தீவிகை அவள் 🪔 வரையனல் அவன் 🔥 - 14

 
 
 தீவிகை 🪔 வரையனல்🔥 -14 

திவேஷ் அலட்சியமாக சம்யுக்தாவை நெருங்கி வந்தவன், ஆரவ் பேனாவை சட்டை பட்டனில் வைத்தவாறு சம்யு அருகே வந்து சேர கால்கள் அப்படியே பிரேக்கிட்டு நிறுத்தினான்.

      திரும்பி பார்த்து சுவாமிநாதன் இருக்கின்றாரா என்று எட்டி பார்க்க, அவர் கார் கண்ணிலிருந்து மறையும் தொலைவிற்கு சென்று இருந்தது.

     "வாங்க சார். போட்டு கொடுத்தாச்சா. நீ போட்டுக் கொடுத்த அடுத்த நாளே தெரியும். என்னடா அப்பவும் சும்மா இருக்கானேயென்று பார்க்கறியா? சம்யு இருக்கறப்ப எதுக்கு டா நான் மற்றதை யோசிக்கணும். புத்திசாலியா இருந்தா புரிஞ்சிக்கோ." என்றவன் சம்யுவை பார்த்து,

     "ஜூனியர் இங்க என்ன பண்ணற, கிளாஸ்க்கு நேரமாகலை. போ..." என்று கண்சிமிட்ட, சம்யு நமட்டு சிரிப்போடு இடத்தை விட்டு அகன்றாள். பார்வை என்னவோ திவேஷை ஏளனமாக எண்ணியது போல தோற்றம் தரவிக்க, ஆரவ் அருகே இருக்க, எலி போல அமைதியாக ஓரமாக போனான்.

    வகுப்பில் வந்து அமர்ந்து சிரிக்க, யோகிதா வந்து என்ன என்று விசாரிக்க, நடந்தவை கூறி திவேஷ் விழித்ததை எண்ணி சிரிக்கவும், யோகிதாவோ

      "ரொம்ப சிரிக்காதே எனக்கு உன்னை பார்த்தா சிரிப்பா வருது." என்றதும் சம்யு முறைக்க,
  
      " பின்ன என்ன அண்ணாவுக்கு எப்படி தெரிந்தது கேட்டியா? உங்கப்பாவுக்கு காதல் தெரிந்து இருக்கு உன்னிடம் ஒரு வார்த்தை கேட்கலை. அதையாவது ஏன்னு யோசிச்சியா? திவேஷ் முழிச்சானாம் நீ சிரிக்கிற" என்று யோகிதா சொன்னதும் தான் சம்யு யோசனைக்கு சென்றாள். 

     "ஆமா யோகி.... ஆரவ்-கு தெரியுதுன்னா அது என் ஹீரோ. எப்படியோ தெரிந்து இருப்பான். தெரிந்தாலும் என்னிடம் சொல்ல மாட்டார். படிப்பு தடைப்படும் அது இது என்று பேச வாய்ப்பு இருக்கு. இந்த அப்பா அவருக்கு என் காதல் தெரிந்தா இப்படி சும்மா இருக்க மாட்டாரே.

    அதுவும் இந்த திவேஷ் பத்த வைச்சிட்டியே பரட்டை மாதிரி நடந்துப்பான். ஒரே குழப்பமா இருக்கு.

     இதுல ஆரவ் வீட்டுக்கு போனதில் அத்தை திட்டிட்டாங்க. கஷ்டமா போச்சு. நான் இதுவரை அப்பாவிடம் திட்டு கூட வாங்கியதில்லை. என்னை ஏதோ தப்பா பேசியதாவே தோன்றுச்சு. எனக்கு இன்னமும் அவங்க பேசிய பேச்சு என்ன மீனிங்ல சொல்லறாங்க என்றே புரியலை. ஆனா தனியா எங்களை பார்த்தா கோபம் வருவது நியாயம் தான். ஆரவ் இப்ப தெளிவுப்படுத்தி இருக்கலாம்." என்று அவளாக பேசி பூரிக்க, யோகிதா கையை தாடையில் பதித்து முடித்து, "அது எப்படி தான் ஆரவ் என்று சொன்னாலே உன் முகம் அப்ப மட்டும் ஒரு கூடுதல் பொலிவு வருதோ" என்று சிரிக்க மேம் வந்து நிற்க வகுப்பு அமைதியாக மாறியது.

      "ஹாய் ஸ்டுடண்ஸ் நம்ம காலேஜ் டூர் போக ஏற்பாடு பண்ணியிருக்காங்க. ஒவ்வொரு டிபார்மெண்ட் ஒவ்வொரு ஊருக்கு போறாங்க. உங்க அதிர்ஷ்டம் ஊட்டி போறிங்க." என்றதும் மாணவ மாணவிகள் சந்தோஷத்தில் கத்த துவங்கினார்கள்.

      இடைவேளையில் கேண்டீனில் இருக்கும் ஆரவை தேடி சம்யுக்தா வரவும், ஆரவ் நண்பர்கள் எழுந்து சென்றனர்.

      உங்களிடம் பேச தான் வந்தேன். அது...  திவேஷ் அப்பாவிடம் நம்மை பற்றி சொல்லிருப்பானா? என்று கேட்க, ''ம்ம்... சொல்லிட்டான் " என்றான் வெகு சாதரணமாக.
   
    "அப்பா என்னிடம் எதுவும் கேட்கலை." என்று ஷாலை சுற்றியபடி எதிரே அமர்ந்தாள்.

     சந்துரு கூல்டிரிக்ஸ் எடுத்து வந்து வைத்து, "இந்தாம்மா" என்று நகர "தேங்க்ஸ் அண்ணா" என்று பருகினாள்.

    "அவர் கேட்கற வரை நீயா காட்டிக்காதே. செகண்ட் இயர் தானே. தேர்டு இயர் பார்த்துக்கலாம்." என்றான்.

   "ம்ம்..." எழுந்தவளிடம் "டூர் போக நேம் கொடுத்துட்டியா?" என்று கேட்க, "இல்லை... இரண்டு நாள் உன்னை பார்க்காம.... முடியாது... ஆரவ். நான் போகலை." என்றாள் சம்யு.

     "இங்க இருந்தா பார்த்துடுவியா?" என்றான் அவளின் சிகை கற்றை காதில் அலைஅலையாய் விளையாடுவதை கண்டு இரசித்தபடி கேட்டான்.

     "இங்கயும் பார்க்க முடியாது தான். ஆனா நீ ஏரியாவில் இருக்கற என்ற நிம்மதி உன் மூச்சு காற்று இங்க தான் இருக்கும் என்று அதுவே ஒரு சந்தோஷத்தை கொடுக்கும்." என்று முடியை காதின் பின்புறம் ஒதுக்கி கூறினாள்.

      "நான் இல்லனா எப்படி மூச்சு காற்று இருக்கும்" என்ற அடுத்த நொடி சம்யு கண்கள் நீரை சுரந்து இருக்க,

    "ஏய் அழுவறியா? எதுக்கு டி?" என்று அவளருகே வந்து அமர்ந்து கேட்கவும், "எதுக்கு இப்படி பேசற ஆரவ். நீ இல்லைனா நானும் இருக்க மாட்டேன். நீ இந்த உலகத்தில் இருந்தா, மட்டும் தான் நானும் உன்னை என்னைக்காவது பார்ப்பேன் என்ற நம்பிக்கையில் வாழ்வேன்." என்று பேசவும் உருகிப் போனான்.

     அவளின் கையை பிடித்து தன் கரத்தினுள் நுழைத்து, "ஏய் லூசு... நான் இங்க இல்லனா... என்பது உலகத்தில் இல்லை என்ற பொருள் இல்லை. நான் ஊட்டியில் இருந்து நீ இங்க இருந்தா என்ற அர்த்ததில் கேட்டேன்."

    சம்யுக்தா கண்கள் நீரை திருத்தி மின்னலாய் கண்கள் பளிச்சிட, "அப்போ நீங்க வர்றீங்களா? என்றதும் "ஆமா... ஒரே டிபார்மெண்ட் சொன்னாங்க புரியலையா. யூஜி, பிஜி கலந்து தான். உங்களுக்கு கையிட் பண்ணறது நாங்க தான்." என்று சொல்லவும் சிரிக்க துவங்கினாள்.

      "ஏன் ஆரவ் அப்பாவுக்கு என் காதல் தெரியும் என்றால் அவர் என்னை அனுப்ப மாட்டார் தானே.. அப்பறம் எப்படி?" என்று கேட்க எண்ணியதையே இப்பொழுது தான் கேட்டாள்.

     "கேட்க மாட்டார். அவருக்கு உன் மேல அக்கறை அன்பு அதிகம்." என்றவன் மனமோ அதை விட அவர் 'நல்லவரா தான் உன் மனதில் பதிய வைக்க பார்க்கிறார்.' என்று பேசவும்

   "இவ்வளவு நாள் எனக்கு தெரியாது அதனால் கேட்கலை. இப்ப எனக்கு தெரியும்னு திவேஷ் சொல்லிட்டா கேட்பார் தானே?" என்று கேட்டதும்.

    "உங்கப்பா உன்னிடம் எதையும் கேட்க மாட்டார்." 'என்னிடம் மட்டும் மோதுவார்.' என்றதைஅவள் கவனிக்கவில்லை. அவன் 'உன்னிடம் எதையும் கேட்க மாட்டார்' என்றதிலே அப்போ உன்னிடம் என்ன பேசறார் ஏதேனும் பண்ணிட்டாரா? என்ற கேள்வியை கேட்டிருந்தால் சின்னதாக கோடிட்டு காட்டியிருப்பானோ என்னவோ ஆரவ் அப்பொழுதும் அமைதியாக இருந்தான். இந்த அமைதி அவனின் வாழ்வில் புரட்ட காத்திருந்தது.

     "என்னவோ ஆரவ்... நீ இருக்கற தைரியம் வேறயெதையும் யோசிக்க வைக்கலை. நான் போய் டூருக்கு நேம் கொடுத்துட்டு வர்றேன். ஆரவ்... எப்பவும் எனக்காக நீ இருப்ப தானே. ஆன்ட்டி பேசியது எல்லாம் சரி பண்ணிட்டு தானே" என்று கேட்டதும் சின்னதாக மென் புன்னகை படரவிட்டான்.

     மணியடிக்க அவள் வகுப்பில் சென்ற நேரம் சந்துரு வந்தான்.

    "ஏன் ஆரவ் இப்படி எதையும் சொல்லாம இருக்க, அவர் நேற்று அம்மாவை மிரட்டியதை சொல்லியிருக்கலாம்." என்று சொல்லவும்.

    "இல்லை டா. ஒரு நிமிஷம் சொல்லிடலாம். ஆனா சம்யு பிறந்ததிலருந்து அவ அப்பாவும் அவளும் ரொம்ப பாசம் டா. 

    அம்மா நேற்று என்னை ஹர்ட் பண்ணி பேசினதா நடிச்சப்ப, எனக்கு அம்மா மேல அதிகபடியான கோபம் வந்தது. ஏன் வீட்டை விட்டு போயிடலாமா என்று கூட தோன்றியது. அப்ப தான் ஒன்று புரிந்தது. பெற்று வளர்த்த ஆளாக்கி நமக்கு நல்லது கெட்டது சொல்லி வளர்த்தவங்களை ஒரு நிமிஷம் நம்மை தப்பா பேசியதில் ஒரு செகண்ட் நம்ம அம்மாவை தப்பா எண்ணிடறோம்.

    சம்யு அப்பா தப்பா நடப்பது போல நடிக்கலை. நிஜமாவே தப்பா நடக்கிறார். சம்யுக்தாவுக்கு தெரிந்தா சுவாமிநாதனை மதிக்க மாட்டா, அதுக்காக தான் யோசிக்கறேன்.

    இருபது வருடம் நல்லது கெட்டது சொல்லி தந்து, அன்பா, பாசமா வளர்த்துட்டு இப்ப என்னை விரும்புவதால சம்யுக்கு தெரியாம அவங்க அப்பா நடப்பது சராசரி தந்தையோட செயல்பாடு, இதை தெரிந்தா கோபம் வந்து சுவாமிநாதனை பிரிஞ்சு அடுத்த நொடி என் கூட வந்திடுவா.

     என் நோக்கம் பிரச்சனையை தவிர்த்து சம்யுவை அவ படிப்பு முடிஞ்சு திருமணம் பண்ணறது தான். அதற்குள் என்னை நான் தகுதி படுத்திக்கணும். அவ்ளோ தான். தகுதி வளர்த்துக்கிட்டா தானா பெற்றவர்கள் புரிந்து அட்லிஸ்ட் அரை மனதோட திருமணத்துக்கு சம்மதம் கொடுப்பாங்க" என்றதும் சந்துரு, தன் நண்பனை தட்டிக் கொடுத்தான்.

      வீட்டுக்கு சென்ற சம்யுவை தந்தை எதுவும் கேட்கவில்லை. இவளும் திவேஷ் பற்றி எதையும் கேட்பதில் உடன்பாடு இல்லாததால் நிம்மதியாக கடந்தாள்.

     டூர்  அடுத்த வாரம் என்று அறிவித்து இதோ இன்று புறப்பட, தயாராக மாறியிருந்தனர்.

     "அப்பா டேப்லட் எடுத்துக்கோங்க, மறக்காம நேரத்துக்கு சாப்பிடுங்க. ஆபிஸ்லயே இருக்காதீங்க. நேரத்துக்கு வீட்டுக்கு வந்துடுங்க. அப்பறம் உங்களுக்கு என்ன வாங்கிட்டு வரப்பா?" என்ற கொஞ்சும் மொழியில் கதைக்கும் சம்யுவை கண்டு,
  
     "பத்திரமா போயிட்டு வா மா. அப்பாவுக்கு அது போதும்." என்று நெற்றியில் ஆசிர்வதிக்க, பையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

     "திவேஷ் அவளை கண்கானிக்க செய்துடு, ஆரவ் இங்க திரும்ப வர்றப்ப அவன் குடும்பத்தை பழித்தீர்க்க ஆட்கள் ஏற்பாடு பண்ணிட்டு இருக்கேன். எல்லாரும் ஒத்துழைச்சா, அவனுக்கு முடிவு கட்டிடுவேன். நீ கேட்ட மாதிரி, சம்யு படிப்பு முடிந்ததும் உனக்கு சம்யுக்தாவை கட்டி வைக்கிறேன்." என்று போனில் பேரம் பேசினார்.

     "அங்கிள்... இந்த மாதிரி சொல்லி அப்பறம் பேச்சு மாறினீங்க. பிறகு என்னை பிஸினஸ் மேனாக பார்க்க ஆரம்பிப்பீங்க" என்று மிரட்டினான்.

   போனை வைத்த சுவாமிநாதனோ, 'என் முன்ன நின்று பேச தைரியமில்லாத பையன் இந்த திவேஷ். என்ன பேச்சு பேசறான். சே... இந்த சம்யு தராதரம் பார்த்து காதலிச்சு இருக்க கூடாதா? இந்த திவேஷ் எல்லாம் தூசி, ஆரவை தான் அசைக்க முடியாது. அவனையே அசைக்க ஆளை விலைக்கி வாங்கிட்டு இருக்கேன். எல்லாம் முடியவும் சின்னதா திவேஷூக்கு பாடம் நடத்தறேன்.' என்ற மிதப்பில் மற்றொரு காவல் அதிகாரியின் இடைத்தரகனிடம் போன் செய்து பேரம் பேசிக்கொண்டு இருந்தார்.

     பஸ் புறப்படும் பொழுது முதல் வருடம் மற்றும் மூன்றாம் வருடம் ஜூனியர் ஒரே பஸ்ஸில் பயணிக்க, மற்றொரு பஸ்ஸில் இரண்டாம் வருட ஜூனியரும், முதல் வருட சீனியரும் ஒரே பஸ்ஸில் பயணமானார்கள்.

     சீனியரில் இரண்டாம் வருடத்தினர் படிப்பில் அதீத கவனத்தில் அவர்கள் வரவில்லை. அதனால் சீனியர் என்று ஆரவ் வகுப்பு தான்.

    ஆசிரியர் மூவரின் மேற்பார்வையில் புறப்பட்டது பேருந்து பயணம்.

     இரண்டு ஸ்டாப் அளவு சென்றிருக்கு ஆரவ் எழுந்தவன் நேராக சம்யு அமரும் இடத்தில் வந்து, பக்கத்தில் இருக்கும் யோகிதாவை எழுப்பி இடம் மாற்ற சொல்ல, இது ஆரவ் தானா என்பது போல சீனியர் பார்த்து அசர, சிறுசிறு கிசுகிசுக்கள் துவங்க, சம்யுக்தா அருகில் ஆரவ் அமர்ந்தான்.

      "ஹாய் எதுக்கு இப்படி தலையை திருப்பி திருப்பி பார்க்கற?" என்றான்.

     "இ...இல்லை... எல்லோரும் நம்மை பார்க்கற மாதிரி இருக்கு." என்று திணறினாள்.

    "நம்மை தான் பார்க்கறாங்க. நம்மை பற்றி தான் பேசறாங்க. கொஞ்ச நேரம் பேசிட்டு அவங்களே கடந்து போயிடுவாங்க." என்று கைகளை ஜன்னலருகே கொண்டு போக, அவளை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டு இதமாக பயணத்தை தொடர்ந்தனர்.

    திவேஷ் தன் கோபத்தை அடக்கி ஆரவை ஒன்றும் செய்யயிலாத விதமாக வேடிக்கை தான் பார்க்க முடிந்தது.

     ஆரவ் அறியாது போட்டோ எடுக்க முயன்ற கணம் சந்துரு தலையில் தட்டி, "நகரு" என்று  பக்கத்தில் அமர்ந்து கொள்ள சந்துரு இருக்க போட்டோவும் எடுக்க இயலாது, சுவாமிராதனுக்கு அனுப்பவும் முடியாது தவித்தான்.

    ஆரவோ மவனே ரிட்டன் போறவரை சந்துரு உன் கூட தான் இருப்பான் போட்டு கொடுக்க போட்டோவா எடுக்கற, என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டான்.

-வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

- பிரவீணா தங்கராஜ்.

Hi....

Sry sry some readers check panitu epi ilainu feel anathai soninka.

Ini monday friday regular ah epi post varum.

Comments fb la solringa inka no comments ah. Inkayum comments share panunga. Boost ah irukum.

அப்பறம் sunday பேய் கதை? போஸ்ட் பண்ணறேன்.
பெயர் *நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்* sunday only post இது.



Comments

Post a Comment

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு