Posts

Showing posts from June, 2021

முட்டாள்

Image
மழைநிலா மின்னிதழில் 'முட்டாள்' என்ற தலைப்பில் பிரசுரமானவை. 

அன்பைத்தேடி

*அன்பைத் தேடி* நிலையற்ற பிரபஞ்சத்தில் நிலையான அன்பைத்தேடி முரண்பாட்டான கவிதையென்று முதலடி நாடி சிறகுவிரிக்கின்றது இதயச்சிறையில் வீற்றிருக்க இருவிழி நயனத்தில் அன்பென்ற மௌனமொழி அடைப்பெடுத்து ஆர்பறிக்க, தன்னருகே தோள்தட்டி தஞ்சமென மனயெட்டில் தாங்கிடவே தேடிகின்றேன் அன்பெனும் தேடுதலில்...     -பிரவீணா தங்கராஜ் 

தாரகையின் வேதனை

Image
செவ்வான வீதியிலே செங்கதிரோனின் ஆட்சியிலே பூமியதன் அணலை குளிர்விக்கும் தண்மதியோடு புலம்பெயர்ந்தேன் நானும் காலங்கள் மாறியதனால்  காட்சியும் மாறியது. சிறார் கூட என்னை ஓவியத்தில் தீட்டவில்லை. தாரகையான என்னை மறந்தீரோ. ஆங்கில பாடலில் அணிவகுப்பில் மட்டும் தானோ? காரியிருளில் எனை காணாது தேடியவரும் யாருமுண்டோ பேரண்டத்தில் வெறுமையை களையவே பெதும்பையிவள் போராடுகிறாள். வான்தேவதை கூடையேந்தி வர்ணம் கூட்ட விண்மீனை பொருத்துகிறாள் ஆலி வரும் பொழுது மட்டும் ஒளிந்து நில்லென்ற கட்டளையோடு. -பிரவீணா தங்கராஜ்.

Magic Water

Image
 Magic Water   ரகி உறங்கி கொண்டிருந்தாள். எங்கோ கேட்கும் குரலாக, "அந்த தண்ணீரை பாதுகாப்பா எடுத்து வை." என்று விஜய் குரல் கொடுத்து வெளியேறினான். அந்த குளிர்சாதன பெட்டியில் வைக்க சென்றாள் ப்ரியா.      "ப்ரியா" என்ற அழைப்பு தொடுத்தான் விஜய். இரண்டாம் தளத்தில் இருந்து என்னயென்று கேட்க, "என் போன்" என்றதும் அதை கொடுக்க சென்றாள்.     அந்த நேரம் ரகி விழி திறந்தாள். குளிருட்டப்பெற்ற அறையில் அவள் மட்டும் இருக்க, தனது ஷாக்ஸ் அணிந்த காலில் மெல்ல நடந்து வந்தாள்.      அந்த இடத்தில் யாருமே இல்லை என்பதை அறிந்து தன்னை பூட்டி வைத்த அறையிலிருந்து வெளியே வந்தாள்.      ஜன்னல் வழியே பகலவன்  கதிர்கள் ஒளியை தர இதுவரை ஒளியை காணாத அவள் கண்கள் கூசியது.    ஒவ்வொர் அடியாக எடுத்து வைத்தாள் அவளின் நடை எந்திரம் போல மெதுவாக இருந்தது.      கண்கள் நாலப்பக்கமும் தூழாவியது. இங்கே தன்னை தவிர யாருமில்லையென்ற எண்ணம் எழுவும், குளிர்சாதன பெட்டியில் கை சென்றது. அங்கே அந்த நீரும் இருந்தது.     கண்ணாடியில் குடுவையில் இருந்த நீரை எடுத்து குடித்து முடித்தாள்.        இது ச

ஒரு பக்க கதை-நல்ல உள்ளம்

Image
        தண்ணீர் மோட்டார் பதினொன்றுக்கு மேல் போட்டால் மோட்டார் சூடாகுமென்று ஆர்த்தி காலையிலேயே வீட்டில் தான் இருக்கப்போகும்  குழந்தையே என்றால்ம் குளிக்க வைத்தாள். கூடவே நீரை பிடித்து வைத்தாள். சட்டென தானும் குளித்து பிடித்து வைக்க எண்ணியவள் நேரத்தை பார்த்தாள். மணி ஒன்பது முப்பது பால் ஊற்றும் அண்ணாச்சி வரும் நேரம்.       "ஐசு பால்கார அண்ணாச்சி வந்தா இந்த பாத்திரத்தில் பால் வாங்கி வை. இல்லை அப்பா தூங்கிட்டு இருக்கார் சொல்லு வந்து வைப்பார். அம்மா குளிக்க போறேன்" என்று துணிமணியை எடுத்து மகளை பார்க்க காலையிலே டோராவை வைத்து அமர்ந்திருந்தாள்.      "ஐசு..." என்று அழைக்க, ஐசு.."             "என்னம்மா?"         "நான் சொன்னது காதுல விழுந்ததா..?"      "விழுந்துச்சு மா.. தள்ளு... அங்க பாத்திரம் வை" என்று தள்ளினாள்.     ஐசுவை கடுப்பேற்ற டிவியை அணைத்து விட்டு ஓடினாள் ஆர்த்தி.      "அம்மாமா... இங்க நீ குழந்தையா நான் குழந்தையா.." என்று சிணுங்கி டிவியை ஆன் செய்தாள் ஐசு. ஐந்து வயது வால். கொஞ்சம் வால் முதலில் பேசவே வராது

பரிதவிப்பு

Image
    *பரிதவிப்பு* அந்த பேருந்தில் தட்டை ஏந்தி அறுபது வயது முதியவர் பிச்சை கேட்டு கொண்டிருந்தார்.     கல்லூரி திறந்து முதல் வருடம் செல்ல பயணித்திருந்தாள் தீபா. இந்த நிகழ்வை கண்டதும் உள்ளுக்குள் அந்த பரிதவிப்பு உதித்தது.      மெல்ல மெல்ல தன் பர்சில் அப்பா தனக்கு கேன்டீனுக்கு கொடுத்த பணம் இருந்தது. அதில் சில்லறையும் கணத்திருந்தது.       ஐந்து இரண்டு ரூபாய் நாணையத்தை எடுத்தவள் அந்த முதியவர் அருகே வந்ததும் போட முடிவெடுத்தாள். ஆனால் அவளுக்கு முன்னேயிருந்த சீனியரோ,"எப்பா... மாசத்துக்கு பத்து முறை வந்திடறார். உடல்நிலை நல்லா தானே இருக்கு. வேலை செய்ய வேண்டியது தானே" என்று முணங்குவது ஜன்னலோரம் பின்னிருக்கையில் இருந்த தீபா செவியிலும் விழுந்தது.     எடுத்ததை போடலாமா வேண்டாமா? என்ற குழப்பம் தாக்க, இரண்டு ரூபாய் நாணையத்தை கைகளில் மறைத்து கொண்டாள்.      இவளருகே வந்த முதியவர் தட்டை நீட்டியபடி இரண்டு மூன்று பேர் யாசகமாக போட்டிருந்த நாணையம் மின்னியது அது போதுமென படியில் இறங்கி கிளம்பியிருந்தார்.      தீபா கையிலிருந்த நாணையம் இறுக பற்றியிருந்ததில் நனைந்திருந்தது. அந்த நாணையத்

ஒரு பக்க கதை-சர்ப்பம்

Image
  சர்ப்பம்     காலையிலிருந்து மின்சரம் தடைப்பட்டிருந்தது. இன்று முழுவதும் மின்தடை என்று முன்னவே அறிந்திருந்த காரணத்தால் மீனாட்சி ஒன்பதிற்குள் சமையல் வேலை முடித்து பாத்திரமும் சுத்தப்படுத்தி ஆறுமணிக்கே பிள்ளைகளை எழுப்பி விட்டு குளிக்க வைத்து ஏழுமணிக்கே வாஷிங்மிஷினில் துணியை துவைக்க போட்டு எடுத்து விட்டு, மாடியில் தொட்டியில் நீரையும் வழிய பிடித்து கொண்டாள்.      என்ன இன்று வீட்டிலிருக்கும் மழலையருக்கு பொழுது போகாமல் வாட்டியது.      மீனாவின் குழந்தைகள் இருவர் மற்றும் கணவரின் அக்கா பிள்ளைகள் என்று மேலும் இருவர் இருக்க, முதலில் போனில் விளையாடி மகிழ்ந்தனர்.      மின்சாரம் இருந்தால் டிவியில் ஹாட் ஸ்டாரில் அலசி புது பட கார்டூன் என்று நேரம் கழித்திருப்பனர்.     இன்றோ அதற்கும் வழியில்லை. போனும் நீ நான் சொல்லறதை பார்க்கலை. எனக்கு இந்த கேம் பிடிக்காது என்று ஆரம்பமானது. கணேஷ் அவன் பாட்டிற்கு பைக்கை எடுத்து வெளியே சென்றான்.    மீனாட்சியோ பனிரெண்டு வயதுபிள்ளைகளும் எட்டு வயது பிள்ளைகளின் நேரத்தை எப்படி கழிப்பது என்று சிந்தித்தாள்.       மணி பதினென்று நெருங்கவே போர் அடிக்கு

ஸ்... ஸ்... அரவம்

Image
  ஸ்... ஸ்... அரவம்   இருட்டை கொஞ்சம் கொஞ்சமாக பரிசளித்து சூரியன் தன் கதிரொளியை மழங்கிடும் மாலை நேரமது.      "ஏன்டி... கோழியை அடைச்சி வச்சியா... மாட்டுக்கு தண்ணீ காட்டினியா மாடு கத்திட்டே இருக்கு... இந்த பூவை பறிச்சி சாமிக்கு போட்டியா இல்லையா? " என்று வெத்தலையை இடித்துக் கொண்டு கிழவி கருப்பாயி விடாது கேள்வி கேட்டு முடித்தார்.       "வச்சாச்சி போய் திண்ணையை இடிக்காம உள்ள போய் உட்காரு ஆத்தா. எப்ப பாரு... வெத்தலையை இடிச்சிட்டு அதை செய்தியா இதை செய்தியானு தொன தொனனு." சலித்தவாறு தோட்டத்தில் வைத்திருந்த நீரில் முகம் அலம்பி தன் வாழைத்தண்டு காலில் நனைத்து விளக்கேற்ற சென்றாள் நீலா.      திண்ணையில் அமர்ந்து கண்கள் சுருக்கி நீண்ட நேரம் கம்பு தோசையை உண்டு விட்டு நீரை பருகி முடித்தாள்.      "நீலா.... இந்த தட்டை கொண்டு போடி" என்று கத்தவும் நீலா இடையில் கையை வைத்து நின்றாள்.      "கிழவி... நீ நீலா...லா இழுக்கறதுலயே என் பெயர் பெரிசானு எனக்கே சந்தேகம் வருது இத்துனுன்டு  பெயர் நீலா கூப்பிட என்னவாம். இழுக்கற... " என்று தட்டை எடுத்து கொண்டை தோட்டம்

நன்விழி

Image
                                                                            நன்விழி அத்தியாயம்-1 போலிஸ் வண்டிகள் தொடர்ச்சியாக வலம் வந்து கொண்டிருந்தது.     நந்தவனம் குடியிருப்புக்குத் தடுப்பு போட்டு சுற்றி பாதுகாப்புக்குப் போலிஸ்கள் வரிசையாய் நிறுத்தப்பட்டிருந்தனர்.      குறிப்பிட்ட பகுதிக்கு வெளியே செய்தியாளர்களும், வீடியோ பதிவாளர்களும் தங்கள் பத்திரிக்கைக்குச் செய்தி சேகரிக்க ஆவலாய் நின்றிருந்தனர்.     ஒலிப்பெருக்கி கேட்டு உயர் அதிகாரி நெல்சன் காத்திருந்தார்.     "எந்த இயக்கம் என்று தெரிஞ்சுதா? என்ன கோரிக்கை வைத்திருக்காங்க." என்று உயர் அதிகாரி நெல்சன் தனக்குக் கீழே பணியை மேற்கொள்ளும் விமல் என்ற போலிஸிடம் கேள்வியைக் கேட்டு முடித்தார்.      "சார் விமானத்துல இருந்து சில பேர் சந்தேகப்படும் படிய வந்தாங்க. அவர்களை ரமேஷ் பின் தொடர்ந்து வந்தார். அந்த ஆறு பேரும் இங்க விழா நடக்கற பில்டிங்ல வந்து மறைய, இப்ப இந்த நந்தவனம் குடியிருப்பு ஆட்களைப் பிடிச்சி வைத்துக் கொண்டு மிரட்டறாங்க சார். இங்க வந்ததை நம்ம ஆட்கள் கண்டுபிடிச்சி பின் தொடர்ந்து நமக்கும் அலார்ட் பண்ண