மலரே !
"பூக்களை பறிக்காதீர் "
இது விளம்பரம் அல்ல
என் மனதின் வேண்டுக்கோள்
அது எப்படி?
பறிக்கும் போது சிரிக்கின்ற மலரை
கிள்ளி தலையில் சூடுவது
மனித மனமே!
யார் உனக்கு கற்று கொடுத்தார்?
குழந்தை போல் சிரிக்கும்
மலரை கிள்ளுவதற்கு
மலர் மீது படர்ந்திருக்கும்
பனித்துளியை பார்
கூட்டு குடும்பமாக காட்சி தரும்
மலர் தோட்டம் பார்
தொட்டு பார்
மலரின் மென்மை புரியும்
தன் வாழ்நாள் ஒன்று என
அறிந்த மலர் வருந்துவதில்லை
பகுத்தறிவு கொண்ட மனிதனோ
மலரை பறிக்கின்றான்
பகுத்தறிவு அற்ற தேனியோ
மலருக்கும் வலிக்காது தேனெடுக்கும்
மனித மனமே !
உன் எண்ணத்தால் நாற்றம் வீசியது உலகில்
மலர் மணம் வீசியதால்
உலகமே விசித்திர மயமானது .
"பூக்களை பறிக்காதீர் "
இது மனித மனதிற்கு மட்டும் அல்ல,
கடவுளே உனக்கும் தான்
வழிபடுதலுக்கும் கூட மலரை வஞ்சிக்காதே !
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment