பஞ்ச தந்திரம்-1

 



தந்திரம்-1

இடம் : மெரீனா கடற்கரை

     தன்னந்தனியா அங்குமிங்கும் மக்களை பார்த்து கொண்டிருந்தாள் அவள். இந்த பரந்த கடற்கரையில் இவளை போல தனியாக யாரும் கடற்கரை ரசிக்க வந்திருப்பார்களா என்று கணக்கெடுத்தால் நிச்சயம் புள்ளிவிவரப்படி பூஜ்ஜியமாக காட்டலாம். ஆம் அவள் வயது அப்படி.
    ஆறு வயதானவள் தனியாக கடற்கரைக்கு வந்து உட்கார்ந்து விட்டாள்.

   அவள் வயதிற்கு மணலில் வீடுகட்டி மகிழலாம். இல்லையென்றால் சிப்பி பொறுக்கி குதுகலிக்கலாம், இரண்டுமில்லையென்றால் கடற்கரை அலையில் கால் நனைத்து  நுரையோடு விளையாடி சிரிக்கலாம்.

   எதையும் செய்யாமல் இந்த கடல் நீரில் மூழ்கினால் எப்படி மூச்சடைக்கும். மேலே எழும்பால் நீருக்குள் மூழ்கி இழுத்து சென்று கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் போகுமோ என யோசித்துக் கொண்டிருந்தாள்.

   இந்த வயதில் இந்த எண்ணம் கூடாது தான். ஆனால் சிந்தித்திருந்தாள் குழந்தையவள்.

     அருகேயிருந்த பெண் மெலிதாய் சிரிக்க முகத்தைத் திருப்பிக் கொண்டாள் குழந்தை(சிறுமி) தனுஜா.

    ஏதோவொரு ஆர்வம் மேலோங்க தனுஜா மெதுவாய் பக்கவாட்டு பக்கம் விழியை செலுத்த மாடர்ன் யுவதியாக அமர்ந்திருந்தாள் ஒரு பெண்.

    கண்ணில் காஜோல் போட்டிருந்தாள் அது அவளை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டிய அழகை, அவளுக்கு ஈட்டியது. தோள்வரை புரண்ட கூந்தல் அலைப்பாய்ந்தது. அதுவும் இந்த புயலில் வீசிய பேரலைகள் அவளின் சிகையை முகமும் நெற்றியிலும் கொஞ்சியபடி இருந்தது.

     கடற்கரையில் காதலனோடு காலார இவள் நடக்க அந்த மணற்பரப்புகள் சர்க்கரையாக மாறி தாங்க காத்திருக்கும் இளமையும் அழகிற்கும் சொந்தமானவள்.

     *Nainika* நைனிகா என்ற டாட்டூவை இடது கையில் மணிக்கட்டிற்கு கீழே குத்தியிருந்தாள்.

    தனுஜா அதை தான் விநோதமாக பார்த்தாள்.
   நைனிகா சிரிக்க தனுஜா சட்டென திரும்பி கொண்டாள். நைனிகாவோ தனுஜாவின் கியூட் திருப்பலில் தன்னை மறந்து சிரித்தாள்.

     குழந்தையாவே இருந்திருக்கலாம் என்று ஏக்கமாய் தனுஜாவையே நோக்கினாள்.

    இந்தயிடம் விட்டு எப்போது தனுஜா செல்வாளென காத்திருந்தாள். நைனிகாவிற்கு அவசரமாய் தற்போது உயிர் நீத்திட வேண்டும். அவளுக்கு இந்த பூமியில் வாழ பிடிக்கவில்லை. இந்த வயதில் என்றால் காதல் காரணமாக இருக்குமென்று உங்கள் யூகம் இருந்தால் அதுவும் ஒரு காரணமே. ஆனால் அது மட்டும் காரணமல்ல...

      தனுஜா நைனிகாவை தாண்டி சற்று தள்ளி மணலில் விளையாடிய பாப் கட்டில் இருந்த பெண்ணை கண்டாள்.  ஒரு பெரிய சாக்லேட் கவரை கையில் வைத்து தட்டிக்கொண்டிருந்தவள், தனுஜாவை பார்த்து வேண்டுமா என்று கேட்க தனுஜா ஆசையாய் சாக்லேட் கவரை பார்வையால் வருடினாள்.

   அந்த பாப்கட் பெண்ணோ தனது ரஞ்சனா என்ற கீசெயின் தொங்கிய கைப்பையில் வைத்து 'கண்ணை நோண்டிடுவேன் திரும்பு' என்பது போல விளையாடினாள். நிச்சயம் இவள் தான் ரஞ்சனாவாக இருக்க வேண்டும்.

   தனுஜாவுக்கு கவலையாய் இடது பக்கம் திரும்பினாள்.

     தனுஜாவையே பார்த்தபடி ஒரு சேலையணிந்த பெண் கண்ணீர் வடித்தபடி இருக்க தனுஜா பார்க்கவும் விழிநீர்படலத்தை துடைத்தாள்.

    வட்ட முகமும் சின்ன பொட்டும், இடைவரை வளர்ந்த கூந்தலில், மல்லிகைப்பூ இன்னமும் வாசம் வீசியது.

    தனது மாங்கல்யத்தை விட வேதாந்த் திரிஷ்யா என்று இதயவடிவ செயினில் பெயரை தாங்கிய அப்பெண்ணவள் மீண்டும் தனுஜாவை தான் பார்வையிட்டாள்.

    சுற்றிமுற்றி பார்த்துவிட்டு "அம்மா அப்பா எங்கே? ஏன் தனியா இருக்க?" என்று கேட்டாள் திரிஷ்யா. தனுஜாவோ மீண்டும் தனது இரு கைகளையும் குறுக்கி கொண்டு குனிந்தாள்.

    ஏன் எல்லாரும் என்னையே பார்க்கறாங்க? ஏன் சிரிக்கறாங்க? இங்கயிருந்து போக மாட்டாங்களா? என்ற கேள்வியை வைத்து திரும்பினாள்.

     ஒரு முதிய பெண்மணி மெதுவாய் தன்னிலை மறந்து கடற்கரையை நோக்கி மெதுவாக கடலை வெறித்து நடந்தார். நிச்சயம் 60 65 வயதுக்கு மேல் இருக்கும். நரைமுடி அதிகப்படியாகவே இருந்தது. சின்னதாய் பார்டர் வைத்த பட்டு சேலை அணிந்திருக்க நிச்சயம் நன்றாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் பெண்மணி என்று கூறிடலாம். ஆனால் முகமோ வாடியபடி, வாழ்க்கையை வெறுத்தபடி இருந்தது.

     அம்முதியவளோ கடலலையில் கால் வைத்து கடலுக்குள் நடந்தார். தனுஜா கண்களை விரித்து அந்த பாட்டியை பிடிக்க ஓடினாள்.

     தனுஜாவையே அடிக்கடி பார்த்திருந்த திரிஷ்யா, ரஞ்சனா நைனிகா மூவரும் குழந்தை கடலுக்குள் ஓடவும் அவளின் செய்கைக்கு காரணம் பார்த்து அவர்களும் ஓடினார்கள்.

     அந்த முதிய பெண்மணியை, தனுஜாவின் பிஞ்சு கைகள் இழுக்கவும் தன்னிலை உணர ஆரம்பித்தார் அம்முதியவள்.

      தனுஜா நீரில் அடித்து செல்ல போகும் தருணம் திரிஷ்யா அவளை தூக்கிவிட்டாள்.

    ரஞ்சனாவோ "ஓ மை காட் என்ன பண்ணறிங்கமா." என்று அந்த முதிய பெண்மணியை இழுத்து வந்து கடற்கரை மணலில் அமர வைத்தனர்.

      நைனிகா நீரை கொடுக்க வாங்கி பருகினார் அம்முதியவள்.

    "டிவில புயல் என்று சொல்லியும் ஏன்மா வெளியே வந்திங்க. வந்தது வந்திங்க... கடலலை அரக்கனாட்டம் தண்ணியை அடிச்சி வீசுது. ஏன் இப்படி கடல்ல நடந்திங்க?" என்று ரஞ்சனா திட்டினாள்.

    "சாகலாம்னு இருக்கற எனக்கு கடலலை என்ன புயலென்னமா?" என்றதும் திரிஷ்யா நைனிகா தனுஜா மூவருமே அதிர்ந்தார்கள். ஏனென்றால் அம்மூவருமே சாக வந்த மேதாவிகள் தான்.

     ஆனாலும் இந்த சூழ்நிலையில் 'வாங்க சாகலாமென்று' ஜோடி போட மனமில்லை. ஏனோ தடுத்து பேசிட ஆறுதல் அளிக்க முடிவெடுத்தார்கள்.

    "ஏன்பாட்டி சாக முடிவெடுத்திங்க. இறப்பை தேடி நாம போகக்கூடாது. அதுவா நம்மளை தேடி வரும். என்ன கஷ்டமிருந்தாலும் கடந்து போகும்." என்றாள் நைனிகா.

    "சின்ன பொண்ணு சொல்லறது சரி தான். இந்த வயசுல ஏன்மா இந்த முடிவு." என்று முகத்தை சேலையால் துடைத்தாள் திரிஷ்யா.

      தனுஜாவோ தன் கழுத்துவரை வந்த நீரை கண்டு பயந்து பாட்டி கையை இறுக்கமாய் பிடித்திருந்தாள். பயத்தோடு கண்ணை கண்ணை உருட்டவும் ஆரம்பித்தாள்.

    "இங்க பாருங்க குழந்தை பயப்படுது. பாப்பா யாரு நீ? உங்க பாட்டியா?" என்று கேட்டாள் ரஞ்சனா.

    "நான்... நான்... தனியா வந்தேன். நா.. நானும்.. சாக வந்தேன்." என்று தனுஜா சொல்லி முடித்தாள். இதுவரை ஏன் பிழைத்தோமென்ற விரக்தியில் இருந்த முதியவள் சிறு குழந்தை பேசவும் சப்பென்ற அறையை விடுத்தார்.

    "என்ன பேச்சு பேசற. முளைச்சி மூனு இலை விடலை. சாகணுமாம் சாகணும்." என்று அடித்துவிட்டு அணைத்து கொண்டார்.

     "உண்மையை சொல்லப் போனா நானுமே சாக தான் வந்தேன்." என்று திரிஷ்யா கூறவும், நைனிகாவோ ''வாட் எ கோஇன்சிடெண்ட்... நானுமே அதுக்கு தான் வந்தேன். என்னடா சாகலாம்னா யாரும் நகர மாட்டறாங்களே இருந்தேன்." என்று கூறவும் ரஞ்சனாவோ "ஓ... ஓ... குழந்தையை வச்சிட்டு என்ன பேசறிங்க. ஆளாளுக்கு... குட்டிம்மா.. உன் பெயர் என்ன உங்கப்பா அம்மா யாரு.?" என்று கேட்டாள் திரிஷ்யா.

    "அப்பா.. தெரியாது. அம்மா..அம்மா.." என்று திணறவும் "ஓகே ஓகே அழாதே... யாருமில்லையா. நீ அப்பவே இந்த சாக்லேட் ஆசையா பார்த்த இந்தா வச்சிக்கோ அழக்கூடாது." என்று சமாதானம் செய்தாள் ரஞ்சனா.

   சாக்லேட்டை வாங்கி கொண்டு "தேங்க்யூ" என்றாள் தனுஜா.

    ஐவரும் அமைதியாக நின்றனர்.

   "உங்கப்பெயர் என்னம்மா?" என்று ரஞ்சனா முதியவளிடம் கேட்க, "மஞ்சரி" என்றார் அவர்.

     "ஹாய் ஐ அம் நைனிகா" என்றாள் நைனிகா கை நீட்டி, "ஐ அம் ரஞ்சனா" என்றாள் பாப்கட் அணிந்தவள்.

   "என் பெயர்... திரிஷ்யா." என்று தன்னையும் அறிமுகப்படுத்தி கொண்டாள் திரிஷ்யா. கூடவே குழந்தையை கன்னம் பற்றி உங்க பெயர் என்ன?" என்று கொஞ்சினாள்.

   "தனுஜா." என்று கூறி சாக்லேட் கவரை பிரித்தாள். "தனுஜா.. தனு" என்று தரிஷ்யா கூறி பார்த்தாள்.

  மீண்டும் அமைதியானது. ஆர்ப்பரிக்கும் கடலலையும் சூறாவளி காற்றுமாய் சூழ்ந்தது.

     "ஓகே.. சாகணும் முடிவெடுத்துட்டோம். இங்க இன்னிக்கு வேண்டாம். ஒருத்தரை பற்றி ஒருத்தர் தெரிந்துக்கிட்டு வலியில்லாம நிம்மதியா பாய்ஸன் வாங்கி குடிப்போம். அதுவரை நம்மை பற்றி நாம் அறிவோமே?" என்று ரஞ்சனா திட்டம் வகுக்கவும் மற்றவர்களுக்கும் முதியவர் மஞ்சரி இறக்க போனதை கண்டு உதறலெடுத்து இன்றைய இறப்பை ஒத்தி வைக்க முடிவெடுத்தனர்.

    "ரொம்ப புயல் காத்து அடிக்குது. இங்கிருந்து கிளம்பலாம்." என்று நைனிகா கூற மற்றவர்களோ எங்கு செல்வதென்று தவித்தனர்.

     "அட நான் தான் கேர்ஆப் பிளாட்பார்ம் பார்த்தா... நீங்களும் ஸ்டக் ஆகறிங்க. எங்கயும் போக பிடிக்கலையா?" என்று ரஞ்சனா கேட்டதும் திரிஷ்யா ஆமென்று தலையாட்டினாள்.

     "ம்ம்... இட்ஸ் ஓகே என்னோட வாங்க. நான் இன்னிக்கு ஸ்டே பண்ண ஐடியா தர்றேன்." என்று அழைத்தாள் நைனிகா.

    தனுஜாவின் கைகளை  நைனிகா பிடித்து கூப்பிட, ரஞ்சனா திரிஷ்யா மஞ்சரி பின் தொடர்ந்தார்கள்.

      ஐவரும் ஒன்றாக தங்கள் மரணத்தை ஒத்தி வைத்து இன்று வாழ முடிவெடுத்து கடற்மணலிலிருந்து உதறி நடந்தார்கள்.

   இந்த மணலில் எத்தனை விதமான கால்கள் பதிந்து மீண்டதோ. அதில் இவர்களின் மனசஞ்சலமும் துகளாய் பறந்து கடந்திட முயன்றனர்.

   சென்னை புயலை போல இவர்களின் வாழ்வில் நடந்த புயலை அறிய பஞ்சதந்திரங்களை அறிவோம்.

-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.

5பஞ்ச -தந்திரம்👇

த(Tha)-தனுஜா (Thanuja-6)
ந்(N)-நைனிகா (Nainika-18)
தி(Dhi)-திரிஷ்யா (Dhirishiya-27)
ர(Ra)- ரஞ்சனா (Ranjana-35)
ம்(M)- மஞ்சரி (Manjari-69)

   

     

     

   
      

 

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

 பஞ்ச தந்திரம் (five knots will be untied ) 



5பஞ்ச -தந்திரம்👇

த(Tha)-தனுஜா (Thanuja-6)
ந்(N)-நைனிகா (Nainika-18)
தி(Dhi)-திரிஷ்யா (Dhirishiya-27)
ர(Ra)- ரஞ்சனா (Ranjana-35)
ம்(M)- மஞ்சரி (Manjari-69)


பஞ்ச தந்திரம்  கதையை வாசிக்க கீழே உள்ள அத்தியாயத்தினை சொடுக்கவும்.
👇

















அதலக்காய் பொரியல்

 

அதலக்காய் பொரியல்

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் ஒரு சிறு பவுல் அளவிற்கு

நல்லெண்ணெய் தேவையான அளவு

கடுகு ஒரு ஸ்பூன்

உளுந்து ஒரு ஸ்பூன்


காய்ந்த மிளகாய் வற்றல்: 2

 
கறிவேப்பிலை கொஞ்சம்


அதலக்காய் கால்கிலோ

 
உப்பு தேவையான அளவு


மஞ்சள் தூள் சின்ன ஸ்பூன் அளவு


சீரகம் ஒரு ஸ்பூன்


செய்முறை:

   எண்ணெய் கடாயில் சூடான பிறகு கடுகு உளுந்து கருவேப்பில்லை மற்றும் நறுக்கி வைத்த சின்ன வெங்காயம் ஒன்றன்பின் ஒன்றாக நன்றாக வதக்கி விட்டு, காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு மஞ்சள் தூள் சேர்த்து, அதலக்காயையும் வதக்க வேண்டும். பின்னர் உப்பு சேர்த்து நன்றாக வதங்கி சாப்பிடும் பக்குவம் வந்ததும் சீரகம் ஒரு ஸ்பூன் சேர்த்து மூடி விடவும்.

தேவையிருப்பின் சிலர் வேக வைத்த துவரம்பருப்பை ஒரு குழம்பு கரண்டி அளவில் சேர்த்து கசப்பு சுவையை மட்டுப்படுத்த பார்ப்பார்.

 சிலர் தேங்காய் துருவி சேர்த்து கொள்வார்கள். 

பகாற்காய் விரும்புவோர் இதை விரும்பி உண்பார்கள். சுகருக்கு நல்லது😉 எங்க ஐய்யமைக்கு ரொம்ப பிடிக்கும். இப்பவும் இதை வாங்குறப்ப அவங்களை நினைச்சிப்பேன். சீசன் டைம்ல இந்த காய்கறியை கண்டிப்பா வாங்கிடுவேன். நான் சமைத்து சுவைக்கும் போது ஐய்யமையின் அறிமுகம் இந்த காய்கறி என்று கூறிப்பேன்.

  இந்த சீசன்ல கிடைக்கும். விலை அதிகம் ஆனால் உடலுக்கு நல்லது. கடுக்கு கடுக்குனு இருக்கும் துவர்ப்பு கசப்பு சுவை பிடிக்கும் ஆட்களுக்கு பிடிக்கும். பாவக்காய் விரும்புவோருக்கும் பிடிக்கும்.



      அதலக்காய் பார்வைக்கு.... செய்வதற்கு முன்




பொரியல் செய்தப்பின்....


கற்பூரவள்ளி பஜ்ஜி

 கற்பூரவள்ளி பஜ்ஜி

   கற்பூரவள்ளி இலையில் கசாயம் மட்டும் அல்ல நமக்கு பிடிச்ச மாதிரி பஜ்ஜியும் போட்டுக்கலாம். மாலை நேர சிற்றுண்டியாக பஜ்ஜி மாவு அல்லது கடலை மாவில் தொட்டு எண்ணெயில் போட்டா லைட்டா இலை சூட்டுக்கு வெந்து அதுவுமே சாப்பிட சுவையாக இருக்கும். கீழே பிரெட் பஜ்ஜி கூட இலை பஜ்ஜியாக கற்பூரவள்ளி பஜ்ஜி போட்டிருக்கேன்.

 
   தேங்காய் சட்னி இல்லைனா மயோனஸ் தக்காளி சாஸ் இரண்டையும் ஊற்றி தொட்டு சாப்பிட்டா நல்லாயிருக்கும். ரெகுலரா வெங்கயா பஜ்ஜி, உருளைக்கிழங்கு பஜ்ஜி பிரெட் பஜ்ஜி குயிக்கா போடுவது போல இதுவும் போட்டு கொடுத்துடலாம். கஷாயம் குடிக்காத வாலுங்க நிச்சயம் மயோனஸ் தொட்டு நாலு இலை பஜ்ஜியை சாப்பிடுவது உறுதி.😉
   




கற்பூரவள்ளி தோசை

           கற்பூரவள்ளி தோசை


மொறு மொறுனு தோசையில. இந்த குளிருக்கு இதை முயற்சி பண்ணிப்பாருங்க. 😊😉





    சாதாரணமா குழந்தைகளுக்கு என்றால் நாலு கற்பூரவள்ளியை தண்ணில கொதிக்க வைத்து கூடவே சுக்கு கிராம்பு பெப்பர் என்று நுணுக்கியதை போட்டு நல்லா கொதிச்சதும் வடிக்கட்டி தேன் கலந்து கொடுப்பேன். இல்லைனா நாட்டுச்சர்க்கரை அல்லது பனவெல்லம் போட்டு தருவேன்.

    குழந்தைகள் குடிச்சிடுவாங்க. அதென்னவோ குழந்தைகளுக்கு என்று செய்யறப்ப செய்திடுவோம். இதே நமக்கு சளி இருமல் என்று வந்தா செய்ய தோன்றுவதில்லை. எனக்கு நான் செய்யாம சுத்திட்டு இருந்தேன்.
  
  என் வீட்டுக்காரர் நான் இரும்பவும்  திட்டிட்டுயிருந்தார். உடல்நிலையில் அக்கறையே இல்லை பிரவீணானு. நான் கொஞ்சம் ரோஷப்பட்டு இரண்டு தடவை குடிச்சேன். ஆனா தனக்கு செய்யணும்னா சோம்பேறித்தனம் வந்துடுது.

     அப்ப உதிர்த்த மின்னல் ஐடியா தான் கற்பூரவள்ளி தோசை.

   மாடில வளர்த்த கற்பூரவள்ளி செடியோட இலையை பறிச்சிட்டு வந்து குட்டிகுட்டியா கட்டம் வடிவத்தில வெட்டி தோசை ஊற்றி அதுல தூவி சாப்பிட்டு பார்த்தேன்.

   அதோட ப்ளேவர் மென்று விழுங்கறப்ப நல்லா இருந்தது. அடுத்து பெரியபொண்ணுக்கு கொடுத்தேன். சாப்பிட்டா. இப்ப அடுத்தடுத்த நாட்கள்ல செடில இருபது முப்பது இலை பறிச்சி கட்பண்ணி தூவி சுட ஆரம்பிச்சேன்.

    சின்னவளும் டேஸ்ட் பண்ணினா. ரியலி அடிக்கடி இப்படி செய்து சாப்பிடலாமேனு தோன்றியது. அதிகமா இலை இருந்தா இப்படி உபயோகப்படுத்திடலாம்னு ஐடியா வந்துச்சு. கூடவே சளிக்கு இருமலுக்கு கொஞ்சம் பெட்டரா இருக்கு.

   முடிச்சா ட்ரை பண்ணி பாருங்க. 


  

பிரம்மனின் கிறுக்கல்கள்-11 (முற்றும்)

 


அத்தியாயம்-11

    ஆத்விக் காலையிலேயே அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்தான். குழந்தைக்கு செரலாக் எடுத்து வந்த யஷ்தவியிடம் அதனை பெற்று "நான் ஊட்டி விடறேன் நீ ரெடியாகு. எங்கயாவது லஞ்ச்கு போகலாம்" என்றான்.

      "நான் கோவிலுக்கு போகணும். குழந்தை பிறந்த நாள் நல்லபடியா முடிந்தா அங்க இன்னிக்கு கேசரி பிரசாதம் கொடுக்கலாம்னு." என்று கூறவும் "ஓ... அப்ப நானும் வர்றேன்" என்றான்.

     "மாமா உங்களுக்கு கோவில் பிடிக்காதுனு சொல்லிருந்தாரே. சந்தனாவை மேரேஜ் பண்ணியது கூட ரிஜிஸ்டர் ஆபிஸ் தானாமே. பிறகெப்படி?" என்று தயங்கினாள்.

     "இதுவும் சுயநலம் தான். மனிதனுக்கு கஷ்டமில்லாதப்ப வேண்டுதல் இல்லாதப்பவும் கடவுளை தேடமாட்டான். ஆனா இப்ப மனசுல வேண்டுதல் நிறைய இருக்கு." என்றான். 

       யஷ்தவி இதற்கு மேல் தோண்டிதுருவாமல் கோவிலுக்கு தயாரானாள்.

     ஆத்விக் பாவனாவிற்கு உடைமாற்றி தலலவாறினான். அதற்குள் யஷ்தவி கிளம்பி ஒரு தூக்குவாளியில் கேசரியை எடுத்து கொண்டு வநதாள்.

     "இந்த வெயிட்டை வச்சிட்டு பாப்பாவை வேற தூக்கிட்டு கோவிலுக்கு சேலையில் போனா ஸ்லிப்பாகவா? உனக்கு தான் சேலையில வேகமா நடக்க வராதே" என்றான்.

    யஷ்தவி புரியாமல் விழிக்க, நம்ம மேரேஜ் அப்போ நீ நடந்த நடையை வச்சி சொன்னேன்." என்று மென்னகை விடுத்தான்.

     "நீங்க வரலைனா செக்யூரிட்டி அண்ணாவிடம் சொல்லி ஆட்டோ வரவழைச்சியிருப்பேன். இல்லை ஓலா ஆட்டோல கிளம்பாயிருப்பேன்." என்றாள்.

     "நல்ல தெளிவா தான் இருக்க" என்று மகளை எப்பொழுதும் போல முன்னிருக்கையில் அமர வைத்தான்.

      குழந்தையை தூக்கி பின்னாடி உட்கார வைத்தாள். கேசரி தூக்கை எடுத்து அவன் டேங்க் மேலே வைத்து குழந்தையை பிடித்து கொண்டாள்.

     "ரொம்ப தெளிவா இருக்க" என்று முறுவலோடு வண்டியை உயிர்பித்தான்.

    அவள் கூறிய கோவிலுக்கு வந்து, நிறுத்திட, தூக்கை எடுத்து கீழே வைத்து விட்டு குழந்தையை தூக்கினாள்.

   வண்டியை பார்க்கிங் செய்து வந்தவனின் சட்டையில் நெய் கரை ஒட்டியதை கண்டாள்.

    யஷ்தவி பார்வை தன் மேல் இருக்க சட்டையை பார்த்தான்.
   
     "பார்த்தியா சட்டை கரையாகிடுச்சு. என் பேவரைட் சட்டை இந்த லைட் ப்ளு கலர். உன்னோட முதல் முறை வர்றேன்னு போட்டேன். யஷ்... எதுக்கு பீலிங் துவைச்சா போகப்போகுது இல்லையா ஸ்வீட் மெம்மரியா எடுத்துக்கலாம்." என்றதும் யஷ்தவி முறைக்க, "கேசரி ஸ்வீட் தானே அதனால தான் ஸ்வீட் மெமரினு சொன்னேன்." என்று நமுட்டு சிரிப்பை உதிர்த்தான்.

     காலையிலிருந்து புன்னகை முகமாக தான் ஆத்விக் உலாவிக் கொண்டிருக்கின்றான். அவனின் சின்ன சின்ன சீண்டல்கள் அவளின் இறுகிய தன்மையை உடைத்து கொண்டிருந்தது.
   ஆனாலும் கண்டுக் கொள்ளாமல் வீம்பாக இருந்தாள்.

     கடவுள் சந்நிதியில் அர்ச்சனைக்கு கொடுத்து விட்டு மனமுறுக வேண்டினாள்.

      'கணவன் என்ற உறவை பறிச்சப்ப கூட நான் கலங்கலை. விதி இப்படி தான் என் வாழ்க்கை என்று விதவையா ஏற்றுக்க செய்தேன்.

    மறுமணமா ஆத்விக்கோட திருமணமாகினாலும் ஒரு நல்ல நண்பனா இருக்கார்.

     எங்க கணவன் என்ற உறவு முலைத்து இந்த தோழமை உறவு கிடைக்காம போனா என் வலி ஏறிடும். என்னால இதுக்கு மேல வலிகளை சுமக்க முடியாது. வேதனையும் ஏமாற்றமும் அதிகரித்து என்னை தள்ளினா எங்க எனக்கே வாழ பிடிக்காம தற்கொலை செய்துப்பேனோனு பயமா இருக்கு. என்னை நம்பி பாவனா இருக்கா. எந்த அபத்தமும் இனி வாழ்க்கையில உள்ள நுழைய கூடாது" என்று வேண்டி ஆராதனையை தொட்டு கும்பிட்டாள். சிறுதுளி கண்ணீர் கசிந்தது. பாவனாவிற்கும் தீப ஆராதனையை தொட்டு வைத்தாள்.

     "என்னோடது பெரிய வேண்டுதல் இல்லை. நீ நான் பாவனா நிறைவா குடும்பமா வாழணும். நீ என்னை கணவனா பார்த்தா போதும் என்ற சின்ன வேண்டுதல் தான்" என்று கூறி அங்கே இருந்த விநாயகர் சிலை முன் குங்குமம் இருக்க அதனை எடுத்து நெற்றி வகிட்டில் வைத்தான்.

      வருண் இறந்ததிலிருந்தும் ஆத்விக்கை மணந்தப் பின்னும் குங்குமம் நெற்றியில் வைக்காததால் ஆத்விக் வைத்ததும் சிலையானாள்.

     அவள் மிரண்டு விழித்ததில் அதிகப்படியாக உரிமை எடுக்கின்றோமோ என்று தோன்றாமலில்லை. அவளை மாற்றிட, "கேசரி ஆறுவதற்குள் கொடு யஷ். அப்பறம் வந்தவங்க சூடா கிடைச்சா நல்லாயிருக்கும்னு ஒரு 'க்கு சேர்த்து பேசுவாங்க." என்று அனுப்பினான்.

    ஆத்விக்கை பார்த்து பார்த்து சென்று தொன்னையில் வைத்து கொடுத்தாள்.

     "லைட்டா சிரிச்சுக்கிட்டே... கொடுக்கும் போது சின்ன ஸ்மைல் வேண்டும்." என்றான். ஏற்கனவே சிரிதாய் வந்த முறுவலை அடக்கினாள். தற்போது முகம் புன்னகையை சிந்திவிட, அதனை கண்டு ஆத்விக் குழந்தைக்கு மட்டும் வாங்கி பாவனாவுக்கு ஊட்டிவிட்டான்.

      கோவிலுக்கு வந்தவர்கள் வாங்கவும் முகம் மாறி புன்னகை அமர்ந்து நிறைவாய் தர, கேசரி சாப்பிட்டு வாயை அங்கும் இங்குமென பாவனா இழுவிவிட்டு, ஆத்விக் உடை நெய்யாடையாக மாறியது.
   
   கேசரி காலி செய்து திரும்ப, சட்டையை ஆராய்ந்து கொண்டிருந்தவனை கண்டு சிரித்து விட்டாள்.

     "என்னடா குட்டி இப்படி பண்ணிட்டியே? நீ சிரிக்கிற." என்று மனைவியை வேறு செல்லமாய் கண்டித்தான்.

    "இந்த ஹாண்ட் பேக்கில் தானே பிப்(bib) இருக்கு மாட்டிட்டு ஊட்டி விட்டுயிருக்கலாம்ல." என்று பேச ஆத்விக் அசடு வழிந்தான். "ஈ ஈ பார்க்கலை" என்றான்.

      வீட்டுக்கு வந்து உடைமாற்றி சிறிது நேரம் டிவியில் பாடலை இசைக்க விட்டு யஷ்தவியை கண்டான்.

    மதியம் நெருங்க உணவகத்துக்கு அழைத்து சென்றான். ஆர்டர் செய்து விட்டு சாப்பிடவும் யஷ்தவியோ "நானே பாவனாவை கூட்டிட்டு இப்படி ஒரு நாள் ஹோட்டலுக்கு வரணும்னு ஆசையா இருந்தேன். ஆனா கேட்க தயக்கமா இருந்தது. பாவனா சுற்றி இருக்கறவங்களை கவனிக்க ஆரம்பிக்கிறா. புது இடம் புது மனிதர்கள் என்று பார்த்து நல்லதை கெட்டதை கத்துக்கறா" என்றாள்.

      "இனி எங்கயாவது போகணும்னா என்னிடம் கேளு யஷ். தயக்கம் வேண்டாம். பாவனாவுக்கு மடடும் இல்லை உனக்குமே எங்கயாவது போகணும் நிம்மதி வேண்டும்னா ஆத்வி கோவிலுக்கு போகலாமா சினிமா போகலாமானு கேட்கலாம் தப்பில்லை. நானும் அதே போல கேட்பேன்." என்று எப்படியும் இனி இது போன்ற வாழ்வை பழகிக்கொள் என்பதாய் இலைமறையாய் கூற அது புரிந்து மெதுவாய் தலையாட்டினாள்.

       சின்னதாய் நேசம் துளிர்க்க, "பார்த்தியாடி செண்பா. என் மகனை முழுங்கிட்டு எவனையோ கல்யாணம் பண்ணிக்கிட்டா. ஆளை பாரு ஆளை. முன்ன விட மினுக்கறதை." என்று வருண் தாய் வள்ளி கத்த அவ்விடம் இருந்தோர் திரும்ப, யஷ்தவிக்கு நொடியில் நெருப்பில் தள்ளி விட்டது போன்ற தகிப்பு.  வருண் தாய் வள்ளி தங்கை செண்பா மற்றும் அவள் கணவன் குழந்தை என்று அதே ஹோட்டலில்
வந்திருக்க வள்ளி பொறுமிவிட்டார்.

     "அய்யோ அம்மா சும்மாயிறேன். எல்லாரும் பார்க்கறாங்க." என்று இழுத்தாள் செண்பா.

    "ஒரு நிமிஷம் மா. உங்க மகனை இவ எப்போ முழுங்கினா. இவ என்ன ராட்சஸியா? உங்க பையனுக்கு கொரானா வைரஸால ரெக்கவர் ஆகமுடியாம மரணம் சம்பவிச்சா இவ என்ன செய்வா?

   என்ன சொன்னிங்க மினுக்கறதா. ஏங்க இந்த சின்ன தாலி செயின் உங்க கண்ணுக்கு மினுக்கிற மாதிரி இருக்கா? உங்க பையன் இறந்தும் நீங்க சாப்பிடாம இருக்கீங்களா? இல்லை நல்ல உடை உடுத்தாம இருக்கிங்களா. உங்க கழுத்துல தான் மூனு செயின் போட்டு இருக்கிங்க. நீங்க தான்.... ம்ம் மினுக்கறிங்க.

      இன்னொரு கல்யாணம் யஷ்தவி பண்ணினா தப்பா. உங்க பொண்ணை விட சின்ன வயசு தானே அவளுக்கு ஏன் இப்படி பேசறிங்க." என்று ஆத்விக் மெதுவாக எடுத்து கூறவும் யஷ்தவி அவன் கையை பற்றி "போகலாம் ஆத்விக் ப்ளிஸ்" என்று இழுத்தாள்.

     "நாம மில்க் ஷேக் வந்ததும் குடிச்சிட்டு தான் போக போறோம் யஷ். அவங்க வேண்டுமின்னா போகட்டும். நீ உட்காரு." என்று அருகே அமர வைத்து அவள் கைகளை விடாமல் இருந்தான்.

    செனண்பாவோ தாயை இழுத்து சென்றாள்.

     யஷ்தவி கைகளை நீவியபடி, "திருஷ்டி பட்டுடுச்சு யஷ். அவங்க போய் தொலையறாங்க நீ என்ன என் எதிர்ல தான் அழாம கெத்தை மெயிண்டெயின் பண்ணற. மற்றவங்க இப்படி பேசினா சட்டுனு பொசுக்கு பொசுக்குனு அழுவுற." என்று சிரிக்க வைக்க முயன்றான்.

      அவன் கைகளை உதறாமல் மெதுவாக அவனை நோக்கினாள்.

      தன் கையை விடாமல் குழந்தையை மடியில் வைத்து நிலைமையை சமன் செய்தவனை வியந்தாள்.

     இதே போல தானே சந்தனா கைகளை பற்றி ஆறுதல் மொழிந்தான். அன்று இருந்த அதே காதலும் நேசமும் இன்று எனக்கா? என்று கண்ணீர் உகுத்தினாள்.

    கண்ணீரில் சந்தனா உருவம் மெல்ல மெல்ல கலைந்து அங்கே அவள் உருவமாக தோன்ற, திடுக்கிட்டு கண்களை துடைத்தாள்.

     "நாம வீட்டுக்கு போகலாம். பில் வந்துடுச்சு" என்று கையை உருவினாள்.
  
    வீட்டுக்கு வந்ததும் பாவனா உறங்க அவளருகே படுத்து கொண்டாள்.

     படுத்த நொடியே இமை மூடியவளை ஆத்விக் எதுவும் கேட்கவில்லை. தூங்கி எழுந்தால் சற்று எல்லா கசப்பும் மறையும் என்று விட்டுவிட்டான்.

   மாலை ஆறுமணிக்கு பாவனா விழிக்க ஆத்விக் வந்து அவளை மட்டும் தூக்கி பாலாற்றி பிஸ்கேட் தொட்டு ஊட்டி விட்டான்.

    ஆறு முப்பதுக்கு யஷ்தவி விழிதிறக்க, அருகே பாவனா இல்லையென்றதும் ஹாலுக்கு வர, தந்தை மகள் இருவரும் டாம் அண்ட் ஜெர்ரி பார்ப்பதை கண்டு முகமலப்பி காபி தயாரிக்க கிச்சன் சென்றாள்..

     "யஷ் நான் காபி குடிச்சிட்டேன்" என்று கூறவும் அவளைக்கு மட்டும் கலந்து கொண்டாள்.

     ஏழு முப்பதுக்கு உணவை ஸ்விகியில் ஆர்டர் தந்து விட்டு யஷ்தவிக்கு வேலையை குறைத்தான்.
  
     சாப்பிட்டு முடித்ததும் இரவு உறங்க சென்றவளின் கையை பிடித்து, நெஞ்சில் சாய்த்து கொண்டான்.

     "இந்த உலகம் வாழ ஆசைப்படறவங்களை வாழ விடாது. நாம தான் அதை பற்றி யோசிக்காம நம்ம வாழ்க்கையை வாழணும்.
   
    இது மாதிரி காயத்தை கடந்து வாழுகிற அனுபவம் தான் வாழ்க்கை.

      எப்ப கிஷோர் உன்னை பார்த்து வருண் ஒய்ப் நீங்களானு கேட்டப்ப, நீ ஓடி வந்து ஆத்விக்னு என் நெஞ்சில சாய்ந்து அழுதியோ அப்பவே உனக்கு நான் இருக்கேனு நம்பிக்கை வந்துடுச்சு. இன்னமும் பயந்து ஊர் உலகத்துக்கு வாழ வேண்டாம்.

     நடந்தது எல்லாமே மறக்கவோ மாத்தவோ முடியாது. ஆனா சந்தோஷமா வாழ ஆரம்பிக்கலாம்.

    உன்னோட பொண்ணு பாவனா உன்னோட கணவன் ஆத்விக் இது தான் உன் நினைவில் இருக்கணும். தூங்கு." என்று நெஞ்சில் அவள் முகத்தை சேர்த்தணைத்து பேசினான்.

      சின்ன சின்ன அன்பில் ஆத்விக் இனி வரும் காலங்களில் யஷ்தவியின் இதயத்தை திறப்பான். பாவனாவின் அடுத்த பிறந்த நாளுக்குள் மற்றவரின் பார்வைக்கு தாய் தந்தை என்று வாழும் இந்த ஜோடி நிஜமான காதல் கணவன் மனைவியாக வாழ்ந்து உங்களை இரண்டாம் பிறந்த நாளுக்கு அழைப்பார்கள் நம்புவோமாக.


                                                      *சுபம்*


               -பிரவீணா தங்கராஜ்


கதை பிடித்திருந்த உங்க கருத்தை முன் மொழியுங்கள். நன்றி. 





பிரம்மனின் கிறுக்கல்கள்-10

 


அத்தியாயம்-10


    "ஒரு செயலை காரணமே இல்லாம செய்டானு கடவுள் சொன்னா நாம செய்வோமா. நிச்சயம் மாட்டோம். நான் ஏன் பண்ணணும். எனக்கு என்ன குறைச்சல்னு கேட்போம். ஏன்னா நாம மனிதர்கள். அதையே கடவுள் இக்கட்டுல தள்ளி நம்மை குறையா படைத்தா நாமளே இப்படி ஒரு நிலையில ஏற்றுப்போம்ல" என்று பேசிய அன்பாளனை புரியாமல் பார்த்தான் ஆத்விக்.

      "புரியுற மாதிரி சொல்லறேன். என்  குணயதிசயத்துக்கு சந்தனாவை நீ திருமணம் செய்வதற்கு முன்ன ஒரு கணவனை இழந்தவளையோ, யாரோ ஒரு குழந்தையையோ தத்தெடுக்கவோ விருப்பப்படுவேனா?

இல்லை...

அதே மாதிரி வருணை திருமணம் முடிக்கறதுக்கு முன்ன பாலகுமார் உன்னை மாதிரி மனைவியை இழந்தவனையோ, இல்லை தத்தெடுக்கவோ விடுவாரா?
 
     எங்களை விடு. நீ சந்தனா சேர்ந்து குழந்தையை தத்தெடுத்திருப்பியா? உண்மையை சொல்லு. ஏதோ ஒரு இழப்பை நீ உணர்ந்து அதோட தாக்கத்துல இப்படி முடிவெடுத்து அதுல நிதானமா விடாபிடியா இருக்க. மற்றபடி சும்மா ஒரு குழந்தையை உன் வாரிசா ஏற்றுப்பியா?" என்றதும் ஆத்விக் உடனடியாக பதில் தரவில்லை. அதே நிலையில் தான் யஷ்தவியும் யோசித்தாள்.

     ஆத்விக் பதில் தராமல் இருக்க, "நிதர்சனம் முகத்திலறைந்தது போல சொல்லும் டா. நான் தப்பா சொல்லலை. சந்தனா கொரானாவுல உயிர் பிழைத்து வந்திருந்தா நீ தத்தெடுத்திருக்க மாட்ட. அதனால தான் கடவுள் ஒன்றை பறித்து இரண்டா உன் வாழ்வில் தந்திருக்கார்.

   நீ அதை ஏற்றுக்கொண்டா உனக்கு வாழ்க்கை சீறும் சிறப்புமா மாறும். எல்லாமும் உன் கையில தான். சந்தனாவுக்கு பதிலா யஷ்தவியை மனைவியா பாரு. இப்ப வாரிசா பாவனாவை பார்க்கற அதே நிறைவோட மனைவி குழந்தைனு சந்சோஷமா வாழ்ந்து பாரு.

     இன்பம் மட்டும் இல்லை வாழ்க்கை. துன்பத்துல ஆழ்ந்து விழுந்தெழுந்து இன்பத்தை தொடுவது தான் வாழ்க்கை. நீ யஷ்தவினு ஒரு வார்த்தை கூப்பிட்டதில சம்மந்தி அம்மா அப்பா இரண்டு பேரும் எத்தனை சந்தோஷப்பட்டாங்க. அவங்க மகிழ்ச்சியை நிலைநாட்டி பாரு. நீ வாழுற வாழ்க்கைக்கு அர்த்தம் கிடைக்கும். மருமக முகத்தை முதன் முதல்ல ஆசிரமத்துல பார்த்தப்ப வாடி வதங்கி எத்தனை கவலையா இருந்தது தெரியுமா. வருணை மணந்ததால கூண்டு கிளியா இருந்தாளாம். உன்னை திருமணம் பண்ணியதும் ஏதோ விடுதலை பெற்ற கிளி மாதிரி இருக்கறதா அவங்க பெற்றோர் பேசினாங்க. சுதந்திரத்தை பறிக்காம அதே நேரம் அவளோட வாழ பழகிப்பாரு" என்றார் அன்பாளன்.

      "ப்பா... ப்பா.. தாக்" என்று சாக்லேட்டை காட்டி பிரிக்க தெரியாது விழித்தவளிடம் ஆத்விக் பிரித்து கொடுத்தான்.

    பாவனாவின் மகிழ்ச்சியில் வாழ்க்கை உணர துவங்க, இதே சிரிப்பை யஷ்தவி முகத்திலும் காண ஆசையாக தான் இருந்தது.

அந்த நிமிடம் சந்தனாவை தாண்டி வாழ்க்கை என்பது விசித்திரமாக மாற்றும் வல்லமையாக கருதினான்.

      சாக்லேட் பேப்பரை எடுத்து குப்பைத்தொட்டியில் போட வந்தவன் யஷ்தவியை கண்டு ஒதுங்கி மெதுவாய் கிச்சனுக்கு சென்றான்.

     தண்ணீரை அன்பாளனுக்கு நீட்டி பாவனாவை தூக்கி கொண்டு சென்றாள்.

     அன்பாளன் அடுத்த வாரத்தில் திருநெல்வேலிக்கு கிளம்பினார். அவருக்குள் இனி ஆத்விக் பார்த்துக் கொள்வானென நம்பிக்கை பிறந்தது. அந்த நம்பிக்கை ஆத்விக் வாய் நிறைய "யஷ்தவி... யஷ்தவி" என்று அலுவலகம் கிளம்பும் நேரம் அடிக்கடி உரிமையாய் கூப்பிடுவதில் சிறிதாய் மொட்டாய் மலர்ந்தது.

      ஆத்விக் அன்பாளன் சென்ற பின்னும் யஷ்தவியிடம் எதை பற்றியும் பேசவில்லை. இதே போல நாட்களை கடத்தினான்.

    யஷ்தவி என்ற பெயர் 'யஷ் பாவனா பாரு என் போனை தரமாட்டரா' என்று மகளை பற்றி புகார் வாசிப்பாதாகட்டும் எல்லாமே நயமாய் மாற முயன்றான்.

     ஆனால் அவனுக்கு எதிர் மறையாக யஷ்தவி ஒதுங்கி இருந்தாள். முன்பு பேசிய மென்னுரையாடல் கூட தவிர்த்திட்டாள்.

    ஆத்விக்கிற்கு அவளின் செய்கை புரிந்திட பாவனாவை ஹாலில் விளையாட விட்டு மேற்பார்வை செய்தவன் அவனாக பேச்சை ஆரம்பித்தான்.

    "வருண் மாதிரி இருக்கறவன் தான் கணவன், அவனை கண்டு பயந்து வாழ்ந்து இந்த வாழ்க்கையை திரும்ப வாழ தெரியாம வேஸ்ட் பண்ணிடாதே யஷ்தவி.

    நம்ம லைப்ல நமக்கான துணை இழந்து போனதுக்கு காரணம் இருக்கு. அது நன்மைக்கா எடுத்துக்கறேன்.

     அப்பா பேசியதை கேட்டிருப்ப. இதுவரை சந்தனா மட்டும் வாழ்க்கைனு தனிச்சி இருந்த நான் உன்னை இந்த நிமிடத்திலருந்து தோழியை தாண்டி மனைவியா பார்க்கறேன்.

  பிரம்மனின் கிறுக்கலை நாம ஓவியமா மாற்றுவோம். புரியாத வகையில் தானே மாடர்ன் ஓவியங்கள் இருக்கும். நாம மாறும் வாழ்வா மாறக்கூடாதா?

      உனக்கும் நல்ல நண்பனை தாண்டி கணவனா பார்த்தா பாவனா அப்பா லைப்பை ஸ்டார்ட் பண்ணலாமானு ஒரு வார்த்தைல சொல்லு போதும்." என்று பாவனாவோடு படுத்து கொண்டான்.

அவள் இவன் பேசியதும் உடனே தனியறைக்கு சென்றிடுவாளோ என்றே எண்ணினான். மாறாக  எப்பொழுதும் போல தரையில் படுத்த யஷ்தவி சத்தமின்றி அழுதுவது உடல் குலுங்கலில் தெரிந்தது. ஆனாலும் ஆத்விக் தடுக்கவில்லை. அழட்டும் எத்தனை நாள் அழுகையோ அழுது தீர்க்கட்டும். நானாவது கோபமா வெளிப்படுத்திட்டேன் யஷ்தவி அவளோட துயரத்தை மௌனமா பூட்டிட்டா இனி திறந்த கூண்டா அந்த இதயறை இருக்கட்டும்' என்றது ஆத்விக் எண்ணம்.

   அடுத்த நாள் விடியல் பிறக்க, ஆத்விக் யஷ்தவி கணவனாய் தான் இனி வாழ வேண்டுமென்று முதலாவதாய் தனது போனில் பாவனா மட்டும் இருக்கும் புகைப்படத்தை எடுத்து விட்டு , மணக்கோலத்தில் பாவனாவோடு எடுத்த புகைப்படத்தை வைத்தான்.  அது அன்பாளன் இவனுக்கு அனுப்பியது. கழுத்தில் மாலையை கழட்டி இருந்தமையால், ஏதோவொரு திருமணத்தில் எடுத்த புகைப்படம் போன்று காட்சி அளித்தது. அது மிகைப்படுத்ததா குடும்ப புகைப்படமாக இருந்தது. 

அடிக்கடி அதனை எடுத்து ரசிக்க யஷ்தவி அவன் போனை வருடும் நேரம் பாவனா போனை பிடுங்க யஷ்தவியும் அதனை காண நேர்ந்தது. பார்வையால் மெல்ல காதல் அன்(ம்)பை விடுவான். இவளோ சூடுப்பட்ட பூனையாக பயந்து ஒதுங்கினாள். 

அவ்வளவு எளிதல்ல ஒரு பெண்ணின் மனதில் ஆண் என்பவன் அப்பழுக்கற்று அன்பை தருவான் என்பதை விதைக்க. அதுவும் தன்னை இச்சைக்கு அனுகுவதாக எண்ணி விட்டால்? ஆத்விக் பொறுமையாய் அன்பில் அவள் மனதில் பதியவே எண்ணினான். திட்டமிடவில்லை இயல்பாய் நகரும் நாட்களில் நடிக்கவில்லை நண்பனாய் அவளுக்கு எப்பொழுதும் இருப்பேன் என்ற நம்பிக்கையை எப்படி கொடுப்பது என்றே தவித்தான். 

 -கிறுக்கல்கள் தொடரும். 

-பிரவீணா தங்கராஜ் 


பிரம்மனின் கிறுக்கல்கள்-9

 


அத்தியாயம்-9    


    பாவனா சிணுங்கி அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு இதுவரை மென்மையான காட்டன் ஆடை அணிந்து பழக்கப்படுத்தியிருக்க, முழுகவுன் அணிந்தவள் அழுது அடம் பிடித்தாள்.

      "என்னாச்சு யஷ்தவி பாவனா அழுவறா?" என்றவன் கை பட்டனை போட்டவாறு வந்தான்.

     "அனீசியா இருக்கும் போல. புது டிரஸ் இல்லையா." என்று வாடியிருந்தாள்.

    அவள் முகமே கூறியது தான் வாங்கிய உடை குழந்தைக்கு ஒத்துக் கொள்ளவில்லையோ 'நைநை'யென அழுகின்றதே என்று கவலை தோய்ந்து இருந்தாள் யஷ்தவி.

   ஆத்விக்கோ "செல்லக்குட்டிஇங்க பாருங்க இங்க பாருங்க" என்று எப்பொழுதும் விளையாடும் கண்ணாடி அலமாரி முன் அவளை நிறுத்தி விட்டு "பாவனா குட்டி எப்படி அழகா இருக்கு. வாவ் இந்த டிரஸ் சின்ட்ரெல்லா மாதிரி இருக்கா ஸ்லீபிங் பியூட்டி மாதிரி இருக்கா?" என்று கேட்டான்.

      குழந்தை தினசரி அவன் போனில் இந்த இரு கதையை மொழி அறியாவிட்டாலும் பார்த்து ரசித்ததால் தற்போது ஆத்விக் கூறியதை கேட்டு பார்த்தது.

   கண்கள் உருட்டி தன் அழகை கண்ணாடியில் கண்டு களித்தாள் பாவனா. கண்ணாடி முன் வந்து தொட்டு தொட்டு பார்த்து சிரிக்க ஆரம்பிக்கவும் ஆத்விக் யஷ்தவியை புன்னகையோடு பார்த்தான்.

   அதில் இப்ப போதுமா சிரிக்கிறா. நீ கவலைப்படாதே என்ற செய்தியை செய்கையால் காட்டினான்.

     ஒவ்வொருத்தராய் வந்தவர்கள் வெல்கம் செய்து குளிர்பானம் கொடுத்து வரவேற்றான். அதிகமில்லாது அலுவலக நண்பர்களில் ஆறு பேரிடம் அழைப்பை தொடுத்தான்.

  அதில் மூன்று பேர் குடும்பமாக வந்தனர். மூன்று பேர் சிங்கில் சிங்கங்கள். அதனால தாமதமாக வருவதாக அனுப்பியிருந்தனர்.

     பக்கத்து வீட்டில் எதிர் வீடு வலது இடதென இரு குடும்பமும் என்று மூன்று குடும்பங்கள் மற்றும் அன்பாளன், சித்ரா பாலகுமார் என்று மட்டும் இருந்தனர்.

    தத்தி தத்தி நடந்தாலும் இன்னும் முழுமையாய் நடக்க வராது சிரமப்பட்டாள் பாவனா. தாய் பாலின்றி வளரும் குழந்தை என்பதால் வளர்ச்சி அப்படி தான் என்று சித்ரா கூறிவிட்டார். டாக்டரும் ஒரிரு வாரங்களில் சீராக நடக்க ஆரம்பிப்பாளென கூறியிருந்தார்.

     மற்ற முன்று நண்பரும் வந்ததும் கேக் கட் செய்ய ஆரம்பித்தனர்.

    ஆத்விக் நண்பன் கிஷோர் என்பவனோ யஷ்தவியை கண்டு திகைத்து முழித்தான்.

     இவங்களை எங்கயோ பார்த்தோமே எங்க என்று யோசித்தான்.

     யஷ்தவியோ சீரியஸாக பாவனா கைகளை பிடித்து கேக் கட் செய்ய, ஆத்விக்கும் பாவனா கைகளை பற்றியிருந்தான்.

    தொடுதலில் காமமா சாதாரண வகையா என்று அறிந்த யஷ்தவிக்கு ஆத்விக் செய்கை அதிர்ச்சி தரவில்லை. அவனை புரிந்தவளாக பாவனாவோடு அந்த நிமிடத்தை நிறைவாய் அனுபவித்தாள்.

     பரிசு பொருட்கள் கொடுத்து முடிக்க சித்ராவும் யஷ்தவியும் கேட்டு கேட்டு பரிமாறினார்கள்.

   கிஷோரோ யாரென அறியாது குழம்பியவன் இந்தாங்க ஐஸ்க்ரீம் என்று கொடுக்க நினைவு வந்தவனாக "நீங்க நீங்க... வருண் ஓய்ப் தானே" என்று கேட்டு விட்டான்.

    தட்டை சிதற விட்டவள் ஆத்விக் இருக்கும் திசையை கண்டு, "ஆத்..ஆத்விக்" என்று உடைப்பெடுத்து அழுதாள்.

     பாதிப்பேர் அவனை அழைப்பதாக எண்ணி விட, யஷ்தவி பெயரிட்டு கூப்பிடும் முதல் அழைப்பு என்றதும், ஓடிவந்தான்.

     வருண் என்றதும் பயந்தாளா அல்லது ஆத்விக் நண்பனுக்கு தன்னை இனம் கண்ட பயமா ஏதோவொன்று ஆதவிக் பெயரை கூப்பிட தூண்டியது. அதே நேரம் அவன் நெஞ்சில் சாய்ந்து அவர் அவர் வருண் ஓய்ப்பானு கேட்கறார். ப..பயமா இருக்கு. எ..என்ன சொல்ல?" என்று தவித்தாள்.

      "ஓ மை காட். ஒன்னுமில்லை யஷ். கூல் கூல். நான் பார்த்துக்கறேன். கிஷோர் எதுவும் பேசிடாதே நான் எக்ஸ்பிளைன் பண்ணறேன். எல்லாரும் போகட்டும்" என்று இழுத்து சென்றான்.
  
     அதன் பின் யஷ்தவி தடுமாறி பயத்தில் சங்கடமாய் நின்றாள்.

   வந்தவர்களுக்கு ரிட்டர்ன் கிப்ட் கொடுத்து அனுப்பினாள். பெரும்பாலும் பக்கத்து வீட்டு ஆட்கள் அலுவலக ஆட்கள் வந்திருப்பதால் நழுவினார்கள்.

    அலுவலக நண்பர்களோ குடும்ப சகிதம் வந்தவர்கள் நேரத்திற்கு வீடு திரும்பவே கிளம்பினார்கள்.

   மற்ற இரண்டு நண்பர்களையும் கிஷோரே போக கூறினான்.

     எனக்கு கொஞ்சம் நேரமாகும் டா. நான் எப்படியும் தனியா தானே போகணும் பார்த்துக்கறேனு" அனுப்பினான். நண்பர்களை கீழே வழியனுப்பியவன் கிஷோரோடு அங்கு அமைந்த திறு பூங்காவில் அமர்ந்தான்.

    "வருண் ஓய்ப் தான் யஷ்தவி. வருண் இப்ப உயிரோட இல்லை. யஷ்தவியை நான் மறுமணம் செய்திருக்கேன்.

     ஆக்சுவலி என்னோட மனைவி சந்தனா கூட இறந்துட்டா." என்று தங்களுக்கு கொரானா காலங்களில் பிரம்மனின் கிறுக்கல்கள் மூலமாக மூன்று குடும்பம் ஒர் குடும்பமாக மாறிய கதையை தெரிவித்தான்.

     "ரொம்ப நல்ல விஷயம் ஆத்விக். நான வருணோட ஸ்கூல் பிரெண்ட் டா.  அவனை ஒரு முறை ரோட்ல பார்த்தேன். வீட்டுக்கு கூப்பிட்டான் நானும் ஆசையா போனேன்.

    அப்ப தான் இவங்களை பார்த்தேன் ஓய்ப்னு அறிமுகப்படுத்தினான். காபி கலந்துட்டு வந்து வச்சாங்க நீ நம்புவியா மாட்டியானு தெரியலை. சுட சுட காபியை அவங்க மேலயே  கொட்டிட்டான். ஏன் எதுக்கு ஒன்னுமே தெரியாது டா. ஆனா அப்ப அந்த பொண்ணு துடிச்சி அழுதுச்சே அப்ப எனக்கு ஏதோ சைக்கோ நண்பனா தான் கண்ணுக்கு தெரிந்தான்.

    ஒரு நிமிஷம் இதயமே பதறிடுச்சு. இந்த பொண்ணு எத்தனை சாந்தமா இருக்கு. வருண் முகத்துல அன்னிக்கு மிருகத்தோட சாயலை பார்த்தேன். என்னால அதுக்கு மேல ஒரு நொடி கூட இருக்க முடியலை.

    ஆனா அவன் கூலா 'பாரு டா டீ கேட்டா அவளுக்கு பிடிச்ச காபி கொண்டு வர்றா கல்யாணமாகி இரண்டு வாரத்துல தெரிந்துக்க வேண்டாமா.'னு பேசினான். இரண்டு வாரத்துல ஒரு பொண்ணு எப்படி டா அந்த மாதிரி வேதனையை அனுபவிச்சானு இப்ப வரை குழம்பினேன்.

      தெரியாம மறந்துட்டு கொண்டு வந்துச்சு. அதுக்கு இப்படியானு ஒரு மாதிரி வருத்தமா போச்சு. வருண் நண்பன்னு சொல்லிக்கவே கேவலமா இருந்தது.

    வருண் இறந்தது இந்த பொண்ணை நீ மேரேஜ் பண்ணினது. அந்த குழந்தையை தத்தெடுத்தது எல்லாமே சரிதான்டா.

   உன்னை நினைச்சா பெருமையா இருக்கு. அவங்களை பயப்பட வேண்டாம்னு சொல்லு. அவங்க இப்ப வருண் ஓய்ப் இல்லை. மிஸஸஸ். யஷ்தவிஆத்விக் தைரியமா இருக்க சொல்லுடா.
  
      எந்தவொரு நிகழ்வும் காரணகாரியமில்லாம நடக்காது. உன் ஓய்ப் ஏன் இறக்கணும். அந்த வருண் ஏன் சாகணும்? பிறந்த ஒரு வாரத்துல குழந்தை அநாதையா மாறணும். எல்லாமே கடவுள் தலையெழுத்தா எழுதியது. எல்லாமே நன்மைக்கு தான் டா" என்று கிஷோர் உற்சாகப்படுத்தினான்.

    ஆத்விக்கோ யஷ்தவியை எண்ணி அவனது வீட்டின் பால்கனியை தான் கண்டு கொண்டிருந்தான்.

   'எத்தனை வேதனை யஷ்தவியை இனி சிறப்பாய் என் மனைவியாய் பார்த்துக்கணும்'என்று மனசாட்சி கூறிவிட்டது. ஆனால் அடுத்த நொடி சந்தனா என்பவளை மறந்து விட்டாயா என்றது. குழம்பியவனாய் தலையை உலுக்கி கொண்டான்
 
     "சரி ஆத்விக் ஆபிஸ்ல பார்ப்போம். நான் வருண் பிரெண்ட் இல்லை ஆத்விக்கோட ஆபிஸ் பிரெண்ட் என்று அவங்களிடம் சொல்லிடு. பயந்து பீல் பண்ண போறாங்க. பை டா மச்சான்." என்று வண்டியை எடுத்து கிளம்பினான்.

     ஆத்விக் மெதுவாக வீட்டுக்கு வந்த நொடி சித்ரா பாவனாவுக்கு சுற்றி போட, அன்பாளனோ சம்மந்தி என் மகனும் மருமகளும் சேர்த்து வைத்து திருஷ்டி கழிச்சிடுங்க." என்றார்.

   யஷ்தவி மறுக்க பார்க்க ஆத்விக்கோ குழந்தை பாவனாவை கையில் வாங்கி தோளில் போட்டு கொண்டு யஷ்தவி அருகே நின்றான்.

    யஷ்தவி பெரிதாய் எடுக்கவில்லை அன்னைக்காக அருகே நின்றிருப்பார் என்று தான் தோன்றியது.

     ஆனால் அடுத்தடுத்த நாட்கள் சித்ரா பாலகுமார் ஊருக்கு சென்றதும், ஆத்விக் யஷ்தவியை பார்த்து பார்த்து வியந்தான்.

    தனியாக சிந்தனைவயப்பட்டான். அன்பாளனே மகன் அருகே வந்து என்னடா யோசனை? பிறந்த நாள்ல ஏதாவது அசௌவுகரியமா இருந்ததா?" என்றார்.

      "சே சே அதெல்லாம் இல்லைப்பா. ஏன் எனக்கு சந்தனாவை காதலிக்க தோன்றணும். உங்களை எதிர்த்து கல்யாணம் பண்ணணும். இப்ப அவளை இழந்து நீங்க பார்த்த பொண்ணை ஏத்துக்க முடியாம தவிக்கணும். இந்த குழந்தையை தத்தெடுக்கணும். ஏன் இந்த விதி இப்படி விளையாடுது குழப்பமா இருக்கு. இதுல என் நண்பன் கிஷோர் யஷ்தவியை மேரேஜ் பண்ணியது நல்லதுக்கு தான் டா. அவளுக்கு வாழ்க்கை கொடுத்ததுக்குனு பேசிட்டு போறான். நான் என் வாழ்க்கையை எப்படி வாழ்ந்தேன், இப்ப எப்படி மாத்திக்கனு சத்தியமா புரியலை." என்றான் அதே குழப்பமான மனநிலையில்.

     மாத்திரை போட தண்ணீர் எடுத்து வந்த யஷ்தவி தன் பெயர் அடிப்படவும் தந்தை மகன் பேச்சு செல்வதற்கு திரும்ப கிச்சன் செல்ல முயன்றவள் அதேயிடத்தில் நின்றாள்.

-கிறுக்கல்கள் தொடரும்.

பிரவீணா தங்கராஜ். 







பிரம்மனின் கிறுக்கல்கள்-8

 


அத்தியாயம்-8

     பாவனா பிறந்த தேதியை அறிந்ததும் யஷ்தவி சிசு பற்றி அறிந்த ஆத்விக் யஷ்தவியோடு அடிக்கடி பேச முன் வந்தான்.

    அவளுக்கு தேவை தோள் சாயும் தோழன், இரயில் பயணி போன்றவன் அல்ல என்று புரிந்தது முதல் பேச துவங்கினான்.

     ஏங்க டிரஸ் நீங்க வாங்கிட்டிங்க. கேக்காவது நான் வாங்கறேன்" என்றதற்கு யஷ்தவியோ "நானே என் கையால கேக் செய்யலாம்னு இருந்தேன்" என்று தலை தாழ்த்தி நின்றாள்.

     "அப்பாவா நானும் ஏதாவது பண்ண ஆசையாயிருக்கு. இதுவரை யாரிடமும் பகிரலை. உங்களை மாதிரி தான் சந்தனாவும் இரண்டு மாதம் கருவை சுமந்திருந்தா. பட் அவ போனதும் அவளோடவே என் குழந்தையும் போயிடுச்சு.

    அப்பாவிடம் சொல்லலை மேபீ சொல்லிருந்தா கவலைப்படுவார். எனக்கும் சந்தனாவுக்கும் மட்டும் தெரிந்த சந்தோஷ செய்தி. சந்தனாவோட அந்த குழந்தையும் இறந்ததால அந்த இழப்பு எனக்கு மட்டும் தான் தெரியும்.

     உங்களை மாதிரி தான் பாவனாவை என் குழந்தையா பார்க்க ஆரம்பிச்சேன். அதனால தான் பாவனாவை விட்டு தர சொன்னப்ப என்னால விட்டு கொடுக்க முடியலை." என்றான் ஆத்விக்.

     யஷ்தவி மெதுவாய் ஆத்விக் இழந்தது இரு உயிராக எண்ணினாள். அவள் இழந்தது ஒரு உயிரை தான். அவள் வயிற்றில் உருவான கருவை மட்டுமே. வருணை இழந்தது யஷ்தவிக்கு கவலையே கொடுக்கவில்லை. இழப்பாகவும் எண்ணிடவில்லை.

   மேலும் இதை ஏன் என்னிடம் பகிர்ந்தான். அன்னை தந்தை என்னை பற்றி என்ன சொல்லி அவனின் மனதில் 'பாவம் இவள்' என்ற விதையை தூவி விட்டார்களா? என்று தோன்றியது.

    அந்த நேரம் அன்பாளன் எட்டி பார்த்தவர் "ஏன் ஆத்விக் பாவனா பிறந்த நாளை உன் ஆபிஸ் நெய்பர்ஸ் சொல்லி கொண்டாட போறிங்களா? அப்படின்னா சொல்லு டா. என் பேத்திக்கு ஊஞ்சல் வாங்கணும் என் கார்டை எடுத்துட்டு போய் வாங்கி டோர் டெலிவரி கொடுக்கணும்." என்று கூறிவிட்டு நகர்ந்தார்.

      யஷ்தவி பதிலுக்கு ஆறுதல் உரைக்காமல் எண்ணங்களின் திக்கில் பயணிக்க, ஆத்விக்கே முகம் மலர்ந்து, "கரெக்ட் அப்பா சொன்னது போல வீட்ல டெகரேட் பண்ணி என் ஆபிஸ் பிரெண்ட்ஸ், இங்க பக்கத்துல இருக்கற நெய்பர்ஸ் இன்வெயிட் பண்ணலாமா. பாவனாவுக்கு ஹாப்பியா இருக்கும். கலர் கலர் பலூன், புது புது மனிதர்கள், கிப்ட் ரிலேட்டிவ்னு வீடு முழுக்க ஆட்களா... பாவனாவுக்கு நாம மட்டும் இல்லை நிறைய பேர் இருக்கோம்னு திருப்தி வரும்." என்றான்.

     சிறிது நேரம் எடுத்து, "அப்பா அம்மாவை தவிர எங்க வீட்ல யாரையும் கூப்பிட வேண்டாம். உங்களுக்கு யாரை கூப்பிடணுமோ கூப்பிடுங்க. ஆனா புட் எல்லாம் நீங்களே அரேஞ்ச் பண்ணுங்க. எனக்கு நிறைய பேருக்கு சமைக்க வராது." என்றாள் யஷ்தவி.

     ஒரு குடும்பமாய் பாவனா பிறந்த நாளை கொண்டாட மகிழ்ச்சியாய் அந்நாளை வரவேற்றனர்.

       அன்பாளனோ, பேப்பரில் கண் பதித்து "ஆத்விக் சொல்ல மறந்துட்டேன். பிறந்த நாள் கொண்டாடறதுல பெரிசில்லை. உன்னோட ஆபிஸ் வீட்டு நெய்பர்ஸ் முன்ன யஷ்தவியை என்னங்க இவர் என் கொலிக் என்றோ உன் ஆபிஸ் பிரெண்ட்ஸ் முன்ன இவங்க யஷ்தவிங்கனு மரியாதை கொடுத்து பேசினா. மற்றவங்க பார்வைக்கு பாவனா தத்து குழந்தையென்றும், நீயும் யஷ்தவியும் அவலாகவும் மற்றவரோட பேச்சுக்கு அகப்படுவீங்க.

     இதே குழந்தையோட அப்பா அம்மா அதாவது கணவன் மனைவினு  அறிமுகப்படுத்திக்கிட்டா, அந்த குழந்தைக்கு இப்ப இருந்தே இது அவ குடும்பம்னு எண்ணம் வலுக்கும். ஏதோ சொல்லணும்னு தோன்றியது." என்று கூறிவிட்டு பேப்பரை மடித்து வைத்து அகன்றார்.

    "எனக்கு பிரச்சனையில்லை. நான் இப்பவும் வாங்க போங்க தான் கூப்பிடறேன். அப்பறமும் அப்படியே கூப்பிட்டாலும் மரியாதையான பொண்ணுனு நினைச்சிப்பாங்க. உங்க பாடு தான்" என்று யஷ்தவி சிரித்து கடந்தாள்.

       ஆத்விக்கிற்கு குழப்பமாய் போனது. புது ஆபிஸ், புது இடம் என்று இருப்பவன். முன்பாவது தங்கிருந்த வீட்டின் பக்கத்து வீட்டு ஆட்களுக்கு சந்தனா மனைவியென்று தெரியும். தந்தை தான் அதே வீடு வேண்டாமென்று சந்தனா இறந்த இரண்டு மாதத்தில் ஊருக்கு அழைத்து சென்று விட்டார்.

   பணியும் செய்ய மனமின்றி பழைய அலுவலகத்தில் வேலையையும் இழுந்து விட்டான்.

   இங்கு மீண்டும் வந்தப்பொழுது புது அலுவலகத்தில் வேலை சேர்ந்ததும் அருகே வீடு எடுத்து தங்கிவிட்டான்.

     ஆனால் யாரிடமும் அதிக பழக்கமில்லை. யஷ்தவியை குழந்தையோடு அழைத்து வந்ததை வைத்து அவர்களாகவே மணமாகி குழந்தை இருக்கும் ஆடவன் என்று எண்ணினார்கள்.

     தற்போது ங்க' போட்டு பேசினால் தந்தை கூறியது போல தானே பேச எடுத்து கொடுத்தது போல ஆகிடும் என்று உணர்ந்து குறுக்கும் நெடுக்கும் நடந்து, பின்னர் மெத்தையில் அமர்ந்து, மெதுவாய் ''யஷ்தவி'' என்று சொல்லி டார்த்தான்.

     "யஷ்... யஷ்தவி" என்றவன் என்னை விட வயசுல சின்னவங்க தானே. பெயர் சொல்லலாம்" என்றவன் துள்ளளாய் மாறினான்.
  
    "யஷ்தவி மெனு சொல்லிடு. புட் ஆர்டர் பண்ணிடுவேன். " என்று சின்னதாய் நோட்டும் பேனாவும் வந்து நின்றான். யஷ்தவி திரும்பியவள் அதிர்வாய் பார்த்தாள்.

    அதன் பார்வை என்னவென அறியாத ஆத்விக்கோ, "ஐ அம் சாரி. அப்பா சொன்னதும் பெயரை சொன்னா என்னனு தோனுச்சு. வருண் கூப்பிட்டது போல பீல் பண்ணிட்டிங்களா." என்றான்.

    "சேசே... வருண் எங்க பெயரை சொல்வார். மூன்று மாத திருமண வாழ்க்கையில ஏய், சனியனே, சிறுக்கி, இப்படி தான் கூப்பிடுவார். எப்பவாது யார் முன்னாணியாவது மட்டும் யஷ்தவினு முத்து மாதிரி உதிர்ப்பார். நான் அதுக்கு ஷாக் ஆகலை. இங்க வந்து இரண்டு மாதம் முடிய போகுது இப்ப தான் பெயரை சொன்னிங்களா அந்த ஷாக்" என்று இயல்பாய் குழம்பை வதக்கி கொண்டே மான்விழியில் குறும்போடு கூறினாள்.

     "இனி பெயரே சொல்லிடறேன். எனக்கும் 'ங்க' போட்டு பேச கஷ்டமா இருக்கு. ஏதோ அழுத்தத்தோட பேசற மாதிரி. இதோ இப்ப யஷ்தவினு கூப்பிட்டதும் ஒரு பிரெண்ட்லி பீல் கிரியேட் ஆகுது" என்று சிரித்தான்.

    ஆத்விக் சிரிப்பில் இமை சிமிட்டாது பார்த்தவள் வியந்தாள். ஆத்விக் சிரிப்பது இதுவே முதல் முறை. இறுகி போயிருந்த முகமும், வாடிய முகமே கண்டவளுக்கு அவனின் புன்சிரிப்பு அத்தனை அழகாய் தெரிந்தது.

    முன்பு இருந்த இறுக்கம் அவள் முகத்திலும் இல்லை என்பதை அவள் கண்ணாடியோ அவள் உள்ளமோ பறைச்சாற்றவில்லை.

    சித்ராவும் பாலகுமாரும் நாளை மறுநாள் கொண்டாடப்படும் பாவனா பிறந்த நாளிற்கு வந்திறங்க இந்த காட்சிகளை கண்டு உவகை பொங்க கண்டனர்.

   அதன் பின் யஷ்தவி தாயை கவனித்து வரவேற்றாள். ஆத்விக் கூட "வா.. வாங்க மாமா வாங்க அத்தை" என்று மனதார தடுமாறி அழைத்து முடித்தான். அவனே அறியாது தான் உறவுமுறை கூறினான். கேட்ட பெரியவர்களுக்கு அத்தனை பேரானந்தம்.

      அன்பாளனிடம் பாலகுமார், சித்ரா இருவரும் நலன் விசாரித்து மகிழ்ந்தனர்.

     முன்ன விட பரவாயில்லை சம்மந்தி. இரண்டு பேரும் பேசிக்கறாங்களே" என்று வியந்தார் பாலகுமார்.

     "அட இப்ப தான் பேசுதுங்க. இதுக்கு முன்ன வாங்க போங்கனு தான் இழுப்பான். பாவனா பிறந்த நாளுக்கு தான் இந்த மாற்றம்." என்று அன்பாளன் கூறவும், "எந்த மாற்றம் யார் மூலமா வந்தா என்ன. அவங்க முகத்துல இறுக்கம் போய் இதம் வந்து இருக்கே இதுக்கே கடவுளுக்கு நன்றி சொல்லணும்" என்று வேண்டினார் சித்ரா.

       "அது வாஸ்தவம் தான்" என்ற அன்பாளன் "நானும் பிறந்த நாள் முடிஞ்சதும் ஊருக்கு போகணும். தொடர்ந்து என்னால இங்கயே இருக்க முடியாது. அதுவும் ஹார்ட் பேஷண்டா எப்படி நேரத்தை கடத்த" என்று தில்லுமுல்லை உடைத்து பேசிட அந்த நேரம் காபி தட்டோடு வந்த யஷ்தவி கேட்டு நின்றாள்.

    "இதை எதிர்பார்க்கலை மாமா. இப்படி பண்ணுவீங்கனு. அங்கிள்னு கூப்பிடாதே மாமானு கூப்பிடுமா. உங்க அம்மாவுக்கு அண்ணன் இருந்தா கூப்பிட மாட்டியானு நெயிற்ச்சியா பேசினப்பவே சுதாரிச்சியிருக்கணும்.

    இந்த செண்டிமெண்ட் பேச்சால தான் எங்கப்பாவிடம் முதல் திருமணத்தை ஏற்றுக்கொண்டு மௌனமா இருந்தேன். திரும்ப திரும்ப அதே செண்டிமெண்டை காட்டி கட்டி போட்டுட்டீங்களே இது நியாயமா?" என்று கேட்டாள்.

    தன் மகன் இதனை கேட்டு விட்டானோ என்று பயந்த அன்பாளன் உடனடியாக எட்டி பார்த்திட ஆத்விக்கோ பாவனாவை அழைத்து கொண்டு பைக்கில் முன்னே அமர வைத்து பறக்க சென்றிருந்தான்.

    "நடிக்க தான் செய்தேன். யாருக்காக என் பையனுக்காக. உனக்காக மா. ஏன் நீங்க தத்தெடுத்த அந்த பாவனாவுக்காக." என்று சீற்றத்துடன் பேசினார்.

-கிறுக்கல்கள் தொடரும்.

பிரவீணா தங்கராஜ் 





பஞ்ச தந்திரம் -18 (முடிவுற்றது)

 பஞ்ச தந்திரம்-18   திரிஷ்யா இரண்டு நாளுக்கு மேலாக நேரம் எடுத்துக்கொண்டாள்.    மஞ்சரியாக எதையும் கேட்கவில்லை ஏன் அப்படியொரு விஷயம் கூறி அவகா...