உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...8

   


💟(௮) 8  


                                  வீதியில் எல்லாம் ருத்திரா சமுத்ராவை அழைத்து வரும் செய்தி அறிந்து முரசுகள் ஒலித்தன. மேகவித்தகன் மஞ்சரி இருவரும் ஒரே புரவில் வர மக்கள் சிலர் அதனை விழி விரிய கண்டனர்.
         வேந்தர்கள், மந்திரியர்கள் என்றே சால சிறந்தவர்கள் இமைக்க மறந்து பார்த்து இருக்க, ருத்திரா மிடுக்குடன் இறங்கி வந்து நின்றாள்.
    ''தலை வணங்குகின்றேன்... வேந்தே... இன்னாட்டின் இளவரசி உயிர் அரணாக பாதுகாத்து கொண்டு வந்தாயிற்று... இனி இவளை தேடி அம்மூடன் வந்தால் திரும்ப அவன் யாக்கையில் ஆன்மா தங்காது'' என்றே செப்பிட மஞ்சரிக்கோ ருத்திராவுக்கு யார் இப்படி செய்தது என்றே அறிந்தும் மறைக்கின்றாள் என்றே விசித்திரமாக காண ருத்திரா மஞ்சரியை காணாமல்
     ''வேந்தே.. மற்றும் ஒரு செய்தி.. அங்கே ஒரு இக்காட்டில் கயவன் மஞ்சரி உயிர் பலியிட போகையில் அவளுக்கு விவாகம் நடந்தால் மட்டுமே உயிர் பிழைப்பாள் என்றே இருக்க நமது இளவரசன் மேகவித்தகன் எமது தோழி மஞ்சரியை திங்கள் சாட்சியாக வைத்து மாலை சூடி மங்கையினுக்கு மணவாளானாக மாறி விட்டான்'' என்றே ருத்திரா செப்பிட அங்கே கூட்ட திறனுக்கு இடையே சலசலப்பு அடைய... மக்கள் தங்கள் மகிழ்வை பேச்சில் தெரிவித்து முடிக்க  வேந்தனோ,
       ''மகிழ்ச்சி இளவரசியே... மேகவித்தகனுக்கு நாளையே ஊர் கூடி விவாகம் நடைப்பெறும் மக்கள் அதில் கலந்து கொள்ள அன்போடு வருக தர வேண்டுகின்றேன். எமது மகள் சமுத்ரா போல ஏனைய மங்கைகள் இறப்புக்கு காரணமாக இருக்கும் அந்த கயவன் அறிந்திட இளவரசியோடு கலந்து யுரையாட செய்வேன் அந்த கயவனை அழித்து எம்மக்கள் வாழ்வு சிறப்பாக அமைய நடவடிக்கை எடுக்கப்படும். சபை கலையட்டும்'' என்றதும் மக்கள் மகிழ்வோடு செல்ல மஞ்சரி மந்திரியின் மகளாக இருக்க மந்திரி அன்பானந்தம் தவிபோடும் சஞ்சலத்தோடும் நிற்க வேந்தன் அகத்தியனோ,
     ''என்ன மந்திரியரே... மகள் ராஜாவின் மருமகளாக அமைந்திட களிப்பில் திகைப்பீர் என்றல்லவா எண்ணி இருந்தேன்... இப்படி அச்சத்தில் அல்லவா இருக்கின்றீர்'' என்றே அகத்தியன் கேள்வியில்
     ''அரசே... எமது மகள் ராஜா குல வாரிசு சுமப்பாள் என்பது ஆருடம் உரைத்தது. எமக்கு அதில் அதிர்ச்சி அல்ல... ஆனால் இப்படி ஒரு பெண்ணின் உயிர் காக்கா மட்டுமே நடைபெற்ற விவாகம் இரு மனம் ஒப்ப ஏற்றுக் கொள்ளுமா? இளவரசன் மனம் முழுமை கொண்டு.......'' என்றே சொல்லிட
    ''மாமா.. அதை பற்றி உமக்கு அச்சம் வேண்டாம் எமது இல்லாளாக மஞ்சரியை மனம் நிறைந்தே ஏற்றுக் கொண்டேன்'' என்றே மேகவித்தகன் சொல்ல அதில் அன்பானந்தம் அளவில்லா களிப்பு அடைந்தார்.
      அதற்குள் அரண்மனை அந்தபுரத்தில் சந்திரமதி தனது மகள், மகனை வரவேற்க செல்ல இடையிலே மேகவித்தகன் மஞ்சரி விவாக செய்தியும் செவியில் சென்றடைய சந்திரமதிக்கு வானளவு சந்தோஷம் கிட்டியது.
      ஏற்கனவே மஞ்சரி பற்றி அறிந்து இருந்த சந்திரமதி அவளை வரவேற்க செல்ல போனாள்.
     அங்கே அடுத்த நாளே ஊர் அறிய விவாகம் நடைபெற ஆயுத்தம் மேற்கொண்டார்கள்.
       சந்திரமதி மஞ்சரி முகம் சுழித்து கையை வருடி விடும் நேரம் அவள் கை இரட்டை நாடி துடிக்க கண்டு வேகமாக ருத்திரா அறைக்கு அழைத்து செல்ல ருத்திரா பின் சென்றாள்.
      ''உன் மணிகட்டில் இரட்டை நாடி துடிப்பு தென்படுகின்றது.. யாரின் கருவை சுமக்கின்றாய்?'' என்றே குரல் அதிர கேட்க
      ''அத்தை அவர்களே.. என் மனமென்னும் கோவிலில் தங்கள் மைந்தன் ஒருவரே வீற்று இருக்கின்றார்.. அவரும் நானும் காதலில் கட்டுண்டு இருந்தோம். ஒரு திங்கள் இரவில் ஆம்பல் பூ தொடுத்து நீரோடையில் தவழும் திங்கள் சாட்சியாக மாலை மாற்றி விவாகம் புரிந்தோம். செம்புல நீராக கலந்து இன்று தங்கள் மைந்தன் வாரிசை தான் கருவாக சுமக்கின்றேன்'' என்றே கண்ணீர் நீர் துளிகள் கன்னம் தவழ சொல்லி முடிக்க
     ''ஆக நீங்கள் முன்பே மனதை பறிகொடுத்து இருக்கின்றீர்... இந்த மேகன் ஒரு வார்த்தை பெற்றவளிடம் சொல்லாமல் மறைத்து இருக்கின்றானே வரட்டும் கவனித்து கொள்கின்றேன்... அதற்காக எதற்கு நீ கண் கலங்கு கின்றாய் இங்கு பார் உன் தோழி எதற்கும் கலங்குவாதக இல்லாமல் அத்திரிசாரம் (இரும்பு) போல இருக்கின்றாள். நீயும் பழகு.. இன்னாட்டின் பெண்கள் கூட சீற்றம் கொண்ட அரிமாவாக இருக்க வேண்டும்'' என்று சொல்லி தலையில் ஆசீர்வதிக்க விழியில் இருக்கும் நீரை துடைத்து எழுந்தாள்.
     ''இனி மாறி கொள்கின்றேன் அத்தை அவர்களே...'' என்றே வணங்கினாள்.
     ''சென்று துயில் கொள்.. நாளை விவாகம் அல்லவா'' என்றே அவர் கிளம்ப ருத்திரா புன்னகைத்து சென்று அமர்ந்தாள்.
         மஞ்சரி போகாமல் அதே போல நின்று ''இன்னும் என்ன சிந்தனை ருத்திரா? நீ எப்படி அத்திரசாரம் போல இருக்கின்றாய்?'' என்றே வினவ
      ''வீரம் பிறந்ததில் இருந்தே கூடவே இருக்கின்றன'' என்றே கர்வ புன்னகையில் தொடர
      ''ஏதேது அங்கு மித்திரனை நெஞ்சில் வாள் கொண்டு குத்தி கிழித்து காதல் என்பதை உடைத்து தகர்த்தி இங்கு அத்திரசாரம் போல இருப்பது பிறந்தது முதலே வந்ததா?'' என்றதும் தான் மஞ்சரி அவனுக்காக பேச முயலுக்கின்றாள் என்றே எண்ணி அமைதி ஆனாள்.
      ''அவன் தமையன் சமுத்ரா எப்படி நடத்தினான் அறிந்தும் பேசுகின்றாயா? துர்வனால் பலி கொண்டவர்கள் தொன்னூற்று ஏழு மறந்திடலாகுமோ? அப்படி இருக்க அவனை காப்பாற்றி அரணாக மாறியதில் மித்திரன் காதல் மாய்ந்து போனது மஞ்சரி.. இனி அவன் பேச்சு வேண்டாம்'' என்றே செல்ல
     ''இந்த காதல் என்றுமே உண்மையாக அன்பு வைத்தவரிடம் இருந்து விலகாது ருத்திரா.. துர்வன் எப்படியோ ஆனாள் மித்திரன் நல்லவன்.. மித்திரன் சொல்லியது போல இதை நான் சொல்ல தேவாயில்லை நீ அறியாததா..'' என்றே சொல்ல ருத்திரா ஏதோ சொல்ல வாய் எடுக்க ''வருகின்றேன் நித்திரை கொள்பவர்களை எழுப்பிட முடியும் நித்திரை செய்வது போல நாடகம் செய்பவரை யாராலும் எழுப்ப இயலாது தான்.. நான் எமது விவாகத்திற்கு நாழிகை நகருவதற்குள் சென்று இளைப்பாருகின்றேன்'' என்றே கிளம்பினாள்.
        ருத்திரா விழியினை தாழ்த்தியவள் நிமிரவே இல்லை. மஞ்சரி அவள் இல்லம் நோக்கி செல்ல இங்கு தனிமையில் ருத்திரா தென்றலிடம் தனது மனதை தொலைத்தாள்.
       மெல்ல வருடிய தென்றல் எல்லாம் மித்திரனின் நினைவை எடுத்து இயம்ப பெண்ணவள் அவளயும் அறியாது ''மித்திரா...'' என்றே மெல்ல குரல் எழுப்ப அங்கே வளியின்(காற்றின்) வரி வடியில் இருக்கும் மித்திரன் முகம் பிரகாசமாக ஆனது.
    ''என் ஆருயிரே அழைத்தது ஏனோ?'' என்றே குரல் மட்டும் கேட்க ருத்திரா எட்டு திசையிலும் பார்வை பதித்தவள்
    ''எங்கும் எமக்கு உமது குரலோசை செவியில் தாக்கும் எண்ணமே சுற்றுகின்றதே... துர்வனின் தமையனாக இல்லாமல் ஒரு வீரனாக மட்டுமே நீ எமக்கு காட்சி அளித்திருக்கலாம்'' என்றே உறங்க சென்றாள். அங்கே பனிபெண்ணிடம் ஜாதிக்காய் அரைத்து பாலில் கரைத்து உறங்க போராடினாள்.
       இமை மூடிய விழியில் தனது மணிக்கட்டை மித்திரன் பிடித்து அவன் கன்னத்தில் வைக்க மனதில் 'நான் துர்வனின் தமையன் என்றாலும் உன்னவன் என்பதிலே எந்தன் மேதினி சுழலுதடி அது மட்டுமே எந்தன் வாழ்வு தவிர இந்த மேதினியில் எமக்கு எதுவும் தேவையில்லை.. உந்தன் இதயம் எந்தன் வசிப்பிடம்.. எம்மை மறக்க நீ குடித்த இந்த பசும்பால்.. போன்றதடி எந்தன் அன்பும் காதலும்.. காத்திரு எந்தன் பணியினை செம்மையுற முடித்து உமது கன்னம் கதுப்பை சிவக்க காதல் மொழி கதைக்கின்றேன்'' என்றே அவள் பூந்தளிர் கைகளை அவன் இதயத்தில் வைக்க ருத்திரா விழித்து எழ மித்திரன் தள்ளி நின்றான்.
    ''மித்திரன்.. மித்திரன் இங்கு இருப்பது போல மாயை தோன்றுகின்றது இது நிஜம் தானா? இல்லை எமது எண்ணங்களின் வித்தா? மித்திரா... நீ அருகே இருக்கின்றாயா? சொல்...'' என்றே ருத்திரா கேட்க அவனோ இருக்கும் இடம் கூட நகராது அசையாது நின்றான்.
     ''இல்லை நீ இங்கு இருந்தால் எமது வாளில் உந்தன் சிரம் கொய்ய கூடும்.. இங்கு நீ வருவதற்கு வாய்ப்பு இல்லை.. அப்படி இங்கு இருந்தாலும் நீ எமக்கு பகை மட்டுமே..'' என்றே எண்ணியவள் இங்கு இருக்க பிடித்தம் இல்லாமல் சமுத்ரா அறை நோக்கி சென்றாள்.
           மித்திரன் புன்னகை மாறாமல் கிளம்பினான்.
           மித்திரன் அவன் நாட்டிற்கு சென்ற நேரம் அங்கே துர்வனின் வாசம் தான் முதலில் அறிவித்தது. சினத்தோடு அங்கே அவன் அரண்மனை நோக்கி செல்ல அங்கே துர்வனின் தாய் மாதங்கி துர்வசந்திரனுக்கு உணவினை ஊட்டி விட கண்ணீர் உகுந்து பேசும் சித்திரம் தான் மித்திரன் கண்டான். கோவத்தோடு வாள் எடுத்து மித்திரன் வீச அங்கே வாள் அவனின் உடலில் உள்ளே சென்று வெளியே வந்தது.
         சொட்டு குருதியும் வெளியே வரவில்லை ஆனால் மாதங்கி உடனே ''மித்திரனே.. என்ன செய்துவிட எண்ணினாய்? இவன் உந்தன் தமையன்... உந்தன் சொந்த ரத்தம் இவனை அழிக்க வாளைடுத்தாய்?'' என்றே மாதங்கி கேட்க
      ''தொன்னூற்று ஏழு உயிரை பாலி கொண்ட மிருகம் எமக்கு தமையன் அல்ல'' என்றே மித்திரன் துர்வனின் முகம் காண துர்வானோ முகம் கண்களை அவனிடம் திருப்பாமல்
      ''அன்னையே இவன் தற்பொழுது எமது தம்பி அல்ல.. எம்மை வீழ்த்தும் கொலைக்காரியின் ஆருயிர் காதலன் அவன் எம்மை வெட்டாமல் இருக்கலாகுமோ?!'' என்றான்.
    ''எமது விழியை சந்திக்கட்டும் உமது கண்கள்.... நேர்கொண்ட பார்வையே உமகில்லையா?'' என்றான் மித்திரன்.
   ''எதற்கு? உமது விழியை பார்த்து நீ எம்மை உன் வசியத்தில் கட்டுப்பட வைக்க வா?'' என்றே கொஞ்சம் போலியான நகைப்பில் ஒர கண்ணில் மித்திரனை நோக்க அவனோ அக்கினி வார்த்து நிற்க வைத்தது போல நின்றான். அருகே அவர்களின் தாய் மாதங்கி எந்தன் மீது வாக்கு கொடுத்தும் உந்தன் தமையன் மீது வாள் தொடுகின்றாய் மித்திரா.. அந்த அளவுக்கு உன்னை மறலி பிடியில் வைத்து இருக்கின்றாளா அவள்? யாரவள்?'' என்றே அன்னை கேட்க ருத்திரன் சொல்லலாமா வேண்டாமா என்றே சிந்தனையில் சுழன்றான்.

 - விழியும் வாளும் சந்திக்கும். 

-பிரவீணா தங்கராஜ்.  

வணக்கம் நண்பர்களே!
 
சந்தோஷமான விஷயம் பகிர வந்து இருக்கேன். இதுவரை நான் முடித்த கதைகள் மற்றும் ongoing கதைகள் என்றே 29 நெருங்கி விட்டது. ஆனால் எதுவும் புத்தகமாக வெளியாது இல்லை. எல்லாமே kindle amazon பதிவு செய்து copyright வாங்கியது மட்டுமே. முதல் முறையாக புத்தக வடிவில் எனது நாவல் வந்து உள்ளது.
 
  அது எனது 25 ஆவது நாவலின் சிறப்பு. நாவல் பெயர் *என்னிரு உள்ளங்கை தாங்கும்* இதுவரை எங்கும் பதிவிடாத கதை.  
 
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் நடைபெற இருக்கும் மாபெரும் புத்தகக் கண்காட்சியில், ஸ்ரீ பதிப்பகத்தின்  அனைத்துப் புத்தகங்களும் கீழ்க் கண்ட இரு நிலயங்களில் கிடைக்கும். 

அதில் தான் *என்னிரு உள்ளங்கை தாங்கும்* என்ற எனது நாவல் வெளிவர இருக்கிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியிடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
பிரியா நிலையம் ஸ்டால் எண் - 420 மற்றும் 
அருண் நிலையம் - ஸ்டால் எண் -316 ல் கிடைக்கும்.
 

இந்த வாய்ப்பை எனக்கு அளித்த ஸ்ரீ பதிப்பகத்திற்கும், லதா மேம், உஷா மேம் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

 புத்தகக் கண்காட்சியில் மேற்கூறிய கடைகளில் கிடைக்கும்

விலை ரூ.180 (எனக்காக ஜஸ்ட் 180 செலவு பண்ணி வாங்குவீங்களா?)
வாங்கியவர் கதை படித்து கருத்து தெரிவிக்கவும். 

நன்றி, 
நான் உங்க, 
பிரவீணா தங்கராஜ்.


Comments

Post a Comment

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு