முதல் முதலாய் ஒரு மெலியா -22

 


💘22

அஸ்வின் நினைவுகளும் பழைய நினைவுகளும் சுமந்து பேருந்தில் இருந்து இறங்கினாள் பவித்ரா.  வருணும், நந்தனும் வரவேற்றனர். 
  ''அப்பா... வருண்...'' என்று அழைத்து ஓடிவந்தவளை இருவரும் கண்ணீரோடு வரவேற்றாலும் அதில் அதீத அன்பை கண்டாள்.
வருணுக்கு வழி எல்லாம் பவித்ராவோடு இடைவெளியின்றி பேசிக் கொன்டே வந்தான்.


''
ஏன் அக்கா சென்னை போன... இனி மறுபடியும் போவியா? எப்போ எங்க கூடவே இருப்ப? எனக்கு ஹாஸ்டல் பிடிக்கவே இல்லை...'' என்று பேசியதும் பவித்ராவுக்கு பழைய உற்சாகம் தொற்றி கொள்ள வருணிடம் பேசியப்படி வந்தாள்.

   வீடு வந்ததும் பழைய பயமும் தொற்றிக் கொண்டன. பவித்ரா மிரள்வதை கண்டு நந்தன் ''அப்பா இருக்கேன் டா... உள்ளே போம்மா '' என்றார்.


மங்கை பாட்டியும் ஈஸ்வரமூர்த்தி தாத்தாவும் அதே புன்னகையோடும் பாசத்தோடும் பழக நிம்மதியுற்றாள்.

 

   கயல்விழி மட்டும் அமைதியாக வலம் வர பவித்ரா சங்கடப்பட்டாள். ஆனால் கயல்விழி பவித்ரா சென்னை சென்ற ஒரு வாரத்திலேயே தன் தவறை உணர்ந்தாள்.

    எத்தகைய கொடிய வார்த்தை பாசம் காட்டி வளர்த்த மகள் மீது வீசிவிட்டோமென மனம் வருந்தினாள்.

 

 பவித்ராவைக் காண ஆவலாக இருந்தாலும் வெளியே வரப் பேசத் தயக்கம் மிகுந்துக் காணப்பட்டாள். பவித்ராவிற்கோ தான் இங்கு வந்தது தன் தாய்க்கு பிடிக்கவில்லை போல என்று கருதினாள். பர்வதம் பாட்டி தற்போது ரகு குடும்பத்தோடு டூர் சென்றதால் சற்று நிம்மதி அடைந்தாள் எனலாம்.


அலைப்பேசி எடுத்துப் பார்க்க அஸ்வின் அழைப்பு மிகுந்துக் காணப்பட்டது. உடனே அவனுக்கு அழைக்க நினைத்த மனதை வேண்டாம் என்று தடுத்து அஸ்வின் வீட்டிற்கு கால் செய்தாள். ராதை தான் எடுத்தார்.


''
அத்தை நான் வீட்டுக்கு வந்துட்டேன்''


''
நல்லது பவித்ரா, திரும்ப எப்ப வருவா?''


''
டென் டேஸ் லீவ் முடிஞ்சதும் அத்தை''


''
நீ இல்லாம இப்பவே வீடு வெறிச்சோடி கிடக்கு''


''
வீட்ல யாரும் இல்லையா?''


''
தனு டியூஷன் போயிருக்கா, மாமாகிட்ட கொடுக்கவா?'' எந்தரசாதுன் போன் கைமாறியது.


''
மாமா வருண் வந்து இருக்கான்''


''
தெரியுமா நந்தன்கிட்ட இப்பத் தான் பேசினேன் நீ நிம்மதியா சந்தோஷமா இரு''


''
சரி மாமா. மாமா அவர் இருக்காரா?'' என்று கேட்டுவிட்டாள்.


''
இல்லைம்மா வந்தா சொல்லவா?''


''
வேணாம்'' என அவசரமாக மறுத்தாள். “அவர் நான் கிளம்பறப்ப முகம் தூக்கி வச்சிக்கிட்டார் அதனால கேட்டேன். வேறவொன்னுமில்லை  மாமா” என்று கூறினாள்.

 

 ''சரிம்மா'' என போன் வைக்கபட்டன. ராதை சுவாதியை கேட்கிறாள் என நினைத்துக் கொண்டாள். 


      விஸ்வநாதனுக்கு பவித்ரா அஸ்வினை கேட்டது மகிழ்ச்சியை தந்தது. ஏற்கனவே கார் விபத்தை கண்டு அழுத பொழுது நண்பன் ஸ்ரீராம் இருக்க, தாய் போன்ற ராதை இருக்க, தந்தைக்கு நிகராக தான் இருந்தும் அவள் அஸ்வினது அணைப்பில் அழுகையை நிறுத்தியது கண்டு யோசிக்க துவங்கினர். அதே போல் காரில் அஸ்வின் தோளில் சாய்ந்து உறங்கிய போதும் அவருக்கு ஒரு நம்பிக்கை வந்தது ஆனால்  எதற்காக அழுதாள் என்று புரியவில்லை! மகனும் கோவமாக சென்றது எதற்காக இருக்கும் என்று யூகிக்கமுடியவில்லை. 


 பவித்ராவோ அஸ்வின் வீட்டில் இல்லை என்றால் ஸ்ரீராம் கூட இருப்பான் என ஸ்ரீராமுக்கு கால் செய்தாள்.


''
ஸ்ரீராம் வீட்டுக்கு வந்துட்டேன்''


''
ஓ குட். சாரி பவித்ரா எனக்கு நியூ ப்ராஜெக்ட் அதான் வர முடில.


''
பரவாயில்லை அஸ்வின் கூட இருக்கிறாரா?''


''
இ..இல்லை எதுக்கு அவனை கேட்கற?'' என்று பவித்ரா மனம் அறிய கேட்டான்.


''
ஒன்னுமில்லை... சரி வைக்கிறேன்'' என வருந்தினாள். ஸ்ரீராமுக்கோ நெஞ்சழுத்தகாரி ஏதாவது சொல்லறாளா? என்று மனதில் திட்டினான்.


    ஸ்ரீராம் அருகே அஸ்வின் அவனது கண்களையே பார்த்து,
''
பவித்ரா ஏதாவது சொன்னாளா?'' என்றான்.


''
இல்லையே''


''
ஏதாவது சொல்ல வந்தாளா?''


''
இல்லையே ஏன் எதாவது சொல்ல இருக்கா?'' என்று கேட்டான் நக்கலாக.


''
இல்லை'' என பொய் கூறி விட்டுக் கிளம்பினான். 


ஸ்ரீராமுக்கு நீயும் சளைத்தவன் இல்லை டாஏதோ நடந்து சொல்லாமல் பொய் சொல்கிறான் என அப்பட்டமாக தெரிந்தது. உண்மை நண்பன் அல்லவா! எப்படியும் அஸ்வின் மனதில் உள்ளதை தன்னிடம் மறைக்க மாட்டான் எப்படியும் ரெண்டு நாளில் உண்மை அவனாகவே சொல்லிடுவான் என்பதால் வற்புறுத்தவும் இல்லை. அதே போல் பவித்ரா மனதில் அஸ்வின் நுழைகிறான் என்றும் புரிந்தது. அஸ்வின் காதலை அவள் விளையாட்டாக நினைக்கவில்லை என்று முன்பே அறிந்தவன் என்பதாலும் தனது இரு தோழமையும் இணைவது தூரத்தில் இல்லை என்று உணர்ந்தான்.


       அஸ்வின் நடுரோட்டில் ஓரமாக பைக்கை நிப்பாட்டி பவித்ராவுக்கு போன் செய்தான். அவனது அழைப்பு சிறக்கடிதலும் அழைப்பை ஏற்கக் கை நடுங்கியது. மெதுவாக ஆன் செய்ய, அஸ்வின் பேசினான்.


''
சாரி பவித்ரா'' என்றான்.


பவித்ராவிற்கு என்ன பேசுவது என்று மவுனம் ஆக்கிரமிக்க, பத்து நிமிட சாலையின் வாகன இரைச்சலில் அவன் ரோட்டில் இருப்பதை உணர்த்தின.


  அவனது குரலில் தன் பெயர் உச்சரிக்க அதை ரசித்து இருக்க, அஸ்வின் பேச மறுக்கிறாள் என நினைத்து ''பவித்ரா பேசு டி ரோட்டுல இருக்கேன் பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு உன் குரல் கேட்காமல். அத்துமீறி கிஸ் பண்ணினது தப்பு தான்'' என்று கூற, எங்கே தன்னையும் அறியாது காதலை கூறிவிடுவேனோ அவன் கூறியது போல் என நினைத்து போனைக் கட் செய்தாள்.
தனக்கு அஸ்வின் மீது காதல் வந்துவிட்டது?! யோசிக்க வருணோ ''ஐ அக்கா புது போன் சூப்பர்ரா இருக்கு'' என வாங்கி அதை நோண்டி கொண்டு இருந்தான்.

 

ஒரு வேளை யோசிக்க விட்டு இருந்தால் தெளிவுப்பெற்று இருப்பாளோ?! இன்றே கூட தனது காதலை அலைப்பேசி வாயிலாக சொல்லி இருப்பாளோ என்னவவோ?


   அவள் பழைய படி மாறவில்லை என்றாலும் இங்கிருந்து புறப்பட்ட அன்று இருந்த மனநிலையில் இல்லாது இருந்தாள். மங்கை சாதம் ஊட்டி விட, தாத்தாவோடு வாக்கிங், தம்பியோடு படம் பார்த்து அரட்டை அடிக்க, அப்பாவோடு இதயத்திற்கு யோகா என வாரங்களாக கயல்விழியிடம் மட்டும் பேசப் பயந்தாள்.


மெல்லிய பூகம்பம் தொடரும். 
 
பிரவீணா தங்கராஜ். 

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...