நீ என் முதல் காதல் -20

அத்தியாயம்-20

    ம்ருத்யுவுன் இதழ் முத்தம் மனதை அமைதிப்படுத்தியதென்றால் அவன் கைகள் முன்னேறியதில் மூளை விழித்துவிட்டது. 

   ம்ருத்யுவை தள்ளிவிட்டு, "நோ ம்ருத்யு ஐ கான்ட். ப்ளீஸ் ம்ருத்யு ஐ நீட் எ ஸ்பேஸ். எனக்கு ஜீவியோட பேசணும்." என்று அதிவேகமாக உரைத்தாள். 

    மலர் இதழ் முத்தமெடுத்த வண்டு இனத்திற்கு அடுத்த கட்டம் செல்லாமல் ஏமாற்றம் கொண்டது. அதனால் "ஜீவியை ஒருவேளை சந்திச்சா அவனோட போயிடுவியா?" என்று வார்த்தைகளை விழுங்கினான். 

    "ஏன் ம்ருத்யு உன் சாப்ட் நேச்சரை தொலைக்கிற? இனி ஜீவியே நல்லவன்னு முன்ன வந்து சொன்னாலும் நான் எப்படி அவனோட போகமுடியும்? அப்பாவுக்கு தலைக்குனிவாகாதா? எங்கம்மாவுக்கு தலைக்குனிவு செய்யணும்னு ஆசைப்படுறவ நான். ஆனா எங்கம்மா எங்க அப்பாவோடயும் என் அன்புக்கும் தான் அடங்கணும்னு ஆசைப்படுவேன். அடுத்தவங்க முன்னிலையில இல்லை. 

   ஜீவி வந்தா ஏன்டா இப்படி செய்தனு காரணம் கேட்டுப்பேனே தவிர அவனோட வாழ ஆசைப்பட மாட்டேன். 
  ம்ருத்யு நீ என் பிரெண்ட். இனி கணவனா அக்சப்ட் பண்ணிப்பேன். 
     இப்ப முத்தத்தோட புறக்கணிக்கறேன். இதோட அடுத்த கட்டம் அப்ப மனசார தருவேன். இப்ப வேண்டாம் ம்ருத்யு." என்றாள் தெளிவாக. 
  
    ம்ருத்யுவிற்கே தற்போது மனம் துவண்டது. ஜீவியை அடைத்து வைத்துவிட்டு யார் கட்டிப்போட்டதென்று தெரியாமல் இருந்திருக்க வேண்டுமோ? ஜம்பமாய் நான் தான் என்று அவன் முன்னே சென்று வசனம் பேசியது பெரிய தவறாயிற்று. இதே யாரென்று தெரியாத கணமெனில் பவ்யமாய் ஸ்ரீநிதியோடு வாழ்ந்திட இயன்றிருக்கும். இன்றோ நான் தான் ஜீவியை அடைத்து வைத்தது என்று அவன் வந்து கூறினால் தன் வாழ்வு முடங்கிடும். 

ஷண்மதி அத்தை சொன்னது போல முகம் காட்டாம மூன்று நாள் பசியோட அடைச்சி வெளியே விட்டிருக்கணும். என் தப்பு, என் தப்பு' என்று மனதில் புலம்பினான். 

   ஒரு மனமோ அதற்கும் மேலாக கிறுக்குத்தனம் செய்தது. ஜீவியை கொன்றுவிட்டால்? 

   இந்த எண்ணம் தோன்றியதும் ம்ருத்யுவிற்கு பகீரென்றது. 

  'சே நான் ஏன் இந்தளவு யோசிக்கறேன். பைரவ் அப்பா தாரிகா அம்மா எவ்ளோ சாப்ட். அம்மா எல்லாம் அதட்டினாலே வாயை மூடிடுவாங்க. அப்பா எந்தயிடத்திலும் பெருமை பேசுவாரே தவிர இப்படி ஒரு கொலை செய்யலாமா எல்லாம் யோசிக்கவே மாட்டார். அவங்களுக்கு பையனா இருந்து எப்படி இதெல்லாம்? நான் இப்ப செய்யற செய்கை வச்சி பார்த்தா இவங்க பையனே இல்லை.' என்று தன் எண்ணத்தால் தன் குணம் மாறுகிறதென சிந்தித்தான். 

   ம்ருத்யு அங்கும் இங்கும் உலாத்த, ஸ்ரீநிதியே "ஐ அம் சாரி. என்னால நீ மனசு சரியில்லாம சுத்தற. எனக்கு புரியுது. நான் உன்னோட வாழ மாட்டேன்னு சொல்லலை ரிலாக்ஸ். கட்டிப்பிடிச்சிட்டு தூங்கிடலாம். இப்பதைக்கு அதான் சொல்லியூஷன்." என்று கூறவும் கிடைத்திடும் இந்த அணைப்பை தவிர்க்காது படுத்துக்கொண்டான். 

   ம்ருத்யுவும் ஸ்ரீநிதியும் வெவ்வேறு சிந்தனையில் உழன்றார்கள். 

  ஸ்ரீநிதி சந்தேகம் எல்லாம் தன் தாய் ஷண்மதி மேல் வளர்ந்தது. 
    அன்னைக்கு என் காதல் தெரிந்திருந்தால், எனக்கு ஏன் நேரம் தந்திருக்க வேண்டும்? படித்து முடித்ததும் மணக்க ஏற்பாடு செய்திருக்கலாமே? ஆனால் அன்னை செய்யவில்லை.
  ஒருவேளை எப்பவும் போல என்னை விட ம்ருத்யு மீது அன்பாக மாறி, அவன் படிப்பு முடிவடையும் வரை எனக்கு நேரம் கொடுத்திருப்பாளா? இந்த சிந்தனை வந்ததும் இமை பட்டென திறந்தது. 

   அடிமனம் நிச்சயம் இருக்கும் என்றதே தவிர அப்படியிருக்காதென உரைக்கவில்லை. 
   பிளஸ் ஒன் படிக்கும் நேரம் தன் பள்ளியில் கடைசி பீரியட் முடியும் சமயம் லேப் எரிந்திட, பள்ளியே பரபரப்பாய் தீயை அணைக்கவும் அதிலிருந்த மாணவ மாணவியரை மீட்கவும் ஓடினார்கள். 
    ஷண்மதி ஓடிவந்த கணம் தன்னை விட, ம்ருத்யுவை அல்லவா நலம் விசாரித்தார். 

   அந்த மயக்கத்தில் கரும்புகை வெளிச்சத்தில் அன்னையின் நலன் விசாரிப்பு தனக்கில்லை ம்ருத்யுவிற்கு என்றதும் ஸ்ரீநிதி மனம் துண்டு துண்டாக அறுபட்டது. 

    எப்பவும் ம்ருத்யு என்றால் அன்னைக்கு பிடிக்கும். அது வீட்டின் மூத்த வாரிசு என்றதால் அல்லவா நினைத்திருந்தாள். 
  வீட்டின் மூத்த வாரிசாக உதித்ததவன் ம்ருத்யுவாக இருக்கலாம். ஆனாலும் ஒரு அன்னைக்கு தன் குழந்தை நலம் அல்லவா முதலில் கேட்க தோன்ற வேண்டும். அன்னைக்கு தன் உயிர் இரண்டாம்பட்சமா? 

  அன்று தோன்றிய வெறுப்பு ஷண்மதி மேல். அதற்கு துபாம் போட்டது போல யுகேந்திரன் மனைவியிடம், 'ஓகே ஷணு'  'சரி ஷணு.' 'நீ முடிவெடுத்தா எல்லாம் சரியா தான் இருக்கும்.' 'அடியேய் நான் சொன்னா கேட்பியா. நீ தான் பிடிவாதக்காரியாச்சே. 
  என்னவோ செய்.' 'நான் என் குழந்தைகளுக்கு அப்பாவா, உன் கணவரா வந்து ஆஜராகிடறேன்' என்ற காதல் பேச்சு எல்லாம் தந்தையை தாய் அடிமையாக வைத்திருக்கின்றாளென்று தவறாகவே எண்ண வைத்துவிட்டது. 
   
   ஷண்மதி ம்ருத்யுவை பிடிக்கும், தாத்தா உருவாக்கிய தொழிலை முடங்காமல் பார்த்துக்கொள்ள பிடிக்கும். எங்கும் திமிரோடு வலம் வருவதே அன்னை செயல். அதனை உடைக்க வேண்டுமென்று ஸ்ரீநிதி மனதில் ஆழப்பதிந்தது. 

     அதனால் தான் ஷண்மதி என்றால் அரக்கியாக நினைத்தாள். உண்மையில் தன்னிடம் வம்பு வளர்க்க வந்தவர்களுக்கு கொஞ்சம் அரக்கி முகம் காட்ட தான் செய்வாள். பாரபட்சமெல்லாம் கிடையாது. 

    சிந்தனை அன்னை ஷண்மதி மீது சந்தேகத்தை வலுக்கவும், தந்தை யுகேந்திரன் கூறிய அவர் காதல் கதையில் தாய் அவருக்கு பார்த்த வரனை அதே மேரேஜ் பில்டிங்கில் அடைத்து வைத்தது நினைவுவந்தது. 
    அதே போல ஜீவியை அடைத்து வைத்திருந்தாள்? என்றதும் உடல் தூக்கிவாறி போட்டது. (நான் கொஞ்சம் அரக்கி கதை)

  ம்ருத்யுவிடம் அதை கூறி தேட கூறலாமா என்று எண்ணியவளுக்கு, அவசரப்படாதே அவனே நடந்த திருமணத்தில் தன்னை மனைவியாகவே பாவித்து, தன் மனைவியிடம் முத்தமிட்டு முன்னேறினால் ஜீவி என்கின்றாளே என்ற வேதனையோடு இருப்பானென்று தேடுதலை நிதானப்படுத்த செய்தாள். 

   ம்ருத்யுவும் உறங்கவில்லையே, மனமெல்லாம் ஜீவியோடு ஸ்ரீநிதி சென்றிடுவாளா? அவளை தக்க வைக்க என்ன செய்யலாமென்று பைத்தியம் பிடிக்காத குறை. 
  நிச்சயம் ஸ்ரீநிதியை அதட்டி மிரட்டிஅடக்க இயலாது. அவள் அந்த குணத்திற்கு பொருந்தாதவள். கணவன் சொல் கேட்டு ஆடுபவள் அல்ல. சுயமாக முடிவெடுக்கும் பெண். 

அது சரியென்றால் யார் எதிரே இருந்தாலும் செவிமடுக்காதவள். நிச்சயம் தன் செய்கை தவறானது. தன்னை திட்டி முடித்து ஜீவியோடு செல்வதற்கே சாத்தியம் அதிகம். அதற்குள் ஏதேனும் சிந்தித்து முடிவெடு என்ற மனதின் ஒலத்தை விட ஸ்ரீநிதி அணைப்பு இதம் தந்திட உறங்கியிருந்தான். 

  ஸ்ரீநிதி ம்ருத்யு உறங்கியப்பின் நேராக ஹோட்டல் மேனேஜரை காண சென்று, இங்கு எத்தனை அறைகள் உள்ளது தன் தாய் எங்கே அடிக்கடி செல்கின்றாளென்று கேட்டாள். 
   'மேம் அதெல்லாம் கவனிக்க முடியலை. நீங்க வேண்டுமின்னா சிசிடிவி செக் பண்ணிக்கோங்க' என்று விழித்தான். பின்னே கல்யாணப்பெண் முதலிரவு அறையில் இல்லாமல் இங்கு வந்து அவளது அன்னையை பற்றி கேட்டால்? 

   ஷண்மதி யுகேந்திரன் அறையில் உறங்கவும், ஸ்ரீநிதி ஷண்மதியை அவளது பி.ஏ.ஜான்சியை அவளது கணவரை எல்லாம் அதில் கண்காணித்தாள். 
   அவர்கள் எல்லாம் சுற்றி சுற்றி வந்தவரை கவனித்தார்கள். நேரம் கழிந்ததே தவிர ஷண்மதி எங்கேயும் யாரையும் காண செல்லவில்லை. 

   'இந்த ம்ருத்யு வேற குறுக்கமறுக்க எங்க போறான்'. என்று கடுப்போடு இருக்க ஷண்மதி ம்ருத்யு பேசும் காட்சி சிக்கியது. 

   'இதுங்க இரண்டும் என்ன பேசுதுங்க. சே ஆடியோ கிடைக்காதே'  என்று சலித்தாள். 

   ஷண்மதியிடம் தலையை தலையை ஆட்டிய ம்ருத்யு மீது அடுத்த சந்தேகம் முளைத்தது. 

      வேகமாய் ம்ருத்யு எங்கிருந்து வந்தானென்று பேக்வார்ட் செய்து பார்த்தாள். ஒரு குறிப்பிட்ட அறைக்குள் செல்பவனை கண்டாள். அதே அறைக்கு எத்தனை முறை போனான் என கணக்கெடுக்க, திருணம் ஆனப்பின் இடைப்பட்ட நேரத்தில் இரண்டு முறை போயிருப்பதாக காட்டியது. 

   இவன் கல்யாணம் முடிஞ்சி தனியா சுத்தறான்? அதெப்படி தனியா போவான்.? எங்கப்போவான்? என்று அந்த அறைக்கு செல்ல தயாரானாள். 
  
   அந்த அறையின் சாவியை வேறு கேட்டாள்.  
  மேனேஜரோ ஷண்மதி எதற்கு ஒரு வாரம் திருமண மண்டபத்தை புக் செய்து பணத்தை தந்தாளென்று தெரியவில்லை. இதில் மகள் வேறு அச்சுறுத்தும் வகையில் நள்ளிரவு வந்து அறைச்சாவியும், சிசிடிவி புட்டேஜ் பார்ப்பதும் என்று கிலியை கிளப்ப, சாவி எடுத்துக்கொண்டு ஸ்ரீநிதியை பின் தொடர்ந்தார் மேனேஜர். 
  ஸ்ரீநிதியோ அறைக்குள் அறைகளில் புகுந்து செல்ல கடைசியாக தாழிட்டு பூட்டு வேறு வரவேற்றது. 

   "இதுக்கு சாவி எங்களிடம் இல்லை மேம். எங்களோடது இந்த மாதிரி ஒரு சாவி கீ தான்  இது வேற" என்று மேனேஜர் தன்னிடம் உள்ளதை காட்டிஉரைக்க, ஸ்ரீநிதியோ அங்கிருந்த இரும்பு விளக்கை வைத்து உடைத்தாள். 

   மேனேஜர் வேடிக்கை பார்த்து இதுக்கும் பில் போட்டு செலவுல எழுதிடலாமென்ற எண்ணத்தில் அமைதியானார். 

  ஸ்ரீநிதியோ பயத்தில் தான் கதவில் கை வைத்தாள். ஜீவி இறந்து கிடந்தால்? அதை எண்ணியதற்கே பகீரென்ற உணர்வு தாக்கியது. 
   நெஞ்சில் கைவைத்து கதவு திறக்க சிறு விளக்கொளியில் சேரில் கட்டப்பட்டு ஜீவி உறங்கி வழிந்தான்.

  மேனேஜரோ அறைக்கு வெளிச்சத்தை சுவிட்ச் போட்டு ஒளிர செய்தவுடன் "ஜீவி ஜீவி" என்று ஓடினாள். 

  அவன் கன்னம் ஏந்தி பதற, உயிரோடு இருப்பதை அறியவும் நிம்மதியுற்றாள். வேகமாய் கட்டுகளை அவிழ்த்தாள். மேனேஜர் தண்ணீர் பாட்டிலை நீட்டினார். 
   
  ஜீவியோ வாங்கி பருகி பாதி சட்டையில் வழிய, ஶ்ரீ நிதியை கட்டி அணைத்தான். 

''ஶ்ரீ ஶ்ரீ அவன் அவன் உன் ம்ருத்யு" என்று கூற கூற ஶ்ரீநிதி முகம் வெளிறியது. 

-தொடரும். 
-பிரவீணா தங்கராஜ் 

   
  

  

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

தித்திக்கும் நினைவுகள்-1