முதல் முதலாய் ஒரு மெல்லிய-29

  

💘29

வருணும், நந்தகோபாலனும் அன்று போலவே வரவேற்க வந்தனர். கண்களை அழுத்தி துடைத்து புன்னகைக்க முயன்று தோற்று வந்தாள்.
  ''அக்கா இனிமே எங்க கூடவே இருப்பல'' என்று கேட்டதும் ''ஆமாம் வருண்'' என்று தம்பி தோளில் கைபோட்டு நடந்தாள்.


  ''சாப்பிட்டியா பவித்ரா?'' என்று நந்தன் கேட்க ''சாப்பிட்டேன் பா'' என பொய்யை நன்றாகச் சொன்னாள். 


    வீடு வந்ததும் அவளது பரிசினை வருணே எடுத்து அனைவரிடம் வழங்கினான். 
    ''அக்கா என் டேப்(Tab) சூப்பர் இனி இதுலயே நான் கேம், சாங், மூவி, எல்லாம் இன்ஸ்டால் பண்ணிப்பேன். தன் தந்தை வாட்ச் பார்த்து அப்பா எனக்கு டென்த்ரிசல்ட் வந்த பிறகு இது மாதிரி வாட்ச் வேணும் என்றான்''

   மங்கை புடவை பார்த்து ''நல்லா இருக்கு, இந்த நிறம் என்கிட்ட இல்லை, கயல்கிட்டயும் இல்லை'' என்றார் மங்கை.


                  பர்வதம் பாட்டி வீட்டில் இல்லை, ரகு வீட்டிற்குச் சென்று இருக்க சற்று அமைதியானாள். ரகு வீட்டிலோ அவனைப் பற்றிய புகார் வந்த வண்ணம் இருக்க, முதல் முறையாக பவித்ரா சொன்னது உண்மையோ என உணர்ந்தாள். கயல் கூட அன்று சொன்னாலே ரகு நடவடிக்கை தான் மோசமென யோசிக்கத் துவங்கினாள். முதலிலேயே கண்டிக்க தவறியது தங்களோ என்று காலம் கடந்து அறிவுக்கண் திறந்தது.


   ஈஸ்வரமூர்த்தி வாக்கிங் ஸ்டிக் பிடித்து போக, அது இல்லாமல் எங்கும் போவதில்லை. காலையில் அப்பா கூட யோகா செய்து மூச்சு பயிற்சி செய்வது பவித்ராவுக்கு கூட பிடித்தமானது. வருண் எப்பொழுதும் டேப் கையும்மாக திரிந்தான்.
    பவித்ராவிற்கு இங்கு வந்து ஒரு வாரம் அஸ்வின் நினைவலையே வாட்டியது. நாளை சஞ்சு திருமணத்திற்கு செல்ல வேண்டும். சஞ்சுக்கு வாங்கிய கிப்ட் என்னவென்றுக் கூட தெரியாது அஸ்வின் கையில் அதுயிருக்க, எப்படி பெறுவது தன் மேல் இருக்கும் கோபத்தில் திருமணத்திற்கு வருவானோ? இல்லையோ? எதற்கும் ஒரு பரிசாக ஒரு சின்ன வெள்ளி காமாட்சி விளக்கை பாட்டியின் அறிவுரைபடி பரிசாக கொடுக்க வாங்கினாள்.


       அஸ்வினோ யாரிடமும் பேசாது தனித்து இருந்தான். கேட்கும் கேள்விக்கு முத்து போல் ஒரு வரி பதில் கூறிச் செல்ல, முன்பிருந்த ஒரு உற்சாகம் மட்டும் இல்லாமல் இருந்தான்.
 

   சஞ்சு திருமண நாள், நேராக மண்டபத்திற்கு வந்தாள். அது சென்னைக்கும் தஞ்சாவூருக்கு நடுவில் இருக்கும் ஒரு கிராமம் என்பதால் பவித்ரா தனியாக கிளம்ப, அங்கு சஞ்சு கேட்ட முதல் கேள்வி
  ''அஸ்வின் அண்ணா எங்க? சேர்ந்து வராத சொன்னிங்க'' என்றாள் ஆசையாக.


  ''அது வந்து.'' சஞ்சு தாயாரோ ''முதலில் உன் பிரென்ட் டிரஸ் மாத்தட்டோம்'' என்றதும் பவித்ரா தப்பித்தாள்.


அஸ்வின் கொடுத்தச் சேலையைக் கட்டினாள். அஸ்வினே கூட இருப்பது போல் உணர்ந்தாள். ரம்யாவும் பிற தோழிகளும் வந்துவிட சற்று தனிமையில் இருந்து மீண்டாள்.
    ''அஸ்வின் வரலையா ? என்று ரம்யாவும் முதல் கேள்வியே அதே கேட்டாள்.


''
இல்லை''


''
அய்யோ அஸ்வின்காக தான் சீக்கிரம் வந்தேன் மிஸ்ஸாயிடுச்சு'' என வருத்தமாய் கூறினாள்.


''
அஸ்வின் வர மாட்டார்'' என வருத்தமாய் கூறினாள்.


''
ஏண்டி பொய் சொல்ற அங்க பாரு என் ஹண்ட்சம்...கியூட்டா வர்றான்'' என்று கூற, அவள் கண்கள் சென்றத் திசையை பவித்ரா ஏறிட்டாள்.


       அஸ்வின் என் அஸ்வின் என மனம் அடித்து கொண்டாலும் அவன் பேசுவானா... என நெருடல் பரவியது.


  ''ஹாய் பவித்ரா, சீக்கிரம் வந்துட்டியா சாரிம்மா'' என கூற திணறிப் போனாள்.


    ''ஹலோ ஹண்ட்சம் நாங்கல்லாம் கண்ணுக்கு தெரியலையா? எப்ப பாரு பவி பவி பவி'' என்று அவனை சீண்டினாள்.  


   '' தெரியலை ரம்யா'' என கூலாகக் கூறினான் புன்முறுவலுடன்.
      பொதுவாக பேசி சிரித்து பின்னர் ரம்யாவும் கழன்று கொள்ள இருவரும் தனித்து விடப்பட்டனர்.

    அருகருகே இருந்து கொண்டுப் பேசாது இருப்பது நரகவேதனைக்குள் ஆக்கியது. அவன் வாங்கி தந்தச் சேலையை கூடக் கவனிக்கவில்லையா?!


   ‘'நான் லீவ் போட்டு இருக்கேன் ஆனா வீட்ல ஒர்க் பெண்டிங்ல இருக்கு ஸ்டேஜிக்கு போய் கிப்ட் கொடுத்துட்டு சாப்பிட்டு கிளம்பனும் நீ வர்றியா? இல்லையா?'' என்று கர்ஜினையாக கேட்டான்.

 
  ''போகலாம் அஸ்வின்'' என பவித்ரா தன் ஹான்ட் பாகில் இருந்து கிப்டை எடுக்க, அஸ்வின் ஒரு தரம் பார்த்து முறைத்தது போல் உணர்ந்தாள். லீவு போட்டு இருக்கேன் என்று தெரியுது. நேரம் போனா என்ன என்று கேட்கறாளா? வாயை திறக்க மாட்டாளே’ என்று மனதில் திட்டினான்.


   மிதமான நடையில் ஸ்டேஜை அடைந்து பவித்ரா வாழ்த்தை கூறி தன் கிப்ட்டை கொடுக்க அஸ்வின் தன் பாக்கெட்டில் கைவிட்டு இரு நகைப்பெட்டி எடுத்து ஒரு மோதிரத்தை சஞ்சு கணவனுக்கு அணிவிக்க கூற சஞ்சு அணிவித்தாள்.

   அதே போல் இன்னொரு மோதிரத்தை எடுத்து சஞ்சு கணவன் சஞ்சு விரலில் அணிவிக்க மாட்டி விட, சஞ்சு எதுக்கு அண்ணா இரண்டு கிப்ட் என்ற போது, ''இது என்னை நீ அண்ணானு கூப்பிட்டதுக்கு'' என புன்னகையோடு கூற சஞ்சு நெகிழ்ந்து போனாள்.

 
    சாப்பிட செல்கையில் பவித்ராவிடம் பேச ஏதும் இல்லாதது போல் உண்டு முடித்தான் கை அலம்பி படிக்கட்டில் இறங்கையில், ''நான் கிப்ட் வாங்கி இருக்கேனு தெரிஞ்சும் நீயும் கிப்ட் வாங்கி இருக்க, நீ வேற நான் வேற என்று சொல்லாமல் சொல்றியா பவித்ரா'' என்று புருவம் சுருக்கினான்.

 என்ன சொல்வது அவனிடம் நீ வருவாயோ என்று எனக்கு தெரியாது என்றா? என உள்மனதுக்குள் கேட்டுக் கொண்டாள்.


   ''பரவாயில்லையே.. நான் வாங்கிக் கொடுத்த சேலைக் கட்டணும்னு கூட தோனுச்சே... தேங்க்ஸ்...'' என்று மனதை வதைத்தான்.

    பவித்ரா சற்று நேர அமைதியாக இருக்க, ''இந்த சேலை உனக்கு பிடிச்சு இருக்கா?'' என்று கேட்டதும் ''ம்'' என்றாள்.

    ''நீ சேலை.'' ஏதோ சொல்ல வந்தவன் ''ஓகே நான் கிளம்பறேன் பை'' என்று செல்ல, பவித்ரா அவன் சென்ற திசையை வெறித்து நோக்கினாள். ரம்யா மற்ற தோழிகள் மீண்டும் சூழ்ந்து கொண்டனர். அஸ்வின் இன்னும் சற்று நிமிடம் இருந்தாலும் அவளை நெருங்கி இடம் பொருள் பாராது அனைத்து முத்தமிட்டிருப்பான்.


     அழுவதுகூட முடியாது அவஸ்தை பவித்ரா அனுபவிக்க ரம்யா பவித்ராவை கவனித்திட்டாள். பவித்ராவை தனியே அழைத்து பஸ் ஏற்றி விட வந்தவளோ ''என்னாச்சு எதுக்கு உன் முகம் இப்படி இருக்கு?'' என்றதும் '' வென அழுதாள்.

 
   ''அழாத பவித்ரா என்னனு சொல்லு?'' என்று ரம்யா கேட்க, ''உன் மடில பஸ் கிளம்பற வரை படுத்துக்கறேன். வேற ஏதும் கேட்காதா ப்ளீஸ் ரம்யா'' என்றாள்.


   ரம்யாவோ '' சரி'' என்றவாறு படுத்தவளின் தலையை வருடிவிட்டாள்.

  '' நீ ஏதும் சொல்ல வேண்டாம். ஆனா நான் ஒன்னேவொன்னு சொல்றேன் கேளு. உன் துக்கம் சந்தோசம் இரண்டும் அஸ்வின்கிட்ட மறைக்காம சொல்லு மீதியை அஸ்வின் பார்த்து கொள்வர். உன் பிரச்சனை எதுவென்றாலும்'' என்றதும் பவித்ராவுக்கு அது தெரியாமல் இல்லை. தன்னிலையை தானே கூற ஒரு தயக்கம். தோழிகளிடமே அனாதை என்றதை கூற மனமில்லை.


   பஸ் புறப்பட ரம்யாவும் கையசைத்து விடைக்கொடுத்தாள். அஸ்வின் நினைவில் ஊர் வந்து இறங்கி வீடு வந்து சேர்ந்தது எப்படியோ?! அவளுக்கே அறியாது போயின.


- மெல்லிய பூகம்பம் தொடரும்.

- பிரவீணா தங்கராஜ்

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...