நீ என் முதல் காதல் -19

 அத்தியாயம்-19 


   ஸ்ரீவினிதா லலிதா இருவரும் பேத்தி பக்கத்திலிருந்து கவனித்துக் கொண்டார்கள். 


  இனி பைரவ்-தாரிகா வீட்டில் இருக்கப் போகின்றாளே என்று கொஞ்சம் கவலை இருந்தது. லலிதாவை விட ஸ்ரீவினிதாவிற்கு பெரிய கவலை. ஷண்மதி போல ஸ்ரீநிதி தனிச்சையாக வாழ ஆசைப்படுபவள். நிச்சயம் பைரவோடு தாரிகாவோடு ஒரே வீட்டில் இருப்பது எல்லாம் கஷ்டமானது. தாரிகாவாது சிலதை மகனுக்காக தம்பிக்காக விட்டுக்கொடுத்துக் கொள்வாள். மாப்பிள்ளை பைரவிடம் எதிர்பார்க்க முடியுமா? 


   ஷண்மதி யுகேந்திரனோடு வரவில்லையே. அவள் அவளது வீட்டில் தான் திருமணம் ஆனப்பின்னும் இருப்பேனென்று முதலிலேயே கூறிவிட்டாள். இங்கே ஸ்ரீநிதி எப்படியோ? அம்மா போல மகளும் என் வீட்லயிருப்பேன் ம்ருத்யு என்னோடு இருக்கட்டும் என்பாளோ? ஷண்மதிக்கு காரணம் இருக்கலாம்.


   தாரிகா மருமகளை வந்து வந்து பார்த்து மகிழ்ந்து சென்றாள். 

   ம்ருத்யுவும் அதே அறையில் அடிக்கடி ஆஜரானான். 


  மதியம் போல ஸ்ரீநிதி கொஞ்சமாய் இயல்புக்கு திரும்பினாள் எனலாம். 


   திருமணத்திற்கு வந்தவர்கள் ஒரளவு சென்றுவிட்டார்கள். நெருங்கிய உறவுகளோ தனி தனி அறைகள் கொடுத்து சாவியும் கொடுத்திருந்தார்கள். 


   பைரவும் தாரிகாவும் மூன்று மணி அளவில் மகன் மருமகளிடம் வந்தார்கள். 


   அதே நேரம் தான் ஷண்மதியும் தன்  கணவர் யுகேந்திரனோடு வந்தாள். 


    யுகேந்திரனை பார்த்து "கொடுங்க" என்றாள். 

    

   "ம்ருத்யு" என்று சாவியை கொடுக்க, ம்ருத்யு மாமா கொடுக்கவும் தயங்காமல் வாங்கினான். 


  "என்னது மாமா?" என்று அதன்பின்னர் கேட்கவும் பைரவ்-தாரிகா ஆர்வமாய் பார்த்தார்கள். 


   "இது நான் முன்ன வாங்கிய வீடு. எப்பவும் ஜஸ்ட் விசிட் பண்ணிட்டு வந்துடுவேன். இப்ப என்னவோ என் மகளுக்கு அந்த வீட்டை அன்பளிப்பா கொடுக்க ஆசைப்பட்டேன்." என்று கூறினார். 


   "ம்ருத்யு நீயும் என் மகளும் வாழ்ந்தா உங்க மாமா இன்னமும் சந்தோஷப்படுவார்." என்று ஷண்மதி கூறவும் ம்ருத்யு அத்தையை பார்க்க, ஏற்றுக்கொள் என்பதாகவும் தனியாக சென்றிடு என்ற மறைப்பொருளும் இருந்தது. 

    

    ஸ்ரீவினிதா சற்று திகைக்க, பைரவோ "அட நான் கூட நினைச்சேன். பையனையும் ஸ்ரீநிதியும் தனி வீட்ல புது வாழ்க்கையை வாழ வைக்கணும்னு. தங்கச்சி ஷண்மதியே சொல்லிட்டாங்க." என்றதும் தான் ஸ்ரீவினிதா தாரிகா சற்று ஆசுவசமடைந்தார்கள். 


   எங்கே எங்களோடு இருந்தா என்ன? என்று பைரவ் கேட்டு விடுவாரோ என்று பயந்தார்களே. தற்போது பிரச்சினையின்றி போனதே.


      ஒருபக்கம் ஹனி மூன் ரூம் ரெடியானது. அதோட நாளை வரை இங்க தான் இருக்க புக் செய்திருந்தார்கள். அடுத்த நாள் யுகேந்திரன் கொடுத்த வீட்டுக்கு செல்வதாக முடிவெடுத்தார்கள். 


    ரெஸ்ட் எடுங்க என்று கூறிவிட்டு சென்றதும் ஸ்ரீநிதி நிம்மதியாக ம்ருத்யு அருகே வந்தாள். 


   "நானே அங்க வந்து அத்தை மாமாவோட எப்படி நடந்துக்கறதுனு பயந்தேன். 

   இப்ப எங்கப்பா அவருக்கே தெரியாம நல்லது செய்துட்டார். எங்கம்மா செய்த முதல் நல்லது நம்மளை தனியா இருக்கட்டுமென்று ஐடியா கொடுத்தது." என்று கூறவும் ம்ருத்யு அமைதியாக இருந்தான். 


   அவனுக்கு தெரியாதா?!

  

        மதிய உணவு முடித்துவிட்டு ஸ்ரீநிதி 'நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கறேன்' என்று ரிதன்யாவோடு படுத்து கொண்டாள். ரிதன்யாவோ அக்கா கல்யாணத்தில் மான்குட்டியாக ஓடியாடியவள் அசதியில் உறங்கினாள். 


    ம்ருத்யுவும் அதே அறையில் அங்குமிங்கும் நடந்தான். 


   ரிதன்யா புரண்டு படுக்க அவளது ஆடை விலகவும், ஸ்ரீநிதி போர்வையை போட்டு விட்டாள். ம்ருத்யுவோ தர்ம சங்கடத்தோடு நிற்பதற்கு பதிலாக வெளியேறினான். 

  

   மடமடவென லிப்டில் இயக்கம் செய்து ஜீவியிருக்கும் இடமாக சென்றவன் அறைக்குள் அறை நுழைந்து சாவி போட்டு திறந்தான். 


   ஜீவியின் பிளாஸ்திரி எடுத்திடவும் த..தண்ணி" என்று கூறவும் வாட்டர் பாட்டிலை திறந்து புகட்டினான். 


  "சாப்பிடறியா? இங்கிருந்து தெம்பா கிளம்ப வேண்டாம்" என்றதும் ஜீவி ம்ருத்யு தன் கைகட்டை அவிழ்த்திடுவானென்று "சாப்பிடறேன்." என்று கூறினான்.

   

  "தட்ஸ் குட்" என்றவன் பேக் செய்த உணவில் ஸ்பூனை போட்டு ஊட்டிவிட்டான். 


  ஜீவியோ கைகட்டு அவிழ்க்காமல் ம்ருத்யு ஊட்டவும் தன் திட்டம் சொதப்பியதில் துவண்டான். 


  "என் தலையெழுத்தை பார்றேன். ஸ்ரீநிதிக்கு ஊட்டிவிட்டு அவளை ரசிக்க வேண்டியது. ஆனா உனக்கு ஊட்டிவிட்டுட்டு இருக்கேன். நான் இருந்த கோபத்துக்கு உனக்கு பச்சை தண்ணி கூட கொடுக்கக்கூடாது. ஆனா பாரு நான் மயங்கியதும் என்னை தோள்ல தூக்கிட்டு போய் நீ ஹாஸ்பிடல்ல சேர்த்த. அதுல என் இதயத்தை தொட்டுட்ட. நான் கூட ஸ்ரீயும் நீயும் நல்லா வாழணும்னு வேண்டிக்கிட்டு பிரிய நினைச்சேன்." என்று கூறவும் ஜீவி பிறகு எப்படி இந்த மாதிரி அடாவடி செய்ய ஆரம்பித்தான் யார் கொடுத்த தைரியம் என்று வயிறெரிந்தது. 


   ம்ருத்யுவோ ஊட்டிவிட ஜீவி அரை மனதாய் அரை வயிற்றாய் விழுங்கினான். 


    எப்படியும் தன்னை விடுதலை செய்வது நிச்சயம் என்றதால் ம்ருத்யுவின் ஒவ்வொரு அசைவாக உற்றுநோக்கினான். 


   முன்பு இருந்த காதல் பார்வைக்கு ஜீவி கணிப்பு சரியாக இருந்தது. ஆனால் இங்கு வந்தப்பிறகு அன்று மயங்கி சரிந்தக்கணத்தில் ம்ருத்யு தன் காதலுக்கு உதவுவதாக கருதினான். 


  ஆனால் மயங்கிய நாட்களுக்கு பிறகு ம்ருத்யு நடவெடிக்கை மொத்தமாய் மாறியது. இந்த மூன்று நாட்களில் மாற்றம் உச்சக்கட்டத்தில் உள்ளது. 


    ஜீவிக்கு நீரை புகட்டியவன், "சாரி ஜீவி. என் காதலுக்கு நான் மெனக்கெடறேன். நீ இதை தவறா எடுத்துக்கிட்டாலும் எனக்கு பிரச்சனையில்லை. என் தாட்ஸ் எல்லாம் ஸ்ரீநிதியை எப்படி சமாதானம் செய்ய போறது என்பது மட்டும் தான்." என்று அகன்றான். 


   "டேய் ம்ருத்யு ம்ருத்யு டேய் என்னை கட்டிப்போடாத" என்று திமிற வாயை பிளாஸ்திரி போட்டு கட்டியபடி சென்றவன், நேராக ஸ்ரீநிதி அருகே அமர்ந்தான். மறுபக்கம் ரிதன்யா ஆழ்ந்த உறக்கத்திலிருக்க, "நீ தூங்கலையா ஸ்ரீ" என்று கேட்க, "எப்படி தூக்கம் வரும் ம்ருத்யு?" என்று எதிர்கேள்வி கேட்டாள்.


   ஆனால் ரிதன்யா இருக்கவும் பேச்சு தடைபெற்றது.

   

    அதன் பின் நேரம் சுழன்று முடிக்க சாந்தி மூகூர்த்தத்திற்கு நேரம் பார்த்து அலங்கரித்ததற்கான நேரம் நெருங்கியது.


   ஸ்ரீநிதி கடனேயென்று அலங்கரித்தாலும் ம்ருத்யுவோடு சில முடிவெடுத்து வாழ தயாராகி தான் இருந்தாள். 


     அவள் மனமெல்லாம் ஜீவியிடம் ஒரு முறை பேசி முடித்துவிட்டால் ம்ருத்யுவோடு வாழ்வது சரியானதே. ஆனால் ஜீவியோட பேசிவிட்டால் ம்ருத்யு பிளான் சொதப்பலாகுமென அவன் அறிந்ததே. 


    ஜுவியோடு பேச விடாமல் அதற்குள் அவளை தன்னோடு சங்கமிக்க திட்டம் வகித்தான். 


  அரக்கி மகளுக்கு ஒருவன் தன்னை ஏமாற்றியதே வலியாக உருவாக ம்ருத்யுவோடு வாழ்ந்து அவன் மூக்கடைப்பு செய்வதென திட்டமிட்டாள். 


   ஒவ்வொரு எண்ணமும் சில சூழ்நிலை மாற்றத்திற்கு எதிர்பார்த்திருந்தது. 


   அதிலும் ம்ருத்யு எண்ணங்கள் செயல்கள் ஜெயமென்று கடவுள் அருள்பாலித்திருக்க தற்போது அவன் எண்ணிய அனைத்தும், அவனுக்கு சாதகமாக அமைந்தது. 


   இதோ அவ்வறையில் ஆடம்பரமாய் இன்டீரியல் டிசைனரால் அறையெங்கும் அலங்கரித்து புதுமணத்தம்பதிகளின் மனம் மதிமயங்கி ரசிக்கும் வண்ணம் இருந்தது. 

  

  ஸ்ரீநிதிக்கு அறைக்கு  வந்ததும் லேசான உதறல். ம்ருத்யுவை பிடிக்குமா பிடிக்காதா என்று கேட்டால் தயங்காமல் பிடிக்கும் என்று தான் பதில் தருவாள். அவன் குணத்திலும் இதுவரை கறை கண்டதில்லை.

    அன்பின் கரையில் தான் இதுவரை ஆட்சி செலுத்தியது. 


   அதனாலோ என்னவோ ம்ருத்யுவோடு நடந்த திருமணம் கூட மனதால் ஏற்றாள். சந்தர்ப்ப சூழ்திலையென்று அவனை தள்ளிவைக்க மனம் தயாராகவில்லை. 

  

   "ம்ருத்யு ஐ நீட் யுவர் ஹக்ஸ்" என்று கேட்டு வாங்கி படுத்துக்கொண்டாள். 

   

  ம்ருத்யு தான் லேசாய் நெளிந்து, "ஸ்ரீ எனக்கும் உன்னை பிடிக்கும் ஸ்ரீ. கல்யாணம் ஏதோவொரு இக்கட்டில் நடக்கலாம். பட் என் யுகி மாமா ஷணு அத்தையோட பொண்ணு நீ. என் ஸ்ரீநிதி. 


    என் ஸ்ரீநிதி என்னோட கிளோஸ் பிரெண்ட். இப்ப.. என் ஈருடல் ஓருயிர் கலந்திடும் பெண்." என்று பேசவும், 'இருயிர் ஓருடல் கலக்கவில்லையே? கலப்பதும் கடினமல்லவா?' என்று ஸ்ரீநிதி நினைக்க "என்னாச்சு?" என்று கேட்டான். 


   "ம்ருத்யு ஒருவேளை அரக்கிக்கு என் காதல் தெரிந்து என் ஜீவியை மறைச்சி வச்சிருந்திருப்பாளோ?" என்று அன்னை மீது சந்தேகம் துளிர்த்தது. 


   "ஏன் உனக்கு அத்தை மேல சந்தேகம்?" என்று பயந்தான். 


   "எங்கம்மா எப்பவும் தனக்கு முன்னால கண்ணுண்டு என்று வாழறவள் இல்லை. பின்னால கண் முன்னே செலுத்தி நிற்பா. இதுவரை என்னை தனியா விட்டதில்லை. படிக்கறேன்னு சொல்லியும் டைம் கேட்டும் தாராளமா கொடுத்தாங்க." என்று ஐயத்தை மொழிந்தாள்.


   "மேபீ.. ஆனா அத்தைக்கு உன் காதல் தெரிந்திருந்தா மாமாவிடம் ஷேர் பண்ணிருப்பாங்க?." என்று முட்டுக்கட்டையாக யோசனை வலுத்தது. 


      "ம்ருத்யு இந்த குழப்பத்துக்கு என்னடா சொல்லியூஷன் எடுக்க?" என்றதும் ம்ருத்யு அவளது அதரத்தை மெதுவாய் தன் வலது கரத்தால் மொட்டு போல இழுத்தான். 


    "எனக்கு இந்த ஸ்ரீநிதி புதுசா தெரியறா, என்ன சொல்லியும் அந்த ஸ்ரீநிதி மனசை அழகா பதிஞ்சியிருக்கா," என்றவன் கைகள் ஸ்ரீநிதி சிகைக்குள் நுழைந்தது. 


  ஏற்கனவே கட்டி பிடித்து நேசத்தை பகிர்ந்து வாழந்தவன், அவளை அறியாது சில மொட்டு விட்ட எண்ணங்களுக்கு வடிகாலாக முத்தமிட்டான். 


   ஸ்ரீநிதியுமே காயப்பட்ட இதயத்திற்கு மருந்தாக முத்தத்தை ஏற்றாள். 

  

   ம்ருத்யு ஒன்றை மறந்து விடுகின்றான். தவறு ஜீவி மேல் இல்லாத நேரம் குட்டிபிசாசு என்ன நினைக்கும் என்பதை உணராமல் முத்தச்சரம் தொடுத்து இமை சொருகினான். 


_தொடரும்.

-பிரவீணா தங்கராஜ் 


  


    

   


       

  

   


  


    


Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

தித்திக்கும் நினைவுகள்-1