாதிரி யாரையும் ஏமாற்றாமல் வாழ்வேன் . கெட்டவரோடு சேர மாட்டேன் என முத்த மழை பொழிந்தான்.
அருகில் இருந்த சிலர் கதிரவனை நிலைக்கு கொண்டு வந்து , ''அண்ணே ! மேலே இருக்கிற செய்தியை பாரு'' என்று சுட்டி காட்டினர். அதில் நேற்று கடற்கரையில் கமிஷனர் பர்ஸ் தவறுதலாக தொலைந்தது. அது நேர்மையான பஜ்ஜி கடை காரரிடம் கிடைத்தது. அதில் கார் சர்வீஸ் பில்லில் உள்ள வண்டி நம்பரை கொண்டு கதிரவன் (பஜ்ஜி கடைக்காரர் ) ஒப்படைத்தார். கமிஷனர் அவரது நேர்மையை பாராட்டி அவருக்கு இன்று கடற்கரை காவல் நிலையத்தில் மாலை பரிசு தருவதாக கூறப்படுகிறது .
கூட்டதினர் கதிரவனை மனமாற பாராட்டினர் . அப்பொழுது ஓடி வந்து , அவனது மகன் அப்பா நான் உங்களை போலவே நேர்மையாக இருப்பேன் . அடுத்தவர் பொருளுக்கு ஆசை பட மாட்டேன். நேற்று நீங்க பரணி மாமா கிட்ட பேசின மாதிரி யாரையும் ஏமாற்றாமல் வாழ்வேன் . கெட்டவரோடு சேர மாட்டேன் என முத்த மழை பொழிந்தான்.
கதிரவனுக்கு தன் மகன் தன்னை கவனிப்பதும் அவன் மனதில் பசுமையாக விதைத்த நல்லெண்ணம் ஊற்றாக மாற நாம் நேர்மையுடன் கடைசி வரை அவனுக்கு புகட்டனும் என நெஞ்சில் உறுதி கூறி கொண்டான். ஆம்! எல்லா மகனுக்கும் , மகளுக்கும் அப்பா தானே முதல் ஹீரோ சரி தானே!!
-- பிரவீணா தங்கராஜ் .
valuable advise expressed in simple words nice story
ReplyDelete