முதல் முதலாய் ஒரு மெல்லிய-16 & 17

 


 💘16
          

அடுத்த நாளே கம்ப்யூட்டர் வகுப்பு சேர்ந்தாள். சுவாதி புதிய உற்சாகத்தோடு அழகாக வலம் வந்தாள். இருக்காதா பின்னே ஆகாஷ் காதலுக்கு செவிசாய்க்கப்   போகிறாள்.


நேராக ஆகாஷ் அறைக்கு சென்றாள். 'ரூமா இது சரியான குப்பை. லூசு அறையை கூட நீட்ட வச்சிக்க தெரியலை இவனை...' என தனியாக பேசியபடி அறையை சுத்தம் செய்து அவனது வருகைக்காக காத்திருந்தாள்.

 

 சோர்வு நடையுடன் வந்தவனுக்கு இன்ப அதிர்ச்சியாக சுவாதி கண் முன் நின்றாள்.


''
நீ நீ... எப்படி?'' என்று கேட்டு கனவு என்றே மெத்தையில் அமர்ந்தான்.


''
என்ன இது தேவதாஸ் மாதிரி தாடி''


''
ம்...'' என முறைத்து விட்டு எப்பவும் போல ''இது கனவா? இல்ல நிஜமா?'' என்று வாயில் உளறினான்.


''
நிஜம் தான். ரூமை பாரு சுத்தமா இருக்கு, கனவுல ரூம் கூட சுத்தமா மாறுமா?'' என்று துடுக்காய் கேட்டு அவனை கிள்ளினாள்.


''
ஏய்... நீ நிஜமா?'' என்று துள்ளினான் ஆகாஷ்.


''
ம்.. நிஜம் தான் நானும்... உங்களை விரும்பறேன் போதுமா” என்று ஓட முயன்றாள்.

 

 

ஆகாஷ் கையை பிடித்து நிறுத்தவும். தயக்கமாய் “நான் கிளம்பறேன். கீழே அத்தை தேடுவாங்க'' என்று தந்தியடிக்க பேசினாள்.


''
ஏய் ஏய்... எங்கப் போற இப்ப தான் ஓகே சொல்லி இருக்க அதுக்குள்ள பையா? எனக்கு ஒரு நிமிஷம் நிலைமையை ரசிக்க விடு சுவாதி. உங்கிட்ட நிறைய பேசணும் உன்னை...'' என்று பேசி கொண்டே போனவனை நிறுத்தினாள்.


''நான் மூவி தட்டு எடுக்க வந்தேன். அத்தை அப்பறம் கண்டு பிடிச்சா?  நாளைக்கு பார்க்கலாம்'' என்று ஓடியே சென்று விட்டாள்.

 

தனுவிற்கு படிப்பு, ஆகாஷ்-சுவாதி காதல் சந்திப்பு, பவித்ரா படிப்பு புதியதாக சேர்ந்த கம்ப்யூட்டர் கோர்ஸ் வேறு, அஸ்வினின் காதல் பார்வையென நாட்கள் மாதங்களாக ஓடின.


அன்று பவித்ராவுக்கு சில பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட, ஸ்ரீராம் வீட்டிற்குச் சென்றாள். அங்கு முதல் மாடியில் கம்ப்யூட்டர் பிரிண்ட் அவுட் இருந்தன.


''
நீ போ பவித்ரா, சிஸ்டம் ஆன்ல தான் இருக்கு, நான் சாப்பிட எதாவது எடுத்துட்டு வர்றேன்'' என்று அனுப்பினான்.


''
சரி சீக்கிரம் வா'' என்று சிஸ்டம் ஆன் செய்து டெஸ்க்டாப் பார்த்தவளுக்கு அதிர்ச்சி, இருக்காதா பின்னே அவளது புகைப்படம், மேலும் பவித்ரா போட்டோஸ் என்ற போல்டெர் இருக்க, ஓபன் செய்து பார்த்தால் விஸ்வநாதன் குடும்பத்தோடு மகாபலிபுரம் சென்ற அந்நாளில் எடுத்த அவளது புகைப்படம்.

 

சற்று உற்று நோக்கும் போது அஸ்வின் பாதம் தெரிய, இதை எடுத்தது அஸ்வின் என நன்கு விளங்கியது.

 

பிறகு ஸ்ரீராம் கம்ப்யூட்டரில் எப்படி? வேகவேகமாக மற்றொரு போல்டெர்யை ஓபன் செய்ய ஸ்ரீராம் தோளில் அஸ்வின் கை போட்டு எடுத்த புகைப்படங்கள்.

 

அப்படி என்றால் இருவரும் நண்பர்களா? ஸ்ரீராம் கூட அடிக்கடி என் பிரென்ட் இருக்கான், இப்ப நீ.. என்றானே.
என்னை ஏமாற்றி விட்டான், தோழன் என்ற முறையில் அவனிடம் தன்னை பற்றி எல்லாம் கூறினாளே... வேகமாக படியிறங்கி சொல்லி கொள்ளாது கிளம்பினாள்.


இதை அறியாது பாப்கார்ன் பொரித்து எடுத்துக் கொண்டு அறைக்கு வர, அஸ்வின் ஸ்ரீராம் புகைப்படம் கம்ப்யூட்டரில் தெரிய ‘கடவுளே பார்த்துட்டாளா?!அஸ்வினுக்கு உடனே கால் செய்தான்.


''
அஸ்வின் பவித்ரா டெஸ்க்டாப்ல இருக்கற போட்டோஸ் பார்த்துட்டா. முக்கியமா நீயும் நானும் இருக்கற போட்டோஸ் '' என்றிட '' பார்த்துட்டாளா?! சரி பரவாயில்லை வீட்டுக்கு வா பார்த்துக்கலாம்'' என்று கூலாக சிரித்தான் அஸ்வின்.


  ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தாள் பவித்ரா. சற்று நேரம் மனதை ஒரு நிலைப்படுத்த, அஸ்வின் ஸ்ரீராம் இருவரையும் வாசலில் பார்த்து பவித்ரா ரூமிற்குள் ஓடி தாழிட முயன்றாள். அஸ்வின் சிரிக்க ஸ்ரீராமோ  ''வாயை மூடுடா'' என திட்டி விட்டு ''ப்ளீஸ் பவித்ரா சொல்றதைக் கேளு'' என கதவைத் தாழிடாமல் தடுத்தான்.


''
இனி நீ சொல்றத கேட்க அவசியம் இல்லை, அதான் பார்தேனே உன் ப்ரெண்டை'' என பொறுமை இழந்துக் கதவை வேகமாக தள்ள பவித்ரா ஸ்ரீராம் உள்ள வர கதவு அதே வேகத்தில் மூடின.


''
நான் சொல்றதை கேளு பவித்ரா'' என்று ராம் கெஞ்சினான்.


''
வெளிய போ'' என்று நம்பிக்கை பொய்யானதில் கோவமானாள்.


''
நான் அவன் பிரென்ட் தான். ஆனா எந்த காரணத்துலையும் உன் பிரென்ட்ஷிப்யை இழக்க மாட்டேன். உன் பர்சனல் லைப் ஷேர் பண்ணினது இல்லை. உன்னை பத்தி புரியுதா?'' என்று சமாதானம் புரிந்தான்.


''
நான் நம்ப மாட்டேன்'' என்று மறுத்தாள்.


''
டிரஸ்ட் மீ பவித்ரா... அங்கிள் எப்படியோ அதே நிலை தான் எனக்கும்'' என்றதும் பவித்ரா அவனை உற்று நோக்கினாள்.
''நீ... நீ ஏன் முதல்லயே சொல்லல?'' என்று திட்டினாள்.


''சாரி மா... அவனுக்கும் எனக்கும் ஒரு சேலேன்ஜி, அவன் கூப்பிடமா நான் அவன் வீட்டுக்கு வர மாட்டேன்னு. நானா வருவேனு அவன் சேலேன்ஜி செய்தான். அதான் அன்னிக்கு கூட அவன் கூப்பிடமா வரலை. பஸ்ட் டைம் நீ காலேஜில பார்த்தியே அப்ப கூட உன்னை பார்க்க அந்த ராஸ்கல் தான் வர சொன்னான். நீ சாப்பிடலைனு அவனா தான் வந்து நான் சேலேன்ஜில தோற்றுட்டேன் வீட்டுக்கு வாடானு சொன்னான்.''


''
அஸ்வின் தோல்வியை ஏற்றுக் கொண்டானா?''


''
ம் ம்... நான் என்ற காரணத்துனால இருக்காலம். முக்கியமா உனக்காக நீ சாப்பிடாம இருந்ததால இருக்கும். வெளியே வா ப்ளீஸ் சாரி'' என்று கூறவும் பவித்ரா அவனை மன்னித்தாள்.


இருவரும் வெளியே வர ''என்னடா உன் பிரென்ட் கண்விஸ் ஆனால'' என சிரித்து வெறுப்பு ஏற்றினான்.


''
நீ அடிவாங்க போறடா அஸ்வின்...'' என்றான் ஸ்ரீராம்.


ஒரு வழியாக சமாதானம் செய்து உணவு உண்டான்.


''
ஆன்ட்டி இப்படி வீட்ல சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு. ஐ அம் ஹாப்பி டுடே, எல்லா கிரிடிட்டும் பவித்ராவுக்கு தான்.'' என்றான் ராம்.


''
டேய், நான் தாண்ட நீ இங்க இருக்க பிள்ளையார் சுழி போட்டவன்.'' என்று அஸ்வின்  இடைவெட்டி கூறினான்.


''என்ன யூஸ் ஒரு நாள் ஈகோ பார்க்காம கூப்பிட்டு இருந்தா எப்பயோ வந்து இருப்பேன். பவித்ரா தான் ரீசன்.'' என்று ராம் அதேயே கூறினான்.


''
ஓகே டா, நான் தனி ரகம் தான் போதுமா. உன் பிரென்ட் என்கிட்ட பேசமாட்டாளா?'' என்று பவித்ரா தன்னை ஆசையாய் ஏறிட மாட்டாளாயென ஏங்கினான்.

 
ஆகாஷிற்கோ ''டேய் நீங்க பேசியே நான் இப்ப தான் பார்க்கறேன். காலேஜில பேசி பார்த்தது இல்லையே? நான் பார்த்தவரை சண்டை போட்டு சுத்திட்டு இருந்திங்க'' என்று புலம்பாத குறையாக கேட்டான்.


''கம்ப்யூட்டர் கிளாஸ், டிரைவிங் கிளாஸ் ஒன்னா தானே போனும்.'' என்றான் ராம்.


''
ஏன் பிப்த்ல இருந்து நாங்க பிரென்ட் தெரியுமா?'' என்றான் அஸ்வின்.


''
எப்படி டா?'' என்றான் நம்பாத ஆச்சரியத்தோடு ஆகாஷ்.


''
டியூஷன் சென்டர். நீயும் நானும் ஒரே டியூஷன் போனா ஒழுங்கா படிக்க மாட்டோம் என்று நீ வேற டியூஷன் சென்டர் நான் வேற சென்டர் அதனால அப்ப இருந்தே ஸ்ரீராம் என் பிரென்ட்'' என்றான் அஸ்வின்.


''
சரி டா நான் கிளம்பறேன், மார்னிங் காஞ்சிபுரம் கான்ஸ்டரக்ஷன் போகணும்.''


''
ம்'' என்று அஸ்வின் கிளம்பு என்று பவித்ராவை தீவிரமாக பார்வை பொதித்து ரசித்தான். 


''
பவித்ரா பை''


''
போடா'' என்று சொல்லி உள்ளே சென்றாள்.
''
பை ஆன்ட்டி பை ஆகாஷ், அஸ்வின் பை டா''
ஸ்ரீராம் கிளம்பி சென்றதும் அஸ்வின் பவித்ராவிடம் வந்து
''
தேங்க்ஸ் பவித்ரா நீ இல்லனா அவன் இப்பவும் வந்து இருப்பான என்பது டவுட்'' என்று நெகிழ்ந்தான்.


சுவாதியும் கிளம்பினாள் ஆகாஷ்ற்கு தனியாக மொபைல் காட்டி சாட் பண்ணலாம் பை என்றாள்.


தனு வந்ததும் சாப்பிட்டனர் இனிதாகப் போனது.



 💘17
    

அதிகாலை தோட்டத்தில் விஸ்வநாதன்  அமர்ந்திருக்க  ''அங்கிள் குட் மார்னிங், இந்தாங்க பேப்பர்'' என்றபடி பவித்ரா வந்தாள்.


''
இது அநியாயம் பவித்ரா''


''
என்ன நியூஸ் அங்கிள்?''


''
நியூஸ் இல்லை மா நீ கூப்பிடறது.''


''
என்ன?''


''
பின்ன என்னம்மா ராதையை அத்தைனு கூப்பிடற, தவசுடரை பெரிம்மானு கூப்பிடற, தனு உன்னை அண்ணினு கூப்பிடறா நான் மட்டும் அங்கிளா?'' என்று அங்கலாய்த்தார்.


''
அது அன்பு கட்டளை அங்கிள்''


''
என்னையும் மாமானு அழகு தமிழிலே அழைக்கலாமே?'' என்று கூறவும் விஸ்வநாதன் எண்ணமும் அறிந்து கொண்டாள்.


''
ட்ரை பண்றேன் அங்கிள்''


''
எனக்கு தெரியாது நீ என்னை மாமானு தான் கூப்பிடணும். நீ முறை வைத்து சொன்னா அஸ்வினை முடிச்சி போட்டு நினைக்க மாட்டேன். '' என்று கூறிச் சென்றார்.


தன்னை யாரோ உற்று நோக்குவதை உணர்ந்து அஸ்வின் அறையைப் பார்க்க, அவள் எண்ணியதைப் போல் அஸ்வின் பால்கனியில் இருந்து, அவன் கைகளால் தலையை தொட்டு எடுத்து ''குட் மார்னிங்'' என்றான். 


உடனே தலைகவிழ்ந்து வீட்டிற்குள் செல்லச், சிரித்து கொண்டே அறைக்குச் சென்றான்.


பூஜை அறையில் தீபமிட்டு வணங்கியப்படி, இறைவா... அஸ்வின் புன்னகை என்னால் கெடக் கூடாது. அதற்கு நீ தான் பொறுப்பு. அவன் மனம் கோணமல் இங்கிருந்து போயிடனும்’ என்று வணங்கினாள்.


கல்லூரிக்கு பைக்கில் ஏறியதும், ''என்ன எனக்காக சாமிகிட்ட வேண்டினியா?'' என்று ஹெல்மெட் அணிந்து கேட்டான்.


''
நான் எனக்காக வேண்டினேன்.''


''
எனக்காகவும் வேண்டிக்கோ''


''
நீங்களே வேண்டிக்கோங்க''


''
என்ன கேட்டாலும் சாமி நிறைவேற்றுவாரா?''


''
நியாயமான எண்ணத்தை கண்டிப்பா நிறைவேற்றுவார்.''
''
எனக்கு நீ வேணும் பவி.” என்றவன் அவளின் அமைதியில்  “என்ன சைலன்ட் ஆகிட்ட'' என்று கேட்டான்.


''
டிராபிக் சத்தத்துல ஒன்னுமே கேட்க மாட்டுது'' என்று பொய் கூறினாள்.


''
பொய் பேசினால் சாமி கண்ணை குத்தும்'' என சிரித்தான்.

 

கல்லூரி வந்திட, ''எனக்கு பை சொல்ல மாட்டியா பவி?'' என்றவனிடன் மவுனமே உருவமாக திரும்பிச் சென்றாள்.


ரம்யாவின் தொல்லை தாங்காது அஸ்வினை அறிமுகப்படுத்துவதாக கூறினாள். அஸ்வினிடம் எப்படிக் கூறுவது என யோசித்தாள். 


பவித்ரா செமஸ்டர் வருவதால் ஆர்வத்தோடுப் படித்தாள். வீட்டிற்கும் வருணிடமும் போன் பேசினாள்.
ஸ்ரீராமோடு செல்லும் போது எல்லாம் அஸ்வின் வந்து விடுவது தவிர்க்க இயலவில்லை அன்று வழக்கத்திற்கு மாறாக ஜீன்ஸ், குர்தா அணிந்து போனிடைல், சின்னப் பொட்டு எனக் காட்சி அளித்தாள்.

 

 தனு தான் முதலில் பார்த்துக் கருத்து மழை பொழிந்தாள்.


''
ஹாய் அண்ணி சூப்பர்... ரிப்போர்ட்டர் போல் இருக்கீங்க.''


''
தேங்க்ஸ் தனு''


''
என்ன ஒரு சேஞ்சு''


''
இன்னிக்கு ரம்யா, சஞ்சு, நான் மூவரும் ஜீன் போடுறத பேசிக்கிட்டோம்''


''
ஓ..''


ராதையோ “இந்த டிரஸ்ல கூட அழகா இருக்கா இல்லைங்க” என விஸ்வநாதனிடம் கேட்க, ''ம்... நான் ஏற்கனவே பார்த்து இருக்கேன் ராதை'' என்றார்.


பவித்ரா என்றும் சுடி, நைட்டி, கோவில் என்றால் பாவாடை தாவணி இதிலே பார்த்த இருக்க இது புதுத்தோற்றமாக இருந்தது.

 

 அஸ்வின் மட்டும் எதுவும் சொல்லவில்லையே என்று பவித்ரா மனம் கொஞ்சம் துவண்டது. ஒரு வேளை அவனுக்கு ஜீன் டிரஸ் பெண்கள் அணிந்தால் பிடிக்காதோ?!


பைக்கில் போகையில் மென்று முழிங்கி ''என் ப்ரெண்ட்ஸ் உங்களை பார்க்கணுமாம்'' என்று அவன் சம்மதம் வேண்டி கேட்டு நின்றாள்.


''எதுக்கு?''


''
அது...'' எப்படி சொல்ல என்று தயங்கினாள்.


''
ரம்யா என்னைப் பார்க்கணும்னு தொல்லை பண்றால?''


''
ம் அது உங்களுக்கு?''


''
ஸ்ரீராம் சொன்னான்.''


ஸ்ரீராம் இது மட்டும் சொல்லி இருப்பானா? இல்லை ரம்யாவிற்கு அஸ்வின் மீது ஒரு ஈர்ப்பு இருப்பதும் சொல்லி இருக்கானா என மனம் திக்கென்றது.

 

அந்நிலையில் அவள் மனம் நினைப்பதை அவள் உணரவும் இல்லை
''
சர வர சனி கிழமை மீட் பண்ணலாம்னு சொல்லிடு. என்ன பண்ண நான் லவ் பண்ற பொண்ணு கண்டுக்கலை. என்னை சைட் அடிக்கிற பொண்ணையாவது பார்த்து அறிமுகமாகிக்கறேன்'' என்று அவளை சீண்ட பேசினான்.


அவளோ அதெல்லாம் யோசிக்கவில்லை ''நிஜமா?'' என்று கேட்டு நின்றாள்.


''
ம் ''


''
தேங்க்ஸ்''


''
உன் தேங்க்ஸ்யை நீயே வச்சிக்கோ. ஜீன் டிரஸ் போட்டாலும் உனக்கு அழகாயிருக்கு பை'' என்றான். அந்த குரலில் அத்தனை லயிப்பு கிட்டியது.


பவித்ராவுக்கு ஏதோ கோடி பூக்கள் தலையில் விழுந்தது போல் உள்ளம் குளிர்ந்தது. அவளுக்கு லேசாய் தோன்றிய எண்ணம் அறியாமல் போனாள்.


நாட்கள் மிக இனிமையாக போனது.

 

சனி கிழமையும் வந்தன. தூரத்தில் அஸ்வின், பவித்ரா வந்துக் கொண்டியிருக்க ரம்யா, சஞ்சனா 'ஹாய்' என்றபடி கை அசைத்துக் கத்த, பவித்ரா இருவரையம் முறைத்து கொண்டே வந்தாள்.
''
அதான் வந்துட்டு இருக்கோம்ல எதுக்கு டி கத்தறிங்க'' என கடிந்தாள்.

 

அஸ்வின் வந்தவுடன், ''நீ சஞ்சனா, இது ரம்யா கரெக்ட்?'' என்று வினவினான்.

''கரெக்ட் எப்படி சரியாய் சொன்னிங்க'' என்று பவித்ரா கேட்க
''
சஞ்சு கண்கள் நார்மலா இருக்கு, பட் ரம்யா கண்கள் என்னை சைட் அடிக்குதே! ஈசி...'' என்று பேசினான். பவித்ரா முகம் பொழிவிழந்தது.


''
சூப்பர்..... ஹாண்ட்சம்னு நினைச்சேன் பிரில்லியண்ட் கூட தான்'' என ரம்யா மொழிந்தாள்.


''
அதனால தான் பவித்ராவை விரும்பறேன்'' பவித்ராவின் சோகமான முகம் உடனே அஸ்வினை பார்த்து ''நான் ஒன்னும்...'' என ஆரம்பிக்க, ''போதும் போதும்.., நீ விரும்பல ஒன் சைடு ட்ராக் ஓகே'' என்றான். அவனின் சிரிப்பில் சோகமும் மறந்தது.

வெய்ட்டர் வர ஆர்டர் தந்தனர்.
''
ஆமா, உங்களில் யார் அதிக மார்க் ஸ்கோர் பண்றது'' என அஸ்வின் பேச்சு ஆரம்பமானது.


''
பவித்ரா'' என சஞ்சு கூற,
''
அவளை தவிர''
''
ம் சஞ்சு'' என்று ரம்யா கூறினாள்.


''
நினைச்சேன். உன் போக்கஸ்ஸை படிப்புல வச்சா நீயும் அதிகம் மார்க் ஸ்கோர் பண்ணலாம்'' என்று ரம்யாவை ஓட்டினான்.
''
ஓ போர் வேற டாப்பிக் பேசலாம்'' என மேலும், சில உரையாடலுடன் வெளியே வந்து விடைப் பெற்றனர்.


ரம்யா அஸ்வினுடன் பேசும் போதெல்லாம் சஞ்சு பவித்ராவையே உன்னிப்பாக பார்த்தாள். எப்பொழுதும் இருக்கும் நிலையில் இல்லாமல் பவித்ரா கண்கள் தவிப்பதை எண்ணி உள்ளுக்குள் சஞ்சு சிரித்து கொண்டாள்.

 

 இதை அஸ்வின் கண்கள் மட்டும் விட்டு விடுமா அவனும் அவளை நன்கு ஆராய்ந்து இருந்தான். 


''
பவித்ரா நீயும் நானும் ஒரு நாள் தனியா அவுட்டிங் போகணும்னு ஆசை எப்ப போகலாம்?'' என்று கேட்டான்.


''
எப்பவும் வர மாட்டேன். டைம் ஆச்சு நான் கிளம்பறேன்.'' என்று நகர போனவளை நிறுத்தினான்


''
நானும் வீட்டுக்கு தான் போகிறேன் என்னோடு வா'' என்று வழிமறித்தான.


''
வேண்டாம் நான்...''


''
பிடிவாதம் பண்ணாத பவித்ரா, நீ கூப்பிட்டதும் பிகு பண்ணாம வந்தேன்ல. நான் என்ன இப்பவே தனியா அவுட்டிங் போகலாம்னு கூப்பிட்டேன்.'' 
இதுக்கு பேசாம கூப்பிட்டதும் பைக்ல ஏறி இருக்கலாம் என்று மனதில் நினைத்து கொண்டே பவித்ரா, ''போகலாம்'' என்று பைக்கில் அமர்ந்தாள்.
''
அது என்ன என்கிட்ட மட்டும் மொட்டையா பேசுற? எங்க அப்பா அம்மாவை அத்தை மாமானு கூப்பிடற, சுவாதி அம்மாவை பெரிம்மானு கூப்பிடற, ஸ்ரீராமை பேர் சொல்லி கூப்பிடற, அதே 24 வயசு தான் எனக்கும். என்னையும் பேர் சொல்லி கூப்பிடு''


''
மாட்டேன்''


''
கூப்பிட வைக்கிறேன் பார்'' என்று சவால் விடும் தோரணையில் கூறினான்.


''
பார்க்கலாம்.'' என்று அதே பாணியில் சொன்னாள்.

 

“இந்த அஸ்வின் தோற்றதா சரித்திரம் இல்லை.” என்றதும் “யாரோ எனக்காக அவரோட நண்பனிடம் தோற்றதா ஒப்பு கொண்டு வீட்டுக்கு வர சொன்னாராம். சரித்திரத்தை சரியா பாருங்க” என்று விளையடினாள்.

 

   ‘’அது உனக்காக என்று இறங்கி வந்தேன். பாவம் சின்ன பொண்ணை அடிச்சிட்டேன். சாப்பிடாம வேற முரண்டு பண்ணின. அதனால தான் என் ஈகோவை உனக்காக தளர்த்தினேன். மத்தபடி இந்த அஸ்வின் நினைச்சதை முடிச்சி காட்டும் ரகம். உன்னை முதல்ல என் பெயர் சொல்ல வைக்கிறேன். அடுத்து லவ் பண்ண வைக்கின்றேன்.’’ என்றான்.

  பவித்ராவோ கண்களால் சவாலை ஏற்றவளாக வீட்டுக்குள் சென்றாள்.


   மாதங்கள் பல ஓடியது. அன்று கல்லூரியில் மதியம் சாப்பிட அமர்க்கையில் ப்யூன் பவித்ராவை தேடி வந்தார்.


''
பிரின்சிபால் உங்களை கூட்டிட்டு வரச் சொன்னாரு.'' என்று மொட்டையாக கூறினார்.

 ''என்னையா?'' என்று பவித்ரா விழித்து நின்றாள்.


''
நீ தானே பவித்ரா? ''


''
ஆமாம்''


''
உன்னை தான் கூட்டிட்டு வர சொன்னார்.'' என பியூன் சொல்லிச் செல்ல எதற்காக இருக்கும் என்று குழம்பிப் போனாள்.

 

சேரும் பொழுது நெருக்கமாய் பார்த்தது. அதன் பின் தூரத்தில் பார்த்ததோடு சரி.


''
மே ஐ கம் இன் சார்?'' என்று சற்றுப் பயத்தோடக் கேட்டாள்.


''
கம் இன். பவித்ரா உனக்கு ஸ்ரீராமை தெரியுமா?'' என்றார்.


''
எஸ் சார்''


''
ஸ்ரீராம் அசைன்மெண்ட்ல சின்ன மிஸ்டேக் இருக்கு சொன்னேன், உன் கிட்ட கொடுத்து அனுப்ப சொன்னான் இந்தம்மா, அஸ்வினும், ஸ்ரீராமும் இந்த காலேஜ் ஸ்டுடென்ட்ஸ்லேயே அவுட்ஸ்டாண்டிங் ஸ்டுடென்ட்ஸ். ஸ்ரீராம் கல்லூரிக்கு டொனேஷன் தருவான். படிச்சிட்டே அப்பா  பிஸினஸ் மெயின்டய்ன் பண்றான்'' என்று புகழ்ந்தார்.


''கொடுத்துடறேன் சார்.''


''
அஸ்வின் எப்படி இருக்கான் கேட்டதா சொல்லு.''


''
சரிங்க சார்''


''
அஸ்வினுக்கும் உனக்கும் படிப்பு முடிஞ்சதும் மேரேஜ்ஜா?'' என்று பதில் கூறா கேள்விக்கு என்ன சொல்ல என்று தவிக்க, உண்மையை கூறிடலாம் எனஆரம்பித்தாள்.


''
அது வந்து சார்'' அதற்குள் டெலிபோன் அடிக்க,
''
சரிம்மா வேற ஒன்னும் இல்லை நீ போகலாம்'' என்ற படி டெலிபோன் எடுத்து பேசினார்.

  அப்பாடி என்றது அவள் மனம்.


அவளது ஊரில் ஆசிரியரிடம் பேசுவது என்றாலே உதறல் தான். கட்டுப்பாடு, மரியாதை, பயமென ஒரு சேரயிருக்கும். இங்குள்ள கல்லூரிகளில் அதற்கு நேர்மாறு தான். ஆசிரியருக்கு தகுந்தாற் போல் மாணவர்கள் சில பேருக்கு அஞ்சியும், சில பேருக்கு மரியாதையும், சில பேருக்கு அலட்சியமும் காண்பிக்கின்றனர். நகரத்திற்கும் கிராமத்து வட்டாரத்துக்கும் நிறைய மாறுதல்கள் இருக்க தான் செய்கின்றன என்றது அவள் மனம்.


சஞ்சு பவித்ரா வந்ததும் ‘என்னாச்சு? கேட்க, ''ஒன்னுமில்லை ஸ்ரீராம்கிட்ட கொடுக்க சொல்லி ஒரு பைல் அவ்ளோ தான்.''
கல்லூரி முடிந்து கம்ப்யூட்டர் கிளாஸ் முடிந்து, ஸ்ரீராம் வீட்டிற்குச் சென்றாள்.

 

 அங்கு அவனிடம் கொடுத்து விட்டுக் கிளம்ப இருந்தவளை, ஸ்ரீராமோ ''இரு அஸ்வினை பார்க்கணும் நானும் வர்றேன்'' என்றான். 


காரில் அமர்ந்து சாலையை நோக்கி வண்டி நகர சற்று தூரத்தில் ஆம்புலன்ஸ் ஓசை காதைப் பிளந்தது. என்னாச்சுப் போய் பார்க்கலாம் என்று பவித்ராவும் ஸ்ரீராமும் இறங்கி வர ஆம்புலன்ஸ் செல்ல சரியாய் இருந்தன.

 

ஆம்புலன்ஸ் அவ்விடம் விட்டு செல்ல கூட்டம் களைந்தன. அங்கே நசுங்கிய நிலையில் கார் ஒன்றிருக்க, ஒரே ரத்த வெள்ளமாக காட்சி அளித்தன.


பவித்ராவுக்கு தலைச்சுற்றி மயக்கம் வர, ஸ்ரீராம் பிடித்துக் கொண்டான். வேகமாக காரில் ஏற்றி நிரைப் பருகக் கொடுக்க , ஸ்ரீராம் கார் ஆக்சிடென்ட்? என அழுகை வர, அப்போது தான் ஸ்ரீராமுக்கு சட்டென்று ஞாபகம் வந்தது.

பவித்ராவின் பெற்றோர் கார் ஆக்சிடென்ட்டில் அல்லவா இறந்து போனார்கள்.
''
காரில் இருந்தவருக்கு என்ன ஆச்சோ...'' என கட்டுப்படுத்த இயலாதா நிலையில் அழுது வெடித்தாள். ஸ்ரீராமிற்கு எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் காரை அஸ்வின் வீட்டிற்கு விரைவுப்படுத்தினான்.

  
-மெல்லிய பூகம்பம் தொடரும். 

பிரவீணா தங்கராஜ். 

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1