தீவிகை அவள்🪔 வரையனல் அவன்🔥-11

 


தீவிகை அவள் வரையனல் அவன்-11


        சம்யுக்தாவிடம் பேசி வைத்தவனுக்கு அடுத்து ஒரு அழைப்பு வந்தது.

      வீட்டின் உரிமையாளர் குமாரவேலின் மனைவி நீலா தான் அழைத்து இருந்தார்.

    "ஆரவ் தம்பி உங்களிடம் பேசணும்னு நேற்று காலையில் இருந்து நினைத்துட்டு இருந்தேன். அங்கிள் வீடு காலி பண்ண சொல்லியிருந்தாரா தம்பி.?" என்று வினாவாக கேட்க

    "ஆமா ஆன்ட்டி. ஆன்ட்டி நாங்க வாடகை சரியா மூன்றாம் தேதியே கொடுத்தோம். அப்படியிருந்தோம் ஏன் ஆன்ட்டி காலி பண்ண சொல்லிட்டீங்க. என்ன காரணம் ஆன்ட்டி." என்று கேட்டான்.

    "அதை சொல்ல தான் போன் பண்ணினேன் தம்பி. நீ யாரையாவது விரும்பறியா ஆரவ்?" என்றாள் நீலா.

       வீட்டை காலி செய்வதற்கும் தன் காதலுக்கும் என்ன சம்மந்தம். முதலில் தன் காதல் இவர்களுக்கு எப்படி தெரியுமென்ற குழப்பத்தோடு,

    "ஆன்ட்டி நான் காதலிக்கறேன். ஆனா அதுக்கும் வாடகை விடற உங்களுக்கும் என்ன சம்மந்தம். அவள் இன்றைய காதலி நாளைய மனைவி ஆன்ட்டி." என்று குழம்பி மனதில் இருப்பதை கேட்டதும்.

      "சொல்லறேன் தம்பி. நீ விரும்பறது பெரிய இடமா? அவங்க அப்பா பேரு சுவாமிநாதனா?" என்ற தொடர் கேள்விக்கு

    "பெரிய இடம். மே பீ ஆன்ட்டி. பட் சம்யுக்தா அப்பா பேரு சுவாமிநாதன்... ஆமா ஆன்ட்டி அதே பெயர் தான். உங்களுக்கு எப்படி?"

      "உன் மாமனார் இங்க வந்தார் பா. உங்க வீடு மாதவரமா? அங்க ஆரவ் என்பவருக்கு வாடகை விட்டு இருக்கீங்களா? உடனடியா அவனை வாடகை வீட்டில் இருந்து வெளியேற சொல்லுங்க என்று கட்டுகட்டா பணத்தை தூக்கி போட்டார். அடுத்த டெனட் வர்றவரை மாத வாடகை நான் தர்றேனு சட்டமா சொல்லி உடனடியா உன்னை வீட்டிலிருந்து காலி பண்ண சொன்னது அவர் தான். அங்கிள் முதல்ல மறுக்க தான் செய்தார். ஆனா பெரிய பொண்ணு  வீட்ல இருந்து பொங்கலுக்கு சீர் கேட்டு நகை கேட்டதும் அங்கிள் தடுமாறிட்டார்.

    என்ன பண்ண ஆரவ் எங்க நிலைமை யோசித்து முடிவு பண்ணிட்டார். எனக்கு கொஞ்சம் மனசு கேட்கலை. என்ன இருந்தாலும் உங்க வீட்ல வயசு பொண்ணு இருக்கே. திடுதிப்புனு வெளியே போக சொன்னதே மனதில் உறுத்துச்சு. அதான் உன்னிடம் விஷயத்தை போட்டுட்டேன். நீயும் அம்மாவும் எங்களை தவறா எண்ணிடக் கூடாது.  அம்மாவுக்கு வேலையில் இருந்து தற்காலிகமா வர வேண்டாம்னு சொன்னதால அவர்களிடம் சொல்ல முடியலை. அதோட உன் காதல் விஷயம் அவர்களுக்கு தெரியுமோ என்னவோ." என்று இழுக்க,

      "அம்மாவுக்கு தெரியாது ஆன்ட்டி. பெயர் என்ன சொன்னீங்க... சுவாமிநாதன் என்றா"

     "ஆமா தம்பி."

      "ஓகே ஆன்ட்டி. நான் பார்த்துக்கறேன்."

     "வீடு கிடைத்ததா தம்பி.?"

     "இல்லை ஆன்ட்டி. எதுவும் அமையலை பார்ப்போம். அங்கிள் மூன்று நாள் அவகாசம் தந்து இருக்கார். அதுக்குள்ள உடனடியா கிடைக்கணும்." என்றான்.

    "சரிப்பா அங்கிள் வந்தா எனக்கு திட்டு விழும். வச்சிடவா?" என்று கேட்க ஆரவ் "ம் தேங்க்ஸ் ஆன்ட்டி" என்றதும் துண்டித்தான்.

    ஆரவ் பேசி முடிக்க, சுபாங்கினி கிச்சனில் "நமக்குன்னு அமையுது மாலினி. என்ன செய்ய இதுவரை நர்ஸா இருந்த என் வாழ்க்கையில் எந்தவொரு கறுப்பு புள்ளியும் விழலை. இந்த ஒரு பேஷன்ட் எதுக்கு தான் இப்படி வீணா பழி போட்டு எனக்கு வேலையை பற்றி கேள்விக்குறி ஆக்கறாங்களோ. வீடும் காலி பண்ண சொல்லறாங்க மாலினி. கொஞ்சம் உங்க ஏரியாவில் பார்த்து வீடு இருந்தா சொல்லு டி" என்று போனில் பேசுவதை கேட்க பெரு மூச்சை இழுத்து விட்டு, 'அப்போ சம்யுக்தா அப்பாவுக்கு எங்க காதல் தெரிந்து இருக்கு. அவரோட பணபலத்தில் வீடு, வேலை என்பதை குறிவைத்து பறிக்க பார்க்கிறார். என் காதலுக்கு அதுக்குள்ள வில்லனா? சே சே யுக்தா அப்பா நல்லவரா தான் இருப்பார். எதுக்கோ வீடு மாற்றிடலாம்.' என்று நாளை விடியலுக்கு காத்திருநதான். 

     ஆரவிற்காகவே சுகமாக விடிந்தது அந்த காலை வேளை.

     முதல் முறையாக சந்துருவிடம் சென்று "மச்சான் எங்கையாவது றவீடு வாடகைக்கு கிடைக்குமா டா." என்று கேட்டான்.

    "யாருக்கு டா."

    "எனக்கு தான் மச்சான். சம்யுக்தா அப்பாவுக்கு என் காதல் தெரிந்து வீட்டுக்காரரிடம் பேசி எங்களை காலி பண்ண ஏற்பாடு பண்ணிட்டார். அதனால உடனடியா வேற வீடு பார்க்கணும்" என்றான் ஆரவ்.

    "டேய் என்னடா... இப்படி ஒரு வில்லனா இருக்கார். சம்யுவுக்கு தெரியுமா?" என்று கேட்க இல்லை என்று அசைத்தான்.

      "அவருக்கு எப்படி உங்க காதல் தெரியும். மச்சான் காலேஜ்ல பாதி பேருக்கு உங்க மேல டவுட் இருக்கு டா. பாதி பேருக்கு லவ் என்று நல்லாவே தெரியும்"

     "ம்ம்..  நானும் அவளும் நேர்ல தனிப்பட்டு பேசியதே இல்லை. இதுல அதுக்குள்ள வில்லன் எண்ட்ரியா டா. வீடும் கிடைக்கலை. அம்மா வேலையும் என்னவோ ஸ்டக் ஆகுது. நான் ஜாப் போறது தெரியாது போல இல்லை அங்கயும் லந்து பண்ணியிருப்பாரோ?" என்று சிரிக்க,

    "மச்சான் எதுக்கு டா இப்படி சில்லியா பண்ணறார்."  

     "நான் அவரோட தகுதிக்கு நிகரா டா. அவர் இப்பவே மூன்று கம்பெனிக்கு ஓனர். நான் சாதரணவன். சாதரணமா குடும்பத்திலே தராதரம் பார்ப்பாங்க அப்படியிருக்க அவங்க ஸ்டேடஸ்க்கு நான் எல்லாம் சாதரணம். பெற்றவர்களுக்கு தன்னை விட தகுதியில் உயர்வு பெற்றவர்களை தானே தேர்ந்தெடுப்பாங்க." ஆரவ் கூறி முடிக்க,

      "டேய் உனக்கு என்ன மச்சான் குறை. எனக்கு மட்டும் தங்கச்சி இருந்தா நானே என் தங்கையை கட்டிக்கறியா டா கேட்டுடுவேன். என்ன பண்ண ஒரே பையனா போயிட்டேன்." என்றான் சந்துரு.

   டீ கடையில் பருகியவாறு யோசித்த சந்துரு, "மச்சான் வீடு ஏதோ பார்க்கறல எங்க வீட்டுல மாடி போர்ஷன் காலி தான் டா. ஆக்சுவல அடுத்த மாதம் ஒரு டெனட் வந்து பார்க்கறதா சொன்னாங்க. அம்மா தான் கான்பிடன்ஸா அந்த குடும்பம் வசிக்க வர்றாங்கயென்று யாரையும் வீட்டை பார்க்க விடலை. வாடகை விடறதாவும் எழுதி போடலை. நீ வாடகை வீடு என்றதும் ஸ்டக் ஆகலை. பேசாம நீயே வந்திடேன்." என்று யோசனை கொடுக்க, ஆரவ் சில மணித்துளிகள் யோசனையில் ஆழ்ந்தவன் "உனக்கும் உங்க வீட்டுக்கும் எதுவும் பிரச்சனை வராதே" என்று ஆரவ் கேட்க,

     "டேய் அப்பா அம்மா வீட்டோட இருக்க போறாங்க. பேங்கில் வர்ற பென்ஷன் காசு வேலைக்கும் போக போறதில்லை. நாங்க இருக்கறது சொந்த வீடு எங்களை துரத்தவோ மிரட்டவோ முடியுமா. அதோட நான் உன் பிரெண்ட் சம்யு அப்பாவுக்கு நல்லா தெரியும். இப்ப வரை நமக்கு தெரியாது என்று தானே தாக்கறார். அதனால நேரிடையா தாக்க மாட்டார்." என்று கூறவும் ஆரவ் சம்மதமாய் மகிழ்ந்தான்.

      அடுத்த இரு தினத்தில் சுபாங்கினி வீட்டை வந்து பார்க்க, "நமக்கு இவ்வளவு பெரிய வீடு தேவையா ஆரவ். ஒரு பெட்ரும் ஹால் கிச்சன் பாத்ரூம் போதாதா? எனக்கு வேற வேலைக்கு எப்ப வர சொல்லறாங்கயென்று தெரியலை" என்று புலம்ப  தாயிடம் எப்படி சொல்வான் தன் நிலையை அல்லது சம்யு வந்து வாழ இது போன்ற வீடாவது தேவையென்று கூற இயலுமா?

     அம்மா அவசரத்துக்கு சந்துரு வீடு பார்த்து இருக்கேன். போக போக பார்த்துக்கலாம். நான் பார்த்துக்கறேன் மா" என்று சொல்லவும் 'இடம் மாறினால் நல்லது நடக்கும்' என்பதற்கிணங்க சுபாங்கினி அதற்கு பிறகு எதையும் பெரிதுபடுத்தவில்லை. 

     வீட்டை மாற்றி விட்டு கல்லூரி வர, கல்லூரியில் எலக்ஷன் நடைபெற மாணவ மாணவியர்கள் ஓட்டை பதிவு செய்த பின் வகுப்பில் இருக்க பிடிக்காது ஆரவ் சந்துரு ஜார்ஜ் சீனு ரவி சேர்ந்து சினிமா சென்றிருந்தனர்.
  
   டிக்கெட் எடுத்து உள்ளே செல்லும் நேரம் சம்யுக்தா யோகிதா மற்றும் அவள் தோழிகள் சூழ வரவும், ஆரவ் பார்த்துவிட்டு சம்யுவை நெருங்கி வந்து நிற்க,

    "படம் பார்க்க வந்தீங்களா அண்ணா. நாங்களும் எலக்ஷன் முடிந்து போர் அடிச்சிதா... அதான்" என்று யோகிதா பேச, ஆரவ் சம்யு நேற்று போனில் நேரில் பேசவே இல்லை என்ற குற்றசாட்டிற்காக அப்படியே நின்றான்.

    சம்யு நிமிராமலே இருக்க, ஆரவ் சிரித்து "எத்தனை டிக்கெட்?" என்றான்.

     "எட்டு அண்ணா" யோகிதா கூறியதும் சந்துருவை வாங்க கண் காமிக்க வாங்கி நீட்டினான் ஆரவிடம்.

        ஆரவ் தன்னிடமிருப்பதை
யோகிதா வாங்க செல்லும் நேரம், "சம்யுவை வாங்க சொல்லு மா" என்று சந்துரு பேச சம்யுக்தா மெல்ல தன் தலையை உயர்த்தி கையை நீட்டினாள் ஆரவிடம்,

    அவனோ அவளிடம் கொடுக்க ஒரு அடியெடுத்து வைக்க அவளோ இரண்டடி பின் வாங்க டிக்கெட்டை தன் பக்கம் மடக்கி புருவம் உயர்த்தி முடிக்க, சம்யு தயங்கியவாறு சட்டென வாங்கி நகர்ந்தாள்.

     "யுக்தா நான் வந்து பேசினா நீ இரண்டடி பின்னாடி தான் போற பார்த்தியா. பிறகு எப்படி பேச." என்று ஆரவ் குறுஞ்செய்தி அனுப்ப, அதை படித்தவள், திரும்பி பார்த்து "உன்னை அருகே வர விட்டா இதயம் தாறுமாற துடிக்குது ஆரவ்" என்று அனுப்பினாள்.

     ஆரவ் உதட்டருகே சிறு புன்னகை உதிர்த்து அதை அவளுக்கு மட்டுமே காட்டியும் நகர்ந்தான்.

     சற்று நேரம் கழிந்த பின் எந்த இருக்கையில் ஆரவ் இருக்கான் என்ற எண்ணம் எழ தன் முன்னே இருந்த அனைத்து இருக்கையும் ஒவ்வொன்றாக தேடி துழாவி பார்த்தபடி திரும்ப தூக்கிவாரி போட்டது சம்யுக்தாவிற்கு.

     சுற்றி சுற்றி தேடியவள் தன் இடது புறத்தில் பார்த்து விழிக்க அங்கே ஆரவ் அமர்ந்து இருந்தான்.

     "டேய் நம்பர் பிரகாரம் தானே உட்கார்ந்து இருக்க." என்று மீண்டும் கேட்க

     "உனக்கு இதுல என்னடா சந்தேகம். அவ நம்பர் பாரு என் நம்பரையும் பாரு" என்றான் தோதாக சாய்ந்தமர்ந்து.

   ஏற்கனவே ஆரவ் தியேட்டரில் இருப்பதில் சந்தோஷம் கொண்டவள். அதுவும் தன்னருகே இருக்க கண்டு அதிர்ந்தாலும் உள்ளுக்குள் ஆனந்தம் கொண்டாள்.

         அது ஒரு ஆங்கில பேய் படமாக போகவும் முதல் சீனிலே சம்யு மயக்கம் வராத குறை தான்.

    "என்னாச்சு?" என்றான் ஆரவ்.

    "டேய் படமென்று தெரியாது. தெரிந்தா வந்திருக்கவே மாட்டேன்." என்று அழுவாத குறையாக கூற அவளின் முகம் கண்ட ஆரவோ தன் வலது கையை அவளின் இடது கையை பிடித்து, "இப்ப பாரு" என்று சுவாதினமாக கூறி படத்தை தீவிரமாக பார்த்து கொண்டிருந்தான்.

    இதுவரை பேய் படம் கூட பார்த்து சமாளிக்க திணறிய சம்யுக்தா ஆரவின் முதல் உரிமையான தீண்டலில் முதலில் தன் பக்கம் இருக்கும் தோழிகளை தான் பார்த்து வைக்க அவர்களோ பேயை சுவாரசியமாக கண்டு படத்திற்குள்ளே சென்றதாக பாவித்தனர்.

      சம்யுக்தா மட்டும் ஆரவை பார்த்தாள் அவன் கைக்குள் இருக்கும் தன் கையை பார்த்தாள் இப்படியே மாறி மாறி முப்பது நிமிடம் பார்க்க, ஆரவ் பொறுமையிழந்து அவள் பக்கம் திரும்பி 'என்ன' என்பதாய் தலையை அசைத்து தூக்கி கேட்கவும் 'ஒன்றுமில்லை' என்று வேகமாக சம்யுக்தா தலை அசைத்தாள்.

    ஆரவ் மீண்டும் படம் பார்க்க, சம்யுக்தா படத்தை விடுத்து ஆரவை தான் பார்த்து கொண்டிருந்தாள்.

     இடைவெளி விடவும் ஆரவ் கையை பிரிக்க சம்யுக்தா கை இறுக பற்றி கொண்டிருக்க, "யுக்தா..." என்று கையை சுட்டிக்காட்டி எழும்ப சம்யுக்தா வேகமாக பிணைத்து இருந்த கையை விடுவித்து ஆரவை கண்டு எழுந்து நிற்க,

     "உட்காரு" என்று அவன் வெளியே சென்றிட, யோகிதா மற்ற பெண்கள் பேயை பற்றியே பேசிகொண்டிருக்க சம்யுவோ தனியுலகில் சஞ்சரித்தாள்.

     ஆரவ் டார்க் சாக்லேட் வாங்கி வந்து நீட்ட, தோழிகளோ ஐஸ்கிரீம் வாங்கி வர, இரண்டும் பெற்றுக் கொண்டவள் டார்க் சாக்லேட் எடுத்து பத்திரப்படுத்தினாள்.

    மீண்டும் படத்தை பார்க்க இம்முறை ஆரவ் கைபிடிக்க போனவன். அவள் படம் பார்த்து இருக்க, பிடிக்காது இவனும் சாய்ந்தமர்ந்தான்.

      இருபது நிமிடம் படம் சென்ற நொடி பேய் ஆக்ரோஷமாக வந்து பயமுறுத்த, ஆரவ் புஜத்தை இறுக பற்றி முகத்தை மூடி கொள்ள ஆரவ் நிலை தான் சொல்ல இயலாத தர்மசங்கடத்தில் தவித்தான்.

     "யுக்தா..." என்ற குழைவான குரலில் சம்யுக்தா பார்க்க இருவர் கண்கள் மட்டும் சந்தித்து க(வி)தை பேசி கொண்டது.

     ஐந்து நிமிடம் கழித்து அவனாக கையை தவிர்த்து முன்பு போலவே இடது கையை பிடித்திட, யுக்தா சந்தோஷமாக படம் பார்த்தாள். ஆனால் படம் பேய் என்பது எல்லாம் எங்கோ நடப்பது போன்று இருந்தாள். தனியாக ஆரவோடு சஞ்சரித்து கொண்டிருந்தாள்.

    படம் முடிய கிளம்பவும், ஆரவ் தலையசைப்பில் புறப்படுவதாக கூறவும் அவளும் மௌனமாய் புறப்பட்டாள்.

-வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

-பிரவீணா தங்கராஜ்

   

Comments

Post a Comment

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

பிரம்மனின் கிறுக்கல்கள்