நீ என் முதல் காதல்-26
அத்தியாயம்-26 யுகேந்திரனுக்கு நா வரை வந்த ரகசியம் மகளிடம் போட்டு உடைக்க முடியவில்லை. சாதாரணமான விஷயமா? ஸ்ரீநிதி கோபத்தில் ம்ருத்யுவை பிற்காலத்தில் எடுத்தெறிந்து பேசிவிட்டால்? அந்தளவு கூட சிந்திக்காதவன் அல்ல. அதோடு ம்ருத்யுவிற்கு இவ்விஷயம் தெரிந்து தாரிகா அக்கா பைரவ் மாமாவிற்கும் உண்மை தெரிந்தால்? இத்தனை நாட்களாய் கட்டிக்காத்தது வீணாக போய்விடுமே. அதனால் நாவை அடக்கி, "குட்டிம்மா அம்மா மட்டுமா ம்ருத்யு மேல பாசம் வச்சிருக்கா? நானும் தான் ம்ருத்யு மேல பாசம் வச்சிருக்கேன். அவன் என் அக்கா பையன் டா. இதை தவிர வேற காரணம் என்ன இருந்திடப்போகுது. காதல் தோல்வியை தலைமுழுகிட்டு ம்ருத்யுவோட வாழ்ந்து பாருடா. அப்பாவுமே காதல் தோல்வி அடைந்தவன். ஷண்மதி அம்மாவை நேசிக்கலையா?" என்று தலை கோதினார். யுகேந்திரன் ஒரு இக்கட்டில் தன் காதலியை கைப்பிடிக்க வந்தவன் சூழ்நிலை சந்தர்ப்பத்தால் ஷண்மதியை மணக்கும் இக்கட்டிற்கு சென்றான். காதல் தோல்வியை கடந்து ஷண்மதியை விரும்பினான். ஷண்மதியும் பள்ளிக்காலம் முதல் நேசம் வைத்ததால் யுகேந்த...