🐘 வாரணம் நாங்கள் எங்கே செல்ல...?🐘

இதோ இங்கு தான் இருந்தன
இவ்விடம் தான் என்பதும் யாம் அறிவேன்
இன்று ஏனோ எங்களை விரட்டுகின்றார்கள்
இது மனிதர்கள் இருக்குமிடம் என்றே
ஓங்கி வளர்ந்த என் தாயின் கிளைகளை
வெட்டி வீழ்த்தியே ஊனமாக்கினார்கள்
பச்சைபட்டாடை என்றே திகழந்த உடைகளை
வேரோடு அபகரித்து வன்முறை செய்தாயிற்று
காணும் இடமெல்லாம் பூத்த முல்லைப்பூ
காணாமல் போனது
நாங்கள் பிளிறிற்று
கூடி பருகிய ஆற்றோடை நீர்கள்
கண்ணனுக்கு எட்டிய வரை காணவில்லை
இதில் எங்களை அவர்கள் இருக்கும் இடத்தில்
வந்து அச்சுறுத்துகின்றோம் என்ற பெயர் வேறு
இதோ வாரணம் எல்லாம் ஒன்று திரட்டி
கூண்டுக்குள் ஏற்றி விட்டார்கள்
அவர்களை போலவே கை ஏந்தி
யாசகம் கேட்டிடும் இழிவு நிலைக்கு தள்ளி...
காடு இடுகாடு ஆனதேனோ?!
                  --பிரவீணா தங்கராஜ்.
வாரணம்-யானை
இடுகாடு-சுடுகாடு

பஞ்ச தந்திரம் -18 (முடிவுற்றது)

 பஞ்ச தந்திரம்-18   திரிஷ்யா இரண்டு நாளுக்கு மேலாக நேரம் எடுத்துக்கொண்டாள்.    மஞ்சரியாக எதையும் கேட்கவில்லை ஏன் அப்படியொரு விஷயம் கூறி அவகா...