நீ என் முதல் காதல்-33

 அத்தியாயம்-33

  'உன்னை தூக்கி கடல்ல போட்டு, சுறாவுக்கு இறாலா போட்டு இரையாக்கிடுவேன்' என்ற வார்த்தையை எண்ணி புன்முறுவல் பூத்தான். ஸ்ரீநிதியை பருகும் நேரம், மான் போல துள்ளியவள் தந்தை தாயுக்கு நடுவே போனாள்.

    "யுகிப்பா உன் அரக்கி பெரிய பெரிய பிராட் வேலையை பார்த்தும் எப்படி யுகிப்பா லவ்ஸ் விடற?" என்று கேட்டாள்.

    "உங்கம்மாவோட ஹீரோயினிசம் அப்படி பிடிக்கும்டா. எப்பவும் எந்த விஷயத்திலும் அவ தவறா யோசிக்க மாட்டா.
    முதல்ல எனக்குமே நீ விரும்பின ஜீவியோட சேர்த்து வச்சிருக்கலாம்னு கோபம் வந்துச்சு. நீயோ உன்னை விரும்பின ஜீவியோ நெருங்கி வந்து உங்க காதலுக்கு ஒரெடி எடுத்து வைக்கலையே.
   அவனுக்காகவது தயக்கம் இருந்தது ஸ்ரீநிதி. உனக்கு என்ன தயக்கம்டா?" என்று கேட்டார்.

   "தெரியலைப்பா ஒரு வேளை நானா ஜீவியை பார்த்து விரும்பியிருந்தா அம்மா மாதிரி அடம் பிடிச்சிருப்பேனோ என்னவோ? அவனா வந்து பேசி காதலிச்சி, அவனா அவன் காதலுக்கு முயற்சி செய்யணும்னு இருந்தேன். ஒரு விதத்துல நான் செல்பிஷ் தான் அப்பா.

   ம்ருத்யுவும் என்னை விரும்பியிருக்கான். அவனுக்கு நான் தேவையென்றதும் எப்படிப்பா யோசித்தான். அந்த ஜீவிக்கு ஏன் அப்படி தோணலை? விடுங்கப்பா இந்த ம்ருத்யு என்கிட்ட அடிவாங்கி கட்டிக்கணும்னு தலையெழுத்து." என்று பேச பேச யுகேந்திரன் ஆச்சரியம் கொண்டார்.

   ஷண்மதி முன்பே கூறியிருந்தால் 'ம்ருத்யுவை அவ விரும்பலை. அதே சமயம் அவனை கல்யாணம் செய்து வைத்ததால அவளுக்கு அவன் மேல வெறுப்பும் இல்லை யுகி.

   ஜீவியா வந்து பிரப்போஸ் பண்ணவும் அவன் குணமும் அழகும் கவர்ந்திருக்கு. ஆனா உன் பொண்ணு மனசுல காதலென்ற மொட்டு உடையலை. பிரெண்ட்ஷிப்பை தாண்டி அவ மனசு இணையலை. அது அவளுக்கே புரியலை. அதே போல ம்ருத்யு மேல பிரெண்ட்ஷிப்பை தாண்டி காதலுக்கு கீழ இரண்டுக்கும் மத்தியில இருக்கா.

  அது அவளுக்கே புரியறப்ப அவங்க நம்மளை மாதிரி 'குட் அண்ட் நாட்டி கப்பிள்ஸ்'ஸா இருப்பாங்க.'  என்றுரைத்தது இப்பொழுது சரியாக தோன்றியது.

    ம்ருத்யு பார்வையும், ஸ்ரீநிதி அனுசரித்து அதே சமயம் பாவம் பார்த்து பழகாமல் போகும் பாங்கு இரண்டும் ஷண்மதியை பிரதிபலித்திருந்தாள்.

   மாலை சூடான மீன் வறுவல் வறுத்து தந்திருக்க, ருசித்தவளை 'எப்படி விழுங்குது பாரு' என்று ஏக்கப் பெருமூச்சு விட்டான்.

    ஒருவேளை அன்னை தந்தை தன்னை உதாசினப்படுத்தும் விதமாக அன்பின்றி இருந்தால் வருந்திருப்பானோ என்னவோ? ஆனால் தாய் ஆனந்தி இறந்திருக்க, தந்தை அரவிந்த் என்று தானாக தந்தை முன் சென்று அறிமுகமாகும் மடத்தனம் அவனுக்கு பிடிக்கவில்லை.

   தெளிவாக இருக்கும் நதியை குட்டையாக மாற்றிட மனமில்லை. தன் அத்தை மாமா ஆச்சி, இவர்கள் எல்லாம் தன்னை பற்றி இத்தனை வருடங்களாக தெரிந்து வைத்தும் பாசத்தில் சிறு பேதமில்லாமல் இருக்கின்றார்கள். ஏன் சின்ன ஆச்சி லலிதா கூட தன்னை பாரபட்சமின்றி பாசம் காட்ட தனக்கு தெரிந்துவிட்டதென கூறி அவர்கள் மனதில் வருத்தமோ, தன்னை இத்தனை காலமாக பெற்றெடுத்த மைந்தன் என்று ஆசை வளர்த்த அம்மா அப்பாவுக்கும் கஷ்டத்தை தருவதா? இப்படியே மறைக்கப்பட்டு வாழ்வதில் எந்த நஷ்டமும் தனக்கில்லை என்று புரிந்துக்கொண்டான். மேலும் ஸ்ரீநிதி தான் என்ன மனநிலையில் வலம் வருகின்றாளென்று புரியாமல் தவித்தான். தற்போது அவள் வாயாலேயே கூறினாளே.

  என்னை ஏற்கும் முடிவோடு வாழ போவதாக, இது போதும். இந்த ம்ருத்யுவிற்கு அவளிடம் காரியம் சாசதித்து கணவனாய் மாற என்று வெட்கம் கொண்டான்.

   கப்பல் கரைக்கு வந்து சேரவும், ம்ருத்யு மனமும் தெளிவாய் வந்து கரையை தொட்டது.

     "நீங்க காரை எடுத்துட்டு உங்க வீட்டுக்கு போங்க. நாங்க அப்படியே கேரளா போறோம். பிகாஸ் அம்மாவோட சித்தப்பா பொண்ணு ரசீகா இருக்காங்களே, அவங்களோட  பொண்ணு ஏஜ் அட்டன் பண்ணிருக்கா. சோ ஜஸ்ட் ஒரு விசிட் பண்ணிட்டு வர்றோம். பை டியர்" என்று யுகேந்திரன் மகளை உச்சி முகர்ந்தார்.

   "ப்பா... எங்களை தனியா கழட்டிவிட்டுட்டு போறிங்க?" என்று சோகமானாள்.

   "தனியா எங்க கழட்டிவிடறோம். ஜோடியா தான் போக சொல்லறோம். சும்மா அடம் பண்ணாத நீங்க கிளம்புங்க. ம்ருத்யு ஸ்ரீநிதியை பார்த்துக்கோ." என்று மருமகனிடமும் விடைப்பெற்றார்கள்.

   அவர்கள் சென்றதும் ஸ்ரீநிதி ம்ருத்யுவை பார்க்க, ''வாழ்ந்தா மாமா அத்தை மாதிரி ஃபெர்பெக்ட் கப்பீள்ஸா வாழணும். ம்ம். எங்க கொடுத்து வச்சிருக்கு.'' என்று முனங்கினான்.

  "ஹலோ எங்க அப்பா அம்மா ஃபெர்பெக்ட் கப்பீளா? நான் அம்மா வயிற்றில இருந்தப்ப டிவோர்ஸ் வாங்கிட்டு பிரிஞ்சிட்டாங்க. ஆப்டர் சிக்ஸ் இயர் அப்பறம் தான் சந்திச்சதே தெரியும்ல?" என்று இழுத்து நக்கல் புரிந்தாள்.

  "அதெல்லாம் என்னால தானே. நான் எங்க தாரிகாஅம்மா பைரவ்அப்பா குழந்தை இல்லைனு தெரிந்து ஷண்மதி அத்தை மிரட்டுவாங்கன்னு மாமா பயந்து முடிவெடுத்தார். இல்லைனா மாமா அத்தை பிரிந்திருக்க மாட்டாங்க" என்று வாக்குவாதத்தை துவங்கியபடி காரில் ஏறினார்கள்.

    "ஏன் பிரிந்து போனோம். அப்பவே அப்பா அம்மாவிடம் கேட்டிருக்கணும். டேடி மேல தான் தப்பு. எங்க மம்மி ஆல்வேஸ் ஃபெர்பெக்ட் ஐயர்ன் லேடி." என்றவளை கண்டு ம்ருத்யு திரும்பினான்.

    "என்ன சொன்ன? ஃபெர்பெக்ட் ஐயர்ன் லேடியா? எப்பவும் அரக்கி அரக்கினு சொல்வ? இப்ப என்ன ஞானோதயம்?" என்று சீண்டினான்.

   இது தான் ஸ்ரீநிதி. எப்பவும் சிறுவயதில் தாய் புராணம் பாடுபவள். தன்னிடம் பேசும் போதும் ஷண்மதி அத்தையை பற்றி பேசாமல் வாய் ஓயாது. அவள் பிளஸ் ஒன் தேர்வு படிக்கும் போது தான் வெறுப்பு வந்துவிட்டது. அந்த வெறுப்பு இன்று தான் நீங்கிவிட்டது.

    "காரணம் தெரிந்துக்கிட்டு கேட்கற? வண்டியை ஒழுங்கா ஓட்டு" என்று கடிந்தாள்.

    காரை இயக்கியபடி, அடிக்கடி அவளை கவனிக்க, "கார் ஓட்டுறப்ப கவனம் ரோட்ல தான் இருக்கணும். இல்லைனா ஆக்சிடெண்ட் ஆகும்." என்று அவன் முகத்தை திருப்பினாள்.

      வீட்டுக்கு செல்லாமல் லாங் டிரைவ் சென்றவனை 'வீட்டுக்கு போகலையா?' என்று கேட்கவில்லை. அவனும் காரணம் கூறவில்லை.
 
   மாலையில் கிளம்பி இரண்டு மணி நேரம் சாலையில் சுற்றினான்.
   ஐந்து மணியிலிருந்து சுற்றியதில் இருட்ட துவங்கியிருந்தது.

      ''வீட்டுக்கு போற ஐடியா இல்லையா?" என்று கேட்டாள்.

   "இப்படியே எங்கயாவது சுத்தலாம்னு தோனுது. உனக்கு பிடிக்கலைனா தூக்கம் வருதுனா சொல்லு வீட்டுக்கு காரை திருப்பறேன்." என்றான்.

   "தூக்கம் எல்லாம் வரலை. தனியா ரூம்ல அடைஞ்சி கிடக்கணும். இது பெட்டர்" என்றாள்.
   
   ம்ருத்யு லேசான புன்னகை விரித்தான்.
   ''பிடிக்கலைனு கிடையாது பிடிக்கும். லாங் டிரைவ்." என்று கூறிவிட்டு அமைதியானாள்.

   அவளின் அமைதி வேறாக புரிந்து கொண்ட ம்ருத்யுவோ "ஜீவியோட சேர்த்து வைத்திருக்கணும். ஐ அம் சாரி" என்றான் மனதாரா.

   "ரொம்ப குயிக்கா மன்னிப்பு கேட்டுட்ட. ரொம்ப நல்லவன் டா" என்று சலித்துக்கொண்டாள்.

   "நல்லவனா இருக்கறதால தான். நீ டிரிங் பண்ணினப்ப கூட ஒன்னும் பண்ணாம வீட்ல பத்திரமா விட்டேன்.
    அன்னைக்கு எல்லாம் எவ்ளோ கியூட்டா இருந்த தெரியுமா? கிஸ் பண்ணணும்னு ஆசை. நல்லபிள்ளையா தப்பான நோக்கத்தோட தீண்டக்கூடாதுனு ரொம்ப மெனக்கெட்டேன்." என்று சலுகையாக கோபித்தான்.
 
   "இப்ப நான் கியூட்டா இல்லைனு சொல்லறியா?" என்று சண்டைப் பிடித்தாள் குட்டிபிசாசு.

      "எப்பவும் நீ கியூட்டு தான். நாம பஸ்ட் மீட்டிங் பஸ்ல நினைவிருக்கா? ஸ்கூல்ல டூர் போனப்ப, எனக்கு முன்ன உட்கார்ந்திருந்த என்னடா இது மாமா என்னை பார்க்காம இவளை வேடிக்கை பார்க்கிறார்னு பொறாமையோட பார்த்தேன்.
  டூர்ல யார் எது கொடுத்தாலும் 'நோ தேங்க்ஸ்' என்று சொல்லிட்டு என்னை திரும்பி திரும்பி பார்த்தியே.

   நானா வந்து 'ஹாய்' சொன்னதுக்கு 'அவர் உன் அப்பாவா?' அப்படின்னு தானே முதல் கேள்விக் கேட்ட. நான் இல்லை எங்கமாமா என்றதும் தான் நீ லைட்டா ஸ்மைல் பண்ணின. அதுக்கு பிறகு தான் ரிட்டர்ன் வர்றப்ப நான் சாக்லேட் ஷேர் பண்ணினப்ப யாரிடம் வாங்காத நீ தேங்க்ஸ் சொல்லி வாங்கின." என்று மலரும் நினைவை உதிர்த்தான்.

     "அப்பவே லவ் பண்ணினேன்னு சொல்லிடாத. கேவலமாயிருக்கும்." என்று காரிதுப்பாத குறையாக கூறினாள்.
  
   "சீச்சீ நீ என் பிரெண்ட் என்ற பிராஸஸ் கூட அப்ப இல்லை. கியூட்டா பஸ்ட் மெமரிஸ் பதிந்தது. அவ்ளோ தான்." என்று சிலாகித்தான்.

   "தப்பிச்ச" என்று சிரித்தாள்.

    "பட் அந்த மாதிரி டிராவல் மெமரிஸ் அதுக்கு பிறகு ரேர். இன்னிக்கு தான்." என்று கூறினான்.
 
   "இதென்ன ஸ்வீட் மெமரிஸ். இதுவும் பிரெண்ட்லி டாக்கிங் தானே?" என்று கேட்டாள்.

    ம்ருத்யுவோ காரை ஓட்டியபடி,"இப்ப வேறமாதிரி மெமரிஸ் உருவாக்கலாம். ஆனா நீ பிசாசு மாதிரி என்னை திட்டுவ. பச் இருக்கற பீல் குட் டைமிங்கை மிஸ் பண்ண விரும்பலை." என்று கூறினான்.

  "வேற மாதிரி மெமரிஸ் என்றால்?" என்று கேட்டு விட்டு திரும்ப, காரை நிறுத்தியிருந்தான். அவன் பார்வை உதட்டில் முற்றுகையிட, ஸ்ரீநிதியோ திரும்பிக்கொண்டு மௌவுனமானாள்.

     ம்ருத்யுவோ "மெமரிஸ் க்ரியேட் பண்ணலாமா?" என்று கேட்க "நடுரோட்டுல வண்டியை நிறுத்திட்டு லூசாட்டம் பேசாத" என்று குரல் உள்ளுக்குள் சென்ற தினுசில் பதில் தந்தாள்.

  முன் விளக்கை ஒளிரவிட்டு "சுத்திபாரு ரோட்ல இல்லை. பிரைவேட் ஸ்பாட்டுக்கு வந்திருக்கோம்." என்று கூறினான்.

தூரத்தில் கடலலை வந்து வந்து மோதும் சத்தம் கேட்டது. எங்கோ கடற்கரைக்கு அருகே நிறுத்தியிருப்பதை அறிந்துக் கொண்டாள்.
 
    "சோ...?" என்று கேட்டவளிடம், "சோ..." என்று நெருங்கினான்.

    அவ்விடம் அடுத்த நிமிடம் நிசப்தம் ஆனது. கார் வெளிச்சத்தை உமிழ்ந்ததை அணைத்திருந்தான்.
   
    ஸ்ரீநிதியை முத்தத்தால் மூழ்கடித்தான். அவனை தள்ளிவிடும் பணியை கைவிட்டிருந்தாள்.

   ம்ருத்யுவிற்கு அதுவே பெரிய வெற்றியானது. முத்தங்களை அள்ளி தெளித்தவன், மூச்சுவாங்க ''ஷல் ஐ கண்டினியூ?" என்று பெண்ணவளின் செவிமடலருகே கிசுகிசுப்பாய் சம்மதத்தை கேட்டு வைத்தான்.

    ஸ்ரீநிதி மௌவுனத்தை பதிலாக தர, இரு கைகளால் டீ ஷர்ட்டை‌ தலைக்கு மேலாக கழற்றி முடித்திருந்தான்.

   ஶ்ரீநிதி அதிர்வில் விழிக்க, "நல்ல நேரமோ நல்ல நாளோ எனக்கு வெயிட் பண்ண விருப்பம் இல்லை." என்றவன் பெண்ணவள் இருக்கையை சாயும் வசதிக்கு மாற்றினான்.

   ''இது கார்? கம்பார்ட்டபிளா இருக்காது ம்ருத்யு" என்றதற்கு "அதை நான் பார்த்துக்கறேன்." என்றவளை பேச விடாமல் தடுத்து விட்டான்.  

   கடலலை வந்து வந்து முத்தமிட்டு செல்ல தானும் தன்னவளை பிரிய மனமின்றி செவ்விதழை கொய்து முன்னேறினான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்






Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥 - 2