இயற்கையோடு என் வாழ்க்கை
அழகிய அருவி ,
அருகினில் ஓடம்
ஆகாய மேகம் ,
ஆளவரும் சூரியன் .
இசைக்கும் குயில்கள் ,
இன்சுவை கனிகள் .
ஈரம் கொண்ட தாமரை -அதற்மேற்
ஈர நிர் பனித்துளிகள் ,
உறங்க வைக்கும் தென்றல் ,
உரிமையிடும் மலர்வாசம் .
ஊஞ்சலிடும் மர விழுது ,
ஊர்ந்து செல்லும் வண்ணத்துப்பபூச்சி.
என்னையே மறந்தேன்.
எழுதும் சில கவிகளில் ,
ஏற்றம் கொண்ட வானவில் ,
ஏணியாக உயர சொல்லும் .
ஐயம் இன்றி உளவுவேன் ,
ஐம்பூதம் துணையுடன் ,
ஒரு தனிமை உலகில் ,
ஒருத்தியாய் மண்ணில் ,
ஓங்கிய மூங்கில் ,
ஓதும் வண்டுகளின் ரிங்காரம் .
ஔவை கூட வாழவில்லை
ஔவை கூட நினைக்கவில்லை
அஃ கணமே வாழ்வோம்
அஃதுவே வாழ்க்கை .
-- பிரவீணா தங்கராஜ் .
Incredible lines...
ReplyDeletethanks akka
Delete