தீவிகை அவள் வரையனல் அவன்-12


தீவிகை அவள்🪔 வரையனல் அவன்🔥-12

    மனமெங்கும் ஆரவ் சூழ்ந்து இருக்க முகமெங்கும் வெட்கங்கள் குடியேற, தனியுலகத்தில் சஞ்சரித்தாள் சம்யுக்தா.

    ஆரவின் மீது கை கோர்த்து பார்த்த அந்த நொடிகளை எண்ணி எண்ணி இரசித்தவளுக்கு தன்னை கண்கானிக்கும் தந்தை வந்து சென்ற சுவடை அவள் அறியவில்லை.

        சுவாமிநாதன் இம்முறை நேரிடையாக அவனிடம் மோதிடலாமா? என்று யோசிக்க, ஆரவ் பணிபுரிவதை அறிந்து அங்கு சென்று நாளை மாலை சந்திக்க எண்ணினார்.

      அடுத்த நாள் காலை, ஆரவ் என்றுமில்லாமல் அதிகமாகவே வேலை விஷயமாக பேப்பரில் வரும் செய்தியை தேடி பார்த்தான்.

    நேற்றைய சம்யுக்தா கைபற்றிய கணம் அவளின் மென்கைகள் தொட்டகணம், இவளை மணக்க நீ இன்னமும் நல்ல உத்தியோகம் வாய்ப்பை பெற்றிருக்கணும் என்று மனச்சாட்சி சொன்னது.

      சுபாங்கினி கொடுத்த டீயை பருகியவாறு பார்த்தவன், வட்டத்தில் சில கம்பெனிகள் வந்து நிற்க, இன்று செல்ல நேரம் பார்த்தான்.

       காலேஜில் சென்றவன் முதல் இரு ப்ரியட் அட்டன் செய்து அதன் பின் கிளம்பி, அவனை தேடிய சம்யுக்தாவுக்கு சந்துரு தான் பதிலளித்தான்.

    "அவன் இப்பவே வேற வேலைக்கு தேடறான் மா." என்றுரைத்த பதிலில் சம்யுவிற்கு தன்னால் ஆரவ் இப்பொழுதிலிருந்தே பொறுப்பாக மாறிட கட்டாயப்படுத்தப் படுகின்றானா? என்று அயர்ந்தாள்.

       முன்பு அடிக்கடி மரத்திலும், சுவர் திண்டிலும் சாய்ந்து பொழுதை போக்கியவன் தன்னொருவளின் காதலில் இந்த வயதின் சின்ன சின்ன ஆசையை நேரத்தை இழுப்பதாக தோன்றியது.

      இங்கு தன் நண்பனின் மைந்தனை மணம் முடிக்க பேச வந்த இடத்தில் ஆரவ் இருக்க, நண்பனிடமே கேட்டான்.

   பணிக்கு ஆட்கள் எடுப்பதை கூறவும், வெளியே வந்தவன் ஆரவிடம் நிற்க, ஆரவ் யாரென்று அறியாமல் இருந்தாலும் எழுந்து நின்றான்.

     "நான் வந்தா எழுந்து நிற்கணும் என்ற அளவில் இருக்கற உன் தராதரத்தில் எப்படி டா என் மகளை விரும்ப மட்டும் தோன்றுது. என்ன பார்க்கற புரியலை...

     காதலிக்கற வேடம் போட்டு நடிக்கிற உங்களை மாதிரி பஞ்ச பரதேசிக்கு தெரிந்து இருக்குமே நான் யாருனு? " என்றதும்

      "யுக்தா அப்பா... சுவாமிநாதன்..." என்று தடுமாறிய அடுத்த கணம்,

     "சார் உங்களை தான் சந்திக்கணும்னு ரொம்ப நாள் காத்திருந்தேன். அது எப்படி சார் வீட்டை காலி பண்ண வைத்து, எங்க அம்மா வேலை பார்க்கிற இடத்தில் அவப்பெயர் வரவழைத்து, என்னை கண்கானிக்க சாரி சாரி உங்க பெண்ணை கண்கானிக்க ஆள் வைத்து நிறைய பண்ணறீங்க.

     பாருங்க டைய்லி என்னடா யுக்தா பின்னால ஒருத்தன் வர்றான் காதல் அது இதுனு வந்து நிற்பானோ? இரண்டு தட்டு தட்ட பார்த்தா உங்க ஆளுயென்று தெரிஞ்சது. சரி யுக்தாவுக்கு ஒரு பாடிகார்ட் இருக்கட்டும் தோன்றியது.

    என்ன உங்களை தான் பார்க்க முடியலை. என் பிரெண்ட் சந்துரு சொன்னான். நம்பியார் வேலை பார்க்கறதை யுக்தா காதில் போட்டு வை டா என்றான்.

    எனக்கு தான் உங்களிடம் ஒரு வேலையில் சேர்த்துவிட்டு சின்னதா ஒரு நிமிர்வோட சந்திக்க நினைத்தேன். பரவாயில்லை... குள்ள நரி தந்திரம் செய்யற உங்களை எப்ப பார்த்தா என்ன மாமா?" என்று முடித்தான்.

     சுவாமிநாதன் இவனுக்கு எல்லாம் தெரிந்து வைத்திருக்கின்றானே என்று அதிர்ந்து பார்க்க,

    "அது அப்படி தான். நானா எல்லாம் கண்டுபிடிக்கலை. தானா தகவல் கசிந்தது. இருந்தும் உங்களை வந்து கேட்கலை... ஏன் யுக்தாவிடமும் எதையும் சொல்லலை. பயப்பட வேண்டாம். இப்பவே சொல்லி காலேஜ் முதல் வருடத்திலே காதலுக்கு தேர்வு எழுதணுமா என்ன? அதான் பொறுமையா விட்டுவிட்டேன்." என்று பேசவும்,

     "உன்னை மாதிரி ஒருத்தருக்கு எப்படி பெண் கட்டி தருவாங்க. பணக்கார பெண் என்றால் எங்கிருந்து தான் வருவீங்க? மாத வாடகை, வருடத்துக்கு நாலு டிரஸ், தினசரி பேப்பர் வாங்க கூட யோசிக்கற ஆட்கள்." அடுக்கி கொண்டே போக, கையை வைத்து நிறுத்த சொன்னவன்.

     "இது உங்க பிரெண்ட் ஆபிஸ். எதுக்கு இங்க பேச்சு. வாங்க வெளியே போய் பேசிக்கலாம். ஏன்னா யார் கண்டா இங்க இரைக்கறவனுக்கு கூட யுக்தாவை மணமுடிக்க நீங்க எண்ணியிருக்கலாம். நான் நீங்க பேச, யார் என்ன என்று கேள்வி பிறக்கும். அப்பறம் காதல் பற்றி பேச, நீங்களே விளம்பரம் பண்ணிட்ட மாதிரி ஆகிடும்." என்று ஆரவ் சிரிக்க,

     "அவ படிப்புக்கு பாதகம் வந்திடும் என்று தான் பார்க்கறேன். இல்லை உன்னை மாதிரி ஆட்களை என்றைக்கோ எட்டி நிறுத்தியிருப்பேன்." என்றான் சுவாமிநாதன்.

     "பெற்றவர்கள் எதிர்பார்க்கிற நல்ல வேலை,செட்டில்டு லைப்போட உங்களை வந்து சந்திச்சு யுக்தாவை பெண் கேட்பேன். இதே நிலையில் வந்து நிற்க மாட்டேன். அதனால எங்க காதலை கொஞ்சம் யோசிங்க. யுக்தா அப்பா நல்லவரா இருப்பார் என்று நம்பறேன். அதை கெடுத்துக்காதீங்க. அதை மீறி ஏதாவது பண்ண ட்ரை பண்ணாலும் எனக்கு கவலை இல்லை. என்னை எந்த நிலையிலும் ஏற்றுக்க யுக்தா ரெடி. அவ பணத்தை பார்க்கலை வசதியையும் பார்க்கலை. என் அன்பை மட்டும் எதிர்பார்க்கிறவ" என்று இன்டர்வியூல் கலந்து கொள்ளாமல் சென்றான்.

   சுவாமிநாதனுக்கு இரத்தழுத்தம் அதிகமாக போனது ஆச்சரியம். அந்தளவு கொதிப்பில் இருந்தார்.

    சந்துரு மாலை வந்து கேட்க, "இன்டர்வியூ அட்டன் பண்ணலை என்று நடந்தவையை சொல்லி அப்படியே இன்டர்வியூ போனாலும் செலக்ட் ஆக மாட்டேன் யுக்தா அப்பா தடுத்துடுவார்" என்று இருவரும் மாடியில் கதை அளக்க, சுபாங்கினி இரு கப்பில் டீ எடுத்து வந்து, கொடுத்து விட்டு அகன்றார்.

    சுபாங்கினி படியில் இறங்கும் பொழுது குழப்பமாகவே இறங்கினார். ஆரவ் போக்கில் பேச்சில் ஏதோ புரிபடாது இருந்தார்.

   ஆனால் நேரிடையாக கேட்க மனமில்லை சுபாங்கினிக்கு.

      சுமூகமாக நாட்கள் கடக்க முதல் வருடம் கடந்தது.

    ஆரவி மாஸ்டர் டிகிரியில் இரண்டாம் வருடமும். சம்யுக்தா முதல் வருடமும் முடிக்க, விடுமுறையில் கடந்தனர்.

ஆரவிற்கு நல்ல இடத்தில் மனிதனை எடைபோடும் ஒருவரிடம் பணிக்கு அமர்ந்தான். பார்ட் டைம்மாக தான். இருந்தும் போதிய அளவு வருமானம் வந்திட, சுபாங்கினியும் நர்ஸ் பணியை மீண்டும் தொடர்ந்து செய்ய அழகாக சென்றது.

     அன்று காதலர் தினம். எப்பவும் காதலர் தினத்தில் இதுவும் ஒரு நாள் என்று கடந்திடும் ஆரவிற்கு. மனதில் முதல் முறை யுக்தாவிற்கு என்ன வாங்க என்று யோதித்தவனால் நகை உடை தவிர சிந்தனை செல்லவில்லை. அதனால் காட்டன் பட்டு எடுத்து கொண்டு அவளை காண சென்றான்.

    ஆரவ் இன்று பார்த்து அவனாக வெளியே செல்ல கூப்பிட, ஏற்கனவே காதலிப்பது அறிந்த சுவாமிநாதன் இன்று கவனிக்க செய்யாது இருப்பாரா. காலையிலே நெஞ்சு வலியென்று மகளை தன்னருகே அழைத்து மருத்துவமனையிலே வைத்துக் கொண்டார்.

    ஆரவ் கூப்பிட்டும் போக இயலாத நிலையில் தவித்தாள் யுக்தா.

     ஆரவிடம் தந்தை நிலைமை கூறி தவிக்க, ஆரவிற்கு புரிந்து போனது. இதுவும் சுவாமிநாதன் நாடகமென்று. ஆனால் யுக்தாவிடம் இம்முறையும் எதுவும் சொல்லாமல் தந்தையை பார்த்துக்கோ என்று வைத்து விட்டான்.

    இரு தினம் கடக்க, சுவாமிநாதனோடு வீட்டுக்கு வந்தாள் யுக்தா. தந்தை தற்போது வீட்டில் ஓய்வு எடுக்க வைத்த பின் கல்லூரி கிளம்பினாள்.

     சுவாமிநாதன் எப்படியோ சந்திக்காமல் சதி செய்த திருப்தியில் நிம்மதி கொண்டார்.

   ஆனால் கல்லூரி வந்த அடுத்த நிமிடம் ஆரவ் கையை பற்றி அவன் பாட்டிற்கு அழைத்து செல்ல, கேண்டீனில் மரத்தடியில் பூக்கள் உதிர, அந்த டேபிள் முன் அந்த பெட்டியை நீட்டினான்.

     "காதலர் தினத்தன்று கொடுக்க நினைத்தேன். பட் கொடுக்கற சூழ்நிலை அமையலை. அன்றே கொடுத்திருந்தா கட்டிட்டு வந்து இருப்ப" என்று ஆரவ் பேச,

     கேண்டீனுக்கு வந்தவர்கள் திரும்பி திரும்பி பார்க்க, யுக்தாவோ மெல்ல குனிந்து,

    "எல்லாரும் நம்மளை தான் பார்க்கறாங்க." என்றதும் ஆரவ் சுற்றி பார்த்தான்.

     மற்றவர்கள் உடனே திசை திருப்பி கொண்டு மாற்றிட, ஆரவிற்கு புன்னகை உதிர்த்தது.   

     "நம்ம முதல் முறை சேர்ந்து பேசறோம் அதான் விஷயம்." என்று கூற,

     "ஓ..." என்று சேலையை பார்த்தவள் அதனை தடவி கொடுக்க,

    "எப்ப கட்டிட்டு வருவ?" என்றான். அவன் பார்வையில் ஏக்கம் அப்பட்டமாக தெரிய,

      "நாளை நாளை மறுநாள் லீவ் ஆரவ். மண்டே தான் கட்டணும்" என்றதும் முகம் சற்றே ஒளியிழக்க,

     "நான் வேண்டுமென்றால் யோகிதா வீட்டுக்கு போய் பிரஸ் மாற்றிட்டு வர்றவா? அவ வீடு பக்கத்தில் தான்." என்று யுக்தா பதில் தர, "பச் வேண்டாம் யுக்தா. ஏன் எதுக்கு காரணம் சொல்லணும்" என்றான். 

    "அய்யோ... யோகி இன்னிக்கு லீவ். அவ அப்பா அம்மாவும் இல்லையாம். அதனால கேள்வி வராது." என்றதும் ஆரவ் யோசித்தவன்.

      "சரி வா" என்று கிளம்பினான்.
    
    ஆட்டோ பிடித்து ஆரவ் அழைத்து செல்ல, "ஆரவ் யோகிதா வீடு காலேஜ் பக்கத்தில இரண்டு ஸ்டாப் தள்ளி.... நாம எங்க போறோம்" என்று கேட்க,

      "கொஞ்சம் பொறு சொல்லறேன்." என்று அவனின் வீட்டுக்கு அழைத்து வந்தான்.

     இது உ... நம்ம வீடா ஆரவ்" என்று மாற்றிட உன் வீடா என்று கேட்க வந்தவள் நம்ம வீடா என்று மாற்றியதில் உவகை கொண்டான்.

    "ஆமா அம்மா தங்கை இல்லை. வைஷ்ணவி காலேஜ் போயிருக்கா, அம்மா வேலைக்கு போயிருக்காங்க. அதான்." என்றவன் முதலில் நீரை கொடுத்து அடுத்து அடுப்பை பற்ற வைத்து பாலை வைத்தான். "நீ இங்கயே மாற்றிட்டு காட்டு. நான் வெயிட் பண்ணறேன்." என்று அறையை திறந்து கையை நீட்டினான்.

     ஹாலை சுற்றி சுற்றி பார்த்தவள் ஆரவ் அறையை கண்டு கதவை தாழிட்டு மாற்றினாள்.

     அவனின் ஸ்டடி டேபிளில் இருந்த ஆரவ் படத்தை எடுத்து பார்க்க, "யுக்தா... காபி ரெடி. இன்னும் எவ்வளவு நேரமாகும்?" என்று குரல் தரவும்.
  
     "ஆரவ் ஒன் செகண்ட்" என்று ஆரவ் சீப்பை எடுத்து தலையை ஒரு முறை வாரி விட்டு அப்படியே வைத்து கதவை திறக்க, அசந்து தான் போனான்.

     எளிமையான காட்டன் பட்டில் எழிலோவியமாக காட்சி தந்தவளை அள்ளி கொள்ளும் வேகம் இருந்தும் கட்டுப்படுத்தி, காபியை நீட்டினான்.

      "காபி போட தெரியுமா ஆரவ். எனக்கு எதுவுமே தெரியாது. எல்லாம் வேலைக்காரங்க பார்ததுப்பாங்க." என்று முடிக்க சிரித்து கொண்டே,

     "நம்ம வீட்டுக்கு வந்ததும் நீ கற்றுப்ப.  அம்மா நல்லா குக் பண்ணுவாங்க. வைஷ்ணவிக்கு கற்று தருவது போல கற்று கொடுப்பாங்க" என்றவன் இதான் வைஷ்ணவி தங்கை. இது அம்மா சுபாங்கினி" என்று போட்டோவில் காட்ட,

    "நீ இந்த போட்டோவில் மீசை வைக்கலையா ஆரவ்" என்று சிரிக்க,

     "அது அப்போ மாடல். நடுநடுவுல மாறும். " என்று கூறியபடி மீசையை தடவி சிரித்தான்.

     யுக்தா அவனை போலவே மீசையில் கை வைத்து முறுக்கி இழுத்து விடவும், ஆரவ் அவளின் தாடை பற்றி அருகே வரவும் மோன நிலை உண்டாக கதவு காற்றில் மெல்ல அசைந்தது.

     அதனை பார்த்து அவளை விடுவித்து கதவை சாற்ற போனான்.

-வரையனல் தனிய தீவிகை ஒளிரும். 

- பிரவீணா தங்கராஜ்
  
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

பிளாக்ல கமெம்ட்ஸ் காணோம் சரி யாரும் படிக்கலை போல கொஞ்சம் மெதுவாக போடலாம்னு விட்டுவிட்டேன். நாவல் எக்ஸ்பிரஸ் கதையான *ஓ மை பட்டபிளை*  டைப் பண்ண போயிட்டேன். நீங்க கமெண்ட்ஸ் போடுங்க உற்சாகமா டைப் பண்ணி போஸ்ட் பண்ணறேன்.🙃😝

  

     



    

Comments

  1. Naan daily theduven ud pottu naan miss panniteno nu😔

    ReplyDelete
    Replies
    1. Sorry.... yarum ketkalai endrathum relax ah vituten. 🥺

      Delete
  2. Sis dailyum nan check pannuven.. Weekly once nu nenachi vittutn. Story nice.. Mundinja alavu sekkiram post panunga..

    ReplyDelete
    Replies
    1. ஓகே சிஸ் வேகமாக டைப் பண்ண ஆரம்பிக்கறேன் 😊

      Delete
  3. Paathu sikrama next ud podunga sis

    ReplyDelete
  4. கதை அருமை.... சீக்கிரம் அப் டேட் போடுங்க

    ReplyDelete
  5. தினமும் பதிவு வந்திருக்கிறதானு பார்த்து கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  6. அடுத்த பதிவு எப்போ?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு