நீ என் முதல் காதல்-35
அத்தியாயம்-35 ஸ்ரீநிதியாக ரிதன்யாவிடம் பேசி முடித்து கடிகாரத்தை பார்த்தவள் ம்ருத்யு வரும் அரவம் இல்லாததால், "நீ கிளம்பு. அவன் வெட்கப்படறான்." என்று ரிதன்யாவை அனுப்ப முயன்றாள். "சரி நான் கிளம்பறேன். பட் ஒன் கண்டிஷன் உன் வீட்டுக்கு டோர் டெலிவெரியா காம்போ ஆஃபர்ல பீட்சா, கோக், ப்ரென்ஞ்ச் ப்ரைடு பொட்டேட்டோ ஆர்டர் பண்ணிருக்கேன். வந்ததும் வாங்கிட்டு சூடா சாப்பிட்டு கிளம்பறேன். அதுவரை வெயிட் பண்ணுக்கா" என்று கூறவும் ஸ்ரீநிதி தலையிலடித்தபடி மாடிக்கு ஓடினாள். "ஏ... அத்தானை பிச்சி திண்ணுடாத." என்று கத்தவும் ஸ்ரீநிதி திரும்பி முறைக்க, ரிதன்யா வாய்மூடி க்ளுக்கி சிரித்தாள். ஸ்ரீநிதியோ என்னவோ கேலி பண்ணிக்கோ என்று மாடிக்கு விரைந்தால், அங்கே ம்ருத்யுவோ அதேயிடத்தில் மெத்தையில் வீற்றிருந்தான். "ரிது போயிட்டாளா?" என்று கேட்டதும், "பீட்சா ஆர்டர் பண்ணிருக்கா. வந்ததும் சாப்பிட்டு கிளம்பறேன்னு சொல்லிருக்கா. இப்ப கிளம்ப மாட்டா, நீ வா. அவளை பார்த்து ஷையா இருக்க அவசியமில்லை. அதெல்லாம் அடால்ட் டிக்கெட்." என்று கூறினாள். "இல்லை நா...