சிரமமில்லாமல் சில கொலைகள் -1

  



                  *சிரமமில்லாமல் சில கொலைகள்*

ஆல்பா தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலை. தூக்கம் போலிருக்கும் ஆனால் தூக்கமல்ல. விழித்திருப்பது போலிருக்கும், ஆனால் விழிப்பும் அல்ல.

இதை எளிமையாக சொல்ல வேண்டுமானால், நாம் அனைவரும் உறங்கும் முன் வரும் கிறக்கமான நிலை தான் இது. இது இயற்கையாக ஏற்படுவது.

இதை ஒருவித தியானத்தின் மூலம் நாமாக ஏற்படுத்திக் கொள்ளும்போது, நமது மனம் லேசாகிறன. இதன் மூலம் ஏழு சைக்கிள் முதல் பதினான்கு சைக்கிள் வேகத்தில் மூளையின் வேகத்தை குறைத்து இயங்கச் செய்கிறோம். இதனால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக இந்த நிலையில் இருக்கும் போது தான் நம் ஆழ்மனம் திறக்கும்.

*ஆழ்மனத்தின் சக்தி மூலம், எண்ணற்ற காரியங்களை சாதிக்கலாம்*


                                                                           🩸-1


         சர்வேஷ் தனது நண்பர்களோடு மூன்று தினமாக கோவா சுற்றுலா சென்று சோர்வோடு வீட்டுக்கு காலை ஏழு மணிக்கு வந்து சேர்ந்தான்.

     அவன் தங்கும் அப்பார்ட்மெண்டில் தங்கும் இடத்தை பகிரும் சாந்தனு அலுவலகம் கிளம்பிக் கொண்டு இருந்தான்.

"என்னடா கோவா.... பேச்சுலர் பார்ட்டி செம என்ஜாய்மெண்டா டா" என்று சாந்தனு கேட்க அவனை கொலை வெறியோடு பார்த்தான் சர்வேஷ்.

      "கடுப்ப கிளப்பாதே டா. பேச்சுலர் பார்ட்டி என்று தான் பேர். அவன் அவன் ஆளுக்கு ஒரு ஆளோட வந்துட்டாங்க. நான் தான் சோலோ. இதுல கோவால ஒரு அமெரிக்கா பொண்ணு வந்து டேட்டிங் கூப்பிட்டாளே எப்பா... தப்பிச்சேன் பிழைத்தேன்னு ஓடி வந்துட்டேன். என் டிராவல் கைய்டன்ஸ் இருந்தா சூப்பரா இருக்கும் சொன்னதால தான் கூட போனதே. ஆனா இனி தெரிந்தவர்களுக்கு கையிட் மாதிரி போக கூடாது டா. நான் பண்ற பிசினஸ் கையிட் ரெக்கமண்ட் பண்ணி பணிக்கு இருக்கறவங்களை அனுப்பலாம். ஆனா நான் முதலாளியா எட்டி நின்றுக்கணும் என்று பட்டு தான் தெரிந்துக்கிட்டேன்." என்று சலித்து தனது உடைமையை அகற்றி சோபாவில் அமர, சாந்தனுவோ

     "அடப்போடாங்க... மிஸ் பண்ணிட்டு வந்து பேச்சை பாரு. ஓகே டா... மீதியை வந்து கேட்கறேன். ஆபிஸ்கு நேரமாகுது" என்று ஓடினான்.

     சர்வேஷ் ஒரு குளியலை போட்டு விட்டு மெத்தையில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான்.

    இங்கு அதே நேரம் நியூயார்க் நகரம் வண்ண ஒளி விளக்குகள் மிளிர இரவும் பகலை போல பிரகாசித்தது.

     அங்கே ஒரு வீட்டில் "ப்ரவுனி... டுடே மை பெர்த் டே சோ நான் பார்ட்டி தர போறேன். நீயும் வர்றியா" என்று ப்ரவுன் நிற நாயினை கொஞ்சி கொண்டு இருந்தாள் மெர்லினா.

     அதற்கு காலையில் இருந்தே அதீத மகிழ்ச்சி போல மெர்லின் ஆனந்தம் அதற்கும் ஓட்டிக் கொண்டு தன் நாவால் அவளை கையில் முத்தமிட்டு தனது அன்பை பறைசாற்றியது.

     "மாம் டாட்... நீங்க எனக்கு பார்ட்டி ஏற்பாடு பண்ணி தந்ததற்கு ஹாப்பி. எங்க நோ சொல்லிடுவீங்கனு பயந்தேன். பட் நீங்க டோட்டலி டிப்ரண்ட். தேங்க்யூ டேட்" என்று தன் அன்னை தந்தையை கட்டி அணைத்து புறப்பட்டாள் மெர்லின்.

     "காட் பிளஸ் யூ டியர். டைம் டென் உள்ள வந்திடணும் ஓகேவா" என்று நேரம் கணக்கிட்டே வழி அனுப்பினார்கள் பெற்றோர் கிரிஷ்டோபர்-தபித்தாள் தம்பதிகள்.

    செல்லும் மகளை பெருமையாக பார்த்தாலும் ஓரத்தில் ஏதோவொரு அச்சம் சூழ வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தனர்.

    ப்ரவுனி மட்டும் வாசல் வரை வந்து அவளின் கால்களை சுற்றி சுற்றி வந்தது.

    "ப்ரவுனி நான் வீட்டுக்கு வந்தப்பிறகு விளையாடலாம். என்னை போக விடு" என்று கொஞ்சிட, ப்ரவுனி வாசலில் இரு கால்களை தூக்கி அன்பாய் குரைத்தது.

     மெர்லினா அருகே அந்த அருவுருவம் அவளை அறியாது அவளோடு பயணித்தது.

    மெர்லினா கார் ஷெட்டில் இருந்து காரை எடுத்து ப்ரவுனிக்கு கையசைக்க, அதுவரை கருப்பு நிறத்தில் சாதாரண ஒளியோடு மின்னிய ப்ரவுனி கண்கள் வெளிற்பாசிபச்சை நிறத்தில் ஜோலித்தது. அதுவும் பிரகாசமாக அவ்விடமே ஒளிர்வு பெற்றது போன்ற மாயையை காட்டியது.

     நியூயார்க் நகரில் மற்றொரு வீட்டில் மெர்லினா பதினெட்டாவது பிறந்தநாளுக்கு அடித்தளம் போட்ட லிசா மெர்லினாவை விட அந்த பிறந்த நாளில் அவர்கள் தோழர்-தோழிகள் தன்னை தான் அதிகம் பார்த்து பேச வேண்டுமென தன்னை உலகழகியாக அலங்கரிக்க துவங்கினாள்.

    சிவப்பு வண்ண ஸிலீவ் கொண்ட முட்டிக்கும் தொடைக்கும் ஏறாவா வேண்டாமாயென்ற ஆடை அணிந்தவவள் தனது லாக்கரில் இருந்து அந்த பிரேஸ்லேட் எடுத்து அணிந்தாள். ரூபி மற்றும் வைரம் மிளிர லிசா கண்களோ பார்ட்டியில் தான் மட்டும் அதிகளவு பேசப்படவேண்டும் என்ற ரீதியில் உடை, மற்றும் முக அலங்காரம் என்று கிளம்பி நின்றாள்.

     "லிசா... காஸ்ட்லி எக்பென்ஸ் இது."

     "யா மாம். ஐ நௌ. பட் மெர்லினா பெர்த் டே அவளை விட நான் தான் பெஸ்டா இருக்கணும்" என்று லிப்ஸ்டிக் வண்ணத்தை கூட்டினாள்.
 
      தபித்தாளின் தங்கை மகள் தான் இந்த லிசா. லிசா மெர்லினா வயதை விட ஒரு வயது கூடுதல்.

      ஆனால் எங்கும் மெர்லினா தான் வரேவேற்பை பெறுவது அதனால் இம்முறை அப்படி அமையாது இருத்திட தன்னை அலங்கரித்து கிளம்பினாள்.

      சிவப்பு நிற கொண்ட ப்ளோரல் கவுன் அவளை இறுக்கி பிடித்து முட்டிவரை இருக்க அவ்வுடையோடு அவள் அந்த காரிலிருந்து இறங்கி சாவி கொத்தை காரை பார்க் செய்யும் நபரிடம் நீட்டினாள்.

      கேம்பிரியா பார்ட்டி ஹோட்டல் நுழைந்தவளின் கண்கள் மினுக்கும் ஒளியில் பேராழகாக இவளும் மிளிர, அந்த இடத்தையை மற்றொரு ஒளி ஹாலை நிரையிட்டது.

   அது அந்த சிவப்பு, வெள்ளை ரூபி வைரம் பதித்த பிரேஸ்லேட் தான்.

     இவள் எண்ணியது போல இளைஞர் வட்டம் அவளை சூழ அவர்களை உதாசீனம் செய்து, மேஜையில் வெந்நிற உறைகள் மேஜையில் போர்த்தி இருக்க, அந்த இடத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.

   சற்று நேரம் அவளை ஆரோல் வந்து பேச நெடுநாள் முன் தான் பேச எண்ணிய ஆடவன். இம்முறை தானாக பேசவர, கையை நீட்டி குலுக்கும் நேரம், அவனோ இதழ் விரிந்து எழுந்து விட்டான்.

     அவன் கண்கள் சென்ற திசை பார்க்க மெஜன்தா நிற பௌ கொண்ட முழுகவுன் அவளை இளவரசியாக காட்டிட, ஆரோல் அவளிடம் வாழ்த்தை பகிர அவள் கை குலுக்கும் நேரம் ஏதோ யாரோ தட்டி விடுவது உணர்ந்தாள்.

     இதில் காதருகே "இருகை வணக்கம் வைத்து நாமமிடுவது நம்மரபு" என்பதாக குரல் கேட்க அவளுக்கு புரியாத நிலையிலும் கையை கூப்பினாள்.

  கேக் கட் செய்து கேளிக்கை துவங்க, நண்பர்கள் வாழ்த்தை பரிமாறி, மது பிரியோகம் செய்யப்பட்டது.

     ஒவ்வொரு டேபிளாக உயர்ரக மது விநியோகப்பட மெர்லினா எடுக்க செல்லும் நேரம் அவள் கைகள் கட்டப்பட்டு இருப்பதாக எண்ணினாள்.

    ஆரோல் வந்து நடனமாட அழைக்க அதையாவது செய்ய போனாள். ஆனால் ஆரோல் தீண்டும் நேரம் எல்லாம் ஆரோல் தள்ளி கீழே விழுந்து இருந்தான். ஏதோவொரு அசௌகரியம் தான் மெர்லினாவுக்கு.

      மெர்லினா மது அருந்துவால் இன்று ஏன் தன்னால் எடுக்க இயலாது போனது என்று அறியாமல் யாரோ பின்னாலிருந்து 'போ... போ... இவ்விடம் விட்டு செல்' என்ற குரலோசை செவியில் தொடர்ந்து விழ மணி ஒன்பதாக வேகமாக வீட்டுக்கு சென்றாள்.

     லிசா ஆரோல் நடனம் ஆட செல்கையிலே மதுவை அளவுக்கு மீறி அருந்தினாள். ஆரோல் அறைக்கு அவளை தூக்கி சென்று தன் தேவையான உடல் போதை அவளிடம் தேட, எங்கோ ஒரு நிழல் உருவம் பெற்று வாள் ஏந்தி,      
   
    "மங்கையர் மறலியின் பிடியில் நெருங்குவது இழிவு நிலை. அதை மீறி நெருங்கினாய் யெனில் தலை கொய்யப்படும் மனிதா" என்று குரல் வர அந்த பேச்சு ஆரோலின் ஆங்கில அறிவிற்கு புரியாது இருந்தாலும் அக்குரலின் கம்பீரமான கணீர் குரலிலும், அருவமான உருவமும் கண்டும் பயந்து ஓடினான்.

    மணி பதினென்று ஆக நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் லிசாவுக்கு காவலனாய் இருந்த அருவுருவம் கோபக்கணலில் பெரும் அலறல் ஒலி எழுப்பியது.

      அத்தனை மது போதையிலும் அந்த ஒலி செவியில் பறைபோல முழங்கியது. லிசாவோ பயத்தில் வெளிறி அத்தனை போதை மயக்கத்திலும் வியேர்த்து விறுவிறுத்து எழுந்தாள்.

    "உம்மை தீங்குயிழைக்க கூடாதென்றும், பிறர் பொருள் களவாடாதேயென்றும் யாம் செப்பியும் எம் யவனரதி அணிகலன்களை எடுத்தணிந்தாள் யாம் கண்ணுற்றும் பொருத்தருள்வோமா... எம் யவனரதி உயிரை துச்சிய உம்மை" என்ற அடுத்த நிமிடம் காற்றில் அந்தரத்தில் குரல்வளை நெறிய மூச்சுக்கு போராடினாள் லிசா.

     கண்கள் மேல் விழி பிதுங்க உயிர் போகும் வலியில் கண்கள் கலங்கி, சில பல நினைவலைகள் வந்து செல்ல, "மன்னித்து தருள்வாய்" என்று லிசா வரவே வராத தமிழில் கெஞ்சினாள்.

அருவுருவம் பிடியினை நழுவவிட, லிசா தரையில் கால் பதித்து நின்றாள்.

அடுத்த நொடி கதவை திறந்து ஓட்டமெடுத்தாள். கதவை திறந்து ஓட்டமெடுத்தவள் பாதை எங்கு என்று அறியாது அறியாது 'ஹெல்ப் மீ... ஹெல்ப் மீ...' என்று அலர, அவளின் குரலோ எழும்பாமல் காற்று மட்டுமே வந்தது.

அதன் பின்னே தனது குரல் எழும்பாமல் இருப்பதை உணர்ந்து, சுற்றி முற்றி பார்வையிட, தான் வந்த கேம்பிரியா ஹோட்டலாக இல்லாமல் ஏதோ ஒரு அடர்வனமாக காட்சியளிக்க திக் திக்கென இருந்தாள்.

நெற்றி வியர்வை பூக்க இது இது எந்த இடம் என்று தவிக்க, அவளின் கை பற்றி இழுக்க அவளின் பிரேஸ்லேட் அந்த அருவுருவத்திடம் கையில் இருக்க, லிசா கைகள் குருதி வழிய கீறலோடு காட்சி தந்தது.

சின்னதாய் பெடிக்குயூர் நகம் சிதைந்தாலே இரத்தம் வந்தால் பெரிதாய் ஆர்ப்பாட்டம் செய்யும் லிசா இன்று தனது வலது கை வேம்பையர் கீறிவிட்டதை போல இருக்க, துடிக்க பிரேஸ்லேட் இருக்கும் அருவுருவம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி ஒரு உருவத்தை தந்து தந்து மாற லிசா எச்சிலை கூட்டி விழுங்கி "யவனரதி-இளவழகா? தாங்களா" என்று கேட்ட நொடி 'தங்கவாள்' ஓன்று லிசாவின் சங்கு கழுத்தில் வீச சதக்கென்று கழுத்து மெல்லிய வெட்டபடாத பார்வைக்கு புலப்பட்டாலும் இரத்தசிவப்பு மெல்ல மெல்ல வெளியேறியது.

அவள் போட்டு வந்த சிவப்பு ஆடை மேலும் இரத்தமாக மாற பார்வை மேலழும்ப கண்கள் சொருக அவ்விடத்தில் தன் உடலில் இரத்தாறு பாய மயங்கினாள் லிசா.

       அவளின் உள்ளங்கையில் 'க' என்று எழுதி கீறி எடுக்க கைகள் அதன் பள்ளத்தில் இரத்த திரவியத்தை வெளிபடுத்தி வழிய நம் நாயகன் சர்வேஷ் திடுதிப்பென்று தொப்பலான வியர்வை மழையில் எழுந்து அமர்ந்தான்.

     "அந்த பொண்ணு பாகிரதி இறந்துட்டா... அவளை அவளை கொலை கொலை செய்தாங்க" என்று பதட்டத்தோடு இடத்தை ஆராய்ந்தான்.

      "டேய்... சர்வேஷ்... என்னாச்சு?" என்று சாந்தனு அருகே வர,

     "கொலை டா.. கொலை நடந்தது...?" என்றான்.

     "என்ன சொல்லற? எங்க? யாரை?"என்றான்.

     "நியூயார்க்ல.... இல்லை.. இல்லை... யவனபூமியில் டா.. ஆனா கொலை இல்லை பேய் கொன்றுடுச்சு" என்றான்.

     "டேய் ஒரு இடமா சொல்லு.  கொலையா...  பேயா? என்னடா சொல்லற? கனவு கண்டியா" என்றான் சாந்தனு. அதன் பிறகே அப்படியும் இருக்குமோ என்று நீரை குடித்தான். 

    "நீ... எப்ப வந்த? ஆபிஸ் போனியே?" என்றான் பயம் அகலாது.

     "போனேன் டா. அங்க இன்னிக்கு நாள் முழுக்க பவர் சப்ளே இல்லை. அதுவும்அதுவும் இல்லாம ஜெனரேட்டர் ஒர்க் ஆகலை. திரும்பிட்டோம். உன்னை கூப்பிட்டு பார்த்தேன் கதவு திறக்கலை அதான் என் சாவி எடுத்து திறந்து வந்துட்டேன்."

      "எதுக்கு அலறின?" என்றதும் தான் கண்ட கனவை விவரித்தான்.

     "டேய் கனவா? அதுக்கு இவ்வளவு சீனா?" என்று நகைத்து விட பணிகள் பற்றி பேசி மறக்க முயன்றான் சர்வேஷ்.

    மாலை நான்கு மணி காபி குடித்து அப்படியே சிறிது நேரம் வெளியே சென்று வர எண்ணி சர்வேஷ் சாந்தனு 'காபி கேப்' சென்றனர். 

    நியூயார்க் நகரம் அதிகாலை ஐந்து மணிக்கு  அந்த சென்ட்ரல் பார்கில் காப்ஸ் வண்டிகள் அதிகரித்தது.

  லிசா இறப்பு எப்படி நிகழ்ந்தது. என்று அலெக்ஸ்ப்ரிட்டோ என்பவர் துப்பு துலக்கி கொண்டு இருந்தார்.

   -🩸🩸🩸🩸🩸

- பிரவீணா தங்கராஜ்

*லிசாவை எதற்கு அந்த அருவுருவம் கொன்றது? யார் அது. எதுக்கு?

*யவனரதி-இளவழகன் என்பது யார்?

*சர்வேஷ்க்கு வந்த நிகழ்வு கனவா அல்லது உண்மை நிகழ்வு என்று எப்போ தெரியும். அவனுக்கு ஏன் வருது?

என்பது எல்லாம் பின் வரும் அத்தியாயங்களில் காணலாம்.

இது எனது 27 வது கதை. 😊

தீவிகை அவள் 🪔 வரையனல் அவன் 🔥 - 14

 
 
 தீவிகை 🪔 வரையனல்🔥 -14 

திவேஷ் அலட்சியமாக சம்யுக்தாவை நெருங்கி வந்தவன், ஆரவ் பேனாவை சட்டை பட்டனில் வைத்தவாறு சம்யு அருகே வந்து சேர கால்கள் அப்படியே பிரேக்கிட்டு நிறுத்தினான்.

      திரும்பி பார்த்து சுவாமிநாதன் இருக்கின்றாரா என்று எட்டி பார்க்க, அவர் கார் கண்ணிலிருந்து மறையும் தொலைவிற்கு சென்று இருந்தது.

     "வாங்க சார். போட்டு கொடுத்தாச்சா. நீ போட்டுக் கொடுத்த அடுத்த நாளே தெரியும். என்னடா அப்பவும் சும்மா இருக்கானேயென்று பார்க்கறியா? சம்யு இருக்கறப்ப எதுக்கு டா நான் மற்றதை யோசிக்கணும். புத்திசாலியா இருந்தா புரிஞ்சிக்கோ." என்றவன் சம்யுவை பார்த்து,

     "ஜூனியர் இங்க என்ன பண்ணற, கிளாஸ்க்கு நேரமாகலை. போ..." என்று கண்சிமிட்ட, சம்யு நமட்டு சிரிப்போடு இடத்தை விட்டு அகன்றாள். பார்வை என்னவோ திவேஷை ஏளனமாக எண்ணியது போல தோற்றம் தரவிக்க, ஆரவ் அருகே இருக்க, எலி போல அமைதியாக ஓரமாக போனான்.

    வகுப்பில் வந்து அமர்ந்து சிரிக்க, யோகிதா வந்து என்ன என்று விசாரிக்க, நடந்தவை கூறி திவேஷ் விழித்ததை எண்ணி சிரிக்கவும், யோகிதாவோ

      "ரொம்ப சிரிக்காதே எனக்கு உன்னை பார்த்தா சிரிப்பா வருது." என்றதும் சம்யு முறைக்க,
  
      " பின்ன என்ன அண்ணாவுக்கு எப்படி தெரிந்தது கேட்டியா? உங்கப்பாவுக்கு காதல் தெரிந்து இருக்கு உன்னிடம் ஒரு வார்த்தை கேட்கலை. அதையாவது ஏன்னு யோசிச்சியா? திவேஷ் முழிச்சானாம் நீ சிரிக்கிற" என்று யோகிதா சொன்னதும் தான் சம்யு யோசனைக்கு சென்றாள். 

     "ஆமா யோகி.... ஆரவ்-கு தெரியுதுன்னா அது என் ஹீரோ. எப்படியோ தெரிந்து இருப்பான். தெரிந்தாலும் என்னிடம் சொல்ல மாட்டார். படிப்பு தடைப்படும் அது இது என்று பேச வாய்ப்பு இருக்கு. இந்த அப்பா அவருக்கு என் காதல் தெரிந்தா இப்படி சும்மா இருக்க மாட்டாரே.

    அதுவும் இந்த திவேஷ் பத்த வைச்சிட்டியே பரட்டை மாதிரி நடந்துப்பான். ஒரே குழப்பமா இருக்கு.

     இதுல ஆரவ் வீட்டுக்கு போனதில் அத்தை திட்டிட்டாங்க. கஷ்டமா போச்சு. நான் இதுவரை அப்பாவிடம் திட்டு கூட வாங்கியதில்லை. என்னை ஏதோ தப்பா பேசியதாவே தோன்றுச்சு. எனக்கு இன்னமும் அவங்க பேசிய பேச்சு என்ன மீனிங்ல சொல்லறாங்க என்றே புரியலை. ஆனா தனியா எங்களை பார்த்தா கோபம் வருவது நியாயம் தான். ஆரவ் இப்ப தெளிவுப்படுத்தி இருக்கலாம்." என்று அவளாக பேசி பூரிக்க, யோகிதா கையை தாடையில் பதித்து முடித்து, "அது எப்படி தான் ஆரவ் என்று சொன்னாலே உன் முகம் அப்ப மட்டும் ஒரு கூடுதல் பொலிவு வருதோ" என்று சிரிக்க மேம் வந்து நிற்க வகுப்பு அமைதியாக மாறியது.

      "ஹாய் ஸ்டுடண்ஸ் நம்ம காலேஜ் டூர் போக ஏற்பாடு பண்ணியிருக்காங்க. ஒவ்வொரு டிபார்மெண்ட் ஒவ்வொரு ஊருக்கு போறாங்க. உங்க அதிர்ஷ்டம் ஊட்டி போறிங்க." என்றதும் மாணவ மாணவிகள் சந்தோஷத்தில் கத்த துவங்கினார்கள்.

      இடைவேளையில் கேண்டீனில் இருக்கும் ஆரவை தேடி சம்யுக்தா வரவும், ஆரவ் நண்பர்கள் எழுந்து சென்றனர்.

      உங்களிடம் பேச தான் வந்தேன். அது...  திவேஷ் அப்பாவிடம் நம்மை பற்றி சொல்லிருப்பானா? என்று கேட்க, ''ம்ம்... சொல்லிட்டான் " என்றான் வெகு சாதரணமாக.
   
    "அப்பா என்னிடம் எதுவும் கேட்கலை." என்று ஷாலை சுற்றியபடி எதிரே அமர்ந்தாள்.

     சந்துரு கூல்டிரிக்ஸ் எடுத்து வந்து வைத்து, "இந்தாம்மா" என்று நகர "தேங்க்ஸ் அண்ணா" என்று பருகினாள்.

    "அவர் கேட்கற வரை நீயா காட்டிக்காதே. செகண்ட் இயர் தானே. தேர்டு இயர் பார்த்துக்கலாம்." என்றான்.

   "ம்ம்..." எழுந்தவளிடம் "டூர் போக நேம் கொடுத்துட்டியா?" என்று கேட்க, "இல்லை... இரண்டு நாள் உன்னை பார்க்காம.... முடியாது... ஆரவ். நான் போகலை." என்றாள் சம்யு.

     "இங்க இருந்தா பார்த்துடுவியா?" என்றான் அவளின் சிகை கற்றை காதில் அலைஅலையாய் விளையாடுவதை கண்டு இரசித்தபடி கேட்டான்.

     "இங்கயும் பார்க்க முடியாது தான். ஆனா நீ ஏரியாவில் இருக்கற என்ற நிம்மதி உன் மூச்சு காற்று இங்க தான் இருக்கும் என்று அதுவே ஒரு சந்தோஷத்தை கொடுக்கும்." என்று முடியை காதின் பின்புறம் ஒதுக்கி கூறினாள்.

      "நான் இல்லனா எப்படி மூச்சு காற்று இருக்கும்" என்ற அடுத்த நொடி சம்யு கண்கள் நீரை சுரந்து இருக்க,

    "ஏய் அழுவறியா? எதுக்கு டி?" என்று அவளருகே வந்து அமர்ந்து கேட்கவும், "எதுக்கு இப்படி பேசற ஆரவ். நீ இல்லைனா நானும் இருக்க மாட்டேன். நீ இந்த உலகத்தில் இருந்தா, மட்டும் தான் நானும் உன்னை என்னைக்காவது பார்ப்பேன் என்ற நம்பிக்கையில் வாழ்வேன்." என்று பேசவும் உருகிப் போனான்.

     அவளின் கையை பிடித்து தன் கரத்தினுள் நுழைத்து, "ஏய் லூசு... நான் இங்க இல்லனா... என்பது உலகத்தில் இல்லை என்ற பொருள் இல்லை. நான் ஊட்டியில் இருந்து நீ இங்க இருந்தா என்ற அர்த்ததில் கேட்டேன்."

    சம்யுக்தா கண்கள் நீரை திருத்தி மின்னலாய் கண்கள் பளிச்சிட, "அப்போ நீங்க வர்றீங்களா? என்றதும் "ஆமா... ஒரே டிபார்மெண்ட் சொன்னாங்க புரியலையா. யூஜி, பிஜி கலந்து தான். உங்களுக்கு கையிட் பண்ணறது நாங்க தான்." என்று சொல்லவும் சிரிக்க துவங்கினாள்.

      "ஏன் ஆரவ் அப்பாவுக்கு என் காதல் தெரியும் என்றால் அவர் என்னை அனுப்ப மாட்டார் தானே.. அப்பறம் எப்படி?" என்று கேட்க எண்ணியதையே இப்பொழுது தான் கேட்டாள்.

     "கேட்க மாட்டார். அவருக்கு உன் மேல அக்கறை அன்பு அதிகம்." என்றவன் மனமோ அதை விட அவர் 'நல்லவரா தான் உன் மனதில் பதிய வைக்க பார்க்கிறார்.' என்று பேசவும்

   "இவ்வளவு நாள் எனக்கு தெரியாது அதனால் கேட்கலை. இப்ப எனக்கு தெரியும்னு திவேஷ் சொல்லிட்டா கேட்பார் தானே?" என்று கேட்டதும்.

    "உங்கப்பா உன்னிடம் எதையும் கேட்க மாட்டார்." 'என்னிடம் மட்டும் மோதுவார்.' என்றதைஅவள் கவனிக்கவில்லை. அவன் 'உன்னிடம் எதையும் கேட்க மாட்டார்' என்றதிலே அப்போ உன்னிடம் என்ன பேசறார் ஏதேனும் பண்ணிட்டாரா? என்ற கேள்வியை கேட்டிருந்தால் சின்னதாக கோடிட்டு காட்டியிருப்பானோ என்னவோ ஆரவ் அப்பொழுதும் அமைதியாக இருந்தான். இந்த அமைதி அவனின் வாழ்வில் புரட்ட காத்திருந்தது.

     "என்னவோ ஆரவ்... நீ இருக்கற தைரியம் வேறயெதையும் யோசிக்க வைக்கலை. நான் போய் டூருக்கு நேம் கொடுத்துட்டு வர்றேன். ஆரவ்... எப்பவும் எனக்காக நீ இருப்ப தானே. ஆன்ட்டி பேசியது எல்லாம் சரி பண்ணிட்டு தானே" என்று கேட்டதும் சின்னதாக மென் புன்னகை படரவிட்டான்.

     மணியடிக்க அவள் வகுப்பில் சென்ற நேரம் சந்துரு வந்தான்.

    "ஏன் ஆரவ் இப்படி எதையும் சொல்லாம இருக்க, அவர் நேற்று அம்மாவை மிரட்டியதை சொல்லியிருக்கலாம்." என்று சொல்லவும்.

    "இல்லை டா. ஒரு நிமிஷம் சொல்லிடலாம். ஆனா சம்யு பிறந்ததிலருந்து அவ அப்பாவும் அவளும் ரொம்ப பாசம் டா. 

    அம்மா நேற்று என்னை ஹர்ட் பண்ணி பேசினதா நடிச்சப்ப, எனக்கு அம்மா மேல அதிகபடியான கோபம் வந்தது. ஏன் வீட்டை விட்டு போயிடலாமா என்று கூட தோன்றியது. அப்ப தான் ஒன்று புரிந்தது. பெற்று வளர்த்த ஆளாக்கி நமக்கு நல்லது கெட்டது சொல்லி வளர்த்தவங்களை ஒரு நிமிஷம் நம்மை தப்பா பேசியதில் ஒரு செகண்ட் நம்ம அம்மாவை தப்பா எண்ணிடறோம்.

    சம்யு அப்பா தப்பா நடப்பது போல நடிக்கலை. நிஜமாவே தப்பா நடக்கிறார். சம்யுக்தாவுக்கு தெரிந்தா சுவாமிநாதனை மதிக்க மாட்டா, அதுக்காக தான் யோசிக்கறேன்.

    இருபது வருடம் நல்லது கெட்டது சொல்லி தந்து, அன்பா, பாசமா வளர்த்துட்டு இப்ப என்னை விரும்புவதால சம்யுக்கு தெரியாம அவங்க அப்பா நடப்பது சராசரி தந்தையோட செயல்பாடு, இதை தெரிந்தா கோபம் வந்து சுவாமிநாதனை பிரிஞ்சு அடுத்த நொடி என் கூட வந்திடுவா.

     என் நோக்கம் பிரச்சனையை தவிர்த்து சம்யுவை அவ படிப்பு முடிஞ்சு திருமணம் பண்ணறது தான். அதற்குள் என்னை நான் தகுதி படுத்திக்கணும். அவ்ளோ தான். தகுதி வளர்த்துக்கிட்டா தானா பெற்றவர்கள் புரிந்து அட்லிஸ்ட் அரை மனதோட திருமணத்துக்கு சம்மதம் கொடுப்பாங்க" என்றதும் சந்துரு, தன் நண்பனை தட்டிக் கொடுத்தான்.

      வீட்டுக்கு சென்ற சம்யுவை தந்தை எதுவும் கேட்கவில்லை. இவளும் திவேஷ் பற்றி எதையும் கேட்பதில் உடன்பாடு இல்லாததால் நிம்மதியாக கடந்தாள்.

     டூர்  அடுத்த வாரம் என்று அறிவித்து இதோ இன்று புறப்பட, தயாராக மாறியிருந்தனர்.

     "அப்பா டேப்லட் எடுத்துக்கோங்க, மறக்காம நேரத்துக்கு சாப்பிடுங்க. ஆபிஸ்லயே இருக்காதீங்க. நேரத்துக்கு வீட்டுக்கு வந்துடுங்க. அப்பறம் உங்களுக்கு என்ன வாங்கிட்டு வரப்பா?" என்ற கொஞ்சும் மொழியில் கதைக்கும் சம்யுவை கண்டு,
  
     "பத்திரமா போயிட்டு வா மா. அப்பாவுக்கு அது போதும்." என்று நெற்றியில் ஆசிர்வதிக்க, பையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

     "திவேஷ் அவளை கண்கானிக்க செய்துடு, ஆரவ் இங்க திரும்ப வர்றப்ப அவன் குடும்பத்தை பழித்தீர்க்க ஆட்கள் ஏற்பாடு பண்ணிட்டு இருக்கேன். எல்லாரும் ஒத்துழைச்சா, அவனுக்கு முடிவு கட்டிடுவேன். நீ கேட்ட மாதிரி, சம்யு படிப்பு முடிந்ததும் உனக்கு சம்யுக்தாவை கட்டி வைக்கிறேன்." என்று போனில் பேரம் பேசினார்.

     "அங்கிள்... இந்த மாதிரி சொல்லி அப்பறம் பேச்சு மாறினீங்க. பிறகு என்னை பிஸினஸ் மேனாக பார்க்க ஆரம்பிப்பீங்க" என்று மிரட்டினான்.

   போனை வைத்த சுவாமிநாதனோ, 'என் முன்ன நின்று பேச தைரியமில்லாத பையன் இந்த திவேஷ். என்ன பேச்சு பேசறான். சே... இந்த சம்யு தராதரம் பார்த்து காதலிச்சு இருக்க கூடாதா? இந்த திவேஷ் எல்லாம் தூசி, ஆரவை தான் அசைக்க முடியாது. அவனையே அசைக்க ஆளை விலைக்கி வாங்கிட்டு இருக்கேன். எல்லாம் முடியவும் சின்னதா திவேஷூக்கு பாடம் நடத்தறேன்.' என்ற மிதப்பில் மற்றொரு காவல் அதிகாரியின் இடைத்தரகனிடம் போன் செய்து பேரம் பேசிக்கொண்டு இருந்தார்.

     பஸ் புறப்படும் பொழுது முதல் வருடம் மற்றும் மூன்றாம் வருடம் ஜூனியர் ஒரே பஸ்ஸில் பயணிக்க, மற்றொரு பஸ்ஸில் இரண்டாம் வருட ஜூனியரும், முதல் வருட சீனியரும் ஒரே பஸ்ஸில் பயணமானார்கள்.

     சீனியரில் இரண்டாம் வருடத்தினர் படிப்பில் அதீத கவனத்தில் அவர்கள் வரவில்லை. அதனால் சீனியர் என்று ஆரவ் வகுப்பு தான்.

    ஆசிரியர் மூவரின் மேற்பார்வையில் புறப்பட்டது பேருந்து பயணம்.

     இரண்டு ஸ்டாப் அளவு சென்றிருக்கு ஆரவ் எழுந்தவன் நேராக சம்யு அமரும் இடத்தில் வந்து, பக்கத்தில் இருக்கும் யோகிதாவை எழுப்பி இடம் மாற்ற சொல்ல, இது ஆரவ் தானா என்பது போல சீனியர் பார்த்து அசர, சிறுசிறு கிசுகிசுக்கள் துவங்க, சம்யுக்தா அருகில் ஆரவ் அமர்ந்தான்.

      "ஹாய் எதுக்கு இப்படி தலையை திருப்பி திருப்பி பார்க்கற?" என்றான்.

     "இ...இல்லை... எல்லோரும் நம்மை பார்க்கற மாதிரி இருக்கு." என்று திணறினாள்.

    "நம்மை தான் பார்க்கறாங்க. நம்மை பற்றி தான் பேசறாங்க. கொஞ்ச நேரம் பேசிட்டு அவங்களே கடந்து போயிடுவாங்க." என்று கைகளை ஜன்னலருகே கொண்டு போக, அவளை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டு இதமாக பயணத்தை தொடர்ந்தனர்.

    திவேஷ் தன் கோபத்தை அடக்கி ஆரவை ஒன்றும் செய்யயிலாத விதமாக வேடிக்கை தான் பார்க்க முடிந்தது.

     ஆரவ் அறியாது போட்டோ எடுக்க முயன்ற கணம் சந்துரு தலையில் தட்டி, "நகரு" என்று  பக்கத்தில் அமர்ந்து கொள்ள சந்துரு இருக்க போட்டோவும் எடுக்க இயலாது, சுவாமிராதனுக்கு அனுப்பவும் முடியாது தவித்தான்.

    ஆரவோ மவனே ரிட்டன் போறவரை சந்துரு உன் கூட தான் இருப்பான் போட்டு கொடுக்க போட்டோவா எடுக்கற, என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டான்.

-வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

- பிரவீணா தங்கராஜ்.

Hi....

Sry sry some readers check panitu epi ilainu feel anathai soninka.

Ini monday friday regular ah epi post varum.

Comments fb la solringa inka no comments ah. Inkayum comments share panunga. Boost ah irukum.

அப்பறம் sunday பேய் கதை? போஸ்ட் பண்ணறேன்.
பெயர் *நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்* sunday only post இது.



உன் விழியும் என் வாளும் சந்தித்தால்... 10

  


  💟(௧௦)10
         

               நீரில் கைகளை துழாவிய ருத்திரா அருகே யாரோ வருவதை போல உணர திரும்ப தான் வருவதை அறிந்து கொண்டாளே கள்ளி இவள் என்றவன் அப்படியே நழுவ பார்க்க ஏனோ அவள் கைகளை நீரோடையில் இவன் கைகளும் தீண்ட ருத்திரா அவன் தீண்டல் என்றதும் அமைதியாக இருந்தாள்.
     "எப்பொழுதும் விழிக்கு அகப்படாமல் தான் காட்சி அளிப்பீரோ தாங்களும் தங்கள் உடன்பிறப்பாளனும்" என்று ருத்திரா அவனை தான் மட்டும் காணாது தவித்து கேட்க
     "மனம் கவர்ந்தவள் விழி தரிசனம் கேட்ட பின் மறுக்கும் கல் இதயமா உன்னவன் தேவி... இதோ இக்கணம் பார்வை வட்டத்திற்கு வந்தேன்" என்று உருவம் தெரிய காட்சி அளிக்க.
      மித்திரன் இங்கு வர சாதாரண வீரனை போலவே நிற்க அவனை கண்டவள் விழிகள் அருவியாக போனது.
     "ஏதேது இந்த வதன முகத்தில் சோகம் ஏனோ?"
  "சோகம் ஏற்படுத்தியவர் அறியாததா?"
   "யாம் எமது காதலியை தேடி காதலனாக வந்தோம். நம்மை பற்றி கதைக்க... தேவியருக்கு அதில் உடன்பாடு இல்லையோ?" என்றவனின் கைகள் இன்னமும் அவள் கரங்களில் பிடி பற்றியிருக்க ருத்திரா அதனை ஏற்றே இருந்தாள்.
    "பிழை கொண்டு இருந்தால் எம்மை ஒறுத்தல்(தண்டிப்பது) சரியே பிழை இல்லாதவன் மீது பழிப்பது எவ்வித நியாயமடி கண்மணி" என்றவன் கரங்கள்
    "எது தடுகிறது தமையன் என்ற பந்தமா?"
    "யாம் நம்மை பற்றி அளாவ(பேச) வந்தேன்... நீயோ தீங்கு செய்தவனையே கேட்கின்றாய்...?"
     "எதற்காக வந்தீர்... இங்கு பல உயிர்கள் இன்று இல்லாது போனமைக்கு தங்களின் பந்தம் காரணமென யாரேனும் அறிந்தால் தங்கள் சிரம் யாக்கையில் தங்காது"
    "நீயிருக்க அச்சமென்ன... உயிர் போனால் அது உம் கரங்களால் நடந்தேறட்டும்"
     "எம்மை அறியாது நிகழ வாய்ப்பு உண்டு.... இங்கிருந்து சென்றிடுங்கள்... எம் மனம் மாறுவதற்குள்..." என்று திரும்பிட
     "உம்மால் எம்மை கொல்ல இயலாது கண்மணி.. எம்மை கொல்வதாய் இருந்தால் நான் உம்மை தீண்டிய கணம் அக்கினியில் மாண்டு இருக்க வேண்டும்... உம் உள்ளத்தில் பள்ளத்தில் புதைந்து கிடக்கிறது எந்தன் இதயம். பகைமை புறம் தள்ளி ஞானகண்ணில் கண்டிடு உம்மால் எம்மை அழித்திட முடியாது. இன்னும் நிருபிக்க வேண்டுமெனில்... நிருபிக்கின்றேன்" என்று ருத்திரா அதரத்தை மென்மையாக ஓற்றி எடுத்தான் மித்திரன் அதரத்தால்...
    தேன் குடிக்கும் வண்டாய் மித்திரன் இருக்க ருத்திரா விழிகள் சொக்கி தான் போனது.
    இந்நாள் வரை பெண்மையை உணராது இருந்தவளுக்கு மித்திரன் தேனாய் புரிய வைத்து விடுவித்தான்.
     "உம்மை முத்தமிட்ட கணம் உமது விருப்பமின்றி தீண்டிய எமக்கு மட்டும் எதுவும் ஆகாது இருக்க உமக்கு புரியவில்லையா?" என்ற கணம்
      "அப்படியானால் தங்களுக்கு எம்மை பற்றி?"
        "அறிந்து கொண்டோம்... ருத்திரா எம் மூச்சு காற்றின் உயிர் நீ என்ற பின்.. அறியாது இருப்பேனா"
      இரு விழிகள் ஒன்றை ஒன்று காதலெனும் காவியத்தில் கட்டுண்டு கிடக்க மறுபக்கம்
    "தேவியரே... தேவியரே...." என்று பணிப்பெண்கள் கூவியபடி வர மித்திரன் எட்டி நின்றான்.
    "தேவியரே... நம் நாட்டிலும் நம் ஆதியினத்திலும் இரு பெண்கள் மாயமாகி இருக்கின்றார்கள்... வேந்தன் தங்களிடம் தெரிவித்து அழைத்து வர சொன்னார்" என்று வணங்கி தெரிவிக்க
     இந்நேரம் வரை  எம்மால் எவ்விதம் இடையூறு இருப்பதற்காக எம்மை திசை திருப்பி இருக்கின்றாய்.... சொல் உமது தமையன் இருக்கும் திக்கு செப்பு இல்லேல் சிரம் கொய்ய தயங்க மாட்டேன்"
    "ருத்திரா உம் வாளில் மாண்டிடவே பிறப்பெடுத்தவனாவேன். ஆனால் ருத்திராவுக்குள் எந்தன் காதலும் உள்ளதை அறிந்து கொல்(சாகடி)" என்றதும் ருத்திரா விழிகள் மித்திரன் பார்வையில் இருந்து நழுவி
    "வீரனை அழைத்து வாருங்கள்.  எந்நாட்டின் வேந்தன் எந்தை இவரை காண வேண்டும்" என்ற சேர்ந்து சென்றான்.
      ருத்திரா ஒரு ஆண்கமனை நடுநிலையில் அழைத்து வர அச்சபை மக்கள் விழி விரிய கண்டார்கள்.
        தன் மகள் ஒரு இளவரசன் போன்ற தோற்றம் கொண்ட வரை அழைத்து வர வேந்தனும் ஆர்வம் பொங்க யார் என்ற ஆவலாக எண்ணினார்.
    "கோமகனுக்கு எந்தன் சிரம் தாழ்ந்த வணக்கம்" என்று வணக்கம் வைத்தவள் சபைக்கும் பொது வணக்கம் வைத்து
    "இரு பெண்கள் மாயமாகி இருக்க கேள்விப்பட்ட கணம் மீண்டும் வெட்கம் கொண்டோம். இது மீண்டும் எந்நாட்டின் அவல நிலையே..."
     "அது பற்றி தான் கதைக்க வந்தோம். இவர் யார் மகளே. சபைக்கு அழைத்து வர காரணம் என்னவோ?" என்றார் ருத்திராவின் தந்தை அகத்தியன்.
    "97 பலி வாங்கிய கயவனின் உடன்பிறப்பு. துர்வசந்திரனின் தம்பி சௌமித்திரதேவன்.
    சந்திர தேசத்து இளவரசன். பரிதி செங்குட்டவன் வேந்தனின் இளைய மகன். இவனின் தமையன் துர்வசந்திரனின் தீய எண்ணமே மங்கைகள் மாயமானதின் காரணம்" என்ற ருத்திராவின் மொழிகளில் பலரும் ஆவேசம் கொள்ள மித்திரன் மட்டும் இவள் இப்படி தான் தன்னை அறிமுகப்படுத்தி வைப்பாள் என்று முன்னையே எண்ணியது போலவே ருத்திராவை பார்வை அகலாது பார்த்தான்.
     அங்கே திரை சீலையின் அந்த பக்கம் ராணிக்கும் ராஜ குலபெண்களுக்கும் என்று பார்ப்பதற்கு இருந்த இடத்தில் மஞ்சரி மித்திரனை கண்டு பதறி போனாள்.
    வேந்தன் அகத்தியனோ சற்று யோசித்து "அந்நாட்டு வேந்தனுக்கு ஓலை அனுப்புங்கள்.
      மாயமான மங்கைகள் கண் முன் கொண்டு வந்தாலொழிய இளவரசன் அவர்களுக்கு திரும்ப கிடைப்பார் இல்லையேல் இளவரசன் சிரம் நாளை மாலை யாக்கையில் இடம் பெறாது என்று கூறி வரைவு(ஓலை) அனுப்புங்கள்" என்ற கணம்
    "வேந்தே..." என்ற குரல் கேட்டது அது மஞ்சரி இருக்கும் திக்கிற்கு மற்றவர்கள் பார்வை திரும்ப ருத்திராவோ மித்திரன் இருக்கும் திசை கூட காணாது தவிர்த்தாள்.
    ஆனால் மித்திரனோ ருத்திராவை தவிர யாரையும் காணவில்லை யவன்.
    வேந்தன் அகத்தியனோ " என்ன செப்ப வேண்டும் என்றாலும் சபைக்கு வந்து சொல்லம்மா... இங்கே மகள் கருத்து மருமகள் கருத்து என்று பிரிவுகள் இல்லை" என்று சொன்னதும் சந்திரமதி குழப்பத்தோடு போக சொல்ல
    சபையில் இருந்த மேகவித்தகனும் இவள் எதற்கு வருகின்றாள் என்ன சொல்ல போகின்றாள் என்றே ஆவலடைந்தான்.
     "மன்னிக்கவும் வேந்தே... இவர் சந்திரதேச இளவரசர் தான். பரிதி செங்குட்டவன் மைந்தன். கயவன் துர்வசந்திரனின் உடன் பிறப்பு தான். ஆனால் இவருக்கும் மங்கை மாயமானதிற்கும் துளியும் சம்மந்தம் இல்லை. அதே போல....இவர்... இவர்.. இந்நாட்டின் மங்கை ஒருத்தியின் மன்னவனும் கூட... ஆம் வேந்தே...இவர் இவர் இளவரசி ருத்திராவின் மனம் கவர்ந்தவர்" என்றதும் அகத்தியன் சந்திரமதி மேகன் மூவருமே ருத்திராவை காண அவளோ அத்திரசாரம்(இரும்பு) போலவே நின்றாள்.
      மித்திரன் அக்கணம் கூட யாரையும் காணவில்லை அவன் அவனின் ஆருயிர் காதலி ருத்திராவை  தான் இமைக்காது பார்த்தான்.
     அகத்தியனுக்கு என்ன செய்ய என்றே புரியாத புதிராக இருக்க ருத்திராவோ
    "மந்திரி அன்பானந்தம் அவர்களே... வேந்தன் சொல் ஓலையில் எழுதி அனுப்புங்கள். இங்கு நீதி சமமாக தான் இருக்கும். மன்னன் குடும்பம் என்றோ மக்கள் என்றோ பாகுபாடு எம் நாட்டிற்கு இல்லை" என்றே கிளம்ப மித்திரன் கைகள் விலங்கு பூட்டி இருந்தது மேகவித்தகனால்.
     மித்திரன் நினைத்தால் மந்திரம் உச்சரித்து மாயமாக இயலும் அவன் அதை எண்ணவில்லை. அவனுக்கு ருத்திராவின் மனம் தன்னை சந்தேகிக்கின்றது என்றதில் உழுன்றது. அவள் தன் மூலம் தமையனை பிடிக்க எண்ணினால் என்று தோன்றினாலும் தான் இவ்விதம் மாயம் செய்தால் அவள் முற்றிலும் தன்னை வெறுக்க நேரலாம் என்று அமைதி காத்தான்.
    சந்திரமதி மஞ்சரியிடம் மகள் காதலை பற்றி அறிந்து வெளியேறினாள்.
    ருத்திரா ஊர் அறிய முடிவு எடுத்தாலும் துர்வன் மித்திரனை காக்க வருவது குறைவே என்பதை அறிந்து தன்னையே மறந்து அழ செய்தாள்.
    அவன் சிரம் கொய்ய படுமா? அல்லது நாளை துர்வனுக்கு முடிவு நெருங்குமா? என்று மஞ்சத்தில் கண்ணீரை உகுந்தாள்.  
   இங்கு மித்திரனோ நிச்சயம் தன் தமையன் தனக்காக வர மாட்டான்
ஆனால் தாய் மாதங்கி என்ன முடிவு எடுப்பார். எப்படியும் அம்மா இம்முறையேனும் நீதிக்கு முக்கியத்துவம் செய்வாரா உயிர் பற்றி அறிந்து பாசம் அன்பை உணர்வாரா தன்னை போல தானே மற்ற அன்னையருக்கு வருந்திருக்கும்  என்று எண்ணுவாரோ?
      துர்வன் இரு பெண்ணை பலியிட்டாலும் அந்தியில்(முடிவில்) ருத்திரா தானே அவன் குறி தான் ருத்திரா நெருங்க வேண்டுமென்றால் தன்னை  தாண்டி அவன் போக வேண்டும். இந்நாள் வரை எந்த பெண்ணை தேர்வு செய்கின்றான் என்பது அறியாதது தான் தனக்கு காப்பற்ற இயலாத காரணம். இதோ ருத்திராவை அவன் நிச்சயம் நெருங்குவதால் முன் நிற்க முடியும்.
    ருத்திரா எண்ணியது போல அவனை வெல்ல முடியாவிட்டால் காளி தேவி முன் எம்மரணம் தழுவி அவனை கொல்வேன் என்ற முடிவில் இருந்தான்.
    துர்வன் இரு பெண்களை ஒரு சேர புரவியில் ஏற்றி வானில் மிதந்து கொண்டு இருந்தான்.
    நாளை மறுநாள் தான் எண்ணிய எண்ணம் ஈடேற வேண்டும் என்ற நோக்கில் திளைத்து கொண்டு இருந்தான்.

   எப்படியும் இவர்கள் இருவரும் தன் மீது மையலில் இருக்க தனக்காக உயிர் துறப்பார்கள். ஆனால் நூறாவது பலி அந்த ருத்திரா... அவளை மறலி கொள்ள இயலாது. அழைத்து வர அருகில் கூட நெருங்க இயலாது.
     என்ன வழி என்று சிந்திக்க செய்தான். 
 
-விழியும் வாளும் சந்தித்தால்... 
 
-பிரவீணா தங்கராஜ். 
 

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...9

 


💟 (௯) 9    

                    எப்படியும் தாம் சொல்லாமல் போனாலும் துர்வனுக்கு சமுத்ரா, ருத்ரா  அறிந்திருந்த காரணம் கொண்டதால் அவன் சொன்னான்.
      ''நாவலூர் அந்நாட்டின் இளைய மகள் ருத்திரா....''
     ''பார்த்தாயா அன்னையே.. ஒரு சிறுவுரின் சொந்தமான ராஜா மகளை தான் உமது இளைய புத்திரன் ஆசை கொண்டு இருக்கின்றான்'' என்றே துர்வன் சொல்லி முடிக்க
    ''ஆசை என்றே சொன்னாயோ உம்மை தாய் மீது கொடுத்த சத்தியம் மீறி அழிக்க செய்திடுவேன். அவள் மீது எமக்கு இருப்பது உண்மையான அன்பே ஒழிய பார்த்ததும் தோன்றும் ஆசை அல்ல.. என்ன சொன்னாய்... அவள் சாதாரண சிறுவுரின் இளைய மகளா? அப்படியெனில் அவளின் தமைக்கை சமுத்ராவை ஆசை கொண்டாயே நீ... அதற்கு பெயர் என்ன? ஓஹ் அவளை பலியிட தான் மையல் புரிந்தாய் அப்படி தானே?'' என்றே அனலாய் பேசிய மித்திரனின் பேச்சில் துர்வன் ஏகதாளமாக நின்றான்.
    ''அன்னையே எமது சக்தி தேடி யான் தொடுக்கும் முயற்சி எல்லாம் இவன் தகர்க்கவே(உடைக்கவே) செய்கின்றான். இவனுக்கு நான் அதீத சக்தி பெற விருப்பமே இல்லை..'' என்றே மூத்த மகனின் போலி வருத்ததில் மாதங்கி
      ''இளையவனே... உமக்கு உமது தமயன் சக்தி பெருக மனமில்லையா?'' என்றே கேட்க
      ''அன்னையே இவனின் சக்தி பெருக எந்த தவறும் செய்யாமல் 100 பெண்கள் இறக்க வேண்டுமா? அதற்கு தாங்கள் வேறு துணை?'' என்றே அடக்கபட்ட கோவத்தோடு சொல்ல
   ''ஒரு நாட்டினை காக்க ஆயிரம் வீரர்கள் போரில் மாண்டிட செய்வது போல தான் இதுவும்.ஒரு இளவரசன் நன்மைக்காக 100 கன்னி பெண்கள் உயிர் போவதில் தவறில்லை... எம்மகன் யாரின் கற்பை அழித்திட வில்லை.. உயிர் மட்டுமே.. அது கூட இறந்திடும் பெண்கள் இவனை காதலித்து விவாகம் புரிந்து கன்னி பெண்களாக தமது உயிரை கணவனான இவனுக்கு அற்பணிக்கின்றார்கள் அவ்வளவே'' என்றதும்
    ''அன்னையே தங்களுக்கு இளவரசியாக பெண் பிறந்து இப்படி ஒரு அயோக்கியனுக்கு விவாகம் முடித்து அக்கணமே உயிர் துறக்க சொன்னால் செய்து கொடுப்பிர்களா? செய்ய துணிய மாட்டீர்கள். ஏன் என்றால்.. ராஜவம்சம் என்றால் ஒரு நியாயம்... சாதாரண குடிமக்கள் என்றால் ஒரு நியாயம்? சே'' என்றே சொல்ல
    ''போதும் நிறுத்து எத்தனை ராஜாக்கள் இதே குடி மக்களுக்காக உயிர் துறந்தார்கள் என்று அறியாமல் பேசாதே.. இதோ உமது தந்தை நோய் வாய்ப்பட்டு கிடக்கின்றார்... மற்ற தேச ராஜாக்களுக்கு இவரின் நிலமை அறிந்து போனாளோ, அடுத்த கணம் போர் தொடுப்பார்கள். அவரின் நோய் குணமாக அதீத சக்தி வேண்டும்... உம்மாளும் உமது தமையனாலும் அது சாத்தியம் இருக்க நான் எமது மூத்தவனை அடக்க செய்வது எந்த விதத்தில் நீதி...?''
    ''தந்தை விழி திறந்தால் அவருக்காக 100 பெண்கள் இறந்தார்கள் என்றே அறிந்தால் அவர் உயிர் பிழைத்தது எண்ணி வெட்கம் கொள்வார். அவருக்காக ஐந்துதறிவு உயிருக்கு கூட தீங்கு விளைவிக்க எண்ணாதவர் அவர்... அப்படி விஷயம் தெரிந்தால் வேந்தனான அவரையே அவர் அழித்து கொண்டு நீதியை நிலை செய்வார்... இந்த  துர்வன் முதலில் தந்தைக்காக செய்வது அல்ல.. அவனின் முழு சுயநலமும் அசத்தை(பொய்) மட்டுமே இதில் உள்ளது. இது தாங்கள் அறியாததா? பிழை என்று அறிந்தும் மறுப்பது அவன் சுபாவம்.. தங்களிடம் நீதி எடுத்து இயம்புகின்றேன் பாருங்கள் நான் ஒரு மூடன். பிழை என்று அறிந்தும் 97 உயிரை துச்சமாக எண்ணி தானே இன்னமும் பேசுகின்றிர்'' என்றே அங்கிருந்து அவன் தந்தை அறை நோக்கி சென்றான்.
             உயிர் மட்டும் எஞ்சி இருந்தாலும் ஒரு வேந்தனின் கர்வம் கொண்டு உறங்கியது போல தான் இருந்தார் பரிதி செங்குட்டவன். துர்வன் என்ற தீங்கானவன் மித்திரன் என்னும் நல்லவனையும் ஒரு சேர பெற்று எடுத்த எந்தையாக உறக்க கோலத்தில் கடந்தார்.
        அவரின் கரங்களை பற்றி துர்வனை பற்றி கூறி கொண்டு இருக்க அவரின் விழிகள் தானாக நீர் வடிந்தது. அதனை கண்டிருந்தால் மித்திரனின் சில மன காயங்கள் ஆறி இருக்கும்..
            தனது அறைக்கு சென்று அங்கிருக்கும்  மலரோடு நடந்து கொண்டு யோசனை செய்ய,
      'இல்லை அவன் எண்ணம் போல நடக்க விட கூடாது... என்றே எண்ணி கொண்டு இருக்க துர்வனின் உயிர் சுவாசம் காற்றில் மிதந்து வர அவனின் வருகையை உணர்ந்து கொண்டு
     ''உமக்கு என்ன வேண்டும்?'' என்றான் மித்திரன்.
    ''ஆஹா அனைத்தும் அறிந்த உமக்கு தெரியாததா? யான் இங்கு வந்த நோக்கம்?''
     ''இந்நேரம் எவரை பலியிட தேவை என்றே பெண்களை தேடி செல்லும் உமக்கு எம்மை பார்க்க வந்த நோக்கம் என்றால் எப்படி யாம் அறிந்திட இயலும்?'' என்றான் துர்வனின் சுவாசம் இருக்கும் திசையை பார்த்தபடி
     ''நாடகம் இயற்றி நடித்து கரவோசை வாங்கி கொள்... எம்மிடமே பிதற்றுதலில் செப்புகின்றாய்...''
     ''எதற்கு சுற்றி வளைத்து சலசலத்து கொண்டு இருக்கின்றாய்... நேரிடையாய் காண தான் தயக்கம்.. பேசவும் சொல்ல வந்ததை செப்பவுமா உமக்கு நேரிடை இல்லை'' என்றே மிதிரன் கேட்ட பின்
     ''அறியாதது போல இன்னமும் பேசுவது நீயே.. எமக்கு அப்பெண் வேண்டும் பலியிட.. நீ அவளை மையல் கொண்டு ஊனாய் உயிராய் எண்ணி இருந்து முகத்தில் தாடி வடித்து சந்நியாசி ஆகாதே.. அதை சொல்லவே வந்தோம்''
      ''மூடனாக கதைக்காதே... மஞ்சரியை சொல்கின்றாயா? அவள் மேகனின் இல்லாள்'' என்றதும்
       ''யாம் அவளை செப்பவில்லை... '' என்றவனின் குரலில் ஏக கடுப்புகள் இருக்க மித்திரனுக்கு உடனே ருத்திரா எண்ணம் தோன்ற
      ''ருத்திரா?'' என்றே வினா தாங்கி திரும்ப
      ''ஆம் எமது நூறாவது பலி அவளே....''என்றான் துர்வன்.
     ''எம் உயிர் இருக்கும் வரை நடவாது.. பகல் கனவு கண்டு களிக்காதே.. அவள் மீது சிறுதுரும்பு பட்டாலும் உமக்கு எம்மால் மரணம் நேரிடும்... தேசந்திர முனிவர் நமது குரு சொன்னது நினைவு இருக்கும் அல்லவா உமக்கு. எம்மால் உம்மை கொள்ள இயலாமல் போகலாம். ஆனால் யாம் மனம் உவந்து காளி தேவி முன் எமது உயிரை சொற்பமாக எண்ணி தலையை வெட்டும் நொடி யாம் யாரை கொல்ல துடிக்கின்றேனோ அவனும் மடிவான்... அது நீயே ஆனாலும் என்பதை மறந்திருக்க மாட்டாய் அல்லவா?"

       "என்ன மிரட்டி பார்க்கின்றாய் மித்திரா? " 
      "அல்ல எச்சரிக்கை... நீ பலியிடும் பொழுது யாரோ ஒருவன் என்றே தேடுதலில் நான் இருக்கஇருக்க நீ நாட்டில் பல பலிகள் ஏற்படுத்தி விட்டாய்....  இல்லையேல் முதல் பலியிட்ட கணமே உமக்கு முடிவு கட்டி இருப்பேன்" 
    "மறலி கொண்ட பெண்ணிற்கு தமையனை எதிர்க்கின்றாய்... காத்திரு உம்மை வசியம் செய்து உம் விழி காண அவளை பலியிட செய்வேன்" என்றே புரவி புறப்படும் ஓசை கேட்க மித்திரன் மனம் சஞ்சரித்தது.  
     தன்னவளாக எண்ணி அவளுக்கு எதுவும் ஆக கூடாது என்றே மனம் எண்ணியது. 
     அடுத்த நாள் துர்வனை கண்காணிக்கும் மந்திரம் உச்சரித்து அவன் தேடும் நங்கை முகம் தேட அதில் ருத்திரா வதன முகம் தெரிய குழம்பி அவளை காண சென்றான்.
     ருத்திரா ஊர் மேகனுக்கும் மஞ்சரிக்கும் விவாகம் நடந்து முடிந்தாலும் திருவிழா போல அதே ஆர்ப்பரிக்கும் குதூகலத்துடன  இருந்தது. முகத்தில் எளியவனை போல வேடமிட்டு வந்தான். ருத்திரா மூச்சு காற்றின் திசை தேடி மாயவுருவில் சென்றான். 
    அந்தபுரத்தில் சிறுகுளம் அருகில் நீரில் கைகளில் தூழாவி இருந்தாள் ருத்திரா. 
     மேனி எங்கும் தங்கத்தில் அலங்கரிக்கப்பட்ட ஏந்திழையாக (சிற்பமாக செதுக்கி  இருக்கும் அழகிய மங்கை) ருத்திரா இருக்க விழி இமைக்காமல் பார்த்தான். அவனுக்கு தெவிட்டவே இல்லை. ஆனால் ருத்திராவுக்குள் ருத்திரன் இருக்கும் உணர்வு வர  பதறாமல் திரும்ப தன் மனம் கொள்ளை கொண்ட காரிகையே அவளின் கமலினி(தாமரை) இதழில் நேயிர்ச்சியின்(உன்னதமான) முதல் முத்தம் பதிக்க முன்னேறினான்.  
    ருத்திரா காமத்தில் தீண்டும் ஆண்மகன் இறக்க நேரும் என்பதை அறியாது முத்தமிட நெருங்கினான்.
 
- விழியும் வாளும் சந்திக்கும். 
-பிரவீணா தங்கராஜ்.  

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...8

   


💟(௮) 8  


                                  வீதியில் எல்லாம் ருத்திரா சமுத்ராவை அழைத்து வரும் செய்தி அறிந்து முரசுகள் ஒலித்தன. மேகவித்தகன் மஞ்சரி இருவரும் ஒரே புரவில் வர மக்கள் சிலர் அதனை விழி விரிய கண்டனர்.
         வேந்தர்கள், மந்திரியர்கள் என்றே சால சிறந்தவர்கள் இமைக்க மறந்து பார்த்து இருக்க, ருத்திரா மிடுக்குடன் இறங்கி வந்து நின்றாள்.
    ''தலை வணங்குகின்றேன்... வேந்தே... இன்னாட்டின் இளவரசி உயிர் அரணாக பாதுகாத்து கொண்டு வந்தாயிற்று... இனி இவளை தேடி அம்மூடன் வந்தால் திரும்ப அவன் யாக்கையில் ஆன்மா தங்காது'' என்றே செப்பிட மஞ்சரிக்கோ ருத்திராவுக்கு யார் இப்படி செய்தது என்றே அறிந்தும் மறைக்கின்றாள் என்றே விசித்திரமாக காண ருத்திரா மஞ்சரியை காணாமல்
     ''வேந்தே.. மற்றும் ஒரு செய்தி.. அங்கே ஒரு இக்காட்டில் கயவன் மஞ்சரி உயிர் பலியிட போகையில் அவளுக்கு விவாகம் நடந்தால் மட்டுமே உயிர் பிழைப்பாள் என்றே இருக்க நமது இளவரசன் மேகவித்தகன் எமது தோழி மஞ்சரியை திங்கள் சாட்சியாக வைத்து மாலை சூடி மங்கையினுக்கு மணவாளானாக மாறி விட்டான்'' என்றே ருத்திரா செப்பிட அங்கே கூட்ட திறனுக்கு இடையே சலசலப்பு அடைய... மக்கள் தங்கள் மகிழ்வை பேச்சில் தெரிவித்து முடிக்க  வேந்தனோ,
       ''மகிழ்ச்சி இளவரசியே... மேகவித்தகனுக்கு நாளையே ஊர் கூடி விவாகம் நடைப்பெறும் மக்கள் அதில் கலந்து கொள்ள அன்போடு வருக தர வேண்டுகின்றேன். எமது மகள் சமுத்ரா போல ஏனைய மங்கைகள் இறப்புக்கு காரணமாக இருக்கும் அந்த கயவன் அறிந்திட இளவரசியோடு கலந்து யுரையாட செய்வேன் அந்த கயவனை அழித்து எம்மக்கள் வாழ்வு சிறப்பாக அமைய நடவடிக்கை எடுக்கப்படும். சபை கலையட்டும்'' என்றதும் மக்கள் மகிழ்வோடு செல்ல மஞ்சரி மந்திரியின் மகளாக இருக்க மந்திரி அன்பானந்தம் தவிபோடும் சஞ்சலத்தோடும் நிற்க வேந்தன் அகத்தியனோ,
     ''என்ன மந்திரியரே... மகள் ராஜாவின் மருமகளாக அமைந்திட களிப்பில் திகைப்பீர் என்றல்லவா எண்ணி இருந்தேன்... இப்படி அச்சத்தில் அல்லவா இருக்கின்றீர்'' என்றே அகத்தியன் கேள்வியில்
     ''அரசே... எமது மகள் ராஜா குல வாரிசு சுமப்பாள் என்பது ஆருடம் உரைத்தது. எமக்கு அதில் அதிர்ச்சி அல்ல... ஆனால் இப்படி ஒரு பெண்ணின் உயிர் காக்கா மட்டுமே நடைபெற்ற விவாகம் இரு மனம் ஒப்ப ஏற்றுக் கொள்ளுமா? இளவரசன் மனம் முழுமை கொண்டு.......'' என்றே சொல்லிட
    ''மாமா.. அதை பற்றி உமக்கு அச்சம் வேண்டாம் எமது இல்லாளாக மஞ்சரியை மனம் நிறைந்தே ஏற்றுக் கொண்டேன்'' என்றே மேகவித்தகன் சொல்ல அதில் அன்பானந்தம் அளவில்லா களிப்பு அடைந்தார்.
      அதற்குள் அரண்மனை அந்தபுரத்தில் சந்திரமதி தனது மகள், மகனை வரவேற்க செல்ல இடையிலே மேகவித்தகன் மஞ்சரி விவாக செய்தியும் செவியில் சென்றடைய சந்திரமதிக்கு வானளவு சந்தோஷம் கிட்டியது.
      ஏற்கனவே மஞ்சரி பற்றி அறிந்து இருந்த சந்திரமதி அவளை வரவேற்க செல்ல போனாள்.
     அங்கே அடுத்த நாளே ஊர் அறிய விவாகம் நடைபெற ஆயுத்தம் மேற்கொண்டார்கள்.
       சந்திரமதி மஞ்சரி முகம் சுழித்து கையை வருடி விடும் நேரம் அவள் கை இரட்டை நாடி துடிக்க கண்டு வேகமாக ருத்திரா அறைக்கு அழைத்து செல்ல ருத்திரா பின் சென்றாள்.
      ''உன் மணிகட்டில் இரட்டை நாடி துடிப்பு தென்படுகின்றது.. யாரின் கருவை சுமக்கின்றாய்?'' என்றே குரல் அதிர கேட்க
      ''அத்தை அவர்களே.. என் மனமென்னும் கோவிலில் தங்கள் மைந்தன் ஒருவரே வீற்று இருக்கின்றார்.. அவரும் நானும் காதலில் கட்டுண்டு இருந்தோம். ஒரு திங்கள் இரவில் ஆம்பல் பூ தொடுத்து நீரோடையில் தவழும் திங்கள் சாட்சியாக மாலை மாற்றி விவாகம் புரிந்தோம். செம்புல நீராக கலந்து இன்று தங்கள் மைந்தன் வாரிசை தான் கருவாக சுமக்கின்றேன்'' என்றே கண்ணீர் நீர் துளிகள் கன்னம் தவழ சொல்லி முடிக்க
     ''ஆக நீங்கள் முன்பே மனதை பறிகொடுத்து இருக்கின்றீர்... இந்த மேகன் ஒரு வார்த்தை பெற்றவளிடம் சொல்லாமல் மறைத்து இருக்கின்றானே வரட்டும் கவனித்து கொள்கின்றேன்... அதற்காக எதற்கு நீ கண் கலங்கு கின்றாய் இங்கு பார் உன் தோழி எதற்கும் கலங்குவாதக இல்லாமல் அத்திரிசாரம் (இரும்பு) போல இருக்கின்றாள். நீயும் பழகு.. இன்னாட்டின் பெண்கள் கூட சீற்றம் கொண்ட அரிமாவாக இருக்க வேண்டும்'' என்று சொல்லி தலையில் ஆசீர்வதிக்க விழியில் இருக்கும் நீரை துடைத்து எழுந்தாள்.
     ''இனி மாறி கொள்கின்றேன் அத்தை அவர்களே...'' என்றே வணங்கினாள்.
     ''சென்று துயில் கொள்.. நாளை விவாகம் அல்லவா'' என்றே அவர் கிளம்ப ருத்திரா புன்னகைத்து சென்று அமர்ந்தாள்.
         மஞ்சரி போகாமல் அதே போல நின்று ''இன்னும் என்ன சிந்தனை ருத்திரா? நீ எப்படி அத்திரசாரம் போல இருக்கின்றாய்?'' என்றே வினவ
      ''வீரம் பிறந்ததில் இருந்தே கூடவே இருக்கின்றன'' என்றே கர்வ புன்னகையில் தொடர
      ''ஏதேது அங்கு மித்திரனை நெஞ்சில் வாள் கொண்டு குத்தி கிழித்து காதல் என்பதை உடைத்து தகர்த்தி இங்கு அத்திரசாரம் போல இருப்பது பிறந்தது முதலே வந்ததா?'' என்றதும் தான் மஞ்சரி அவனுக்காக பேச முயலுக்கின்றாள் என்றே எண்ணி அமைதி ஆனாள்.
      ''அவன் தமையன் சமுத்ரா எப்படி நடத்தினான் அறிந்தும் பேசுகின்றாயா? துர்வனால் பலி கொண்டவர்கள் தொன்னூற்று ஏழு மறந்திடலாகுமோ? அப்படி இருக்க அவனை காப்பாற்றி அரணாக மாறியதில் மித்திரன் காதல் மாய்ந்து போனது மஞ்சரி.. இனி அவன் பேச்சு வேண்டாம்'' என்றே செல்ல
     ''இந்த காதல் என்றுமே உண்மையாக அன்பு வைத்தவரிடம் இருந்து விலகாது ருத்திரா.. துர்வன் எப்படியோ ஆனாள் மித்திரன் நல்லவன்.. மித்திரன் சொல்லியது போல இதை நான் சொல்ல தேவாயில்லை நீ அறியாததா..'' என்றே சொல்ல ருத்திரா ஏதோ சொல்ல வாய் எடுக்க ''வருகின்றேன் நித்திரை கொள்பவர்களை எழுப்பிட முடியும் நித்திரை செய்வது போல நாடகம் செய்பவரை யாராலும் எழுப்ப இயலாது தான்.. நான் எமது விவாகத்திற்கு நாழிகை நகருவதற்குள் சென்று இளைப்பாருகின்றேன்'' என்றே கிளம்பினாள்.
        ருத்திரா விழியினை தாழ்த்தியவள் நிமிரவே இல்லை. மஞ்சரி அவள் இல்லம் நோக்கி செல்ல இங்கு தனிமையில் ருத்திரா தென்றலிடம் தனது மனதை தொலைத்தாள்.
       மெல்ல வருடிய தென்றல் எல்லாம் மித்திரனின் நினைவை எடுத்து இயம்ப பெண்ணவள் அவளயும் அறியாது ''மித்திரா...'' என்றே மெல்ல குரல் எழுப்ப அங்கே வளியின்(காற்றின்) வரி வடியில் இருக்கும் மித்திரன் முகம் பிரகாசமாக ஆனது.
    ''என் ஆருயிரே அழைத்தது ஏனோ?'' என்றே குரல் மட்டும் கேட்க ருத்திரா எட்டு திசையிலும் பார்வை பதித்தவள்
    ''எங்கும் எமக்கு உமது குரலோசை செவியில் தாக்கும் எண்ணமே சுற்றுகின்றதே... துர்வனின் தமையனாக இல்லாமல் ஒரு வீரனாக மட்டுமே நீ எமக்கு காட்சி அளித்திருக்கலாம்'' என்றே உறங்க சென்றாள். அங்கே பனிபெண்ணிடம் ஜாதிக்காய் அரைத்து பாலில் கரைத்து உறங்க போராடினாள்.
       இமை மூடிய விழியில் தனது மணிக்கட்டை மித்திரன் பிடித்து அவன் கன்னத்தில் வைக்க மனதில் 'நான் துர்வனின் தமையன் என்றாலும் உன்னவன் என்பதிலே எந்தன் மேதினி சுழலுதடி அது மட்டுமே எந்தன் வாழ்வு தவிர இந்த மேதினியில் எமக்கு எதுவும் தேவையில்லை.. உந்தன் இதயம் எந்தன் வசிப்பிடம்.. எம்மை மறக்க நீ குடித்த இந்த பசும்பால்.. போன்றதடி எந்தன் அன்பும் காதலும்.. காத்திரு எந்தன் பணியினை செம்மையுற முடித்து உமது கன்னம் கதுப்பை சிவக்க காதல் மொழி கதைக்கின்றேன்'' என்றே அவள் பூந்தளிர் கைகளை அவன் இதயத்தில் வைக்க ருத்திரா விழித்து எழ மித்திரன் தள்ளி நின்றான்.
    ''மித்திரன்.. மித்திரன் இங்கு இருப்பது போல மாயை தோன்றுகின்றது இது நிஜம் தானா? இல்லை எமது எண்ணங்களின் வித்தா? மித்திரா... நீ அருகே இருக்கின்றாயா? சொல்...'' என்றே ருத்திரா கேட்க அவனோ இருக்கும் இடம் கூட நகராது அசையாது நின்றான்.
     ''இல்லை நீ இங்கு இருந்தால் எமது வாளில் உந்தன் சிரம் கொய்ய கூடும்.. இங்கு நீ வருவதற்கு வாய்ப்பு இல்லை.. அப்படி இங்கு இருந்தாலும் நீ எமக்கு பகை மட்டுமே..'' என்றே எண்ணியவள் இங்கு இருக்க பிடித்தம் இல்லாமல் சமுத்ரா அறை நோக்கி சென்றாள்.
           மித்திரன் புன்னகை மாறாமல் கிளம்பினான்.
           மித்திரன் அவன் நாட்டிற்கு சென்ற நேரம் அங்கே துர்வனின் வாசம் தான் முதலில் அறிவித்தது. சினத்தோடு அங்கே அவன் அரண்மனை நோக்கி செல்ல அங்கே துர்வனின் தாய் மாதங்கி துர்வசந்திரனுக்கு உணவினை ஊட்டி விட கண்ணீர் உகுந்து பேசும் சித்திரம் தான் மித்திரன் கண்டான். கோவத்தோடு வாள் எடுத்து மித்திரன் வீச அங்கே வாள் அவனின் உடலில் உள்ளே சென்று வெளியே வந்தது.
         சொட்டு குருதியும் வெளியே வரவில்லை ஆனால் மாதங்கி உடனே ''மித்திரனே.. என்ன செய்துவிட எண்ணினாய்? இவன் உந்தன் தமையன்... உந்தன் சொந்த ரத்தம் இவனை அழிக்க வாளைடுத்தாய்?'' என்றே மாதங்கி கேட்க
      ''தொன்னூற்று ஏழு உயிரை பாலி கொண்ட மிருகம் எமக்கு தமையன் அல்ல'' என்றே மித்திரன் துர்வனின் முகம் காண துர்வானோ முகம் கண்களை அவனிடம் திருப்பாமல்
      ''அன்னையே இவன் தற்பொழுது எமது தம்பி அல்ல.. எம்மை வீழ்த்தும் கொலைக்காரியின் ஆருயிர் காதலன் அவன் எம்மை வெட்டாமல் இருக்கலாகுமோ?!'' என்றான்.
    ''எமது விழியை சந்திக்கட்டும் உமது கண்கள்.... நேர்கொண்ட பார்வையே உமகில்லையா?'' என்றான் மித்திரன்.
   ''எதற்கு? உமது விழியை பார்த்து நீ எம்மை உன் வசியத்தில் கட்டுப்பட வைக்க வா?'' என்றே கொஞ்சம் போலியான நகைப்பில் ஒர கண்ணில் மித்திரனை நோக்க அவனோ அக்கினி வார்த்து நிற்க வைத்தது போல நின்றான். அருகே அவர்களின் தாய் மாதங்கி எந்தன் மீது வாக்கு கொடுத்தும் உந்தன் தமையன் மீது வாள் தொடுகின்றாய் மித்திரா.. அந்த அளவுக்கு உன்னை மறலி பிடியில் வைத்து இருக்கின்றாளா அவள்? யாரவள்?'' என்றே அன்னை கேட்க ருத்திரன் சொல்லலாமா வேண்டாமா என்றே சிந்தனையில் சுழன்றான்.

 - விழியும் வாளும் சந்திக்கும். 

-பிரவீணா தங்கராஜ்.  

வணக்கம் நண்பர்களே!
 
சந்தோஷமான விஷயம் பகிர வந்து இருக்கேன். இதுவரை நான் முடித்த கதைகள் மற்றும் ongoing கதைகள் என்றே 29 நெருங்கி விட்டது. ஆனால் எதுவும் புத்தகமாக வெளியாது இல்லை. எல்லாமே kindle amazon பதிவு செய்து copyright வாங்கியது மட்டுமே. முதல் முறையாக புத்தக வடிவில் எனது நாவல் வந்து உள்ளது.
 
  அது எனது 25 ஆவது நாவலின் சிறப்பு. நாவல் பெயர் *என்னிரு உள்ளங்கை தாங்கும்* இதுவரை எங்கும் பதிவிடாத கதை.  
 
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் நடைபெற இருக்கும் மாபெரும் புத்தகக் கண்காட்சியில், ஸ்ரீ பதிப்பகத்தின்  அனைத்துப் புத்தகங்களும் கீழ்க் கண்ட இரு நிலயங்களில் கிடைக்கும். 

அதில் தான் *என்னிரு உள்ளங்கை தாங்கும்* என்ற எனது நாவல் வெளிவர இருக்கிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியிடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
பிரியா நிலையம் ஸ்டால் எண் - 420 மற்றும் 
அருண் நிலையம் - ஸ்டால் எண் -316 ல் கிடைக்கும்.
 

இந்த வாய்ப்பை எனக்கு அளித்த ஸ்ரீ பதிப்பகத்திற்கும், லதா மேம், உஷா மேம் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

 புத்தகக் கண்காட்சியில் மேற்கூறிய கடைகளில் கிடைக்கும்

விலை ரூ.180 (எனக்காக ஜஸ்ட் 180 செலவு பண்ணி வாங்குவீங்களா?)
வாங்கியவர் கதை படித்து கருத்து தெரிவிக்கவும். 

நன்றி, 
நான் உங்க, 
பிரவீணா தங்கராஜ்.


தீவிகை அவள் வரையனல் அவன்-13

தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥-13


 

  கதவை சாற்ற போனவன் அதனை திறந்து வைத்து, உள்ளே வரும் அன்னையை பார்த்து அதிர்ந்தது ஒரு நொடி. அடுத்த கணம் "அம்மா... வாங்க..." என்று தன் அன்னையை வரவேற்றான்.

    வீட்டுக்குள் வந்த சுபாங்கினி அங்கே ஒரு பெண் இருக்க, கனலாக மைந்தன் மீது பார்வை வீசினார்.

      அதன் பொருள் உணர்நதானோ என்னவோ உடனடியாக, "அம்மா இது யுக்தா. நான் விரும்பற பெண்" என்று அறிமுகப்படுத்த,

      "இது என்ன பழக்கம் ஆரவ். நான் உன்னை இப்படி தான் வளர்த்தேனா. அப்பா இல்லாம தனியா வளர்த்து இப்படி ஒழுக்கம் கெட்டு வளர்த்தேனு பெயரா?" என்று வெடித்தார் சுபாங்கினி.

       "அம்மா தெளிவா சொன்னேனே. அவளை விரும்பறேன். நாளைப் பின்ன நான் திருமணம் பண்ணப் போறவ" என்றான்.

      "ஏன் ஆரவ்... இதே மாதிரி உன் தங்கை காதலிக்கறேன்னு ஒருத்தன் வீட்ல, அதுவும் யாருமில்லாதப்ப போனா என்ன பண்ணியிருப்ப? காதலிக்கறவ கல்யாணம் பண்ணிக்க போறவயென்று சகஜமா எடுத்துப்பியா? சொல்லுடா" என்றதற்கு சம்யுக்தாவோ,

      "அத்தை நான் தான் பிறந்த நாளுக்கு ஆரவ் வாங்கி கொடுத்த புடவையை கட்டிக்காட்ட வந்தேன்." என்று பேச

     "பிறந்த நாள் டிரஸ்ஸா?" என்று சுபாங்கினி ஒரு மாதிரி வினவவும் யுக்தா புரியாமல் குழம்ப, ஆரவோ முகம் இறுகிப் போனான். 

      "யுக்தா நீ கிளம்பு." என்ற வார்த்தை கட்டளை போல உதிர்க்கவும் யுக்தா சுபாங்கினியை பார்த்து ஆரவிடம் வேறு பேச தயங்கி தன் புத்தக பையை எடுத்து புறப்பட்டாள்.

    செல்லும் போது ஐஸ்கேக்கை எடுத்து டேபிளில் வைத்து புறப்பட்டாள்.

      சுபாங்கினி தலையை கொண்டையிட்டு சமையற்கட்டு சென்று பார்க்க அங்கே இரு காபி கோப்பைகள் இருக்கவும் அதனை எடுத்து குப்பையில் போட்டார்.

     ஆரவ் சம்யுக்தா சென்றதும் பேச எண்ணினான் தான். ஆனால் பொறுமை காத்து ஆரம்பிக்க இருந்தான். ஆனால் சுபாங்கினி செய்த செயலில் சினம் பொங்க,

     "ஏன் மா. இப்படி பண்ண? அவ பிற்காலத்தில் என் மனைவியா வரபோறவ, அவளை அசிங்கப்படுத்தி அனுப்பியிருக்கிங்க. தப்பு தான் யாரும் இல்லாதப்ப இங்க கூட்டிட்டு வந்தது. இது ஒன்றும் பிளான் பண்ணி அழைச்சிட்டு வரலை. நான் தான் அவ பிறந்த நாளுக்கு சேலை வாங்கி கொடுத்தேன். அதை ஒரு நாள் கட்டிட்டு வா சொன்னேன். என் கிரகம் இன்னிக்கே பார்க்கணும் நான் தான் சொன்னேன்.

    அவ அப்பவே காலேஜ் நியர் பை இருக்கற அவ பிரெண்ட் வீட்ல கட்டிக்கொண்டு வருவதா சொன்னா. நான் தான் யாரோட வீட்டுக்கோ போறதுக்கு... இங்க கூட்டிட்டு வந்தேன். அவளுக்கு இங்க வரும் வரை இது என் வீடு என்று கூட தெரியாது.

      அவளை பேசறதா நினைத்து உன் மகனையும் தானே அம்மா நீ அசிங்கப்படுத்திட்ட. நான் என்ன வீட்டுக்கு கூட்டிட்டு வந்தது தப்பான நோக்கத்துக்கா?  அப்படியே தப்பா பேசினா என்னை பற்றி பேசியிருக்கலாமே.

     பிறந்த நாள் டிரஸ்ஸ கேட்டு அவளை...... ஏன் மா... நான் உன்னிடம் எதிர்பார்க்கலை.

    வைஷ்ணவி இப்படி பண்ணினா என்ன பண்ணுவனு கேட்டியே. நான் உன்னை மாதிரி கேள்வி கேட்டு உடனே அசிங்கப்படுத்த மாட்டேன். அவ தரப்பு நியாயத்தை கேட்பேன்." என்று பேச, தனக்கும் அவன் பேச்சுக்கும் சம்மதமே இல்லை என்பது போல சுபாங்கினி காபி கலக்கி கொண்டிருந்தார்.

     "பற்றாதகுறைக்கு நாங்க குடித்த இரண்டு கப்பையும் குப்பையில் போட்டு இருக்க.? அந்தளவு கோபமா?" என்று கேட்க,

     "இங்க பாரு டா. தன்னந்தனியா உன்னை வைஷ்ணவியை வளர்த்து, ஆளாக்கி படிக்க வைத்து இருக்கேன்.

     வைஷ்ணவியை ஒரு நல்லவனுக்கு கட்டிக் கொடுக்கறவரை இந்த காதல் கத்தரிக்காய் ரூம், லாட்ஜ் போகாதே. இந்த வருடம் வைஷ்ணவிக்கு படிப்பு முடியும். அதுக்கு பிறகு அவளை எவனுக்காவது கட்டி வைத்து நான் ஏதாவது சேவை செய்ய கிளம்பிடறேன். அப்பறம் யாரோடவும் மோது. எவளையும் விரும்பு " என்று அறைக்கு சென்று தாழிட்டு முடிக்க, சுபாங்கினி தாரை தாரையாக கண்ணீர் வடித்தாள்.

    பெற்ற தாயே மகனின் ஒழுக்கம் பற்றி பேசுவார்களா. நானே பேசிவிட்டேன் ஆரவ் என்ன தவறாக எண்ணி விட்டு இருப்பான். இதற்கெல்லாம் காரணம் மகன் விரும்பும் பெண்ணின் தந்தை தானே.

    முன்பு குடியிருந்த வீட்டின் ஓனர் அம்மாவிடம் காரணம் கேட்டதும் கூறியது இது தான்.

     இதே அதிர்ச்சியில் கடக்க, இன்று தன் அருகே இடிப்பது போல வந்த அந்த உயர்ரக காரில் இருந்து வந்தவரோ, என்ன பேச்சு பேசுகின்றார்.

    பணக்கார பெண்ணை மடக்குவதாக தன் மகனை அல்லவா இழிவாக எண்ணிவிட்டார்.

     வந்தப் பெண்ணை ஆலம் கரைத்து தன்மையாக பேசினால் நிச்சயம் உருகி போவது போன்று இருக்கின்றாள்.

    ஆனால் பேச வேண்டியதே மாறிவிட்டது. இந்த காதல் மகனுக்கு வராமல் இருந்திருக்கலாம்.

      ஆரவிடம் பேசியது எல்லாம் மிகவும் கீழ்த்தரமான வார்த்தை. இனி ஜென்மத்துக்கும் தன்னை மன்னிக்க மாட்டான்.

     அந்த பெண் பிற்காலத்தில் என்னை மனிஷியா நினைப்பாளா? என்று மனதை வதைக்க,

    "அம்மா... அம்மா..." என்ற வைஷ்ணவி குரல் கேட்கவும் கண்ணீரை சேலை தலைப்பால் துடைத்து கதவை திறக்க, ஆரவ் அதேயிடத்தில் அமர்ந்து இருப்பதை கண்டு பரிதவித்தது தாய் உள்ளம்.

       வைஷ்ணவிக்கு காபி போட்டு கொடுக்க, ஆரவ் எழுந்து தன்னறைக்கு வந்து சேர்ந்தான்.

     அலைப்பேசியை எடுத்து யுக்தாவிற்கு அழைத்தான்.

     இருமுறை எடுக்கவில்லை என்றதும் அம்மா பேசியதை கேட்டு கவலையாக இருப்பாளோ? என்னை கட் பண்ணறாளா? என்று விழித்தான்.

      சற்று நேரம் போனை தூரயெறிந்து இமை மூடி யோசித்தான்.

      சின்ன சின்ன தெளிவுகள் பிறக்க, அந்நொடி போன் மணி அடித்தது.

     எடுத்து காதில் வைக்க, "ஆரு.... சாரி... அப்பா கூட காரில் வந்தேன். அப்பா சிக்னலில் பார்த்தேன். அவரோட வீட்டுக்கு வந்தேன். அதான் நடுவுல போனை எடுக்க முடியலை." என்று சொல்லவும் ஆரவிற்கு முழுதும் தெளிவாக புரியத் துவங்கியது.

    மாயக்கண்ணனை போல மர்மமாய் புன்னகைத்துக் கொண்டான்.

     "யுக்தா... அம்மா பேசியதை மனதில் வைத்து கொள்ளாதே. எல்லாம் சரியாகிடும். நம்மை தனியா பார்தததும் மனசு தறிக்கெட்டு யோசிச்சிட்டாங்க. பெண் பிள்ளை இருக்குல அதான் இப்படி யோசித்து பயப்படறாங்க." என்று விவரிக்க,

     "அத்தை சொல்லறது சரி தான் ஆரவ். நீ நான் தனியா இருந்தா... நீ இன்னைக்கு கிஸ் பண்ணியிருப்ப." என்று பேசவும், ஆரவ் பேசாமல் ஒரு நொடி கடத்தினான். 

     "ஆரு... ஆரு... சாரி... எனக்கு அப்படி தோன்றியது உன் பார்வை அப்படி இருந்தது மாதிரி தோன்றியது.." என்று பதறவும்,

     "இல்லை யுக்தா நீ சொன்னது நடந்திருக்கலாம். உன் லிப்ஸ் என்னை கொன்றது..." என்றவன் அடுத்த நொடி எதுவும் பேசவில்லை இருவரும்.

பிறகு என்ன நினைத்தானோ "ம்ம். ஓகே. நான் அப்பறம் பேசறேன்." என்று வைத்தான்.

       சந்துருவோடு ஈவினிங் மூவி பார்த்து பாதியிலே எழுந்து வந்து விட்டான் ஆரவ்.

    தொடர்ந்து சந்துரு கேட்டதும் நடந்தவையை கூறினான்.

   அம்மா பேசியதை மட்டும் கத்தரித்து, அவர்கள் திடீரென வந்ததை, பார்த்ததை கூறியதும் சந்துரு எதுவும் சொல்லவில்லை. அம்மா தானே ஆரவ் உன் காதல் விவகாரம் தெரிந்ததே அதுவரை சூப்பர். நீ பேசாம சம்யுவிடம் அவங்க பண்றதை சொல்லிடேன் எதுக்கு மறைத்து... இப்ப ஆன்ட்டியை இல்ல தப்பா எண்ணுவா? " என்றதும் ஆரவ்
அதற்கு "இல்லைடா இப்ப செமஸ்டர் வருது. நான் ஏதாவது சொல்லி டிஸ்டர்ப் ஆகிட்டா.  எதுக்கோ அப்பறம் பார்க்கலாம். என்று  விடைப்பெற, சந்துருவோ, இவன் சொல்ல மாட்டான் நாம சொல்லிட வேண்டியது தான் என்று தலையை ஆட்டி மனதில் பேசி முடிக்க,

    "நான் மட்டும் இல்லை. யுக்தாவிடம் நீயும் எதுவும் சொல்லக் கூடாது. புரியுதா.. ஏதாவது பண்ணி நீ சொன்னது தெரிந்தது மவனே உப்பு கண்டம் போட்டுடுவேன்" என மிரட்டி  வீட்டுக்குள் வந்தான்.

    தாய் பேசியதை மறந்து, "அம்மா பசிக்குது... முட்டை தோசை இரண்டு" என்று ஆர்டர் கொடுத்தான்.

    தான் ஏசிய ஏச்சுக்கு ஆரவ் பேச மாட்டானென்று எண்ணியிருக்க, ஆரவாகவே இப்படி இயல்பாக பேசவும் தாய் சுட சென்று முடித்து தட்டில் பரிமாற,
  
     "மிரட்டினாரா மா. வைஷ்ணவியை வைத்து..., வேலையை விட்டு தூக்குவேன்னு சொன்னாரா? என்னை கொன்றுடுவேன்ன் சொல்லியிருப்பாரே?" என்று கேட்க சுபாங்கினி மகனை ஆச்சரியமாக பார்த்து பதிலாக ஆமோதிக்க செய்தார்.

   "ஆரவ்... கண்ணா... பெரிய இடம் டா. அம்மா பேசியது மனசுல வைச்சிக்கலையே? அய்யோ எப்படியெல்லாம் பேசிட்டேன். நீ தங்கம்யா... தங்கம்" என்று அழுவ, சுபாங்கினி மடியில் தலை சாய்ந்தவன், "அவளுக்கும் என்ன பிடிச்சிருக்கு மா. நல்ல பொண்ணு. வசதி காரணம் காட்டி, மனதை பிரிக்காதிங்க. நான் அவ அப்பா  லெவல் கொஞ்சமாவது மாறி தான் பெண் கேட்பேன். அதுவரை மிரட்டலை கண்டுக்காதே மா. நம்மை மீறி ஒன்றும் ஆகாது." என்று ஆறுதல் தந்து காதலுக்கு ஒப்புதல் பெற்றான்.

    "எனக்கு என் இரண்டு குழந்தைகளின் வாழ்வும் சிறக்கணும். பிடிச்ச வாழ்வை வாழணும். கஷ்டப்படக்கூடாது. பார்த்து இரு ஆரவ். வைஷ்ணவி தங்கை இருக்கா மனசுல வைத்துக்கொள்" என்று சொல்லி சுபாங்கினியும் அவ்வறைவிட்டு அகன்றார்.

     சம்யுக்தாவோ, தந்தை சிக்னலில் பார்த்து கை அசைக்க தான் ஏறிய பின் தந்தை "எங்கம்மா இந்தப்பக்கம்" என்றதற்கு தான் தோழி உடல்நிலை சரியில்லாது பார்த்து வர சென்றதாக பொய் உரைத்திருந்தாள்.

   தந்தையோ "இந்த காலத்தில் ஓலோ, உபர், என்று எத்தனையோ டாக்ஸி வசதியிருந்தும் உன் தோழி உன்னை அம்போனு நடக்க விட்டுட்டாளே? பார்த்து மா. காதலும் நட்பும் தராதரம் இருக்கறவங்க கூட வரலாம். லோக்கலா இருப்போரிடம்  நட்பே இப்படி தான். அதனால இந்த லோ பீப்பிள் பிரண்டிஷிப் வேண்டாம்" என்று கட்டளையிட, தலையை சம்மதமாய் அசைத்தது நினைவு வந்தது.

  அப்பாவுக்கு நட்பிலே லோ பீப்பிள் வேண்டாம்னு ஒதுக்குறார். ஆரவை ஏற்றுப்பாரா? அப்பா சம்மதிக்கலைனா என்ன செய்ய? ஆரவிடம் பேசின பிறகு அவங்க அம்மா பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். ஆன்டி இதே மாதிரி தினமும் பேசினா நான் தாங்கிப்பேனா? இல்லை... ஆரவ் எனக்கு எப்பவும் சப்போர்ட் செய்வாரா?

    என் ஆரவ் என் மனதை புரிந்து எனக்கு ஏற்ற மாதிரி இருப்பார். இந்நேரம் அவங்க அம்மாவை காதலுக்கு சம்மதம் வாங்கிட கூட செய்து இருக்கலாம் என்ற கனவுலகில் சஞ்சரித்தாள்.

    அடுத்த இரு தினம் நல்லபடியாக போக, கல்லூரிக்கு செல்லும் கார் பஞ்சராக தந்தை காரில் வந்திறங்கினாள்.

    திவேஷ் ஓடி வந்து ஹாய் அங்கிள் எப்படி இருக்கீங்க?" என்று நலன் விசாரிக்க, சம்யுவிற்கு திவேஷுக்கு அப்பாவை முன்னவே தெரியுமா? என்பது போல அதிர்ந்து பார்க்க, தந்தை, திவேஷ் உரையாடலோ கம்பெனி, அவரின் தந்தை என்று பேச்சு போக, அவளுக்கு திவேஷ் அப்பாவிற்கு நல்ல பழக்கமென்று புரிந்தது.

      சம்யு தந்தையிடம் பை சொல்லி நடக்க, மனமோ 'அப்போ ஆரவை நான் விரும்பறதை சொல்லியிருப்பானோ? என்று நிலைக் கொள்ளாமல் தவித்து போனாள்.

    ஆரவிற்கு திவேஷ் தந்தை சுவாமிநாதனை தெரியும் என்பதை சம்யு சொல்வதற்காக அவனை தேட திவேஷோ சம்யுவை நெருங்கி வந்துக் கொண்டு  இருந்தான்.

-வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

-பிரவீணா தங்கராஜ்

    
     

     

    

   

   
    
     

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...7


 💟(௭) 7     

 
                         துர்வசந்திரன் குகையின் முன் வர அவனுக்கு அங்கே பெண்ணின் வாசம் வீச குகையின் உள்ளே வந்தவன் சமுத்ரா அருகே ஒருவள் அமர்ந்து எழுப்ப செய்ய கண்டு அவளின் சிகையினை பிடித்து
      ''யார் நீ உம் நாமம் என்ன?'' என்று கேட்க மஞ்சரி அவனின் சிகை பிடிக்க அதில் வலியினை உணர்ந்து ''ருத்திரா...'' என்றே தமது தோழியை அழைக்க துர்வனுக்கு மஞ்சரியே ருத்திரா என்று எண்ணி விட அடுத்து மேக வித்தகன் வந்து நின்றதும் அவனின் வளி வேலியினை கூட அகற்றியது இவளே என்றே அதீத சினத்தில் இருந்தான்.
        என்ன அவனின் சிகை பற்றுதலில் மஞ்சரி முகம் சுழிக்க பெண்ணவள் இதற்கே இப்படி என்றால் தன் முன் எதிர்க்க நின்றாள் தோற்பது நிச்சயம் என்றே மமதையில் இருந்தான்.
      ''துர்வசந்திரா... எமது தமைக்கையை விடுவி..'' என்றே மேகவித்தகன் சமுத்ராவை சொல்ல
      ''உந்தன் ஒரு தமைக்கை தான் இவளை காப்பாற்ற வந்தவள் என்றே வெற்றி மிதப்பில் சொல்லுவாய்... எங்கே இவளை வைத்து அவளை எழுப்பு... என்றே சொன்னவன் அந்த இடமே அதிரும் வகையில் சிரித்தவன்... உம்மால் முடியாது எமது வல்லமையை எதிர்க்க ஆண் வர்க்கமே இல்லை இதில் பெண் வர்க்கத்தில் இருப்பார்களா?'' என்றே ஆணவத்தில் சிரிக்க ஒரு கூரிய அம்பு துர்வனின் தலைக்கு சற்றே உரசி சென்றது.
           துர்வன் ஒரு கணம் தலையை தடவி பார்த்தவன் அம்பு கண்டு அதனை எய்தவன் இருந்த திசைக்கு பார்வை பதிக்க அங்கே மித்திரன் அனல் கக்கும் விழிகளோடு நின்றான்.
     ''வந்துவிட்டாயா? இம்முறை எம்மை கண்டு அறிந்து விட்டாய்.... எதிரிகளும் அதிகமாக சேர்ந்தே போனார்கள். ஆனால் உமக்கே தெரியும் மித்திரனே... எம்மை கொல்ல செய்ய நீயோ இவனோ இயலாது...''
      ''மங்கை அவளை விடுவி.... அவள் தாய்மை கோலம் கொண்டவள்'' என்றே மித்திரன் சொல்ல துர்வனுக்கு இவள் தங்கள் ரத்தத்தில் பந்தமாக ஆனவளோ? எமக்கு மரணம் கொடுக்க முடிவானவள் தானா? என்றே சிந்திக்க மேகவித்தகன்
     ''கண்ணே செப்பியது எல்லாம்....''
     ''மெய் பிரபு...'' என்றே மஞ்சரி மகிழ்ந்து அவனை அணைக்க போக மேகவித்தகன் அணைத்து ஆராதழுவ
      ''இவள் உமது தமக்கை அல்லவா?'' என்றே துர்வன் கொஞ்சம் யோசனையோடு கேட்க
      ''அல்ல... இவள் எமது தர்மபத்தினி'' என்றே மேகவித்தகன் சொல்ல(அறிமுகம் மிகவும் தேவை மூடர்களே... )
     ''அப்படி என்றால் ருத்திரா என்றே அலறியது எதற்கு?'' என்றே துர்வன் கேட்க
     ''அதை யாம் செப்புகின்றோம்'' என்றே ருத்திரா பெண் உருவத்தில் காளியாக நிற்க மித்திரனோ இனியும் துர்வன் ருத்திரா அருகே இருந்தால் துர்வனுக்கு ஆபத்தாக அமையுமோ என்றே அஞ்சி போனான் மித்திரன்.
      நொடியில் துர்வன் சுதரித்தவன் அங்கே மேகனை தழுவி இருந்த மஞ்சரியை இழுத்து அவளின் கழுத்து வாள் போன்ற கூர் ஆயுதம் ஏந்தி அழுத்த ருத்திரா யோசிக்க செய்தாள்.
          மஞ்சரி தமையனின் இல்லாள் ஒரு உயிர்... ஓர் உயிரை சுமக்கும் தாய்மை வேறு... என்றே வாளினை கீழே தாழ்த்த செய்ய மித்திரனுக்கு ருத்திரா சாதாரணமாக இதனை விட மாட்டாள் என்றே அறிந்து இருந்தவன் இப்பொழுது தமையனை  அழிக்கும் வல்லமை இவளிடம் இருக்கின்றன என்றே அறிந்த பின்னர் நந்தல் குணம் என்றாலும் தமையனை காக்க மட்டுமே எண்ணினான் மித்திரன்.
         தனது காதலுக்கு முதல் சவம் தொண்டுவதை அறியாமல் போனான் மித்திரன்.
     ''அங்கே நில் பேதையே... யார் நீ?'' என்றே மஞ்சரி கழுத்தில் அழுத்தம் கொடுக்க
     ''எமது தமக்கை வசியம் செய்து நித்திரையில் வைத்திருக்கின்றாயே அவள் செப்பவில்லையா?'' என்றே ஏளனமாக நகைக்க
     ''தேவி...?'' என்றே வினாவோடு கேட்க
     ''ருத்திரமா தேவி... முழு நாமம்...'' என்றே ருத்திரா சொல்லி முடிக்க துர்வனுக்கு அப்பொழுதும் ஒரு அலட்சியம் தான் இவள் உறவில் எமக்கு எமன் இல்லை என்றே எண்ணியபடி யோசித்த நொடி துர்வன் அசர ருத்திரா வாள் வீச துர்வனின்  முகத்தில் வலது பக்கம் வாளின் கூர் தீண்டி குருதி வழிய அதனை உணரும் துர்வன் இல்லை ஆனால் மித்திரனோ
     ''ருத்ரா... ஆருயிரே... சற்றே பொறுத்திரு..'' என்றே அவளின் வாள் மேலும் துர்வனை கொல்ல இயலாமல் அரண் புரிய துர்வனுக்கு தமையன் ருத்திரா என்னும் இவளை மையலில் இருக்கின்றான் என்றே புரிந்திட இனியும் ருத்திரா கையில் அகப்பட்டால் இறப்பு உறுதியாகலாம் என்றே எண்ணி மஞ்சரியை தள்ளிவிட்டு விசையை அழுத்த அக்குகை திறந்திட வெளியேறி புரவியில் ஏறி மந்திரம் உச்சரித்து இமை மூட மித்திரன் புரவி வானில் பறந்தமை போன்றே துர்வனின் புரவியும் சிறகு விரித்து வளியில் பறக்க துவங்கியது.
      மஞ்சரியை பிடித்து நிறுத்தி அவளுக்கு எதுவும் இல்லை என்றே அறிந்த நொடி துர்வனை தேட அவன் வானில் பறக்க கண்டு சொல்ல இயலா கோவத்தில் வாளினை எடுத்து மித்திரன் மார்பில் அழுத்தி
       ''உமது தமையனின் பிறழ்தல் எங்கே?'' என்றே கேட்க மித்திரனோ ருத்திரா தம்மை மையல் புரிந்தாலும் அவளின் வழியில் தெளிவாக இருக்க அவளின் வாள் தனது நெஞ்சில் அழுத்தம் கொடுக்க அதனால் குருதி வருவதை உணர்ந்தவன் புன்னகையுடனே அவளையே பார்த்து
    ''எமக்கு அவனின் பிறழ்தல் அறிந்து இருக்க வில்லை ருத்திரா... அப்படியே அறிந்து இருப்பினும் உம்மிடம் சொல்ல இயலா சூழ்நிலை கைதியாக உள்ளேன் ருத்திரா'' என்றே சொல்ல ருத்திரா சினம் அவளின் வாள் மூலம் மித்திரனின் மார்பில் இறங்கியது.
         மேகவித்தகன் ருத்திரா மித்திரன் பற்றி அறியாததால் வேடிக்கை மட்டுமே காண மஞ்சரி ஓடி வந்து ருத்திரா வாளினை அகற்றி
     ''என்ன செய்கின்றாய் ருத்திரா.. உமது மூளை மழுங்கி விட்டதா? உம்மை கை பற்றும் கரத்தினை நீயே உதறுகின்றாய்? பார் குருதி வழிகின்றது.. சற்றே இன்னும் ஆழம் பார்த்தால் உமது கரத்தாலே துஞ்சல் கதையாகிவிடும்'' என்றே எடுத்து சொல்ல ருத்திரா இமைகளை மூடி விழியினை எங்கோ செலுத்தி
      ''எமது தமக்கை இங்கே இப்படி இருக்க எமக்கு எந்த பந்தமும் வேண்டாம்'' என்றே சமுத்ரா பக்கம் சென்று எழுப்ப
    ''அவளை உம்மால் எழுப்ப முடியாது... எமது தமையனின் வசியத்தின் பிடியில் இருக்கின்றாள்... யாம் உமது சிந்தையை வசியம் செய்தமை போல(ஏன் ஏன் அவளே அனலில்(நெருப்பா) இருக்கா... மேலும் தகவல் எதற்கு நாயகனே?)''
     ''மேக வித்தகா.. நமது தமக்கையை புரவியில் ஏற்று'' என்றே கட்டளையிட்டு நகர
    ''அதற்கு அவசியம் இல்லை ருத்திரா.. உமது தமக்கை செவியில் எமது தமையன் நாமம் மும்முறை செப்பினாலே போதும் வினாடிகள் நகர விழித்து அமருவாள்' என்றே சொல்ல வித்தகன் சமுத்ரா அருகே சென்று பெயரை சொல்ல போக ருத்திரா தடுத்து
      ''நில் தமையனே... அந்த கயவனின் ரத்தம் இங்கு தானே இருக்கின்றான் அவர்களே அவர்கள் தமையன் நாமத்தை செப்ப செய்யுங்கள்'' என்றே ருத்திரா பார்வை தீர்க்கமாக சொல்ல மித்திரன் சமுத்ரா அருகே சென்றான்.     அவளின் செவியில்
      ''துர்வசந்திரன் துர்வசந்திரன் துர்வசந்திரன்(போதும் இங்கே என்ன பெயர் சுட்டு விழாவா நிறுத்து)'' என்றே மும்முறை செப்ப சில வினாடி இமைகளை உருட்டி சமுத்ரா எழ ருத்ரா மஞ்சரி கண்டு அணைத்து இத்தனை திகதிகள் காணாமல் களித்து மகிழ்ந்தார்கள்.
           கொஞ்ச நேரம் போக ருத்திரா சமுத்ரா தள்ளி நிறுத்தி கன்னம் பழுக்க ஒரு அறை விட சமுத்ரா அக்கா என்றாலும் தங்கை போல அமைதியாக இருந்தாள்.
      அவளை பொறுத்தவரை துர்வனை மையல் கொண்ட காரணமும் அவனால் தாம் இங்கு வந்தமைக்கு மட்டுமே ருத்திரா அறைந்து இருக்கின்றாள் என்றே புரிந்து இருந்தாள்.
      ''மேகவித்தகன் மஞ்சரி ஒரு புரவியிலும் ருத்திரா சமுத்ரா ஒரு புரவியிலும் செல்ல கிளம்ப மித்திரன் ருத்திராவை இமைக்காமல் நோக்க மஞ்சரி தான்
     ''ருத்திரா மித்திரன் மீது எப்பிழையும் இருப்பது போல தோன்றவில்லை'' என்றே கூற ருத்திராவின் ஒர் பார்வையில் அமைதி ஆனாள்.
      மித்திரன் ஒரு சிரிப்போடு ருத்திரா அருகே வந்து ''யாம் பிழை செய்யவில்லை என்றே உமது தோழி செப்பும் போது எமது இதயத்தை தாங்கும் உமக்கும் அது தெரிந்து இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை...'' என்றே மித்திரன் சொல்ல ருத்திரா மாறாத பார்வையோடு அவன் புறம் திரும்பி ஏதோ சொல்ல வர
      ''மானுதல் கொள் மங்கையே.... எமது மீது மறலி கொண்டது உமக்கே தெரியாது. ஒரு முறை மறலி செய்தேன் உம்மை அதே போல செய்து.. எம் அரண் கொண்டு செல்ல எம்மால் முடியும் ஆனால் அதை யாம் செய்ய மாட்டேன். உண்மையான அன்பில் உமக்கு உணர்த்துவேன்... இப்பொழுதே நீ உணர்ந்து தான் இருக்கின்றாய் ஆனால் மனுதால் அடைய மாட்டாய்.... உம் அன்பு தேடி வரும் நாளுக்காய் காத்திருப்பேன்.. என்றும் என்றென்றும் ருத்ரா...'' என்றே கர்வமாக நிமிர்த்து புன்னகையோடு பாதையை கையால் காட்ட ருத்திரா புரவி சென்றது. மித்திரன் புரவியில் ஏறி மந்திரம் ஜெபிக்க அது சிறகை விரித்து பறந்தது.
       மித்திரன் மனம் நிலை கொள்ளாமல் சிந்தனையில் சுழன்றது. துர்வனை கொல்ல ருத்திரா ஒருத்தியால் மட்டுமே முடியும் என்றே நன்கு உணர்ந்த மித்திரன் இருப்பினும் துர்வனை அரண் போல காத்தது மித்திரனுக்கே பிடித்தம் இல்லை.
          அவனின் குரு சொன்னது தான். துர்வனின் மனம் நல்வழி படுத்திவிட்டாள் போதும் இந்த பலி சக்தி என்றே அவன் எண்ணம் கலைத்து விட தான் மித்திரன் காத்திருக்கின்றான். அவனின் முன் சற்று நேரம் இருந்தாலே துர்வனின் மனதில் அந்த எண்ணங்களை அழிக்கும் வல்லமை மித்த்ரனுக்கு உண்டு.. அப்படி அழித்தால் ருத்திராவின் தமைக்கை சமுத்ராவோடு இல்வாழ்க்கை வாழும் நிலைக்கு அவனை கொண்டு வர இயலும்... ஆனால் கற்பித்த குரு அப்படி அவன் உன் மன எண்ணத்தினை கலைத்தால் நீயும் அவன் போல பலி சக்தி தேடி செல்ல கூடும் என்றே சொல்லவும் செய்தாயிற்று.
      துர்வன் மித்திரன் இருவரில் யார் யாரை மனதில் இருக்கும் எண்ணங்களை கலைத்து அவர்கள் வாகை புரிவார்கள்?
        இதில் ருத்திரா மித்திரன் சொல் இணங்க துர்வனுக்கு மறு வாய்ப்பு கொடுப்பாளா? அல்லது சமுத்ரா போல 97 மங்கைகளை பலியிட்ட நங்கைகளுக்காக பார்ப்பாளா? என்றே மித்திரன் குழம்பி தான் இருக்கின்றான்.
            நூறு சதம் அவன் பலியிட செய்தால் துர்வனுக்கு மித்திரனின் மீறிய சக்தி கிடைக்கும் ருத்திராவாளும் அவனை கொல்ல இயலாது சக்தி படைத்து இருப்பான்... அவன் இந்த பரிதியில் வாழும் வரை அவனை எதிர்க்க யாருமின்றி இருப்பார் என்ன செய்ய என்றே எண்ணி புரவியில் பயணிக்க 97 மங்கைகள் உயிர் போனதற்கு தாமே தமது தமையனை வெட்டி வீழ்த்தும் ஆவேசமும் மித்திரனிடம் இருந்தது. ஆனால் தாயின் சொல் அவர்களிடம் கொடுத்த வாக்கு என்றே பொருத்து இருக்கின்றான்.

நந்தல் - கேடு
துஞ்சல் - சாதல்
பிறழ்தல் - ஒளிவிடம்
மானுதல் - ஒப்பு
மறலி - மயக்கம்
வாகை-வெற்றி  

 -விழியும் வாளும் சந்திக்கும். 

 -பிரவீணா தங்கராஜ். 

தீவிகை அவள் வரையனல் அவன்-13

 


தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥-13

  கதவை சாற்ற போனவன் அதனை திறந்து வைத்து, உள்ளே வரும் அன்னையை பார்த்து அதிர்ந்தது ஒரு நொடி. அடுத்த கணம் "அம்மா... வாங்க..." என்று தன் அன்னையை வரவேற்றான்.

    வீட்டுக்குள் வந்த சுபாங்கினி அங்கே ஒரு பெண் இருக்க, கனலாக மைந்தன் மீது பார்வை வீசினார்.

      அதன் பொருள் உணர்நதானோ என்னவோ உடனடியாக, "அம்மா இது யுக்தா. நான் விரும்பற பெண்" என்று அறிமுகப்படுத்த,

      "இது என்ன பழக்கம் ஆரவ். நான் உன்னை இப்படி தான் வளர்த்தேனா. அப்பா இல்லாம தனியா வளர்த்து இப்படி ஒழுக்கம் கெட்டு வளர்த்தேனு பெயரா?" என்று வெடித்தார் சுபாங்கினி.

       "அம்மா தெளிவா சொன்னேனே. அவளை விரும்பறேன். நாளைப் பின்ன நான் திருமணம் பண்ணப் போறவ" என்றான்.

      "ஏன் ஆரவ்... இதே மாதிரி உன் தங்கை காதலிக்கறேன்னு ஒருத்தன் வீட்ல, அதுவும் யாருமில்லாதப்ப போனா என்ன பண்ணியிருப்ப? காதலிக்கறவ கல்யாணம் பண்ணிக்க போறவயென்று சகஜமா எடுத்துப்பியா? சொல்லுடா" என்றதற்கு சம்யுக்தாவோ,

      "அத்தை நான் தான் பிறந்த நாளுக்கு ஆரவ் வாங்கி கொடுத்த புடவையை கட்டிக்காட்ட வந்தேன்." என்று பேச

     "பிறந்த நாள் டிரஸ்ஸா?" என்று சுபாங்கினி ஒரு மாதிரி வினவவும் யுக்தா புரியாமல் குழம்ப, ஆரவோ முகம் இறுகிப் போனான். 

      "யுக்தா நீ கிளம்பு." என்ற வார்த்தை கட்டளை போல உதிர்க்கவும் யுக்தா சுபாங்கினியை பார்த்து ஆரவிடம் வேறு பேச தயங்கி தன் புத்தக பையை எடுத்து புறப்பட்டாள்.

    செல்லும் போது ஐஸ்கேக்கை எடுத்து டேபிளில் வைத்து புறப்பட்டாள்.

      சுபாங்கினி தலையை கொண்டையிட்டு சமையற்கட்டு சென்று பார்க்க அங்கே இரு காபி கோப்பைகள் இருக்கவும் அதனை எடுத்து குப்பையில் போட்டார்.

     ஆரவ் சம்யுக்தா சென்றதும் பேச எண்ணினான் தான். ஆனால் பொறுமை காத்து ஆரம்பிக்க இருந்தான். ஆனால் சுபாங்கினி செய்த செயலில் சினம் பொங்க,

     "ஏன் மா. இப்படி பண்ண? அவ பிற்காலத்தில் என் மனைவியா வரபோறவ, அவளை அசிங்கப்படுத்தி அனுப்பியிருக்கிங்க. தப்பு தான் யாரும் இல்லாதப்ப இங்க கூட்டிட்டு வந்தது. இது ஒன்றும் பிளான் பண்ணி அழைச்சிட்டு வரலை. நான் தான் அவ பிறந்த நாளுக்கு சேலை வாங்கி கொடுத்தேன். அதை ஒரு நாள் கட்டிட்டு வா சொன்னேன். என் கிரகம் இன்னிக்கே பார்க்கணும் நான் தான் சொன்னேன்.

    அவ அப்பவே காலேஜ் நியர் பை இருக்கற அவ பிரெண்ட் வீட்ல கட்டிக்கொண்டு வருவதா சொன்னா. நான் தான் யாரோட வீட்டுக்கோ போறதுக்கு... இங்க கூட்டிட்டு வந்தேன். அவளுக்கு இங்க வரும் வரை இது என் வீடு என்று கூட தெரியாது.

      அவளை பேசறதா நினைத்து உன் மகனையும் தானே அம்மா நீ அசிங்கப்படுத்திட்ட. நான் என்ன வீட்டுக்கு கூட்டிட்டு வந்தது தப்பான நோக்கத்துக்கா?  அப்படியே தப்பா பேசினா என்னை பற்றி பேசியிருக்கலாமே.

     பிறந்த நாள் டிரஸ்ஸ கேட்டு அவளை...... ஏன் மா... நான் உன்னிடம் எதிர்பார்க்கலை.

    வைஷ்ணவி இப்படி பண்ணினா என்ன பண்ணுவனு கேட்டியே. நான் உன்னை மாதிரி கேள்வி கேட்டு உடனே அசிங்கப்படுத்த மாட்டேன். அவ தரப்பு நியாயத்தை கேட்பேன்." என்று பேச, தனக்கும் அவன் பேச்சுக்கும் சம்மதமே இல்லை என்பது போல சுபாங்கினி காபி கலக்கி கொண்டிருந்தார்.

     "பற்றாதகுறைக்கு நாங்க குடித்த இரண்டு கப்பையும் குப்பையில் போட்டு இருக்க.? அந்தளவு கோபமா?" என்று கேட்க,

     "இங்க பாரு டா. தன்னந்தனியா உன்னை வைஷ்ணவியை வளர்த்து, ஆளாக்கி படிக்க வைத்து இருக்கேன்.

     வைஷ்ணவியை ஒரு நல்லவனுக்கு கட்டிக் கொடுக்கறவரை இந்த காதல் கத்தரிக்காய் ரூம், லாட்ஜ் போகாதே. இந்த வருடம் வைஷ்ணவிக்கு படிப்பு முடியும். அதுக்கு பிறகு அவளை எவனுக்காவது கட்டி வைத்து நான் ஏதாவது சேவை செய்ய கிளம்பிடறேன். அப்பறம் யாரோடவும் மோது. எவளையும் விரும்பு " என்று அறைக்கு சென்று தாழிட்டு முடிக்க, சுபாங்கினி தாரை தாரையாக கண்ணீர் வடித்தாள்.

    பெற்ற தாயே மகனின் ஒழுக்கம் பற்றி பேசுவார்களா. நானே பேசிவிட்டேன் ஆரவ் என்ன தவறாக எண்ணி விட்டு இருப்பான். இதற்கெல்லாம் காரணம் மகன் விரும்பும் பெண்ணின் தந்தை தானே.

    முன்பு குடியிருந்த வீட்டின் ஓனர் அம்மாவிடம் காரணம் கேட்டதும் கூறியது இது தான்.

     இதே அதிர்ச்சியில் கடக்க, இன்று தன் அருகே இடிப்பது போல வந்த அந்த உயர்ரக காரில் இருந்து வந்தவரோ, என்ன பேச்சு பேசுகின்றார்.

    பணக்கார பெண்ணை மடக்குவதாக தன் மகனை அல்லவா இழிவாக எண்ணிவிட்டார்.

     வந்தப் பெண்ணை ஆலம் கரைத்து தன்மையாக பேசினால் நிச்சயம் உருகி போவது போன்று இருக்கின்றாள்.

    ஆனால் பேச வேண்டியதே மாறிவிட்டது. இந்த காதல் மகனுக்கு வராமல் இருந்திருக்கலாம்.

      ஆரவிடம் பேசியது எல்லாம் மிகவும் கீழ்த்தரமான வார்த்தை. இனி ஜென்மத்துக்கும் தன்னை மன்னிக்க மாட்டான்.

     அந்த பெண் பிற்காலத்தில் என்னை மனிஷியா நினைப்பாளா? என்று மனதை வதைக்க,

    "அம்மா... அம்மா..." என்ற வைஷ்ணவி குரல் கேட்கவும் கண்ணீரை சேலை தலைப்பால் துடைத்து கதவை திறக்க, ஆரவ் அதேயிடத்தில் அமர்ந்து இருப்பதை கண்டு பரிதவித்தது தாய் உள்ளம்.

       வைஷ்ணவிக்கு காபி போட்டு கொடுக்க, ஆரவ் எழுந்து தன்னறைக்கு வந்து சேர்ந்தான்.

     அலைப்பேசியை எடுத்து யுக்தாவிற்கு அழைத்தான்.

     இருமுறை எடுக்கவில்லை என்றதும் அம்மா பேசியதை கேட்டு கவலையாக இருப்பாளோ? என்னை கட் பண்ணறாளா? என்று விழித்தான்.

      சற்று நேரம் போனை தூரயெறிந்து இமை மூடி யோசித்தான்.

      சின்ன சின்ன தெளிவுகள் பிறக்க, அந்நொடி போன் மணி அடித்தது.

     எடுத்து காதில் வைக்க, "ஆரு.... சாரி... அப்பா கூட காரில் வந்தேன். அப்பா சிக்னலில் பார்த்தேன். அவரோட வீட்டுக்கு வந்தேன். அதான் நடுவுல போனை எடுக்க முடியலை." என்று சொல்லவும் ஆரவிற்கு முழுதும் தெளிவாக புரியத் துவங்கியது.

    மாயக்கண்ணனை போல மர்மமாய் புன்னகைத்துக் கொண்டான்.

     "யுக்தா... அம்மா பேசியதை மனதில் வைத்து கொள்ளாதே. எல்லாம் சரியாகிடும். நம்மை தனியா பார்தததும் மனசு தறிக்கெட்டு யோசிச்சிட்டாங்க. பெண் பிள்ளை இருக்குல அதான் இப்படி யோசித்து பயப்படறாங்க." என்று விவரிக்க,

     "அத்தை சொல்லறது சரி தான் ஆரவ். நீ நான் தனியா இருந்தா... நீ இன்னைக்கு கிஸ் பண்ணியிருப்ப." என்று பேசவும், ஆரவ் பேசாமல் ஒரு நொடி கடத்தினான். 

     "ஆரு... ஆரு... சாரி... எனக்கு அப்படி தோன்றியது உன் பார்வை அப்படி இருந்தது மாதிரி தோன்றியது.." என்று பதறவும்,

     "இல்லை யுக்தா நீ சொன்னது நடந்திருக்கலாம். உன் லிப்ஸ் என்னை கொன்றது..." என்றவன் அடுத்த நொடி எதுவும் பேசவில்லை இருவரும்.

பிறகு என்ன நினைத்தானோ "ம்ம். ஓகே. நான் அப்பறம் பேசறேன்." என்று வைத்தான்.

       சந்துருவோடு ஈவினிங் மூவி பார்த்து பாதியிலே எழுந்து வந்து விட்டான் ஆரவ்.

    தொடர்ந்து சந்துரு கேட்டதும் நடந்தவையை கூறினான்.

   அம்மா பேசியதை மட்டும் கத்தரித்து, அவர்கள் திடீரென வந்ததை, பார்த்ததை கூறியதும் சந்துரு எதுவும் சொல்லவில்லை. அம்மா தானே ஆரவ் உன் காதல் விவகாரம் தெரிந்ததே அதுவரை சூப்பர். நீ பேசாம சம்யுவிடம் அவங்க பண்றதை சொல்லிடேன் எதுக்கு மறைத்து... இப்ப ஆன்ட்டியை இல்ல தப்பா எண்ணுவா? " என்றதும் ஆரவ்
அதற்கு "இல்லைடா இப்ப செமஸ்டர் வருது. நான் ஏதாவது சொல்லி டிஸ்டர்ப் ஆகிட்டா.  எதுக்கோ அப்பறம் பார்க்கலாம். என்று  விடைப்பெற, சந்துருவோ, இவன் சொல்ல மாட்டான் நாம சொல்லிட வேண்டியது தான் என்று தலையை ஆட்டி மனதில் பேசி முடிக்க,

    "நான் மட்டும் இல்லை. யுக்தாவிடம் நீயும் எதுவும் சொல்லக் கூடாது. புரியுதா.. ஏதாவது பண்ணி நீ சொன்னது தெரிந்தது மவனே உப்பு கண்டம் போட்டுடுவேன்" என மிரட்டி  வீட்டுக்குள் வந்தான்.

    தாய் பேசியதை மறந்து, "அம்மா பசிக்குது... முட்டை தோசை இரண்டு" என்று ஆர்டர் கொடுத்தான்.

    தான் ஏசிய ஏச்சுக்கு ஆரவ் பேச மாட்டானென்று எண்ணியிருக்க, ஆரவாகவே இப்படி இயல்பாக பேசவும் தாய் சுட சென்று முடித்து தட்டில் பரிமாற,
  
     "மிரட்டினாரா மா. வைஷ்ணவியை வைத்து..., வேலையை விட்டு தூக்குவேன்னு சொன்னாரா? என்னை கொன்றுடுவேன்ன் சொல்லியிருப்பாரே?" என்று கேட்க சுபாங்கினி மகனை ஆச்சரியமாக பார்த்து பதிலாக ஆமோதிக்க செய்தார்.

   "ஆரவ்... கண்ணா... பெரிய இடம் டா. அம்மா பேசியது மனசுல வைச்சிக்கலையே? அய்யோ எப்படியெல்லாம் பேசிட்டேன். நீ தங்கம்யா... தங்கம்" என்று அழுவ, சுபாங்கினி மடியில் தலை சாய்ந்தவன், "அவளுக்கும் என்ன பிடிச்சிருக்கு மா. நல்ல பொண்ணு. வசதி காரணம் காட்டி, மனதை பிரிக்காதிங்க. நான் அவ அப்பா  லெவல் கொஞ்சமாவது மாறி தான் பெண் கேட்பேன். அதுவரை மிரட்டலை கண்டுக்காதே மா. நம்மை மீறி ஒன்றும் ஆகாது." என்று ஆறுதல் தந்து காதலுக்கு ஒப்புதல் பெற்றான்.

    "எனக்கு என் இரண்டு குழந்தைகளின் வாழ்வும் சிறக்கணும். பிடிச்ச வாழ்வை வாழணும். கஷ்டப்படக்கூடாது. பார்த்து இரு ஆரவ். வைஷ்ணவி தங்கை இருக்கா மனசுல வைத்துக்கொள்" என்று சொல்லி சுபாங்கினியும் அவ்வறைவிட்டு அகன்றார்.

     சம்யுக்தாவோ, தந்தை சிக்னலில் பார்த்து கை அசைக்க தான் ஏறிய பின் தந்தை "எங்கம்மா இந்தப்பக்கம்" என்றதற்கு தான் தோழி உடல்நிலை சரியில்லாது பார்த்து வர சென்றதாக பொய் உரைத்திருந்தாள்.

   தந்தையோ "இந்த காலத்தில் ஓலோ, உபர், என்று எத்தனையோ டாக்ஸி வசதியிருந்தும் உன் தோழி உன்னை அம்போனு நடக்க விட்டுட்டாளே? பார்த்து மா. காதலும் நட்பும் தராதரம் இருக்கறவங்க கூட வரலாம். லோக்கலா இருப்போரிடம்  நட்பே இப்படி தான். அதனால இந்த லோ பீப்பிள் பிரண்டிஷிப் வேண்டாம்" என்று கட்டளையிட, தலையை சம்மதமாய் அசைத்தது நினைவு வந்தது.

  அப்பாவுக்கு நட்பிலே லோ பீப்பிள் வேண்டாம்னு ஒதுக்குறார். ஆரவை ஏற்றுப்பாரா? அப்பா சம்மதிக்கலைனா என்ன செய்ய? ஆரவிடம் பேசின பிறகு அவங்க அம்மா பேசியதற்கு மன்னிப்பு கேட்டார். ஆன்டி இதே மாதிரி தினமும் பேசினா நான் தாங்கிப்பேனா? இல்லை... ஆரவ் எனக்கு எப்பவும் சப்போர்ட் செய்வாரா?

    என் ஆரவ் என் மனதை புரிந்து எனக்கு ஏற்ற மாதிரி இருப்பார். இந்நேரம் அவங்க அம்மாவை காதலுக்கு சம்மதம் வாங்கிட கூட செய்து இருக்கலாம் என்ற கனவுலகில் சஞ்சரித்தாள்.

    அடுத்த இரு தினம் நல்லபடியாக போக, கல்லூரிக்கு செல்லும் கார் பஞ்சராக தந்தை காரில் வந்திறங்கினாள்.

    திவேஷ் ஓடி வந்து ஹாய் அங்கிள் எப்படி இருக்கீங்க?" என்று நலன் விசாரிக்க, சம்யுவிற்கு திவேஷுக்கு அப்பாவை முன்னவே தெரியுமா? என்பது போல அதிர்ந்து பார்க்க, தந்தை, திவேஷ் உரையாடலோ கம்பெனி, அவரின் தந்தை என்று பேச்சு போக, அவளுக்கு திவேஷ் அப்பாவிற்கு நல்ல பழக்கமென்று புரிந்தது.

      சம்யு தந்தையிடம் பை சொல்லி நடக்க, மனமோ 'அப்போ ஆரவை நான் விரும்பறதை சொல்லியிருப்பானோ? என்று நிலைக் கொள்ளாமல் தவித்து போனாள்.

    ஆரவிற்கு திவேஷ் தந்தை சுவாமிநாதனை தெரியும் என்பதை சம்யு சொல்வதற்காக அவனை தேட திவேஷோ சம்யுவை நெருங்கி வந்துக் கொண்டு  இருந்தான்.

-வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

-பிரவீணா தங்கராஜ்




உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...6

   


  💟(௬) 6 

                         இன்றும் எப்பொழுதும் செய்யும் பணியினை முடித்து மஞ்சரி இறைவனை தொழுதபடி விழியில் நீரை சிதற விட அதனை கண்டு ருத்திரா தோளை தொட
      '' தினமும் பயணம் செய்கின்றோம் ருத்திரா இதில் இன்னும் எத்தனை தொலைவை அடைந்து விட்டோம் இன்னும் சமூத்ரா இருக்கும் இடம் அறியவில்லையே.... உமது தமையன் மேக வித்தகனும் காண முடியவில்லை... இனி அவ்விருவரையும் காண இயலாதா? எமது தாய்மை கோலம் கூட என்னவனின் செவிக்கு அறிவிக்க முடியாதா?'' என்றே அங்கே சோகமாக சொல்ல
     ''கண்டறிய செய்வோம் மஞ்சரி... கவலை கொள்ள வேண்டாம்... இங்கே அதீத மிருகம் நடமாடுவது போல தோன்றுகின்றது... முதலில் கிளம்புவோம்'' என்றே கையை பற்ற பிடித்து எழுந்து முடிக்க ருத்திரா குளித்து முடித்தும் அவளின் பிறை நெற்றியில் இருந்த ரத்த திலகம் அப்படியே இருக்க கண்டு
       ''ஏன் ருத்திரா திலகம் அழியவில்லையே...'' என்றே கேட்க
      ''நான் செஞ்சாந்து வைக்கவில்லை இது மித்திரனின் குருதி... அழுத்த துடைக்கவில்லை மஞ்சரி... மித்திரனின் குருதி படிந்த திலகம் அப்படியே இருக்கட்டும் என்றே விட்டு விட்டேன்'' என்றே சொல்ல மஞ்சரி குறுநகையோடு
     ''மையலில் விழுந்தவர் நிலை எல்லாம் இதுவே தான்... ருத்திரா... முன்னொரு முறை நீ எம்மை கேலி செய்தவை... தற்பொழுது உமது நிலையும் இதுவே... அன்று எம்மையும் சமுத்ராவையும் நீ கேலி செய்த பேச்சுக்கள் இன்று உமக்கே திரும்புகின்றனவே..'' என்றே நகைக்க
    ''மெய் தான் காதலில் கரைந்த பின் எத்தகையோரும் குருடராக தான் இருக்கின்றோம்... மூடராக தான் மாறுகின்றோம் சமுத்ராவை எடுத்து கொள் '' என்றே வலியோடு நகைக்க தூரத்தில் எங்கோ ஏதோவொரு அபாய ஒலி ஒலிக்க மஞ்சரியை அழைத்து மறைவிடம் கண்டார்கள்.
        சிறிது நேர சப்ததின் பின் அச்சத்தம் ஓய... ருத்திரா அதே மவுனம் கொண்டே யோசிக்க செய்தாள்.
            மஞ்சரியை விடுத்து ருத்திரா வெளியே வர அடுத்து மஞ்சரி வர நிம்மதியான சுவாச காற்றை வெளியிடும் சமயம் யாரோ ஒருவனின் கையில் மஞ்சரி அகப்பட ருத்திரா வாளை எடுக்கும் முன்னரே அங்கு நான்கு மானிடர்கள் அவளை சூழ நின்றார்கள்.
         கொள்ளை கூட்டம் போல முகம் கருப்பு நிற ஆடை கொண்டு மூட பட்டு இருக்க அதில் ஒருவனோ
      ''இன்று நமக்கு பொன் பொருள்கள் கிடைக்கவில்லை... ஆனால் தங்க பஸ்பம் கடைந்த மெழுகு சிலை போன்ற தங்க தாரகை கிட்டியிருக்கின்றாள்'' என்றே ஒருவனின் பார்வை மஞ்சரியை மேய
      ''அடகொள்ளை கூட்டமே... உமக்கு ஒரு அவகாசம் தருகின்றேன்... இதோடு விடுத்து பெண்ணை இறையாக எண்ணி வழிபட்டு சென்றாள் உயிர் பிழைப்பீர் இல்லையேல் ஒருத்தரும் மண்ணுலகில் இருக்க மாட்டீர்'' என்றே ருத்திரா சொல்ல
     ''வார்த்தையில் வித்தை தான்... பித்து கொள்ள வைக்கும் அழகிய நங்கை ஒருவள்... அவளை இரை வேண்டுமென்றால் ஆக்கி கொள்கின்றோம் இறையாக எல்லாம் எண்ண இயலாது'' என்றே ஒருவன் மஞ்சரியை நெருங்க
     ருத்திரா  ''உங்களுக்கு மேலும் ஒரு எச்சரிக்கை செய்கின்றேன் அவள் என் தமையனின் இல்லாள்... அவள் ஒரு சிசுவின் தாய்.... நாமெல்லாம் தாயின் புனிதம் அறிந்தவர்கள் விட்டுவிடுவீர்... மன்றாடி கேட்கின்றேன்'' என்றே சொல்ல மஞ்சரி
      ''ருத்திரா... என்ன சொல் இது நீ கயவர்களிடம் மன்றாட வேண்டுமா?'' என்றே மஞ்சரி சொல்ல
     ''தமையனின் இல்லாள்... உன்னோடு என்ன செய்கின்றாள் இந்த நட்ட நடு வனத்தில்...?'' என்றே கேட்க செவியில் கைகளை அழுத்திய ருத்திரா தனது தலைபாகையினை எடுத்து பெண் உருவிற்கு மாறினாள்.
    ''என்ன இது ஜாலம்...... நீ நங்கையா... ஒரு விருந்துக்கு இரு விருந்தா...'' என்றே சொல்ல
 ருத்திராவோ ''எம்மை தீண்டி பிறகே மஞ்சரியிடம் செல்'' என்றே நவில
   ''எழிலில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல போல பதுமையாக இருகின்றேரே...''  கயவன் ஒருவனோ ருத்திராவை தீண்ட தீயில் கைகளை பற்றியவன் போல யாக்கை முழுதும் கனலை தீண்டியது போல துடிக்க துடி துடிக்க தணலாக அடுத்த நொடி மாறி உருவமின்றி அருவமாக மாறி போனான்.
           மற்றவர்கள் இதனை கண்டு பின்னங்கால்கள் பிடரியில் பட அவர்களின் புரவியில் பறந்தார்கள்.
         மஞ்சரியே இதை கண் இமைக்காமல் பார்க்க செய்தாள்.
     ''இது... இது.. எப்படி ருத்திரா? மித்திரன் புகட்டியதா?'' என்றே கேட்க
     ''இல்லை மஞ்சரி எமக்குள் இருக்கும் சக்தியே... எமக்கு இப்படி ஒரு விசித்திர சக்தி இருப்பதே யான் எமது பதினாறு வயதில் அறிந்தது.
         எமக்கு விற்பயிற்சி அளிக்கும் வீரன் ஒருவனின் காமுக பார்வையில் அவனின் தீண்டல் அவனுக்கே எமனாக மாறியதும் அதே போல மற்றும் மொருமுறை நமது நாட்டிலே சக குடிமகளாக வேடமிட்டு ஒரு வணிகனின் வீட்டில் தங்க அந்த வணிகனின் மனைவி நித்திரையில் அவன் என்னை நெருங்க வர அவனின் தீய ஆசையில் வாளை கையில் பற்றிய நேரம் அவன் என்னை தீண்ட இதே போல மறித்தான். அப்பொழுது தான் எம் மீது எம் விருப்பமின்றி எவரேனும் தீண்டினால் அவன் தீயுக்கு இரையாவான். அதனால தான் உமக்கு பதிலாக நான் முன் வந்தேன்'' என்றே சொல்ல
      ''கேட்கும் எமது செவிகள் நிஜம் தான் கூறுகின்றனவா? கண்ணால் பார்த்தும் இதுவும் மாயம் என்றே அல்லவா எண்ண தோணுகின்றது... உமது சக்தி மித்திரன் அறிந்து கொண்டானா? அவனிடம் செப்பினாயா?'' என்றே மஞ்சரி கேட்க அதற்குள் தாடி மீசை ஒட்டி ருத்திரா ருத்திரனாக மாறி நின்றான்.
     ''எமது கரம் பற்றும் பொழுது எல்லாம் சொல்வோம்... தற்பொழுது நாம் வந்த பணிகளை காண்போம்.. '' என்றே நடக்க அங்கே ஒரு பாழடைந்த குகை போன்று ஒன்று விழியில் அகப்பட ருத்திரா அங்கே சென்று அதன் புற வடிவை கண்டு கொண்டு இருந்தாள்.
      ''என்ன ருத்திரா இங்கே விழியகற்றாமல் பார்க்கின்றாய்...? அப்படி என்ன கண்டு கொண்டு இருக்கின்றாய்''
      ''பார் இங்கு இருக்கும் காளியின் வதனம்... ஏதோ ஒரு ரவுதிரத்தை பூசி கொண்டு ஆக்ரோசமாய் தெரிகின்றாள்... இவளின் பார்வை எமக்கு விசித்தரமாக உள்ளது.. ஏதோ என்னிடம் பேசுவதாக...'' என்றே ருத்திரா சொல்ல
       ''இன்று இங்கு தானே நமது குடில்?'' என்றே மஞ்சரி கேட்க
     ''இதில் ஐயம் ஏனோ உமக்கு?'' என்றே சுற்றி சுற்றி பார்வை செலுத்த அங்கே ஒரு வட்டமிருக்க அதிலே சக்கரம் போன்ற அமைப்பும் இருக்க கண்டவள் அதன் மீது கைகளை வைத்து வருட அதுவோ சக்கரம் உள்ளே சென்று அந்த இடம் குகை போல திரும்பியது...  குகைக்குள் எப்படி வந்தோம் என்றே ஒரு கணம் வியந்து அதிசயித்து அதனை மீண்டும் தொட அதுவோ மீண்டும் வெளிப்பக்கம் இவர்களை திருப்பியது.
      ''இது இது... என்ன இடம் ருத்திரா?'' என்றே மஞ்சரி அச்சத்தில் கேட்க
     ''நாம் தேடி வந்த யிடமாக இருக்கலாம் மஞ்சரி.. எதற்கோ கொஞ்சம் தயாராக இரு...'' என்றே மீண்டும் பொத்தனை அழுத்த குகையின் உள்பக்கம் அழைத்து விட... வாளினை கையில் ஏந்தி ருத்திரா போரில் இருக்கும் முகமாக தீவிர பாவனையில் முன்னே செல்ல வியர்வையில் முக்குளித்தவள் போல மஞ்சரி அவளின் பின் தொடர்ந்தாள்.
         அங்கே ஒரே ஒரு தீப்பந்தம் மட்டும் எரிய அதனை கையில் எடுத்த ருத்திரா அங்கே வெளிச்சம் மிகுந்து இருக்கும் இடமெல்லாம் சுற்றி பார்வை பதிக்க இதே போல அங்கே தீப்பந்தம் எரிய இருக்க அங்கே எல்லாம் தீயை ஏற்றி முடிக்க எல்லா தீபந்தமும் எரிந்திட ருத்திரா சுற்றி பார்வைகளை சுழற்றினாள். அங்கே மத்தியில் ஒரு மலர் மெத்தையில் ஒரு நங்கை நித்திரை கொள்ளும் பாங்கோடு இருக்க கண்டு ருத்திரா அருகே செல்ல மஞ்சரி ருத்திராவின் தோளில் கையை பற்றி பின் தொடர அருகே சென்றார்கள்.
        பெண்ணவள் முகம் திருப்ப மஞ்சரி ருத்திரா ஒரே சேர ''சமுத்ரா'' என்றே உச்சரிக்க... சமுத்ரா விழிகள் இங்கும் அங்கும் சுழன்றதே தவிர இமைகள் பிரியாது இருக்க கண்டனர்.
      சமுத்ரா மேனியை தொட்டு உலுக்கி மஞ்சரி எழுப்ப அவளோ சவம் போல கிடந்தாளே தவிர இம்‌மியும் விழிக்காமல் இருக்க ருத்திரா மெல்ல
       ''அவள் வசியத்தில் கட்டுண்டு இருக்கின்றாள்.... மஞ்சரி'' என்றே சொல்லி அவ்விடத்தை மீண்டும் ஆராய செய்ய.... அடிக்கடி பலியிட்ட தடம் கூட இல்லை... ஆக இது என்ன இடம் என்றே யோசித்து விழிகளை எட்டு திக்கும் சுழற்றி பார்வையில் கூர்ந்து ஆராய... வெளியே பார்த்தது போலவே இங்கும் ஒரு பொத்தான் இருக்க கண்டாள்.
       நட்சத்திர பொத்தான் அழுத்த அந்த விசையில் கதவு திறக்க கண்டாள்.
          உள்ளே எவர் இருப்பாரோ என்றே அஞ்சி வாளினை எடுத்தே வர சமுத்ரா அருகே மஞ்சரி அமர்ந்தாள்.
      ருத்திரா செல்லும் திசையில் ஒரு விழியை பதிக்க... தனது இஷ்ட தெய்வ பராசக்தியினை வேண்டினாள்.
        ருத்திரா வரும் திசையில் மேகன் கண்டிட மேகவித்தகனுக்குஅவள் ருத்திரா என்றே அறியாது யாரோ ஒரு ஆடவன் என்றே அறிந்து பேச்சு பேச அதுவோ தெள்ள தெளிவாக புரிந்தது.
    ''தாங்கள் யார்? இங்கே எப்படி வந்தீர்? அங்கே எமது தங்கை இருக்கின்றாளா? அல்லது அந்த கொடும் பாதகன் துர்வசந்திரன் இருக்கின்றானா? எப்படியாவது எம்மை விடுவியுங்கள்... வளியில் வேலி அமைத்து எமது பேசும் சக்தியும் பறித்து சென்று விட்டான்.. என்றே சொல்லிய மறுநொடி ஐயகோ உமக்கு எமது குரல் கேட்காதே நான் எப்படி எமது பிரச்சனையை புரியவைப்பேன்'' என்றே மேகவித்தகன் கதற
    ''நீ எதையும் செப்ப வேண்டாம் வித்தகா.... எமக்கு சொல்லாமலே விளங்கிற்று'' என்றே ருத்திரா குரல் மட்டும் வித்தகனுக்கு கேட்க அவனோ ஆச்சரியம் பொங்கும் பார்வை பார்க்க
     ''ருத்திரா...'' என்றே நாமம் அந்த குகையின் எல்லா பக்கமும் எதிரொலிக்க மஞ்சரியின் அலறல் மட்டுமே கேட்க ருத்திரன் மேகவித்தகனை கையில் பற்றி இழுக்க வளியில் உண்டான வேலி தானாக வழி தொடுத்தது.
       அதற்கு காரணம் ருத்திராவின் சக்தி மற்றும் மித்திரனின் திலகம்... ஆம் அந்த திலகத்தின் முன் அதாவது மித்திரனின் ரத்ததில் துர்வ சந்திரனின் மாயமும் கட்டஅவிழ்ந்து போகும்.
       ருத்திரன் போகாமல் வித்தகனை முதலில் போகுமாறு அனுப்ப மேகவித்தகன் வாளினை ஏந்தி முன்னே செல்ல அங்கே மஞ்சரியின் சிகையினை பிடித்து துர்வா நெஞ்சு நிமிர்த்தி நின்றான்.
     ''என்ன மேகவித்தகனே... இவள் தான் உமது ருத்திரா என்று கத்தி கொண்டு இருந்தாயே அவளா? பரவாயில்லை இவளை வசியம் செய்ய முடியாது போகவே எண்ணினேன்.. உன்னையும் வளி வெளியில் இருந்து விடுவித்து இருக்கின்றாள்... பலே பலே... ஆனால் எமக்கு இருக்கும் பலத்தில் துளி கூட இவளிடம் இல்லை... நீ பேசிய தோரணையில் இவளின் மிடுக்கு இருக்கும் என்றே ஒரு வினாடி யோசிக்க செய்தேன் ஆனால் எல்லா நங்கையும் போல ஒரு சாதாரண யுவதியாக அல்லவா இவளும் இருக்கின்றாள்... எழிலில் சதம் கொள்ளும் விதமே...'' என்றே பேச மேகவித்தகனுக்கு தற்பொழுது தான் அவசரம் கொண்டால் எல்லாம் கேட்டு விடும்... ருத்திரா இருக்கின்றாள்... இவன் மூடனாக மஞ்சரியை சொல்கின்றான்... மஞ்சரி கன்னி என்றால் இந்நேரம் வசியம் செய்து இருப்பானே... மஞ்சரியோடு தான் தான் விவாகம் புரிந்து இல்லலாக சரீரத்தில் பாதியாக ஏற்று விட்டோம் அதனால அவளை மயக்க இயலாது ருத்திரா என்றே எண்ணுகின்றானோ? என்றே மேகவித்தகன் எண்ண
     ''இவளா எமது உயிரை பறிக்க பிரம்மன் படைத்த விசித்திர பெண்... என்றே அந்த குகையே குலுங்க நகைக்க செய்தான்.

 தாரகை-பெண்
இல்லாள்-மனைவி
எழிலில்-அழகில்
யாக்கை-உடல்
தணலாக-சாம்பலாக
அருவம்-உருவம் இன்றி
பிடரியில்-கழுத்தின் பின்பகுதி
குடில்-தங்கும் இடம்
பொத்தான்-விசை-(ஸ்விட்ச்)
சவம்-பிணம்

சதம்-முழுமை...(நூறு சதம்) 

 -விழியும் வாளும்சந்திக்கும்.

-பிரவீணா தங்கராஜ்

பஞ்ச தந்திரம் -18 (முடிவுற்றது)

 பஞ்ச தந்திரம்-18   திரிஷ்யா இரண்டு நாளுக்கு மேலாக நேரம் எடுத்துக்கொண்டாள்.    மஞ்சரியாக எதையும் கேட்கவில்லை ஏன் அப்படியொரு விஷயம் கூறி அவகா...