நீ என் முதல் காதல்-26

 அத்தியாயம்-26


  யுகேந்திரனுக்கு நா வரை வந்த ரகசியம் மகளிடம் போட்டு உடைக்க முடியவில்லை. 


     சாதாரணமான விஷயமா? ஸ்ரீநிதி கோபத்தில் ம்ருத்யுவை பிற்காலத்தில் எடுத்தெறிந்து பேசிவிட்டால்? அந்தளவு கூட சிந்திக்காதவன் அல்ல. அதோடு ம்ருத்யுவிற்கு இவ்விஷயம் தெரிந்து தாரிகா அக்கா பைரவ் மாமாவிற்கும் உண்மை தெரிந்தால்? இத்தனை நாட்களாய் கட்டிக்காத்தது வீணாக போய்விடுமே. 

  அதனால் நாவை அடக்கி, "குட்டிம்மா அம்மா மட்டுமா ம்ருத்யு மேல பாசம் வச்சிருக்கா? நானும் தான் ம்ருத்யு மேல பாசம் வச்சிருக்கேன். அவன் என் அக்கா பையன் டா.  இதை தவிர வேற காரணம் என்ன இருந்திடப்போகுது. காதல் தோல்வியை தலைமுழுகிட்டு ம்ருத்யுவோட வாழ்ந்து பாருடா. அப்பாவுமே காதல் தோல்வி அடைந்தவன். ஷண்மதி அம்மாவை நேசிக்கலையா?" என்று தலை கோதினார். 


    யுகேந்திரன் ஒரு இக்கட்டில் தன் காதலியை கைப்பிடிக்க வந்தவன் சூழ்நிலை சந்தர்ப்பத்தால் ஷண்மதியை மணக்கும் இக்கட்டிற்கு சென்றான். காதல் தோல்வியை கடந்து ஷண்மதியை விரும்பினான். 

   ஷண்மதியும் பள்ளிக்காலம் முதல் நேசம் வைத்ததால் யுகேந்திரனிடம் தன் காதலை ம்ருத்யு போல தான் போராடி பெற்றாள். 


  அதை வைத்து யுகேந்திரன் உறைக்க, மகளோ தந்தையிடமிருந்து பிரிந்து வேறொரு அறைக்குள் புகுந்தாள். 


  ம்ருத்யு ஒரு அறை ஸ்ரீநிதி ஒரு அறையென்று இருக்க, யுகேந்திரனுக்கு கவலையானது. இதற்கா ஆசைப்பட்டது? 


     ஷண்மதி தான் காலையில் எழுந்தவள் "அதெல்லாம் அவங்க லைப்பில் விட்டாலே சரியாகிடும் யுகி. நீ பீல் பண்ணாத" என்று தட்டிக்கொடுத்தாள்.


   ரிதன்யாவை அழைத்து பெற்றவர்கள் ம்ருத்யுவின் காதலை புரிந்துக்கொள்ள பாரென கூறிவிட்டார்கள். அப்படியிருந்தும் ஸ்ரீநிதியால் ம்ருத்யுவை ஏற்க முடியவில்லை. 


  'உன் பேரண்ட்ஸே என்னோட வாழ சொல்லிட்டு போயிட்டாங்க பார்த்தியா?' என்ற மிதப்போடு பார்வைக்கு தெரிந்தான். ம்ருத்யு அவ்வாறு எல்லாம் கேலி பார்வை வீசவில்லை. அடிப்பட்டவளுக்கு தான் அப்படி தோன்றியது.


   ஒரு வாரம் எந்த முன்னேற்றமும் ஸ்ரீநிதிக்கு வரவில்லை. யுகேந்திரனோ அடிக்கடி மகளை பார்க்க வந்தார். மகளின் தோற்றம் மனதை பிசைய, ம்ருத்யுவிடம் ஏன் காதலை சேர்த்து வைத்திருக்கலாமே என்று பேச, ம்ருத்யு மௌவுனமானான். 


  ஒரு காலத்தில் ம்ருத்யு யுகேந்திரன் வயதை கடந்து நட்பானவர்கள். சொல்லப்போனால் ஸ்ரீநிதி என்ற மகள் தனக்கிருப்பதை அறியாத காலம் ம்ருத்யு மட்டுமே அவர் உலகமாக இருந்தது. இன்றோ ம்ருத்யு மீது சிறு விரிசல். மகளின் வாடிய முகம் ஒதுங்கி போக வைத்தது. 


   இதற்கிடையே ம்ருத்யு ஸ்ரீநிதியை கட்டிக்கொண்டு படுத்து கொள்ள, கையை விடுவித்து தனியறைக்கு செல்வாள். 


  ஸ்ரீநிதி உறங்கும் போது தனித்து படுத்தாலும், விழிக்கும் போது ம்ருத்யு கைக்குள் கட்டுண்டு இருப்பாள். 

   ம்ருத்யு அவளை விடுவதாக இல்லை என்பது புரியவும் அவளாகவே ஒருகட்டத்தில் அறைகளை மாற்றிடாது தங்கள் அறையிலேயே படுத்துக்கொண்டாள். 

    அவள் நண்பன் ம்ருத்யுவை பிடிக்கும். கணவனை தான் பிடிக்குமா என்பது கேள்விக் குறியே? 


   இருபது நாட்களுக்கு மேல் எந்த மாற்றமின்றி ஸ்ரீநிதி வாழ்வது யுகேந்திரன் கண்ணில்படவும், ஷண்மதியை விட அழுத்தம் பிடித்தவளாக இருப்பாளோ? உண்மை அளித்தால் மட்டும் ம்ருத்யுவோடு வாழ்வாளோ என்று தவறாய் கணித்தார். 


  அதன் காரணமாக ம்ருத்யு இல்லாத கணம் வீட்டுக்கு வந்தவர், மகளிடம் "ஏன் குட்டிம்மா இப்படியிருக்க? ம்ருத்யுவை உனக்கு பிடிக்கலையா?" என்று கேட்டார். 


  "அவன் தானேப்பா என்னோட டியரஸ்ட் பிரெண்ட். உங்களுக்கு கூட கால் பண்ணி டெய்லி பேச மறந்திருக்கேன். பட் ம்ருத்யுவோட பேசாத நாளேயில்லை. அப்படியிருக்க அவன் செய்த துரோகம் அவன் மேல அம்மாவுக்கு இருக்கற அக்கறை, இரண்டும் என்னை நிம்மதியா விடலை." என்று கூறினாள். 

  தந்தையோ சிந்தனைக்குள் முழ்கவும் இதுநாள் வரை பெரிதாக காரணம் இருக்காதோ தான் மட்டும் தேவையற்று நினைக்கின்றோமோ என்று நினைத்தவளுக்கு யுகேந்திரன் கலக்கமான முகம் ஏதோவொன்று உள்ளதென அழுத்தமாய் கூறியது. 


   ஸ்ரீநிதி பழம் வெட்ட கத்தியை எடுத்தவள் நொடியில் ஆப்பிளை கீழே போட்டுவிட்டு, "இப்ப நீங்க உண்மை காரணத்தை சொல்லலை. நான் என்னை அழிச்சுப்பேன்" என்று மிரட்ட ஆரம்பித்தாள். 


   யுகேந்திரனோ "ஸ்ரீநிதி கத்தியை கீழே போடு. கத்தில விளையாடாதே." என்று சிறுக்குழந்தைக்கு விளக்குவது போல கூறினார். 


   ஸ்ரீநிதி செவி மடுக்காமல் கையில் கோடு போட்டு நின்றாள். லேசான இரத்தம் வெள்ளைத்தோளிலிருந்து வெளிவர, பதறியது என்னவோ யுகேந்திரன் தான்.


  "ஸ்ரீநிதி எதுவும் தப்பா செய்துடாதடா. அச்சோ ரத்தம் வருதே" என்று பதறினார். 


  "இப்ப சின்னதா தான் கட் பண்ணிருக்கேன். நீங்க சொல்லலை மொத்தமா கட் பண்ணிப்பேன். நீங்க என்னவோ மறைக்கிறிங்க, என்னது அது?" என்று மிரட்டிக்கொண்டு நின்றாள். 


    யுகேந்திரனுக்கு செய்வதறியாது போக, கெஞ்சி கொஞ்சி மசியாது அசையாது மிரட்டியவளிடம், மண்டியிட்டு, கூறத்துவங்கினார்.


  "அந்த கட்டிடத்துல ஏழெட்டு மேரேஜ் ஹால். அதுல உங்கம்மாவுக்கு நிச்சயதார்த்தம். அவளுக்கு பார்த்த பையனை அடைச்சி வச்சிட்டு கல்யாணம் பிடிக்காம மாப்பிள்ளை ஓடிட்டான்னு பரவவிட்டுட்டு நிச்சயத்தை நிறுத்த திட்டமிட்டா ஷண்மதி. 


   அவளுக்கு பார்த்த வரனை உன் காதலன் ஜீவி மாதிரி அடைச்சி வச்சிட்டா மேக்கப் போட்டு ஒன்னும் தெரியாதவளா நிற்க தயாராகிட்டு இருந்தா. ஆனா எதிர்பாராத விதமா என் காதலிக்கு திருமணம் ஆகற அதே மண்டபத்தில் அவளை தேடி வந்த நான், இதயநோய் வந்து சரிந்துப்போன என் காதலி அப்பாவோட இறப்பை பார்த்து பயந்தேன். ஏன்னா நான் எனக்கு அவர் பொண்ணு தரலைனா சூசைட் பண்ண இதோ நீ இப்ப பிடிச்சிட்டு நிற்கற மாதிரி கத்தியை வச்சி மிரட்ட கத்தியோட போயிட்டேன். பார்க்கறவங்களுக்கு நான் கொலை பண்ண வந்ததா தோற்றம் தந்திடுமோனு பயந்து, உங்கம்மா இருந்த அறைக்குள் பதுங்கினேன். என்னை ஷண்மதி பார்த்ததும் அவளுக்கு வேறொரு திட்டம் வந்துடுச்சு. என்னோட நிச்சயத்தை முடிக்க பிளான் பண்ணினா. அதுக்கு  சாதகமா நான் நடந்தேன். அப்ப இருந்த பயம், கையாளாகாத நிலை.


    ஷண்மதியோட பியான்சியா மேடையேறிட்டேன். அதுக்கு பிறகு பெட்டி நிறைய பணத்தோட என்னை சென்னைக்கு அனுப்பிட்டா. 

  ஒரு பக்கம் பணம் மறுபக்கம் கொலை பழியோனு விட்டா போதும்னு சென்னைக்கு வந்தா, இங்க என் அக்கா தாரிகா நிறைமாசத்துல படில உருண்டு பனிக்குடம் உடைந்து கீழே இருந்தா. 


  அவளை ஹாஸ்பிடலில் தூக்கிட்டு போய் ஷண்மதி கொடுத்த பணத்தால ட்ரீட்மெண்ட் பண்ணினேன். ஷண்மதி நான் மேடையில நின்று நடிச்சிக் கொடுத்ததுக்கும் கல்யாணத்தை நிறுத்த நாள் கிடைத்த சுயநலத்துக்கும் கொடுத்த பணம் அக்காவோட மருத்துவசெலவுக்கு உபயோகித்தேன். 


  தாரிகா அவ குழந்தையை காப்பாத்தினேன் அப்படின்னு தான் நினைச்சேன். ஆனா அது பொய். 


   என்னை விரும்பின ஷண்மதி என்னோட நலத்தை கண்காணிக்க எனக்கு தெரியாம ஒருத்தனை அனுப்பியிருந்தா. அவனால என் நிலைமை அவளுக்கு அப்டேட் ஆச்சு. அப்படி தான் தாரிகா அக்காவோட பையன் இறந்துப்போயிட்டது ஷண்மதிக்கு தெரியவந்தது." இதுவரை காதல் திருமணத்தை நிறைய முறை சொன்னதால் எரிச்சலோடு கேட்டுநின்றாள் ஸ்ரீநிதி. கடைசியாக பேசிய தாரிகா அத்தையின் மகன் இறந்துவிட்டானென்பதை கேட்டதும் துணுக்குற்றாள்.

  

   யுகேந்திரன் மகளின் முகத்தை கண்டு தொடர்ந்தார். "எனக்காக என் குடும்பத்துக்காக ஷணு என்னை கண்காணிக்க இருந்தவனிடம் யுகேந்திரன் ரொம்ப உடைந்துப்போறார் அந்த குழந்தைக்கு மருத்துவமனையில் உயிர் பிரிந்ததை கூறாமல் வேறொரு குழந்தையை ஏற்பாடு செய்ய சொன்னா. 


   என்ன தான் பணத்தை அள்ளி வீசினா கடையில கிடைக்குமா குழந்தை. அலைந்து திரிந்து பல ஹாஸ்பிடலில் பிறந்த குழந்தையை கேட்டு கிடைக்காம ஒரு இடத்துல பிறந்த குழந்தையை தூக்கி போட்டுட்டு போனதா அநாதையாக கிடைத்த ம்ருத்யுவை கொண்டு வந்து தாரிகா பக்கத்துல வச்சா. 


    தாரிகா அக்காவுக்கு நாள் கழித்து தான் குழந்தை உண்டானா. அதுவும் இறந்துடுச்சுனு தெரியாம அதே நேரம் எனக்கே தெரியாம என் ஷணு என் அக்கா வாழ்வை மலர வச்சா.

    ம்ருத்யுவை ஷண்மதி கொண்டு வந்து என் அக்கா மாமாவுக்கு கொடுத்த குழந்தை. அதோட அவன் பிறப்பிலேயே இதய பாதிப்பு இருந்தவன். அதனால அவன் மருத்துவசெலவு எல்லாம் ஷண்மதி தான் பார்த்துக்கிட்டா. வெளிபார்வைக்கு என்னை மணக்க இக்கட்டை கூட்டினா. நீ என்னை மணந்துக்கிட்டா உன் அக்கா மகன் உயிரை பிழைக்க வைக்க மருத்துவ செலவை ஏற்கின்றேன்னு வாக்கு தந்தா. 


   என்னோட காதலிக்கு கல்யாணம் நிச்சயம் என்று வெளிநாட்டில இருந்து அப்பபடியே வந்த எனக்கு வேலை போச்சு, பெனால்டி கட்டினேன். இதுல பொருளாதார இக்கட்டு, காதல் தோல்வி என்று சுத்தி சுத்தி வலியை தர, உன் அம்மாவை அரக்கியா இவனு தான் நினைச்சேன். திருமணம் செய்துக்கிட்டேன். ம்ருத்யுவை காப்பாத்தினாள். 

  எனக்கு எங்க அக்கா மாமாவுக்கு அவளால தான் ம்ருத்யு உயிர் பிழைச்சான்னு தெரியும்.


  ஆனா பிறந்தவுடன் இறந்துப்போன இடத்துல அந்த நேரம் ம்ருத்யுவே நிறுத்தி அக்கா மாமாவுக்கு வாழ்க்கையை தந்தவ என் ஷண்மதி. 


அவளா ம்ருத்யுவை கொடுத்து இதயபாதிப்பையும் நீக்கி, அவனை உயிரோட நடமாட வைத்தவ. 


  ஒரு உயிரை காப்பாற்றினவ. ம்ருத்யு அவளால நம்ம வீட்டுக்கு வந்தவன். அதனால பெற்றெடுத்த உன்னை விட, அவனை அதிகமா கவனிக்கறா. மற்றபடி வேற காரணமில்லை. 


   இந்த விஷயம் எனக்கு தெரியவும் எங்க ம்ருத்யு அநாதைனு சொல்லி அக்கா மாமா வாழ்வில் மண்ணள்ளி போட்டுடுவானு தான் நான் ஷண்மதி அப்பா இறந்தப்ப விவாகரத்து வாங்கிட்டு ஓடிட்டேன். 

  

   ம்ருத்யுவோட உன்னை ஷணுவை ஸ்கூல்ல பார்த்ததும் தான் விவாகரத்து பத்திரத்தை கிழித்து போட்டு திரும்ப உங்களோட என் ஷணுவோட வாழறேன். ஷணுவோட அன்பு அரக்கதனமானது. 


    ம்ருத்யு பத்தி எனக்கு உன் அம்மாவுக்கு எங்கம்மாவுக்கு, லலிதா சித்திக்கு மட்டுமே தெரியும். என் அக்கா மாமாவுக்கு ம்ருத்யு பத்தி இப்பவரை தெரியாது. 

   

   உன்னிடம் ம்ருத்யுவை பத்தி சொல்லிட்டேன். இதை காரணமா வச்சி, அவனை காயப்படுத்தாதே. அவனோட நடந்த திருமணத்தை நிறைவா ஏற்றுக்கோ. ம்ருத்யு உன் அம்மாவுக்கு மட்டும் பிடிச்சவன் இல்லை. எனக்குமே அவனை ரொம்ப பிடிக்கும். 


  நீ லேப் எரிந்து மயக்கத்துல அம்மாவை பார்த்தப்ப, உன்னை தான் அவ முதல்ல கேட்டிருக்கணும். ஆனா பெத்த பாசத்தை விட ஒரு உயிரை சிறு வயதில் எமனிடம் போராடி மீட்டெடுத்த ஷணுவுக்கு, அந்த கணம் இந்த லேப்ல ம்ருத்யுவை தூக்கி கொடுத்துடுவோமோனு பயத்துல அவன் நலத்தை தான் முதல்ல கேட்டிருப்பா. மத்தபடி அவளுக்கு உன்னை ம்ருத்யுவை இரண்டு பேரையும் பிடிக்கும்." என்று உரைத்திடவும், ஸ்ரீநிதி மயங்கி சரிந்தாள். 


  "ஸ்ரீநிதி" என்று கலங்கி கண்களோடு ம்ருத்யு ஓடிவந்து அவளை தாங்க, கண்கள் சொருக மயக்கத்தில் இருந்தாள். கத்தியால் லேசான கீறலை போட்டிருந்தாலும் பளபளப்பான கத்தி அதன் வேலையை காட்டிவிட்டது. முதலில் சிறு ரத்தத்தை கசிய விட்டது. கதை கூற கூற, கையை கீழே தொங்கவிட்டதில் ரத்தம் அதிவேகமாக வெளியேறி கதை கேட்டு முடித்து மயங்கினாள். 


  ம்ருத்யு அவளை அள்ளிக்கொண்டு காருக்கு செல்ல, தான் பேசியதை கேட்ட ம்ருத்யுவை கண்டு யுகேந்திரன் தான் துடித்தான். மகளுக்கு பார்ப்பதா ம்ருத்யுவிற்கு பார்ப்பதா என்று தன் முட்டாள் தனத்தால் திகைத்தார். 


   ம்ருத்யுவோ கண்களி

ல் வழிந்த நீரை துடைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான். 


-தொடரும்.

-பிரவீணா தங்கராஜ் 


Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

தித்திக்கும் நினைவுகள்-1