கற்பூரவள்ளி தோசை
கற்பூரவள்ளி தோசை
மொறு மொறுனு தோசையில. இந்த குளிருக்கு இதை முயற்சி பண்ணிப்பாருங்க. 😊😉
சாதாரணமா குழந்தைகளுக்கு என்றால் நாலு கற்பூரவள்ளியை தண்ணில கொதிக்க வைத்து கூடவே சுக்கு கிராம்பு பெப்பர் என்று நுணுக்கியதை போட்டு நல்லா கொதிச்சதும் வடிக்கட்டி தேன் கலந்து கொடுப்பேன். இல்லைனா நாட்டுச்சர்க்கரை அல்லது பனவெல்லம் போட்டு தருவேன்.
குழந்தைகள் குடிச்சிடுவாங்க. அதென்னவோ குழந்தைகளுக்கு என்று செய்யறப்ப செய்திடுவோம். இதே நமக்கு சளி இருமல் என்று வந்தா செய்ய தோன்றுவதில்லை. எனக்கு நான் செய்யாம சுத்திட்டு இருந்தேன்.
என் வீட்டுக்காரர் நான் இரும்பவும் திட்டிட்டுயிருந்தார். உடல்நிலையில் அக்கறையே இல்லை பிரவீணானு. நான் கொஞ்சம் ரோஷப்பட்டு இரண்டு தடவை குடிச்சேன். ஆனா தனக்கு செய்யணும்னா சோம்பேறித்தனம் வந்துடுது.
அப்ப உதிர்த்த மின்னல் ஐடியா தான் கற்பூரவள்ளி தோசை.
மாடில வளர்த்த கற்பூரவள்ளி செடியோட இலையை பறிச்சிட்டு வந்து குட்டிகுட்டியா கட்டம் வடிவத்தில வெட்டி தோசை ஊற்றி அதுல தூவி சாப்பிட்டு பார்த்தேன்.
அதோட ப்ளேவர் மென்று விழுங்கறப்ப நல்லா இருந்தது. அடுத்து பெரியபொண்ணுக்கு கொடுத்தேன். சாப்பிட்டா. இப்ப அடுத்தடுத்த நாட்கள்ல செடில இருபது முப்பது இலை பறிச்சி கட்பண்ணி தூவி சுட ஆரம்பிச்சேன்.
சின்னவளும் டேஸ்ட் பண்ணினா. ரியலி அடிக்கடி இப்படி செய்து சாப்பிடலாமேனு தோன்றியது. அதிகமா இலை இருந்தா இப்படி உபயோகப்படுத்திடலாம்னு ஐடியா வந்துச்சு. கூடவே சளிக்கு இருமலுக்கு கொஞ்சம் பெட்டரா இருக்கு.
முடிச்சா ட்ரை பண்ணி பாருங்க.
Comments
Post a Comment