இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பஞ்ச தந்திரம்-13

பஞ்ச தந்திரம்-13     சூர்யா வந்தப் பிறகு அன்றைய இரவு ரொம்பவே ஹாப்பியா இருந்தோம்.         எங்களுக்கான வாழ்க்கை ஒளிமையமா தெரிந்தது. மிலிட்டரிக்கு நேரம் முடியற வரை அவரும் சும்மா தானே வீட்ல இருந்தார். இனிக்க இனிக்க தினமும் தேன் நிலவு தான்.       ஒரு பெண் எந்தளவு சந்தோஷமா வாழணுமோ அந்தளவு ரொம்ப சந்தோஷமா மனநிறைவா வாழ்ந்தேன்.     சூர்யா கூட அடிக்கடி கேட்பார். 'ஏன் ரஞ்சு.. அப்பா அம்மா மீறி கல்யாணம் பண்ணிட்டோம். ஏதாவது பீல் பண்ணறியா. அப்படின்னா சொல்லு... காஸ்மீர் போகறதுக்கு முன்ன காம்பர்மைன்ஸ் பண்ணிட்டு போறேன்'னு சொன்னார்.         நீங்க எதுவும் சமாதானம் பண்ண வேண்டாம். அவங்களா ஒரு நாள் வருவாங்க சொன்னேன். உறவுகள் தானா நம்மளை முழுமையா மாத்தும்னு நற்பினேன்.     ஆனா எங்க வீட்லயும் அவர் வீட்லயும் சுத்தமா சேர்த்துக்கலை. நானும் உடனே கன்சீவ் ஆகிட்டேன். ஒரு குழந்தை பிறந்தா எல்லா உறவும் வரும்னு சொல்வாங்க. ஒருவேளை வாயும் வயிறுமா இருந்தா வீட்டுக்கு முன்ன போனா சேர்த்துப்பாங்கனு கூட போனேன். வாசல் கதவை அடைச்சி நாயை விட்டு துரத்த பார்த்தாங்க. நான் வளர்த்த நாய் என்னை துரத்தலை நானா வந்துட்டேன்.  சூர்யாவும்

தீவிகை அவள்🪔 வரையானல் அவன்🔥 -3

படம்
  தீவிகை அவள்🪔 வரையனல் அவன்🔥-3 ஆரவ் தனது வீட்டுக்கு வந்தபின் குறுக்கும் நெடுக்கும் அந்த அக்ரிமெண்டை வெறித்து பார்த்தான்.      எத்தனை பேரோட கனவை சந்தோஷமா கொண்டாட முடியலை. எல்லாம் அவளால்... அவளால் மட்டும் தான்.       'சம்யுக்தா...' என்ற பெயர் இருக்கும் இடத்தை கிழித்தெறிய முடியாது தனது ஷோகேஸ் இருந்த புத்தகத்தை எல்லாம் தள்ளி விட்டான்.      சுபாங்கினி வந்து ஆரவ் அமர்ந்து இருக்கும் தோரணையே சரியில்லை. அதுவும் இந்த அறையை உலுக்கி எடுத்தது போன்ற செய்கை பயத்தை தந்தாலும் மகனிடம் எதனால் என்று துணிந்து கேட்டிட தடுத்தது.           "ஜனனியே பார்த்ததா அவங்க அம்மா போனில் சொன்னாங்க. என்னப்பா நேர்ல பேசி பிடித்ததா?" என்றதும்      "கல்யாணம் எப்பமா? அலுவலகத்தில் வேலையை எல்லாம் அதுக்கு ஏற்றாற்போல மாற்றிப்பேன்" என்று கலைத்த புத்தகத்தை அடுக்க ஆரம்பித்தான்.      "அடுத்த மாதம் மார்கழி மாதம் ஆரவ் அதனால் இந்த மாதம் இரண்டு முகூர்த்த தினம் வருது 19, 28 . அதுல இரண்டாவது முகூர்த்தம் பேசிட்டோம் ஆரவ். வர்ற 28ஆம் தேதி திருமணம். அன்று இரவு வரவேற்பு என்று பேசியாச்சு. உனக்கு சவுக

தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥 - 2

படம்
  🪔 🔥 -2       கதவை திறக்க அக்கா வைஷ்ணவி தாய் சுபாங்கினி இருவரும் உள்ளே வந்து நிற்க வைஷ்ணவி டிரஸிங்க் டேபிளில் இருந்த புகைப்படத்தை கண்டாள்.      "அம்மா நீ சொன்னப்ப நம்பலை. இப்ப நம்பறேன். இங்க பாரு அவன் கண்ணாடி பக்கத்துல பொண்ணு போட்டோ வைத்து இருக்கான்." என்றதும் ஆரவ் போட்டோவை பார்க்க அவன் தூக்கி எறிந்த கணம் அது அழகாக குத்தவைத்து பாடி ஸ்பிரே பின்னால் கண்ணாடியில் ஒட்டியது போல நின்று இருந்தது.      அவன் மறுக்க வாய் திறக்க, அவன் அன்னையோ "என்மகன் தான் சொன்னதை செய்வான். எனக்கு தெரியுமே." என்றவர் மகனின் தாடை பிடித்து, "உனக்கு சம்மதமென்று சொல்லிடலாமா ஆரவ்" என்று கேட்டதும் என்னனென்னவோ யோசனைகள் அலைகழிக்க முடிவுகள் மனம் எடுக்கவிடாது மூளை எடுத்தது.      "சரிம்மா" என்று உதடுகள் வாய் வார்த்தையாக சொல்லியும் விட்டான்.        "சரி சாப்பிட வா. உனக்கு பிடிச்ச பருப்பு பாயாசம் செய்து இருக்கேன்." என்றதற்கு,      "நான் சாப்பிட்டேன் மா. வயிறு நிரம்பிடுச்சு. எனக்கு வேண்டாம் தூக்கம் வருது" என்றதும் "சரி நாங்க போறோம். தூங்கு ஆரவ். ஆரவ்... போன வேலை

ஒளியும் ஒலியும்

படம்
    இன்று காலையில் எழுந்ததும் சன் மியூசிக் வைத்து விட்டு பாலை காய்ச்சி அடுப்பை பற்ற வைத்தாள் அதிதி. அதில் வரும் விளம்பரத்தை பொருத்து கொள்ளாது உடனே மாற்றினாள் மகள். அதில் சிங்க பெண்ணே என்று பாடல் அதிர மகள் உதடு தானாக பாடல் கூடவே  இணைந்தது.        வித்யுத் வருகையில் ரிமோட் கை மாற அடுத்து 'இசையருவி'யில் மெல்லிய கீதமாக பாடல் ஒலிக்க அதில் அதிதி வித்யுத் பார்வை பரிமாற்றம் இதழோரத்தில் புன்னகை அரும்ப    அவர்களின் 90 கிட்ஸ் வரிசையில் இதுவும் ஒன்று.  மறக்க இயலாத நிலை. சினிமாவின் பாடல் இசையில் அந்நாளை எண்ணி பார்த்தது. இப்பொழுது போல பாடல் ஒளிபரப்பி கொண்டு இருக்க மாட்டார்கள். வாரம் ஒரு முறை அரை மணி நேரம் பாடல்.        வித்யுத் எட்டு வயதில் ஒளியும் ஒலியும் பார்க்க ஆர்வமாக அமர ஆறு வயது அதிதி அவனோடு விளையாட கூப்பிட்டபடி அழுதாள்.         சின்னசிறு அழுகை கொண்ட அந்த தளிரான அதிதியின் அழுகையில் பெரியவர்கள் "வித்யுத் பாப்பா அழறா வேடிக்கை பார்க்கற என்ன?" என்று வித்யுத் கேட்டதும் தாமதம்.      "அப்பா அவ விளையாட கூப்பிடறா எனக்கு ஒளியும் ஒலியும் பார்க்கனும்" என்று வாரத்தில

கனவில் வந்தவளே

படம்
கனவில் வந்தவளே          கனவில் பார்த்த நங்கைக்கும் நிஜத்தில் வந்த அவளுக்கும் உருவம் மட்டுமே ஒற்றுமை இருக்க எண்ணங்கள் மாறுபட்டு இருக்கும் அவளை தன் எண்ணங்களோடு கலந்து கைத்தலம் பற்றிடும் நாயகனின் கதை. amazon பிரதிலிபி இணைப்பு இங்கே கொடுத்து உள்ளேன். கனவில் வந்தவளேkdp கனவில் வந்தவளே

விழிகளில் ஒரு வானவில்...

படம்
விழிகளில் ஒரு வானவில்                              நட்புக்கும் காதலுக்கும் மாட்டிக்கொண்டு விழிக்கும் மென்மையான நாயகனின் கதை. இக்கதையும் முழு தொகுப்பு இங்கே இருந்து நீக்கப்பட்டு உள்ளது.  இக்கதையினை கீழ் காணும் லிங்க் மூலமாக சென்று வாசிக்கலாம்.  விழிகளில் ஒரு வானவில்   amazon  விழிகளில் ஒரு வானவில்   பிரதிலிபி 

மேதினி உதயம்

படம்
                                                            மேதினி உதயம்                   கோவிட்-19, இது சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசு மனிதர்களிடம் ஏற்படுத்தும் தொற்று நோயாகும். சீனாவின் ஊகான் நகரத்தில் இது ஏற்படுத்திய கொடிய தாக்கத்திற்குப் பின்பு தான் இந்த பெயர் வைக்கப்பட்டது. 2019–20 தொற்று            கொரோனா வைரசு காற்று வழியாகப் பரவுவதை விட, மூச்சுவிடும் துளிகளுடன் தொடர்பு கொள்வதன் மூலமே பெரும்பாலும் பரவுவதாகவும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட  அறிவியல் ஆய்வுகள் இதை உறுதிப்படுத்துவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.                   கொரோனாவைரசு பாதிக்கப்பட்டவரிடம் இருந்து தான் இது பரவுகிறது. கோவிடு -19 இருக்கும் நபர் இருமும்போதோ அல்லது மூச்சுவிடும்போதோ, மூக்கு அல்லது வாயிலிருந்து வெளியேறும் சிறிய நுண்துளிகள் மூலம் மற்றொரு நபருக்குப் பரவுகிறது. சில சமயம் இந்த துளிகள் பாதிக்கப்பட்ட நபருக்கு அருகில் இருக்கும் பொருளிலோ அல்லது நிலத்திலோ விழுந்து விடும். நோய் பாதிப்பு இல்லாத நபர் இந்த துளிகள் இருக்கும் பொருளையோ இடங்களையோ கையால் தொட்டு விட்டு பின்பு அவரது கண், மூக்கு,

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

படம்
                                         தீவிகை அவள் வரையனல் அவன்   🪔 தீவிகை🔥 வரையனல் -1           ரிசப்ஷன் பெண்ணிடம் தனது கார்டை கொடுத்து காத்திருந்தான் ஆரவ்.     "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்" என்றவள் அமர இருக்கும் அறையை சுட்டி காட்டி போனை எடுத்து, பேச ஆரம்பித்தாள்.      ஆரவிற்கு பொறுமை என்பதே குறைவு அதிலும் வேண்டுமென்றே சீண்டப்படும் பொறுமையை உடனே கலந்து செல்வது அவன் சுபாவம்.      ஆனால் தற்போது இந்த பணிக்கு பின் இருக்கும் சிலரின் நம்பிக்கைகாக காத்திருக்க துவங்கினான்.      ஆம், அவனுக்கு பின்னால் இருக்கும் தொழிலாளருக்காக தனது சுபாவத்தை கொஞ்சமே தளர்த்தி உள்ளான்.      ரிசப்ஷன் பெண் அமர சொன்ன இடத்தில் வந்தமர்ந்தான் நிமிர்ந்து அமர்ந்து கால் மேல் காலை போட்டு இடங்களை அலசினான்.      நல்ல கலை ரசனை காத்திருப்போர் நேரம் கலைரசனையாக மனம் மாறவே பிரபல ஓவியத்தினை பார்வைக்கு வைத்திருப்பார்கள் போல.     ஆரவ் ஆறடி ஆண்மகன். முகம் அழுத்ததுடன் இருக்கும். அவன் முடிவுகளை போலவே. ஆனாலும் அம்முகத்தில் ஈர்க்கும் சக்தி உண்டு. கண்கள் செந்தணலாக காட்சியளித்து சினத்தை பிரதிபலித்தாலும் நங்கை மனம