உன் விழியும் என் வாளும் சந்தித்தால்... 10

  


  💟(௧௦)10
         

               நீரில் கைகளை துழாவிய ருத்திரா அருகே யாரோ வருவதை போல உணர திரும்ப தான் வருவதை அறிந்து கொண்டாளே கள்ளி இவள் என்றவன் அப்படியே நழுவ பார்க்க ஏனோ அவள் கைகளை நீரோடையில் இவன் கைகளும் தீண்ட ருத்திரா அவன் தீண்டல் என்றதும் அமைதியாக இருந்தாள்.
     "எப்பொழுதும் விழிக்கு அகப்படாமல் தான் காட்சி அளிப்பீரோ தாங்களும் தங்கள் உடன்பிறப்பாளனும்" என்று ருத்திரா அவனை தான் மட்டும் காணாது தவித்து கேட்க
     "மனம் கவர்ந்தவள் விழி தரிசனம் கேட்ட பின் மறுக்கும் கல் இதயமா உன்னவன் தேவி... இதோ இக்கணம் பார்வை வட்டத்திற்கு வந்தேன்" என்று உருவம் தெரிய காட்சி அளிக்க.
      மித்திரன் இங்கு வர சாதாரண வீரனை போலவே நிற்க அவனை கண்டவள் விழிகள் அருவியாக போனது.
     "ஏதேது இந்த வதன முகத்தில் சோகம் ஏனோ?"
  "சோகம் ஏற்படுத்தியவர் அறியாததா?"
   "யாம் எமது காதலியை தேடி காதலனாக வந்தோம். நம்மை பற்றி கதைக்க... தேவியருக்கு அதில் உடன்பாடு இல்லையோ?" என்றவனின் கைகள் இன்னமும் அவள் கரங்களில் பிடி பற்றியிருக்க ருத்திரா அதனை ஏற்றே இருந்தாள்.
    "பிழை கொண்டு இருந்தால் எம்மை ஒறுத்தல்(தண்டிப்பது) சரியே பிழை இல்லாதவன் மீது பழிப்பது எவ்வித நியாயமடி கண்மணி" என்றவன் கரங்கள்
    "எது தடுகிறது தமையன் என்ற பந்தமா?"
    "யாம் நம்மை பற்றி அளாவ(பேச) வந்தேன்... நீயோ தீங்கு செய்தவனையே கேட்கின்றாய்...?"
     "எதற்காக வந்தீர்... இங்கு பல உயிர்கள் இன்று இல்லாது போனமைக்கு தங்களின் பந்தம் காரணமென யாரேனும் அறிந்தால் தங்கள் சிரம் யாக்கையில் தங்காது"
    "நீயிருக்க அச்சமென்ன... உயிர் போனால் அது உம் கரங்களால் நடந்தேறட்டும்"
     "எம்மை அறியாது நிகழ வாய்ப்பு உண்டு.... இங்கிருந்து சென்றிடுங்கள்... எம் மனம் மாறுவதற்குள்..." என்று திரும்பிட
     "உம்மால் எம்மை கொல்ல இயலாது கண்மணி.. எம்மை கொல்வதாய் இருந்தால் நான் உம்மை தீண்டிய கணம் அக்கினியில் மாண்டு இருக்க வேண்டும்... உம் உள்ளத்தில் பள்ளத்தில் புதைந்து கிடக்கிறது எந்தன் இதயம். பகைமை புறம் தள்ளி ஞானகண்ணில் கண்டிடு உம்மால் எம்மை அழித்திட முடியாது. இன்னும் நிருபிக்க வேண்டுமெனில்... நிருபிக்கின்றேன்" என்று ருத்திரா அதரத்தை மென்மையாக ஓற்றி எடுத்தான் மித்திரன் அதரத்தால்...
    தேன் குடிக்கும் வண்டாய் மித்திரன் இருக்க ருத்திரா விழிகள் சொக்கி தான் போனது.
    இந்நாள் வரை பெண்மையை உணராது இருந்தவளுக்கு மித்திரன் தேனாய் புரிய வைத்து விடுவித்தான்.
     "உம்மை முத்தமிட்ட கணம் உமது விருப்பமின்றி தீண்டிய எமக்கு மட்டும் எதுவும் ஆகாது இருக்க உமக்கு புரியவில்லையா?" என்ற கணம்
      "அப்படியானால் தங்களுக்கு எம்மை பற்றி?"
        "அறிந்து கொண்டோம்... ருத்திரா எம் மூச்சு காற்றின் உயிர் நீ என்ற பின்.. அறியாது இருப்பேனா"
      இரு விழிகள் ஒன்றை ஒன்று காதலெனும் காவியத்தில் கட்டுண்டு கிடக்க மறுபக்கம்
    "தேவியரே... தேவியரே...." என்று பணிப்பெண்கள் கூவியபடி வர மித்திரன் எட்டி நின்றான்.
    "தேவியரே... நம் நாட்டிலும் நம் ஆதியினத்திலும் இரு பெண்கள் மாயமாகி இருக்கின்றார்கள்... வேந்தன் தங்களிடம் தெரிவித்து அழைத்து வர சொன்னார்" என்று வணங்கி தெரிவிக்க
     இந்நேரம் வரை  எம்மால் எவ்விதம் இடையூறு இருப்பதற்காக எம்மை திசை திருப்பி இருக்கின்றாய்.... சொல் உமது தமையன் இருக்கும் திக்கு செப்பு இல்லேல் சிரம் கொய்ய தயங்க மாட்டேன்"
    "ருத்திரா உம் வாளில் மாண்டிடவே பிறப்பெடுத்தவனாவேன். ஆனால் ருத்திராவுக்குள் எந்தன் காதலும் உள்ளதை அறிந்து கொல்(சாகடி)" என்றதும் ருத்திரா விழிகள் மித்திரன் பார்வையில் இருந்து நழுவி
    "வீரனை அழைத்து வாருங்கள்.  எந்நாட்டின் வேந்தன் எந்தை இவரை காண வேண்டும்" என்ற சேர்ந்து சென்றான்.
      ருத்திரா ஒரு ஆண்கமனை நடுநிலையில் அழைத்து வர அச்சபை மக்கள் விழி விரிய கண்டார்கள்.
        தன் மகள் ஒரு இளவரசன் போன்ற தோற்றம் கொண்ட வரை அழைத்து வர வேந்தனும் ஆர்வம் பொங்க யார் என்ற ஆவலாக எண்ணினார்.
    "கோமகனுக்கு எந்தன் சிரம் தாழ்ந்த வணக்கம்" என்று வணக்கம் வைத்தவள் சபைக்கும் பொது வணக்கம் வைத்து
    "இரு பெண்கள் மாயமாகி இருக்க கேள்விப்பட்ட கணம் மீண்டும் வெட்கம் கொண்டோம். இது மீண்டும் எந்நாட்டின் அவல நிலையே..."
     "அது பற்றி தான் கதைக்க வந்தோம். இவர் யார் மகளே. சபைக்கு அழைத்து வர காரணம் என்னவோ?" என்றார் ருத்திராவின் தந்தை அகத்தியன்.
    "97 பலி வாங்கிய கயவனின் உடன்பிறப்பு. துர்வசந்திரனின் தம்பி சௌமித்திரதேவன்.
    சந்திர தேசத்து இளவரசன். பரிதி செங்குட்டவன் வேந்தனின் இளைய மகன். இவனின் தமையன் துர்வசந்திரனின் தீய எண்ணமே மங்கைகள் மாயமானதின் காரணம்" என்ற ருத்திராவின் மொழிகளில் பலரும் ஆவேசம் கொள்ள மித்திரன் மட்டும் இவள் இப்படி தான் தன்னை அறிமுகப்படுத்தி வைப்பாள் என்று முன்னையே எண்ணியது போலவே ருத்திராவை பார்வை அகலாது பார்த்தான்.
     அங்கே திரை சீலையின் அந்த பக்கம் ராணிக்கும் ராஜ குலபெண்களுக்கும் என்று பார்ப்பதற்கு இருந்த இடத்தில் மஞ்சரி மித்திரனை கண்டு பதறி போனாள்.
    வேந்தன் அகத்தியனோ சற்று யோசித்து "அந்நாட்டு வேந்தனுக்கு ஓலை அனுப்புங்கள்.
      மாயமான மங்கைகள் கண் முன் கொண்டு வந்தாலொழிய இளவரசன் அவர்களுக்கு திரும்ப கிடைப்பார் இல்லையேல் இளவரசன் சிரம் நாளை மாலை யாக்கையில் இடம் பெறாது என்று கூறி வரைவு(ஓலை) அனுப்புங்கள்" என்ற கணம்
    "வேந்தே..." என்ற குரல் கேட்டது அது மஞ்சரி இருக்கும் திக்கிற்கு மற்றவர்கள் பார்வை திரும்ப ருத்திராவோ மித்திரன் இருக்கும் திசை கூட காணாது தவிர்த்தாள்.
    ஆனால் மித்திரனோ ருத்திராவை தவிர யாரையும் காணவில்லை யவன்.
    வேந்தன் அகத்தியனோ " என்ன செப்ப வேண்டும் என்றாலும் சபைக்கு வந்து சொல்லம்மா... இங்கே மகள் கருத்து மருமகள் கருத்து என்று பிரிவுகள் இல்லை" என்று சொன்னதும் சந்திரமதி குழப்பத்தோடு போக சொல்ல
    சபையில் இருந்த மேகவித்தகனும் இவள் எதற்கு வருகின்றாள் என்ன சொல்ல போகின்றாள் என்றே ஆவலடைந்தான்.
     "மன்னிக்கவும் வேந்தே... இவர் சந்திரதேச இளவரசர் தான். பரிதி செங்குட்டவன் மைந்தன். கயவன் துர்வசந்திரனின் உடன் பிறப்பு தான். ஆனால் இவருக்கும் மங்கை மாயமானதிற்கும் துளியும் சம்மந்தம் இல்லை. அதே போல....இவர்... இவர்.. இந்நாட்டின் மங்கை ஒருத்தியின் மன்னவனும் கூட... ஆம் வேந்தே...இவர் இவர் இளவரசி ருத்திராவின் மனம் கவர்ந்தவர்" என்றதும் அகத்தியன் சந்திரமதி மேகன் மூவருமே ருத்திராவை காண அவளோ அத்திரசாரம்(இரும்பு) போலவே நின்றாள்.
      மித்திரன் அக்கணம் கூட யாரையும் காணவில்லை அவன் அவனின் ஆருயிர் காதலி ருத்திராவை  தான் இமைக்காது பார்த்தான்.
     அகத்தியனுக்கு என்ன செய்ய என்றே புரியாத புதிராக இருக்க ருத்திராவோ
    "மந்திரி அன்பானந்தம் அவர்களே... வேந்தன் சொல் ஓலையில் எழுதி அனுப்புங்கள். இங்கு நீதி சமமாக தான் இருக்கும். மன்னன் குடும்பம் என்றோ மக்கள் என்றோ பாகுபாடு எம் நாட்டிற்கு இல்லை" என்றே கிளம்ப மித்திரன் கைகள் விலங்கு பூட்டி இருந்தது மேகவித்தகனால்.
     மித்திரன் நினைத்தால் மந்திரம் உச்சரித்து மாயமாக இயலும் அவன் அதை எண்ணவில்லை. அவனுக்கு ருத்திராவின் மனம் தன்னை சந்தேகிக்கின்றது என்றதில் உழுன்றது. அவள் தன் மூலம் தமையனை பிடிக்க எண்ணினால் என்று தோன்றினாலும் தான் இவ்விதம் மாயம் செய்தால் அவள் முற்றிலும் தன்னை வெறுக்க நேரலாம் என்று அமைதி காத்தான்.
    சந்திரமதி மஞ்சரியிடம் மகள் காதலை பற்றி அறிந்து வெளியேறினாள்.
    ருத்திரா ஊர் அறிய முடிவு எடுத்தாலும் துர்வன் மித்திரனை காக்க வருவது குறைவே என்பதை அறிந்து தன்னையே மறந்து அழ செய்தாள்.
    அவன் சிரம் கொய்ய படுமா? அல்லது நாளை துர்வனுக்கு முடிவு நெருங்குமா? என்று மஞ்சத்தில் கண்ணீரை உகுந்தாள்.  
   இங்கு மித்திரனோ நிச்சயம் தன் தமையன் தனக்காக வர மாட்டான்
ஆனால் தாய் மாதங்கி என்ன முடிவு எடுப்பார். எப்படியும் அம்மா இம்முறையேனும் நீதிக்கு முக்கியத்துவம் செய்வாரா உயிர் பற்றி அறிந்து பாசம் அன்பை உணர்வாரா தன்னை போல தானே மற்ற அன்னையருக்கு வருந்திருக்கும்  என்று எண்ணுவாரோ?
      துர்வன் இரு பெண்ணை பலியிட்டாலும் அந்தியில்(முடிவில்) ருத்திரா தானே அவன் குறி தான் ருத்திரா நெருங்க வேண்டுமென்றால் தன்னை  தாண்டி அவன் போக வேண்டும். இந்நாள் வரை எந்த பெண்ணை தேர்வு செய்கின்றான் என்பது அறியாதது தான் தனக்கு காப்பற்ற இயலாத காரணம். இதோ ருத்திராவை அவன் நிச்சயம் நெருங்குவதால் முன் நிற்க முடியும்.
    ருத்திரா எண்ணியது போல அவனை வெல்ல முடியாவிட்டால் காளி தேவி முன் எம்மரணம் தழுவி அவனை கொல்வேன் என்ற முடிவில் இருந்தான்.
    துர்வன் இரு பெண்களை ஒரு சேர புரவியில் ஏற்றி வானில் மிதந்து கொண்டு இருந்தான்.
    நாளை மறுநாள் தான் எண்ணிய எண்ணம் ஈடேற வேண்டும் என்ற நோக்கில் திளைத்து கொண்டு இருந்தான்.

   எப்படியும் இவர்கள் இருவரும் தன் மீது மையலில் இருக்க தனக்காக உயிர் துறப்பார்கள். ஆனால் நூறாவது பலி அந்த ருத்திரா... அவளை மறலி கொள்ள இயலாது. அழைத்து வர அருகில் கூட நெருங்க இயலாது.
     என்ன வழி என்று சிந்திக்க செய்தான். 
 
-விழியும் வாளும் சந்தித்தால்... 
 
-பிரவீணா தங்கராஜ். 
 

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு