உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...-5

                                                            
  
 💟(௫) 5


               பரிதியின் கதிர் அங்கே இருக்கும் இடமெல்லாம் வெளிச்சம் தர மித்திரன் சோம்பலுடன் எழுந்தான். இன்று ருத்திராவை பிரிய வேண்டும். துர்வசந்திரன் எந்த நங்கையை தேர்ந்து எடுத்து பலியிட போகின்றானோ அதனை தடுத்து அவனை அங்கே முன்னே அமர்த்தி அவனின் எண்ணத்தை கலைய வேண்டும்.... இத்தனையும் முடியுமா? அவனும் நானும் பயின்றது ஒன்றல்லவா... அவன் என்னை மாற்றி விட்டால்? இல்லை பிறப்பு என்பது எமக்கு முன்னால் அவதரித்து இருக்கலாம்.... ஆனால் எம்மை வீழ்த்த ஒருவன் பிறப்பெடுக்க வேண்டுமெனில் அது யாம் பெற போகும் சேய்களாக தான் இருக்க முடியும் என்றவனின் பார்வை ருத்திரா வதனதில் நின்றது. 
     ''ருத்திரா... எமது பயணம் தொடர வேண்டும் உம்மை...'' என்றே தயங்க
     ''எம்மை காக்க எமக்கு தெரியும்... எம்மை தொடர வேண்டிய தேவை உமக்கு வேண்டாம்... மீண்டும் சந்திக்கும் நிலை வரும் நேரம் கரம் பிடிக்கின்றேன்.(நீ கரம் பிடிக்கின்றாயா? இல்லை சிரம் கொய்ய போகின்றாயா அந்த இறைவனுக்கே வெளிச்சம்)
          நொடிக்கு ஒரு முறை திரும்பி திரும்பி பார்த்து சென்றான் மித்திரன். என்ன நினைத்தானோ மீண்டும் ருத்திரா முன் வந்து
      ''ஒரு முறையேனும் உந்தன் தாமரை முகம் காணலாகுமோ?'' என்றே கேட்க மஞ்சரி அங்கிருந்து நழுவ ருத்திரா சுற்றி பார்க்க செய்தாள். மித்திரனோ ''ஒரு நொடி பொறுத்திரு'' என்றே இமை மூடி மூச்சை இழுத்து விட அங்கே அணுக்கள் ஒன்றுக்கு ஒன்று இணைப்புறாமல், அலைந்து திரியும் பொருளின் புற வடிவ நிலையைக் கொண்டுள்ள வளியில் இம்மூவரை தவிர ஆறறிவு உயிர் இல்லை என்றே மித்திரனுக்கு அறிவுறுத்த
     ''ஹ்ம் இப்பொழுது...'' என்றே ஆர்வமாக அவளின் வதனம் நோக்க இமைக்கா நொடிகளாக விழி இருக்க முதலில் தலைபாகை அப்புறபடுத்தினால்... அடுத்து மீசை தாடி எடுத்து தலையை மெல்ல அசைத்து விட கோதையின் சிகைகளோ கருப்பு அருவியாக அவளின் இடை வரை படர்ந்தது.
     ஏற்கனவே குண்டலம் அணிந்து இருந்த செவிகள் மார்பில் தொங்கிய ஆபரணங்கள் என்றே இருக்க கைகளில் காப்பு என்றே இருக்க ஏதோவொன்று குறைய கண்டான்.
           தனது வாளினை எடுத்து தனது வலது கட்டை விரலில் கீறியவன் ருத்திரா பிறை நெற்றியில் வைக்க போக ருத்திரா மித்திரனின் விழியிலே தனது மான் விழியினை கலக்க விட்டாள்.
       செஞ்சாந்து பெண்ணின் பிறையில் தீட்டும் ஆண் மகன் அந்த பெண்ணினை தன்னில் பாதியாக தான் ஏற்று வைப்பான். இந்த நிமிடம் ருத்திரா நானும் அப்படி எண்ணி தான் வைக்கின்றேன். ஆனால் இப்படி ஊர் கூடி வைத்து உம்மை சொந்தமாக அறிவிக்கும் திகதி கூடிய விரைவில் வர எண்ணி தற்பொழுது விடை பெறுகின்றேன் கண்ணே... எங்கும் கவனம் கொள்.'' என்றே விரைந்தான்.
         அவன் வெண் புரவி புழுதி பறக்க செல்லும் திசையிலே கவனம் கொண்டவள். மஞ்சரி வந்து உலுக்க செய்ததும் தாடி மீசை தலைப்பாகை என்றே பூட்டி நின்றாள்.
     ''ஏதேது இந்த செஞ்சாந்து அழிப்பதாக எண்ணமில்லையோ? என்றே மஞ்சரி கேலி பேச
       ''தெரியவில்லை மஞ்சரி.... இந்த திலகமே எமக்கு ஏதோ அரண் போல உள்ளதாக உள்ளத்து உணர்வு சொல்கின்றது. சொல்ல இயலா பந்தம் இந்த செஞ்சாந்து மூலமாக புலப்படுகின்றது'' என்றே இவர்கள் பயணத்தை தொடர்ந்தார்கள்.
      மித்திரன் அவனையும் அறியாமல் வைத்த இந்த திலகம் அங்கே ஒருவனுக்கு இவர்கள் செல்லும் இடம் அறியாமல் போக, அங்கே பார்க்கும் மரங்களை எல்லாம் வாள் கொண்டு வெட்டி வீழ்த்தினான்.
     ''மித்திரனே.... எம்மை அறிந்த நீயே எமக்கு இடையூறாக இருப்பதை எம்மால் பொருத்தருள முடியவில்லை...'' என்றே அவனின் இடம் நோக்கி புறப்பட்டான்.
       அங்கே சமுத்ரா இவனின் வசிய கட்டுபாட்டில் உறங்கியவள்
      ''கண்ணே எழுந்திரு....'' என்ற அடுத்த வினாடி அவள் கயல் விழிகள் அங்கும் இங்கும் அலை பாய்ந்து துர்வாவை நோக்க
      ''துர்வா... எம்மை எங்கு அழைத்து வந்தீர்? இங்கு இங்கு...ஏதோ குகையின் மத்தியத்தில் இருப்பது போலல்லவா... தோன்றுகின்றன... எம்மை எப்பொழுது உமது தாயாரிடம் அழைத்து செல்வாய்....'' என்றே தன்னை சுற்றி எதுவும் அறியாமல் சமுத்ரா கேட்க
      ''அழைத்து செல்கின்றேன் அமுதே... மித்திரன் அங்கு தான் இருக்கின்றான்... அவன் உம்மை கண்டால் நமது இல்வாழ்க்கைக்கு ஆபத்து... அது மட்டுமில்லை அவன் உன்னை கவர முயலுவான்'' என்றே மித்திரனின் மீது வேண்டா பழி சுமத்த
      ''தங்கள் உடன் பிறப்பு எப்படி இப்படி மாறக்கூடும் அன்பே... உம்மை போல நல்வனாக இருக்க மாட்டானோ'' என்றே நவில...
     '' சாக்கில் வலம்புரி இடம்புரி சங்கு இருப்பது போல தான் இதுவும்...'' என்றே அணக்க அவளோட இனிதாய் போகும் நேரம் என்றே எண்ணி இருக்க அவளோ
      ''தேவியும்(ருத்திராதேவி) மஞ்சரியும் எம்மை காணாமல் வருந்துவார்கள். எம்மக்களுக்கு யான் இப்படி வந்தது அறிந்தால் எம்மை தூற்றுவார்கள்... இல்லத்தில் இருந்து வந்து எத்தனை திகதி கழிந்து இருக்கும்?'' என்றே கேட்க
     ஒரு திங்கள் தோன்றி மறைந்த திகதிகள் என்றே நவில முடியாது. ''ஒரு வாரமே தானே கண்ணே அதற்கே இப்படி என்னை வினா தொடுத்து அன்பு தொல்லை புரிகின்றாய்... கொஞ்சம் காத்திரு'' என்றே கைகளில் முத்தமிட்டவன். அவளை மீண்டும் விழியை பார்த்து மந்திரம் கூற உறங்க சென்றாள் சமுத்ரா.
            குகையின் மறுபக்கம் மற்றவர்கள் விழிக்கும் அறியாத வாகயில் மறைவாக இருந்த பகுதிக்கு சென்றான் அங்கே மேக வித்தகன் அவனை சுற்றி புழுதி பறக்கும் வளிகள் சுழன்ற வண்ணம் கட்டி போட்டு இருந்தான்.
          மேக வித்தகன் ஏதோ உதட்டு அசைவில் வெறியோடு பேச அதுவோ துர்வனின் செவிகளை சேரவில்லை.. புன்னகைத்தவன் மந்திரம் கூற
     ''மூடனே எமது தமைக்கை எங்கே அடைத்து வைத்து இம்சை புரிகின்றாய்'' என்றே கத்த
     ''நங்கையை இம்சை புரிவேனா அதுவும் எம் மீது மையலில் இருப்பவளை...?'' என்றே ஏளனமாக நகைக்க
      ''உந்தன் நகைப்பு எல்லாம் ருத்திரா வரும் வரை தான் உந்தன் மாயாஜாலாம் எல்லாம் அவளின் முன் எடுபடாது... எம்மை இன்னலுக்குள் ஆளாக்கும் உம்மை அவள் சிரம் கொய்யாமல் உறங்க மாட்டாள் கயவனே...''
     ''அது யார் ருத்திரா...? அவள் என்றே பெண்பால் குறிப்பிடுகின்றாய்... அப்பொழுது எமக்கு பலியிட வைத்து கொள்ள உதவும். நங்கைகள் எல்லாம் வாள் ஏந்த கூடாது நாயகனே... அதுவும் துர்வா சிரம் கொய்ய வேண்டு மென்றால் சில கொள்கைகள் இருக்கின்றன... உமக்கு அது தெரிய வாய்ப்பு இல்லை இன்றே அதை சொல்ல எமக்கு பிடித்தம் இல்லை '' என்றே உற்சாகமாக செப்ப
      ''உம் விதி யான் அறியாமல் போகலாம் ஆனால் எமக்கு ருத்திராவின் குண நலன் எமக்கு தெளிந்த நீரோடையாக தெரியும்... சமுத்ரா மேலே தூசு கண்டாலே அந்த காற்றை நிறுத்த செய்யும் கோதையவள்... உம்மை எல்லாம் அந்த இலை தழை போல மண்ணோடு மண்ணாக மக்க செய்வாள்....'' என்றே சொல்ல
     ''போதும் உந்தன் ருத்திரா புராணம்... இந்த வளி வேலியில் இருந்து முதலில் வெளியே விடுவிக்க சொல் உமது ருத்திராவை... அதன் பிறகு பார்போம் அவள் எம் சிரம் கொள்வாளா...? அல்லது எமது மஞ்சத்தில் ஒருத்தியாய் மாறி எமக்கு பணிவிடை செய்வாளா என்பதை..'' என்றே மீண்டும் பேசும் சக்தியை மேக வித்தகனிடம் இருந்து பெற்று கொண்டு சமுத்ரா இடம் நோக்கி சென்றான். 
          இங்கு மித்திரன் துர்வசந்திரன் எங்கே சென்றிருபானோ என்றே எத்திசை நோக்கி அவனின் தமையன் சுவாசம் இருக்க தேடி அத்திசை விரைந்து செல்ல போனான்.
          மரத்தின் இருக்கும் விழுதில் சில பல விழுதினை வெட்டி அதனால மரத்திலே கிளைகளில் ஊஞ்சல் போல அமைத்து உறங்க சென்றாள். மஞ்சரி உயரத்தில் வேண்டாம் என அங்கே மரத்தின் கிழே ஒருவர் உறங்க அதே போல அமைத்து கொடுத்து மேலே மரத்தின் உச்சியில் போயி நித்திரை கொள்ள ருத்திரன் வைத்த திலகம் மனகண்ணில் தோன்றி மறைய முறுவளித்தவள் இன்று ஏதோ பயமின்றி நித்திரை கொண்டாள்.
          அவள் செல்லும் இடம் நாளை மறுநாள் அடைவாள் என்றே அறியாது.
                    துர்வா அந்த நள்ளிரவில் தன்னை அழிக்கும் சக்தி படைத்த பெண் யார் என்றே பார்க்க செய்தான். ஆனால் அவனால் அந்த யாக குண்டலதில் இருந்து அப்பெண் கண்ணிற்கு புலப்படவில்லை...
                மேகவித்தகன் பேசியவை செவியில் விழுந்தாலும் அவன் எளிதில் இதை உதாசீனம் செய்ய வில்லை ஏன் என்றால் இவன் பெற போகும் சக்திக்காக பலியிட செய்யும் நங்கையில் ஒருத்தியால் இவனுக்கு மரணம் நெருமே தவிர மற்றவர்களால் அல்ல...
                அதிலும் அந்த நங்கை பந்ததில் சேரும் கண்ணியே... அதனாலே தன்னை விரும்பும் நங்கையை தான் துர்வா வசம் செய்வது அப்பொழுது தான் அவனின் சொல் இணங்க பலியிடும் வரை கட்டுபாட்டில் இருக்க வைக்க முடியும் ஒரு முறை வசியத்து விட்டால் அவன் வெற்றி பெற்றதே தான்...
சமுத்ரா தான் அதில் முடிவான இறுதி பலி... அதனாலே அவளை இந்நேரம் வரை விட்டு வைத்து இருக்கின்றான்.
                    மேகவித்தகன் சமுத்ரா தேடி வர அவளை கண்டறிந்தமையால் அவனையும் பிடித்து வைத்து உள்ளான். பலியிட போகும் உறவில் யாரும் நெருங்கிய பந்ததினை மரணித்து இருக்க கூடாது அதற்காக வித்தகன் இன்னும் காற்றில் கட்டி இருக்கின்றான். பேசும் சக்தி பிடுங்கி...
                         அவன் அழிய செய்யும் அந்த சக்தி யார் என்றே பார்க்க அவனுக்கு தெளிவாக தெரியாது போனது. அதற்கு காரணம் மித்திரன் திலகமிட்ட செஞ்சாந்தே... அவனின் ரத்தம் இவனுக்கு உண்மை உரைக்க செய்யவில்லை. 
      அங்கே மித்திரனின் சக்தி தடுக்கின்றது

     சேய்-குழந்தைகள் 
      வளி-காற்று (வளி மண்டலம் காற்று மண்டலம் என்று படிச்சு இருப்பிங்க)
      கோதை-பெண் 
       செஞ்சாந்து , திலகம் - குங்கும பொட்டு 
      நவில-சொல்ல 
       தூற்றுவார்கள்-திட்டுவார்கள்
       நகைப்பு-சிரிப்பு 
       இன்னல்(லுக்குள்)-துன்பம்
      பிடித்தம்-விருப்பம்

-விழியும் வாளும் சந்திக்கும்.

-பிரவீணா தங்கராஜ் 

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1