அழைப்பாயா ...என் சிசுவே ...!

கை பிடித்த கணவனை விட -உன்னை
நான் காதலிக்கிறேன்...
நீ அந்த கருமை நிற கண்ணன் நிறமா?
காதலை பறை சாற்றும் சிவப்பு நிறமா?
தெரியவில்லை -இருந்தும் உன்னை
நான் காதலிக்கிறேன்...
நீ நல்லவனா அதற்கு எதிர் மறையா
ஆனாலும் விரும்புகிறேன்...
நீ ஆணா ...?  பெண்ணா... ?
அது கூட தெரியா மடந்தை நான்.
கேளீர் கூட கேளிக்கை செய்கின்றனர்
கட்டிய கணவனை விட,
நீ இப்பொழுது விரும்பும் உயிர் பெரிதா என்று?!
உண்மை தான்...
நீ என்னுள் ஜனித்த நாள் முதல்
உயிராய் உருகுகின்றேன் .
நீ மொழியும் ஒற்றை சொல்லிற்காக
அழைப்பாயா 'அம்மா 'என்று
அந்த அழைப்பிற்காக உருவம் தெரியா
உன்னை விரும்புகிறேன்...
என் சிசுவே ...!


                       --  பிரவீணா தங்கராஜ் .

உன் பார்வையால்...

கவிதைக்கு
பஞ்சமடி
பெண்னே !
உன்
பார்வையை
வீசிவிட்டு
செல் ...
ஆயிரம்
கவிதைகளை
படைத்திட ...
                         
                           -- பிரவீணா தங்கராஜ் .

பஞ்ச தந்திரம் -18 (முடிவுற்றது)

 பஞ்ச தந்திரம்-18   திரிஷ்யா இரண்டு நாளுக்கு மேலாக நேரம் எடுத்துக்கொண்டாள்.    மஞ்சரியாக எதையும் கேட்கவில்லை ஏன் அப்படியொரு விஷயம் கூறி அவகா...