முதல் முதலாய் ஒரு மெல்லிய-21

  


 💘21

பவித்ரா ஒரு அனாதை பெண். அவள் நந்தகோபாலனின் வளர்ப்பு மகள் என்று இந்த வருடம் தான் அவளே அறிந்தது.

 

 பவித்ராவின் தாய் தந்தை இருவரும் ஒரு கார் விபத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்க ஒரு வயதே ஆனா பவித்ராவை தூக்கி வந்தனர். நந்த கோபாலன் போலீசில் யாராவது கேட்டு வந்தால் கொடுத்து விடுவதாகக் கூறினார். ஆனால் யாரும் வரவில்லை.


ஐந்து வருடம் பிள்ளை அற்ற தம்பதியான நந்தகோபாலன்-கயல்விழிக்கு பவித்ரா வருகை வரப்பிரசாதமானது.

 

கயல்மொழியின் தயார் பர்வதத்தை தவிர...

 

பவித்ரா வந்து நான்கு வருடம் கழித்து வருண் பிறந்தான். ஆனாலும் பவித்ராவிடம் காட்டிய அன்பு குறையாது வளர்த்தனர். நந்தகோபாலனின் தாய் தந்தையரான ஈஸ்வரமூர்த்தியும், மங்கையும் கூட பவித்ராவை செல்லமாக வளர்த்தனர். பர்வதம் தன் மகனோடு அமெரிக்கா சென்றிட நாட்கள் இனிதாக நகர்ந்தன.


பவித்ரா வளர்ந்து சுட்டித்தனம் செய்து அழகாக அறிவாக வலம் வந்தாள். பிளஸ் டூ முடிக்க பர்வதம் அமெரிக்காவில் இருந்து வந்தாள் கூடவே கயல்விழியின் அண்ணன் மகன் ரகுவும் அவனது குடும்பமும்.

 

கல்லூரி முதல் வருடம் படிக்கையில் பர்வதம் பவித்ராவை பூடகமாக பேசுவாள், பவித்ராவுக்கு புரியாது விழிப்பாள். கயல்விழியும் நந்தகோபாலனும் பர்வதத்தை எச்சரிப்பர்கள்.


இரண்டாம் ஆண்டு படிக்கையில் சென்னையில் ஒரு என்கேஜ்மென்டிற்கு வந்தாள், அப்போதுத் தான் அஸ்வின் பவித்ராவை பஸ் ஸ்டாண்டில் பார்த்தது. மீண்டும் அந்த கல்யாணத்திற்கு வந்த போது தான் மாலில் அஸ்வினை பார்த்தாள். அந்த திருமணம் முடிந்து தஞ்சை வந்தப் போது, ஒரு முதியவர் காத்திருந்தார்.

  நந்தகோபாலன் ''பவித்ரா இங்க வாம்மா அவருக்கு வணக்கம் சொல்லு'' என்றிட''வணக்கம் தாத்தா'' என்று பாதம் தொட்டு வணங்கினாள்.

 

 தன் எடுத்து வந்த பையில் இருந்து ஒரு தங்க நெக்லஸ் எடுத்து நீட்ட, ஒரு கணம் அமைதியோடு எதிர்நோக்கி நந்தகோபாலனை கண்டாள். தந்தையிடம் என்ன இது? என்ற அதிர்வில் அதை விட அதிர்ச்சி தர போவதை அறியாது.

 

 நந்தகோபாலனோ ''எதுக்கு இது எல்லாம். இங்க பவித்ராவுக்கு எந்த குறையும் இல்லை'' என்ற போது அந்த முதியவர்
''
இன்னிக்கு பவித்ராவோட பிறந்த நாள்'' என்றதும் நந்தன்
''
வாங்கிக்கோ பவித்ரா'' என்றார்.

 

அந்த பெரியவர் பவித்ரா அந்த நெக்லஸ் வாங்கும் போது கவனிக்க, அவள் முகத்தில் நகை வாங்கும் ஆவல் இல்லாமல் இருக்க நிம்மதி அடைந்தார். தனது குணத்தினை போலவே நகை மீது பற்று இல்லாத பவித்ராவின் அன்பு முகத்தை கண்டு ஆசிர்வதித்து விடைப் பெற்றுச் சென்றார்.


பவித்ரா குழம்பிய மன நிலையில் இருந்தாள். இன்னிக்கு தன் பிறந்த நாள் இல்லை என்ற பொழுது ''யாருப்பா இவர்'' என்று கேட்டாள்.

 

     பர்வதம் சும்மா இல்லாது ''உன் சொந்த தாத்தா, நீ இந்த வீட்டு வளர்ப்பு மகள்” என உண்மையை உடைத்தார்.

 

கூடுதலாய் கார் விபத்தில் ரத்த வெள்ளத்தில் உன் தாய் தந்தையர் இறந்து கிடைக்க நீ தன்னந்தனியாக அந்த ரத்த கோலத்தில் அழுதுகிடந்தாய்! அப்ப அந்த வழியே கோவிலுக்கு வந்த என் மகளும் மருமகனும் உன்னை தூக்கி கொண்டு வந்தனர்” என்ற உண்மையையும் உடைத்தார்.


        போதாதற்க்கு ‘உன் தாய் தந்தையர் என்ன பாவம் செய்தார்களோ முகம் உருதெரியாமல் கண்ணாடி சில்லுகள் முகத்தில் குத்தி முகம் முழுதுமே ரத்தக்களோபரமாக இறந்து கிடந்தனர்’ என்று சொல்லி முடிக்க நேரில் கண்டது போல் முகம் வெளிறினாள். தந்தையிடம் இது உண்மையா என்ற பார்வை வீச அவரோ மௌனமானர்.

 

    இதனால் தான் பார்வதம் ஆச்சி எப்பொழுதும் தன்னை திட்டி மறைமுகமாய் ஏய்த்து கொண்டிருந்தார்களா? ஆனால் பாட்டி தாத்தா அப்படியில்லையே. அம்மா அன்பு கூட தூய்மையாக இருக்கின்றதே?    

 

  பர்வதம் பாட்டிக்கு தான் பிடிக்கவில்லை என்று தாய் தந்தை அன்பில் திளைத்தே இருந்தாள்.

 

    ஆனாலும் தூங்க முயலுகையில் கனவில் கோரா விபத்து நிகழ்வது போல் அவளை தினமும் துரத்தியது. அப்பொழுது எல்லாம் தூக்கத்தில் இருந்து எழுந்து விடியும் வரை அழுத வண்ணம் இருக்க அருகே தேற்ற ஆள் இன்றி தவிப்பாள்.


மேலும் தான் இந்த வீட்டின் வளர்ப்பு மகள் என்ற உண்மை தெரிந்த பின், கயல்விழியின் அண்ணன் மகன் ரகு அவளை சீண்டினான்.

     வார்த்தையில் சீண்டியவன் ஒரு கட்டத்தில் அவள் தனியாக இருக்கும் போது அருகே வந்து, வந்து பயமுறுத்தினான் இதுவரை சுதந்திரமாக உணர்ந்த வீட்டில் தனித்துவமாக உணர்ந்தாள். தாய் காயலிடம் அவரின் அண்ணன் மகனை பற்றி கூறவும் தயங்கினாள். 


   அன்று அப்படி தான் ரகு தனியாக இருந்த பவித்ராவிடம் வம்பு செய்ய '' வெளியே போ அம்மாவிடம் சொல்லிடுவேன்'' என மிரட்டினாள்.


   அவனோ '' இது என் அத்தை வீடு, அவங்க நான் சொல்லுறதை தான் கேட்பாங்க  நம்புவாங்க, நீ வளர்ப்பு மகள் தானே அனாதை.'' என்று கேக்கலித்தான்.


   ஏதோ பாவப்பட்டு வளர்ப்பதாக ஏற்றி பேசினான். ''அம்மா அப்படி சொல்லா மாட்டாங்க'' என வாதிட்டாள்.


    “சொல்ல மாட்டாங்க.. என்னவொரு நம்பிக்கை. நீயும் இப்ப நடக்க போவதை சொல்லாதே” என்று கேவலமாக சிரித்து முன்னே வர, அவனிடமிருந்து தப்பித்து வெளியே வருகையில் விஸ்வநாதன் கதவைத் தட்டினார்.


      அவரை கண்டதும் உயிர் வந்தது பவித்ராவுக்கு.  விஸ்வநாதன் தன் குலதெய்வ இருக்கும் ஊருக்கு வரும் போது அருகே இருக்கும் தஞ்சையில் உள்ள தன் பால்ய நண்பன் நந்தனை காணாதுச் செல்ல மாட்டார். அப்படித் தான் அன்றும் வந்தார். பவித்ரா கண்ணீரோடு கதவைத் திறக்க
''
வாங்க அங்கிள்'' என வரவேற்றாள்.

 

பவித்ராவின் கண்ணீர் அவருக்கு ஏதோ உறுத்த ''அப்பா இல்லையாம்மா?'' என்று கேட்டு வைத்தார். அவருக்கு பவித்ரா அறிமுகமானவளே.


   ''அப்பா கோவிலில் வேண்டுதல் நிறைவேற்ற காணிக்கை செலுத்தப் போய் இருக்கார் அங்கிள்'' என்று கூறும் போது அவளது கண்கள் அருகே இருக்கும் அறையினைப் பார்த்து அஞ்சியது.


''
தண்ணீர் எடுத்துட்டு வா பவித்ரா'' என்றார்.


       அறையில் நியூஸ் பேப்பர் இருக்க, அதை எடுக்கச் செல்வதுப் போல் அறையில் நுழைய ரகு வேகமாக வெளியேறினான். வெளியே வந்தப் போதும் பவித்ராவிடம் ''இன்னிக்கும் தப்பிச்சுட்ட மாட்டுவ'' என உறுமிக் கொண்டுச் சென்றான்.


    சூழ்நிலையை சொல்லாமல் புரிய நீரைப் பருகியவாறு 
''
நான் தான் வந்துட்டேனே இன்னும் என்ன பயம் பவித்ரா'' என்றதும் பவித்ரா நிம்மதி அடைந்தாள்.

 

     “இல்லை அங்கிள் அவன் இப்ப எல்லாம் அடிக்கடி என்னிடம் தப்பா நடக்க முயற்சி பண்றான் அப்பாவிடம் சொல்லலாம் என்றால் தயக்கமா இருக்கு. நான் இங்க வளர்ப்பு மகள்.. உங்களுக்கு தெரியுமா அங்கிள்?” என்றதில் ஆமென்று உரைத்தார்.

 

   “அம்மாவிடம் சொன்னா அவங்க அண்ணன் பையனை சொல்லறேனு என் மேல தப்பா எடுத்துகிட்டா?’’ என்று கேவி அழுதாள்.

   
   ''தப்பும்மா இதெல்லாம் சொல்லிடனும். சொன்னா தான் இப்படிப்பட்ட ஆட்கள் நிஜமுகம் தெரியும். நீ சொல்லலைன்னாளும் நான் நந்தனிடம் பக்குவமா சொல்றேன். சரி நான் புறப்படறேன் ஈவினிங் வர்றேன் என்னோட இன்னொரு தோழனை பார்த்துட்டு வர்றேன்'' என்றார்.


''
சரிங்க அங்கிள், ஒரு நிமிஷம் அங்கிள் கதவுப்பூட்டும் வரைக் கூட இருங்க, நானும் கோவிலுக்குக் கிளம்பறேன் தனியா இருக்கப் பயமா இருக்கு'' என்றாள். அதுவும் சரியெனப்பட்டது.


   அதற்குள் ரகு பர்வதத்திடம் தவறாக பற்ற வைக்க, பர்வதம் கயல்விழியிடம் ''உன் வளர்ப்பு மகள் நான் உண்மையை சொன்னேன்னு ரகுவையும் என்னையும் வீட்டுக்குள் வர விட கூடாதுனு வெளியேற்ற ரகுவை பத்தி தர குறைவாக சொல்லி விரட்டுறேனு ரகுகிட்ட மிரட்டி இருக்கலாம்'' என மூளை சலவைச் செய்ய தொடங்கினாள்.


    பவித்ரா கோவிலில் வந்தவுடன் நந்தனை தேடித் தோளில் சாய்ந்து விஷயத்தைச் சொல்ல கோபத்தின் உச்சிக்கு சென்று ரகுவை அடிக்க சென்றார்.

 

     கயல்விழியின் கோபம் பவித்ரா மீது பாய துவங்கியது. தாய் வீட்டு சொந்தம் அல்லவா?!
  ''யாரோ ஒருத்தி என் அண்ணன் மகன் மீது வீணாகப்
பழி சுமத்துறா. நீங்க அதை நம்புவீங்களா?'' என்ற போதே நந்தன் கயல்விழியை அறைந்தார்.


   அடுத்த நொடி கயல் வீட்டிற்குச் செல்ல பர்வதமும் கூடச் சென்றுக் கொண்டியிருக்க ரகு ஒரு கோணல் சிரிப்பை உதிர்த்துச் சென்றான்.


    பவித்ராவிற்கு “யாரோ ஒருத்தி” என்ற வார்த்தை மனதை சுக்குநூறாக உடைக்க, நந்தன் பவித்ராவை சமாதானம் செய்ய இயலாமல் தவித்தார்.


         வீடு வந்தப் போதும் பவித்ரா மௌவுனம் கொண்டு இருக்க மயான அமைதிக் காணப்பட்டது. தனி தனியே அறையில் அடைந்தனர். நந்தன் அறையில் இருந்தப் போது கயல்விழி உள்ளே நுழைய நந்தனுக்கு வேர்வை முத்து முத்தாக, கோர்த்து நெஞ்சைப் பிடிக்க கயல்விழி அலறினாள்.


    நந்தனை ஹாஸ்பிடலில் சேர்த்து ஐசியூவில் வைத்து உடனே சிகிச்சை மேற்கொள்ள உயிர் பிழைத்தார்.

 

ஹாஸ்பிடலில் இரு தினம் தனித்து விடப்பட்ட உணர்வுடனும், வீட்டில் ரகு இருக்க உறங்க அஞ்சியும் இருக்க அப்பொழுது தான் அந்த முடிவை எடுத்தாள். இனி தான் இங்கு இருப்பது நல்லதல்ல என்று எங்கேனும் கண்காணாத இடம் சென்றிட நினைத்தாள்.


   ஆனால் எந்தவித உதவியின்றி எப்படி? தனக்கு இன்னும் ஒரு வருட படிப்பு இருக்கின்றதே, படிப்பு முடியாமல் வேலையில்லை. வேலையின்றி தங்க இடமில்லை, ஆக தனக்கு படிப்பு முக்கியம் ஆனது. ஆனால் இதேயிடத்தில் தங்கிப் படிக்க மனம் ஒப்பவில்லை. 


  நந்தன் உடல் நிலை தேறியப் பின், அவளது முக வாட்டத்தை அறிந்து காரணம் கேட்க, மன தைரியத்தோடு நினைத்ததை கூறினாள். 


  ''என்னால நம்ம வீட்ல நிம்மதியாய் தூங்க கூட முடியவில்லை ப்ளீஸ் பா என்னை தடுக்காதிங்க'' என்ற பொழுது விஸ்வநாதன் உள்ளே நுழைந்தார்.


''
ப்ளீஸ் பா நான் எங்கயாவது ஹாஸ்டெலில் தங்கிப் படிக்கிறேன். படிக்க மட்டும் உதவி செய்யுங்க. கொஞ்ச நாளைக்கு..'' என்று கெஞ்சினாள்.

 

   “அப்பா அன்பா தானே டா இருக்கேன் கயல் ஒத்த வார்த்தை சொன்னனு இப்படி முடிவு எடுக்கறியே நியாயமா?” என்று கேட்டார் நந்தன்.

 

   “அதே வார்த்தையால தான் நீங்க ஹாஸ்பிடலில் இருக்கீங்க அப்பா” என்றதும் ஏனோ நந்தனும் அதற்கு ஒப்புக் கொண்டார். தனக்கே மனம் வேதனை தர சின்ன பெண் பவித்ரா வார்த்தையை ஜீரணிக்க நாட்கள் கொடுப்பதே நலம் என எண்ணினார். தஞ்சை தாண்டி வேறு கல்லூரி செல்ல முடிவெடுத்தாள்.


  விஸ்வநாதனிடம் நந்தன் தன் நிலையை எடுத்துரைக்க, விஸ்வநாதன் “சென்னையில் காலேஜ் சீட் கிடைக்க நான் பொறுப்பு” என்று கூறி பவித்ராவை டீ.சி வாங்கி அனுப்பி வைக்கச் சொன்னார். பாதியில் வந்து சேர்ந்தாலும் அனைத்தும் பார்த்து கொள்வதாக விஸ்வநாதன் வாக்கு தந்தார்.

 
    மங்கை பாட்டி, ஈஸ்வரமூர்த்தி தாத்தா கோவில் சுற்றுலா சென்றதால் அவர்கள் இல்லாத போதே மனம் கணக்க சென்னைக்குக் கிளம்பினாள். ஒரு வேளை அவர்கள் இருந்தால் சற்று பிரச்சனையை தவிர்த்து இருப்பார்களோ என்னவோ?

 

   இப்பொழுது சென்னைக்கு வரும் பொழுது இருந்த வலியோடு, அஸ்வின் தந்த காதல் வலியும் சேர்ந்துக் கொண்டதோ?! ஆனால் அஸ்வினோடு இருக்கையில் தான் ஒரு அனாதை என்பதை மறந்தே போனாளே.


   அஸ்வினுக்கு தான் செய்தது தவறோ என நொடிக்கு ஒரு முறை தன்னையே திட்டிக்கொண்டான். அவள் தன்னை விட்டு சென்றிடுவாள் என ஐயப்பட்டு செய்தப் பிழை எனக் கருதினான். பவித்ராவிற்கு போன் செய்ய பவித்ரா போனை சைலன்ட் மோடில் இருந்தமையால் எடுக்கவில்லை. 


-மெல்லிய பூகம்பம் தொடரும். 
-பிரவீணா தங்கராஜ்

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு