முதல் முதலாய் ஒரு மெல்லிய-28

 💘 28

அடுத்த நாள் ஐசியூவிலிருந்து சாதாரண அறைக்கு மாற்றி இருந்தனர். அஸ்வின் கீழேயிருந்து கொள்ள பவித்ரா மட்டும் அறைக்குச் சென்றாள்.


   ''இப்ப எப்படி இருக்கு ஆன்ட்டி?'' என்று ஆதூரமாய் கேட்டாள்.


  ''பரவாயில்லை மா. நீ இல்லைன்னா செத்துப் போய் இருப்பேன்'' என்றார் அவர்.
 

   ''அப்படிச் சொல்லாதீங்க ஆன்ட்டி, எத்தனையோ பேர் இருந்தாங்க நான் வரலைனாலும்  யாராவது உதவி செய்து காப்பாற்றி இருப்பாங்க'' என்று நிதர்சனத்தை கூறினாள்.


    ''உன்னை வேணாம் என்று சொன்னதுக்கு கடவுள் என்னை சரியான தண்டனை  கொடுத்து தண்டிச்சுட்டாரு” என்று பேசினார். பவித்ராவுக்கு புரியாமல் விழிக்க நீண்ட மௌனத்திற்கு பிறகு “அன்னிக்கு கடையில் சூர்யாவோட மனைவி அவள்  தோழியோடு தனக்கும் சூர்யாவுக்கும் டிவோர்ஸ் பற்றி பேசி கொண்டு இருப்பதை கேட்டு தனக்கு இந்த நிலைமை என்பதை கூறிட ஆறுதல் கூறயியலாது ஸ்தம்பித்தாள்.


   சூரியாவின் தாயே கண்ணை துடைத்து கொண்டு ''பவித்ரா அவன் நேற்றில் இருந்து சாப்பிடலை போய் சாப்பிட சொல்லுமா'' என்றதும் இனி அவர்கள் அதிகம் பேச வேண்டாம் என்று சூர்யா பவித்ரா வெளியேறினார்கள்.


   ''சாரி அண்ட் தேங்க்ஸ் பவித்ரா.” என்று சூர்யா பேச துவங்கினான்.
   ''நீங்க இன்னும் சாப்பிடலையா? கேண்டின் ல சாப்பிட்டு இருக்கலாமே'' என்று தயக்கமாய் கூறினாள்.


''
தோணலை'' என்றவன் குரல் கரகரத்தது. 


   பவித்ராவுக்கு இவர்களுக்குள் என்ன பிரச்சனையோ கேட்கலாமா வேண்டாமா என்று குழம்ப  ''அவங்க வரலையா?'' என்று சூர்யாவின் மனைவியை கேட்டாள்.

 
   ''நான் அப்பாக்கு மட்டும் தான் சொன்னேன். அப்பா பிளைட்ல வந்துட்டு இருக்கார். அவளுக்கு சொல்லலை'' என்றான்.


  ''என்ன சாப்பிடறீங்க?'' என்று ஆர்டர் கொடுத்து அப்படியே பேசி தன்னால் முடிந்தால் ஆறுதல் உரைக்க முயன்றாள்.

    ''வேண்டாம்'' என்றவனின் பேச்சினை புறம் தள்ளி அவளாக தோசை ஆர்டர் கொடுத்துவிட்டு வாங்கி அவன் முன் வைத்தாள்.

   ''என் வார்த்தைக்கு மதிப்பி கொடுத்தா சாப்பிடுங்க'' என்று உரைத்திடவும் அமைதியானன்.


   ''நீ...'' என்று கேட்க, இப்போ தான் ராதை அத்தை காபி போட்டு கொடுத்தாங்க நீங்க சாப்பிடுங்க'' என்றாள்.
  ''என்ன ஏது என்று கேட்க மாட்டியா?'' என்று அவள் கேட்கவில்லை என்றாலும் சொல்லும் ஆர்வம் அவனுக்குள் இருந்தது.


   ''உங்க பேமிலி பிரச்சனை... நான் எப்படி கேட்கறது?''


   ''அவ பேரு தீபா. அவளுக்கு என்னை பிடிக்கலை. அவள் யாரையோ விரும்பி இருக்கா போல மறக்க முடியலை என்று போன வாரமே என்கிட்ட டிவோர்ஸ் கேட்டு இருந்தா அம்மாவுக்கு இப்போ தான் தெரியும்''


   ''நீங்க பேசி புரியவைக்கலாமே''

   ''என்னனு?'' 

   ''எனக்கு ஒன்னும் உங்க ஒய்ப் பற்றி தவறா தோணலை. அவங்க பேரெண்ட்ஸ்காக உங்களை மணக்க செய்தவங்க அவங்க நிலையை நீங்க புரிஞ்சு அவங்களுக்கு நேரம் கொடுத்தா...'' என்று முடிக்கும் முன் பேசினான்.
 

   ''இப்ப வரை நேரம் கொடுத்து தான் இருக்கேன்'' நீண்ட அமைதி பின் பவித்ரா பேசினாள்.

 

 ‘”ஒரு பொண்ணு மனசுல திருமணம் முடிந்தும் பழைய காதல் இருக்கலாம் தப்பில்லை. ஆனா கொஞ்சம் டைம் கொடுத்து பாருங்க. முடிஞ்சா அவங்களை அவங்களோட காதலனோட பேச வையுங்க முடிஞ்சா சேர்த்து வைக்கிறேன் கூட சொல்லுங்க. எப்படியும் அவங்க மறுப்பாங்க. அதுக்கு பிறகு உங்களிடம் பேசுவாங்க. உங்களை புரிந்து வாழ மாறுவாங்க” என்றாள்.

 

   “என்னமோ சொல்ற பார்போம்” என்று நம்பர் வாங்கி விடை பெற்றாள். அஸ்வினுக்கு ஏகக்கடுப்பு அதனால் வாயை திறக்கவில்லை
    அஸ்வினும் பவித்ராவும் பேசிக் கொள்ளாது வந்தனர். பவித்ரா ராதையிடம் கூறியதை அஸ்வின் கேட்டுக் கொண்டு இருந்தான்.
 

   அஸ்வினோடு அன்று கிப்ட் வாங்காமல் திரும்பியதால் இன்று எல்லோருக்கும் சேர்த்து கிப்ட் வாங்க முடிவு எடுத்துக் கிளம்பினாள் அஸ்வினோடு தான்.

   வருணுக்கு புது டேப்(Tab), தாத்தாவுக்கு வாக்கிங்ஸ்டிக், கயல்விழிக்கும், மங்கைக்கும், பர்வதம் பாட்டிக்கும் பட்டுப்புடவை, அப்பாவுக்கு வாட்ச் வாங்கினாள். 


       அதே போல் ராதைக்கு தவசுடருக்கும் பட்டு புடவை, சுவாதிக்கு தனுவிற்கும் சின்ன நெக்லஸ் செட், ஆகாஷிற்கு தங்க முலாம் பூசிய கண்ணாடி, விஸ்வநாதனுக்கு வாட்ச் என வாங்கினாள்.

    அஸ்வின் சஞ்சுக்கு கிப்ட் வாங்க சென்ற நேரத்தில் அஸ்வினுக்கு இதய வடிவம் கொண்ட மோதிரம் தேர்வு செய்தாள்.

   வீட்டிற்கு வந்ததும் அதே சந்தோஷ மனநிலையில் எல்லோருக்கும் பரிசைக் கொடுத்தாள் . எல்லோருக்கும் பரிசுகள் பிடித்துப் போயின, அஸ்வினுக்கு மட்டும் கொடுக்கத் தயங்கினாள்.


    ''அஸ்வினுக்கு வாங்கலையா பவித்ரா'' என்று சுவாதி கேட்க, ''இருக்கு.. ஆனா அவருக்கு...'' என வெட்கப்பட்டு  ஆரம்பித்தப் போது, அஸ்வினுக்கு வந்த கோபம் இதுவரை பார்த்திராததை விட அதிகமாக இருந்தது.


''
இங்க பார் நான் ஒன்னும் உங்கிட்ட கிப்ட் எதிர்பார்க்கலை. உன் இதயத்தை தான் எதிர்பார்க்கிறேன். எல்லோரையும் போல என்னை ட்ரீட் பண்ணாத... நான் பொறுமையா போறதால அட்வான்ட்ஏஜ் எடுத்துக்காதே'' என மாடிக்கு விரைந்தான்.

 

    மீண்டும் திரும்பி இரு படிக்கட்டுகள் இறங்கி, ''திரும்பவும் சொல்றேன் அதையும் மீறி ஏதாவது கொடுக்க என் ரூமுக்கு வந்த அன்னிக்கு நடந்துகிட்டுதை விட மோசமா இருக்கும். அப்பறம் சாரி கூடக் கேட்க மாட்டேன். பி கேர் புல்'' என அறைக்கு சென்றுக் கதவை ''படார்'' என சாற்றினான்.


        மற்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவரவர் அவர்களது அறைக்கு செல்ல பவித்ரா ஹாலில் தனியாக தனித்து விடப்பட்டாள்.

   'இல்லை அவருக்கும் தனியாகக் கொடுத்துக் கொள்வேன்' என்று சொல்ல வந்த பவித்ரா ஸ்தம்பித்தாள். இனி எப்படி தன் மனதை அஸ்வினுக்கு பிரதிபலிக்க என விழித்தாள்.

    அவனதுக் கோபம் அவளை நடுங்க வைத்தது. நாளை காலை பத்து முப்பதுக்கு புறப்பட வேண்டும். அவனாக வந்து பேசும் போதெல்லாம் விட்டுவிட்டு இப்பொழுது என்ன செய்ய என்று வருந்தினாள்.

  
    எப்பொழுதும் போல் தோட்டத்திற்குள் சென்று காலை பொழுதை ஓட்ட, அஸ்வினது பால்கனி திரைசீலையை ஏக்கமாக பார்த்து கண் கலங்கினாள். வீட்டிற்குள் வந்து தனது உடமைகளைப் பையில் அடுக்கினாள். போன முறையை விட அதிகமாக வலித்தது. போனமுறை காதலை உணர்ந்தால் என்றால் இந்த முறை காதலை அவனிடம் தெரிவிக்க இயலாது தவித்தாள்.

 
      தன்யா அருகே அமர, ''பிளஸ் டூ ரிசல்ட் வந்ததும் போன் பண்ணு தனு, உன் போன்காக வெயிட் பண்ணுவேன்'' என்று அஸ்வின் அறையை பார்த்து கூறினாள்.


  ''கண்டிப்பா அண்ணி'' என்றாள் தன்யா.


  ''திரும்ப எப்ப வருவ பவித்ரா?'' என சுவாதி கேட்டாள்.


  ''சஞ்சு கல்யாணத்துக்கு வருவேன். ஆனா.. அது சென்னைக்கும் தஞ்சாவூருக்கும் நடுவில் இருக்கு சூழ்நிலை எப்படியோ'' என்று தவித்தாள்.  


  ''அம்மா பசிக்கு சாப்பிடவைங்க ஆபீஸ் போகணும்'' என்று அஸ்வின் கத்தினான்.


  ''போன வாரம் பவித்ராவை ட்ராப் பண்றதா சொன்ன'' என்று ராதை கேட்டு முடித்தார்.

 
   ''அது போன வாரம் இப்ப எனக்கு வேலை இருக்கு. எப்படி வந்தா அப்படியே போக தெரியாதா?'' என வார்த்தையில் முள் வைத்தான்.

   சற்று நேரத்தில் ஸ்ரீராம் வந்து ''கிளம்பலாமா? என்றான்.
''
நீ'' என்றவள் பிறகு பேசவில்லை. அஸ்வின் கொண்டு போய் விடுவதாக சொல்லி அலுவலகம் செல்வதால் ஸ்ரீ ராமிற்கு போன் செய்து அவனை வரவழைத்து இருப்பானென பவித்ராவிற்கு புரிந்தது.
     ''சாப்பிடாமலையா? '' என ராதை கூறச் சாப்பிட அமர்ந்தனர். அஸ்வின் யாருடனும் பேசாமல் அலுவலகம் கிளம்பினான். பவித்ரா எல்லோரிடமும் விடைப் பெற்றாள்.
விஸ்வநாதனிடம் ''தேங்க்ஸ் மாமா நான் கிளம்பறேன்'' என குரல்கம்ம கூறினாள்.

 

   லக்கேஜை ஸ்ரீராமே காரில் ஏற்றினான்.
விஸ்வநாதன் மனதில் பவித்ரா அழுகையை குறித்துக் கொண்டார்.

    காரில் விசும்பலோடு பவித்ரா வர, ஸ்ரீராம் செவ்வனே காரோட்டி வந்தான்.

    பஸ்சில் பவித்ராவை ஏற்றி விட்டு அருகே அமர்ந்தான். ''அஸ்வின்கிட்ட மனம் திறந்து பேசு பவித்ரா. அஸ்வினை ஏற்றுக்கோ உன்னையும் அறியாமல் நீ அஸ்வினை விரும்பற, அது ஒரு நண்பனாய் எனக்கு தெளிவா தெரியுது. நீ உன்னையே ஏமாற்றிகிட்டு இருக்க. மத்தவங்களுக்காக உன் காதல் உன் அஸ்வின் வலி அனுபவிக்கனுமா?'' என்ற போதும் பவித்ரா அமைதியே வடிவாக இருக்க ''அதுக்கு அப்பறம் உன் இஷ்டம்'' என்று எழுந்தான்.


   அசையாத சிலையென அமர்ந்த பவித்ரா பஸ் புறப்பட்டு சிறிது நகர்ந்த பின் முகத்தை மடியில் பொத்தி அழுதாள். 
நான் அஸ்வினை விரும்பறதை பர்வதம் பாட்டிக்கு தெரிஞ்சா அவங்களே என்னை கேவலமா பேசுவாங்க. 'ரோட்டில் கிடந்த பெண்ணை எடுத்து வளர்த்தால் இப்படி தான் வீட்டு மானத்தை கப்பல் ஏற்ற மாதிரி காதல் கீதல்னு வந்து நிப்பா. இதே நம்ம ரத்ததில் பிறந்த பெண்ணாய் இருந்தால் இப்படி காதலிப்பாளா?' என பர்வதம் பேசி மனதை அறுப்பது போல் நினைத்து விழிக்க சாப்பாட்டிற்காக பஸ் நிப்பாட்டப்பட்டது.

 

    ராமிற்கும் அவள் அப்படி தான் எண்ணுவாள் என்று அறிவுரை கூறியது.  

   முதலில் தனக்கு படிப்பு வேலை இது மட்டுமே இருந்தவளின் மனதில் காதல் புகுந்த போது பர்வதம் இப்படி பேசிவிட்டால் என்ற நினைப்பே மனதை வதைத்தது. இருந்தும் அஸ்வின் மீது உள்ள காதல் பெரிதாக அவனின்றி வாழ்வுயில்லை என்ற முடிவில் அவனிடம் சொல்ல முற்பட்டாள். 

   அவனே திட்டி அனுப்பிய பிறகு மீண்டும் எப்படி அவனை அணுகுவது என்று புரியாமல் இருந்தாள். காலம் அதற்கு வழி பிறக்கும் அதுவரை பொறு என்ற மனம் பக்குவப்பட்டு சொல்லி கொண்டது. சாப்பிட பிடிக்காது பின்னர் ஊர் வந்து சேரும் வரை அஸ்வின் நியாபகமே வர அவன் நினைவுகளை சுமந்து வந்தாள்.


- மெல்லிய பூகம்பம் தொடரும். 

- பிரவீணா தங்கராஜ்.

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1