மேதினி உதயம்
மேதினி உதயம்
கோவிட்-19, இது சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசு மனிதர்களிடம் ஏற்படுத்தும் தொற்று நோயாகும். சீனாவின் ஊகான் நகரத்தில் இது ஏற்படுத்திய கொடிய தாக்கத்திற்குப் பின்பு தான் இந்த பெயர் வைக்கப்பட்டது.
2019–20 தொற்று
கொரோனா வைரசு காற்று வழியாகப் பரவுவதை விட, மூச்சுவிடும் துளிகளுடன் தொடர்பு கொள்வதன் மூலமே பெரும்பாலும் பரவுவதாகவும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆய்வுகள் இதை உறுதிப்படுத்துவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனாவைரசு பாதிக்கப்பட்டவரிடம் இருந்து தான் இது பரவுகிறது. கோவிடு -19 இருக்கும் நபர் இருமும்போதோ அல்லது மூச்சுவிடும்போதோ, மூக்கு அல்லது வாயிலிருந்து வெளியேறும் சிறிய நுண்துளிகள் மூலம் மற்றொரு நபருக்குப் பரவுகிறது. சில சமயம் இந்த துளிகள் பாதிக்கப்பட்ட நபருக்கு அருகில் இருக்கும் பொருளிலோ அல்லது நிலத்திலோ விழுந்து விடும். நோய் பாதிப்பு இல்லாத நபர் இந்த துளிகள் இருக்கும் பொருளையோ இடங்களையோ கையால் தொட்டு விட்டு பின்பு அவரது கண், மூக்கு, வாய் என இவற்றில் ஏதாவது உறுப்பைத் தொடும் போது நோய் அவருக்கும் பரவி விடுகிறது. அந்த துளிகளை மூச்சு மூலம் உள்ளிழுத்தாலும் நோய் பரவி விடும் என்றும் உலக சுகாதார அமைப்பு தனது அதிகாரபூர்வ இணையத்தளத்தில் தெரிவித்திருந்தது.
மேதினி உதயம் கதையில் வாயிலாக கோவிட்-19 வைரஸை மட்டுமில்லை அன்பையும் காண்போம்.
அங்கே கடல் வாழ் உயிரினங்கள் சில உயிரோடு கிடந்தன. பெரிய பெரிய மீன்கள், நண்டுகள், நத்தைகள், சிப்பிக்கள், கடலாமைகள், கடல் அட்டை, கடல் பாசி, ஜெல்லி மீன் நட்சத்திர மீன் சுறா திமிங்கலம் என்று ரக வாரியாக இருந்தன. கடல் நம் உலகத்தின் முக்கால் பகுதி அதன் ஆதிக்கமே . அப்படி இருக்க நீந்தும் ஜீவரசிகள் ஏராளம் தான்.
கடலுக்கு அடியில் 0.3 மில்லியன் முதல் 100 மில்லியன் வரை உயிரின வகைகள் வரை வாழ வாய்ப்புள்ளதாம். மனித இனம் இவற்றில் 275 000 உயிரினங்களை மாத்திரம் இதுவரை அறிந்துள்ளது என்றும் இவை அனைத்தும் பெயரிடப் பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. மனிதனின் செயற்பாடுகளால் சமுத்திரங்களும் அவற்றின் உயிர் வாழ்க்கையும் பாதிக்காது இருக்க கடல் வாழ் உயிரினங்கள் அவற்றின் வாழ்க்கை முறை பற்றி மனிதன் நன்கு அறிந்திருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
கடல் வாழ் உயிரினங்கள் பற்றிய இந்தத் தகவல் பிபிசி இனது
அண்மைய Blue planet II என்ற ஆவணப் படத்தில் செர் டேவிட் அட்டென்பொரொஹ் என்ற
ஆய்வாளரால் தெரிவிக்கப் பட்டுள்ளது. சமுத்திரங்களது
அடியில் வசிக்கும் அனைத்து உயிரினங்களையும் வகைப் படுத்துவது மிகவும்
கடினமானது என்றும் தெரிவித்த டேவிட் ஆனாலும் ஒவ்வொரு வருடம் இந்த உயிரினப்
பட்டியலில் எமது சிந்தனைக்கு அப்பாற்பட்ட விசித்திர உயிரினங்கள் அடங்கலாக
கிட்டத்தட்ட 2000 உயிரினங்கள் வரை சேர்க்கப் பட்டே வருவதாகவும்
தெரிவித்தார்.
பல உயிரோடு மீனை ஏறா நண்டு ஆமை என்று அங்கே பாதி வேகவைத்து உணவாக அப்படியே உண்டு கொண்டு இருந்தனர் அந்த கடல் வாழ் பகுதி மக்களில் சிலர்.
நமது கதையின் முதல் நபரும் அங்கு தான் இருந்தார். முதல் நபரே தவிர நாயகன் அல்ல. எப்பொழுதும் போல தங்கள் வீட்டுக்கு தேவாயான கடல் உணவுகளை சமைக்க வாங்கி கொண்டு சென்றார்.
அதே சமயத்தில் அங்கு ஒரு ஆய்வகதில் ஒரு செயற்கை வைரஸ் ஒன்று கண்டு பிடித்து ஆய்வகதில் சோதனையிட்டு கொண்டு இருந்தனர்.
அத்தனை பாதுகாப்போடு இருந்த வைரஸ் உலகத்தினை உலுக்க காத்திருந்தது
யுகான் மாநகரத்தின் ஒரு குடும்பதினர் தனது வீட்டுக்கு சென்ற பின் இரு நாட்கள் பின்னர் தனது மனைவிக்கு தீராத காய்ச்சல் வர மருத்துவமனை வந்து சேர்த்தநர்.
டிசம்பர் 2020 இரண்டாம் வாரம் அது....
தொடர்ந்த காய்ச்சல் நிமோனியா என்றே அறிந்து அதற்கு மருந்து கொடுக்க பட்டது.
அதற்கு பின்னர் சிலருக்கு நோய் தொற்று காரணமாக சிலருக்கு காய்ச்சல் பரவ துவங்கியது.
தனது இல்லாளின் இன்னலுக்கு காரணமின்றியே தான், காய்ச்சலுக்கு மருந்து எடுத்து கொண்டு இருந்தார்கள். அந்த மற்ற நோயாளிக்கும் கூட..
டிசம்பர் 25
சார்ஸ் போன்றதொரு நோய் தங்கள் மாநகரதில் பரவுகின்றது என்றே அறிந்தனர். அதுவும் மனிதரிடம் இருந்து மற்ற மனிதருக்கு தொற்றாக பரவுகின்றதை *லி வென்லியாங்* எச்சரிக்கை செய்தார். ஆனால் என்ன செய்ய அந்த எச்சரிக்கையும் தொற்று நோயினை போல பறந்தது.
ஆய்வில் ஒன்று வைரஸ் கிருமிகள் வெளியாக அது சுவாசித்த நபர் சிலர் சில இடங்களுக்கு தாங்கள் தங்கள் அறியாமல் நோயினை பரபுக்கின்றோம் என்பதை அறியாது கிளம்பினார்கள்.
அன்று தான் அவ்விழா ஆரம்பமானது. உலகத்தின் மற்ற நாட்டினரும் அங்கே ஒரு சிறப்பு விழா ஏற்பாடு செய்தனர். பல்வேறுபட்ட ஆட்கள் சூழ்ந்து இருந்தனர்.
அது ஒரு நல்வாழ்வு கலைக்கூடம் சிறப்புக்காக பல்வேறு நாட்டில் இருந்து பெரிய பெரிய ஆட்களும் நடிகர்கள் தொழில் அதிபர்கள் என்றே வந்து சேர்ந்தனர்.
அவனும் வந்து சேர்ந்தான். ஆம் நம் கதையின் நாயகன் என்று எடுத்து கொள்வோம். வசீகரன் ஆறடி மிடுக்கில் வசியம் செய்பவனை போல தான் இருந்தான்.
நடிகர்கள் முதல் மற்ற நாட்டின் முக்கியத்துவம் கொண்டவர்கள் வரை இருக்கும் அவ்விடத்தில் நலவாழ்வின் சங்கம் உறுப்பினார்களும் இருந்தனர்.
நாட்டின் வளர்ச்சி ஒற்றுமை மேம்படுத்தும் திடம் என்றே பேசி முடித்து மூன்று மணி நேரம் இழுத்தது.
அங்கே உயர் தர உணவும் பரிமாற பட்டனர். வசீகரன் எல்லாவற்றிலும் மேலோட்டமாக கலந்து கொண்டான். இந்த விழாவில் தந்தைக்காக மட்டுமே கலந்து கொண்டு வருகை புரிந்தவன்.
தனக்கு இங்கே இதுவரை இருந்ததே அதிகம் என்றே எண்ணி அடுத்து கிளம்பினான்.
கொண்டாட்டம் தேடி.. நாடே கொண்டாட செய்யும் நாள் அது. ஆங்கில வருட பிறப்பு. வசீகரனுக்கு ஏனோ நண்பர்களை விட்டு இன்று இங்கே வந்தது என்னவோ போல தோன்றியது. ஆனா இது ஒன்றும் நம் தேசம் அல்லவே. கை கொடுத்து ஹாய் சொன்னால் நொடியில் நட்பை அடையாளம் பகுக்கலாம்.
ஆண் பெண் என்று இங்கே பேதமில்லை. ஒரு பப் சென்றான். வேடிக்கை வண்ண விளக்குகள். ஆட்டம் பாட்டம் செவிபறை கிழியும் ஓசைகள் கண்கள் கூசும் வண்ண நிறங்கள் என்றே தென்பட எதிரே இருக்கும் மதுவும் வண்ணங்களில் இருந்தது.
விலை யுயர்ந்த பழரசா பானங்கள் வண்ணங்களில் இருக்க அதில் ஒன்றை எடுத்து சுவைத்தான். பலரின் முகங்கள் மகிழ்வில் இருப்பதை கண்டு தனது மனம் கூட மாறுவதை உணர்ந்தான்.
சைதன்யா நினைவுகள் வந்து சேர்ந்தது. அவளின் கள்ளமில்லா மனம் காதலை சொல்ல தான் மறுத்து ஒதுக்கியதை எண்ணி மெல்ல வலிக்க செய்தது.
அவன் தான் தானாக பேசினான், பழகினான் காதல் என்னும் மாயத்தை உருவாக்கி ஆனால் அவளே காதல் என்று முன் வந்தபின் நழுவியதும் அவனே.
முதலில் ஒரு வேகத்தில் விரும்பியவன் தனது தந்தை அதிகாரங்களை கையில் எடுத்த பின் தான் தனக்கு அவள் சரிபட மாட்டாள் என்றதை உணர்ந்தான்.
சைதன்யா அப்படி யோசிக்கவில்லை வசீகரன் நழுவியாதை தானாக உணர்ந்து அவளும் எட்டியே இருக்க எண்ணி விட்டாள்.
'விஷ் யூ ஹாப்பி நியூ இயர்" என்ற குரல் காதில் கிழிய நினைவுகள் திரும்பியவன் தனது இருப்பிடம் வந்து சேர்ந்தான்.
அறையில் நுழைந்தவனுக்கு தலைவலி தாக்க கட்டில் அப்படியே விழுந்தான்.
அதிகாலை போனில் மெசேஜ் டோன் எண்ணிக்கை சத்தம் அதிகம் கேட்க விழித்து எழுந்தான். எழுந்ததும் போனை பார்க்க எல்லாம் நியூ இயர் வாழத்தாக வந்து சேர ஒரு பார்வையில் எல்லாம் பார்த்தவன் அதனை தூக்கி போட்டு விட்டு குளிக்க சென்றான்.
ஏனோ குளித்து கொண்டு இருந்தவனின் மனதில் சைதன்யா குறுஞ்செய்தி வந்ததா என்றே யோசிக்க அவன் நினைவுகளில் இல்லை என்றே மூளை எடுத்துரைக்க ஷாவரில் நனைந்தவன் டவல் அணிந்து வெளியே வந்தவன் மூளை சைதன்யா குறுஞ்செய்தி இல்லை என்றதையும் தாண்டி தேடினான். அவனுக்கு வந்த 200 குறுஞ்செய்தி இருந்தும் ஏனோ அவளின் ஒற்றை செய்தி இல்லை என்று மனம் வாடி கிளம்பினான்.
தனது பொருட்களை எடுத்து கொண்டு இந்தியா பயணம் தயாராக்கினான்.
விமானத்தின் ஏறிய பின்னரும் மனம் போனில் சைதன்யா ஏதேனும் சின்னதாக 'ஹாப்பி நியூ இயர் வசீ' என்று அனுப்பி இருக்கலாம் என்றே யோசித்ததே தவிர அவன் அவளுக்கு அனுப்ப வேண்டும் என்று ஏனோ அவன் மனம் எடுத்துரைக்கவில்லை.
''சர்.. ஃபோன் யூஸ் பண்ண கூடாது'' என்றதும் ஏரோபிளன் மோட் மாற்றி வைத்தவன் மனம் பாரமாக சாய்ந்தான். அவனை அறியாது உறங்கி போனான்.
இறங்கும் வரை எழும்பாமல் இருந்தவனை விமான பணிப்பெண் எழுப்ப சுற்றம் பார்த்து சாரி என்று எழுந்து கிளம்பினான்.
அவனின் லக்கேஜ் வந்ததும் எடுத்து கொண்டு வெளியே வர தனது கார் தயாராக இருக்க ஏறி அமர்ந்தான்.
கார் ஓட்டுனர் தயங்கி தயங்கி 'ஹாப்பி நியூ இயர் சார்'' என்றதும் முறுவளித்து ''விஷ் யூ தெ சேம்'' என்றவனின் பார்வை பூரிப்பில் இருந்தாலும் என்னவோ சோர்வு அவனை தாக்கியது.
ஏதோ சத்தம் வர கார் குலுங்கி நின்றது. என்ன ஏதென்று பார்க்க ஓட்டுனர் இறங்கி பார்க்க அங்கே டயர் வெடித்து இருந்தது.
தயங்கி கொண்டே சார் டயர் வெடிச்சு.. ஸ்டெபிணி இல்லை சார்'' வசீகரன் தலையை பிடித்து என்ன அண்ணா முதலே டயர் எக்ஸ்ட்ரா பார்த்து வைக்க வேண்டாமா?'' என்றவன் போனில் கார் டிராவல்ஸ் பதிவு செய்து ஐந்து நிமிடத்தில் மூர்த்தி டிராவல்ஸ் கார் கொண்டு வர கிளம்பினான்.
காதல் சோர்வு தன்னை தாக்க உடல் வலியில் தன் இரு கைகளையும் முகத்தில் மூடி ஆழ்ந்து மூச்சு விடுத்து திரும்பினான்.
''சார் நீங்க சொன்ன பிளேஸ்?'' என்றதும் தனது பர்ஸ் எடுத்து தனது கையால் பணத்தை நீட்டினான்.மூர்த்தி பெற்று கொண்டு மன நிறைவோடு செல்ல
அவன் அறியாது அவனின் மூலம் அக்கிருமி அந்த டிரைவர் கைகளில் பரவியது.
வசீகரன் தனது இல்லம் வந்து குளித்து முடித்ததும் தன்னவளை காண புறப்பட்டான்.
இனிமேல் தனது எண்ணம் போல தானாக அவளை காதலித்ததை ஒப்புதல் சொல்ல கிளம்பினான்.
மூர்த்தி தனக்கு கிடைத்த பணத்தை எடுத்து கொண்டு வீட்டில் வாங்கி கொண்டு வர சொன்ன பொருட்களை வாங்க வந்திருந்தான். மகள் கேட்ட கேல்குலேட்டர், புக்ஸ் என்றே வாங்கி கொண்டு வீட்டுக்கு போக அங்கே மூர்த்தி சென்றதும் மகள் கையில் இருக்கும் தந்தை வாங்கிய பொருட்களை பெற்றாள்.
கூடவே தந்தை வாங்கிய ஐஸ் கிரீம் வாங்கி உண்ண ஐஸ் கிரீம் ருசியோடு அந்த புதுவித வைரஸ் உட்சென்றதை அறியவில்லை.
மனைவியிடம் காய் கறி வாங்க பணம் நீட்ட பெற்று கொண்டு மாளிகை கடைக்கு சென்றாள்.
யாருமறியா கணத்தில் காதல் மட்டுமில்லை வைரசும் வளர்ந்தது போல..
மூர்த்தி டீ கடையில் டீ குடிக்க வீட்டுக்கு வந்து சேர வீட்டில் குழந்தைக்கு குளிர் காற்றில் ஜுரம் வந்து சேர்ந்தது.
மருத்துவமான வந்து சேர்க்க உடனடியாக மருந்து எடுத்து கொண்டாள்.
தான் மாலை நேரம் ஐஸ் கிரீம் வாங்கி வந்து கொடுத்தது தவறோ என்றே மூர்த்தியும் அவன் மனைவி மீனாவும் எண்ணி கொண்டார்கள்.
மீனா கேபிள் பணம் வாங்க வீடு வீடாக சென்று வசூலிக்கும் பணி என்பதால் அடுத்த இரு நாளில் கிளம்பிட வைரசும் சேர்ந்தே கிளம்பியது.
இங்கு வசீகரன் சைதன்யாவிடம் காதலை சொல்லி அவளோ தனக்கு மருத்துவ பணிக்கு வேறு ஊருக்கு அனுப்ப போவதாக சொல்லி திரும்பி வரும் வரை இதே காதல் இருக்குமாஇல்லையா என்றே கேலியில் கேட்க அவள் தனது காதலை தான் இப்படி கேட்டு இருப்பது புரிய சைதன்யா சொல்லாமல் போன காதல் மறுப்பு புரியாதவனா?!
ஜனவரி 3
சீனாவில் சார்ஸ் போன்றதொரு நோய் பரவுகின்றது.. எச்சரிக்கையாக இருங்கள் என்றே லி வென்லியங்கிடம் சீனா இப்படி எதுவும் தெரியாமல் வதந்தி பரப்பாதீர்கள் என்றே எச்சரிக்கை செய்து அவரிடம் அப்படி பேசிய குற்றதிற்காக மன்னிப்பு கடிதம் கேட்டு பெற்று கொண்டார்கள்.
சீனா யூகன் மாநகரத்தை தனிமையாக வைத்தது. ஆனால் அதற்குள் அமெரிக்கா ஸ்பெயின் லண்டன் என்றே பரவி சென்று இருந்தன அக்கிருமி.
அதே ஜனவரி மூன்றாம் தேதியில் ஒரு ஆய்வு யூகான் மாநகரதில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை அழித்தது ஹு பே சுகாதார ஆய்வகம் அங்குள்ள தடயங்களை அழித்தனர்.
ஆனாலும் மறைக்க முடியாது பாதிப்பை ஏற்படுத்திய வைரஸை கண்டு பிடித்துவிட்டதாக சீனா ஜனவரி 8 இல் அறிவித்தது.
ஜனவரி 11 ஆம் தேதி
கடல் உணவு சந்தையோடு பதிக்கபட்டவர்கள் தொடர்பு என்றே அறிவித்தது அப்பொழுது கூட அது மனிதரிடம் இருந்து மனிதருக்கு தொற்று ஏற்படுத்தும் என்பதை மூடி மறைத்தது.
ஜனவரி 13டூ 20
சீனாவை தாண்டி முதல் முறையாக தாய்லாந்தில் கொரனா பாதிப்பு ஏற்பட அதோடு ஜப்பானில் கொரனா தொற்று ஏற்பட்ட பின்னரே சீனா ஜனவரி 20 இல் ஒப்பு கொண்டது. இந்நோய் மனிதரிடம் இருந்து மனிதருக்கு தொற்று ஏற்படுத்தும் என்றே.
அதற்குள் அமெரிக்கா ஜப்பான் தாய்லாந்து இந்தியா ஸ்பெயின் என்றே மக்கள் பரவி நோயும் பரவியது அறிந்து கொண்டார்கள். சீனா வேண்டும்இன்றே செய்த சதியா அல்லது கடல் உணவு சந்தையில் இருந்து இந்நோய் பரவியாதா என்றே பெரிய கேள்வி எழும்பியது.
வசீகரன் உடல் சற்றே சுகம் இன்றி போக சற்றே சோர்வு அடைந்தான். அவன் நல்ல நேராமா? அல்லது உணவே மருந்து என்றே கோட்பாடுகளை கொண்ட தாய் கிடைத்த பாக்கியமா? அமுதவள்ளி மிளகு ரசம் சுக்கு கஷாயம் என்றே இஞ்சி துவையலும் அரிசி கஞ்சி என்றே கொடுக்க நாள் பட நாள் பட சற்று முன்னேற்றம் அடைந்தான்.
இங்கு மூர்த்தி மகள் சோறு அதிகம் கிடைக்க பெறாத நிலையில் வறுமையில் அவர்களும் மிளகு ரசம் சுக்கு தண்ணீர் என்றே ஆகாரமாக போக அவளுமே தேறினாள்.
ஆனால் மற்ற எண்ணிக்கை கொண்ட வல்லரசு நாட்டில் கிடுகிடுவென மரணங்கள் ஏறியது.
ஏன் இந்தியாவிலும் அதிகபடியாக ஏறியது.
உயிர்கள் எண்ணிக்கை கூடும் அளவின் பொறுத்து பயமும் அதிகரித்தது.
வாரங்கள்.. மாதங்கள் என்றே கடக்க இந்தியாவில் மார்ச் முதல் தான் 144 தடை போட்டு நோய் பரவலை தடுக்க முயன்றனர்.
முதலில் ஒரு வாரம் என்றே ஆரம்பித்த 144 கொஞ்சம் கொஞ்சமாக நீட்டிபிக்க முதலில் சந்தோஷமாக கல்லூரி கல்வி பணியிடம் செல்லாமல் வீட்டிலே இருக்க மக்களுக்கு ஆனந்தமாக தான் இருந்தது.
கையிலே உலகமாக அலைபேசி மடிக்கணினி என்றே இருக்க நாட்கள் கொஞ்சம் எளிதாக நிம்மதியாக தான் சென்றன.
சிறுக சிறுக சேர்த்த பணம் வைத்து உட்கார்ந்து சாப்பிட இயலுமா? அதுவும் ராசாத்தி போன்ற 100 நாள் வேலை பார்க்கும் தினசரி பணிக்கான கூலி பெற்று வாழும் குடும்பங்கள் சற்றே பாதிக்கபட்டது.
வறுமைகள் ஒரு பக்கம் வாழ்வாதாரம் ஒரு பக்கம் நடுதர மக்கள் என்ன செய்வது? அதை விட அதற்கு கீழ் இருக்கும் பிரிவுகள்..? தினசரி நடபாதையில் இருக்கும் மக்களுக்கு என்ன கிடைக்கும்?
பணமிருக்கும் மனிதருக்கும் கொரனா பணம் அற்றவனுக்கும் கொரனா என்றே நோய்கள் மட்டும் பாகுபாடியின்றி பழகியது.
சிலருடன் இந்த கொரனா நட்பில் இணைந்து அவர்களை ஆட்கொண்டு ஆளையே கொண்றது.
வயதின் முதிர்வுக்கு கொரனா எளிதில் நுழைந்து போக மறுத்து விட வயோதிகம் கொண்டவர்கள் பலி எண்ணிக்கை கூடியது.
சாதாரணமாக 50, 100 என்றே எண்ணிக்கைகே அச்சம் பரவ தான் செய்தது.
வசீகரன் எங்கும் செல்ல இயலாத நிலை நாயகி சைதன்யாவோ மருத்துத்துறை அவன் மனமோ தொலைகாட்சியில் காட்டும் மரண எண்ணிக்கையை பார்க்க பார்க்க தன்னவளுக்கு என்ன ஆகுமோ என்றே பயத்தில் மிதந்தான்.
இரு சக்கர வாகனத்தில் தடை செய்து அபராதம் அளிக்க காவல் துறையில் ஏக கெடுபிடிகள் நடந்தன. மக்கள் அதிகம் நடமாட கூடாது தானே?
வசீகரன் கேட்டால் தானே? தன்னவளை பார்க்க போக காவல் துறைக்கு தேவைக்கு அதிகமாகவே பணம் தந்து அந்த இடம் நோக்கி செல்ல சைதன்யா வசீகரனை கண்டால் மணக்க எண்ணியவள் ஏனோ தனக்கு தாக்கிருக்கும் வைரஸ் பாதிப்பில் மறுக்க இம்முறை அவளின் கண்கள் காதல் இருக்க வேண்டுமென்றே அவள் மறுப்பது அறிந்து தான் காத்திருப்பதாக அறிந்து
''நீ எப்ப வந்தாலும் என் வீட்டு கதவுதிறந்து இருக்கும் சது'' என்றே கிளம்பி இருந்தான்.
சைதன்யா மனமோ இவனுக்கு என்னவென்று கூற விரும்பி சென்ற கணம் விலகி போனான். இப்ப விரும்பி வருகின்றான் ஆனா விலகி போகும் சூழல் எனக்கு... என்றே கண்ணீரோட தனக்கு வழங்கப்பட்ட பணியினை தொடர்ந்தாள்.
மருத்துவருக்கு போதிய அளவு பாதுகாப்பான கவசம் வழங்க வேண்டும் ஆனால் நம் நாட்டில் அதற்கான வசதிகள் எல்லாருக்கு கிடைக்கவா செய்கின்றது.
மனநிறைவோடு அக்கட்டிடம் சென்றாள் அங்கு தான் அவசர பிரிவில் கொரனா நோயாளிகள் வரிசை இருக்க முகமும் கையுரையும் அணிந்து தனது பணியினை காக்க சென்றாள் வசீயின் சது.
நிற்க நேரமில்லை ஓடிக்கொண்டே இருந்தவள் உறங்க வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் சோர்ந்தாள்
பத்திரிகை திறந்தால் அதே செய்தி சாலையில் வெள்ளமே காணும் மக்கள் இல்லாது என்னவோ போலக இருக்க எங்கும் ஏதோ ஒரு வித புது உலகுக்கு சென்ற பிரம்மை. நாய்கள் எல்லாம் மனிதர்கள் கண்டு வீசித்திரமாக பார்த்தது.
முகம் அணிந்து வேற்று கிரகத்தில் சென்ற உணர்வு வெளியே சென்றாளே... அதிலும் தொலைக்காட்சி பேட்டியில என்னவோ தினமும் 100 என்றதே இல்லாமல் ஆயிரம் தாண்டி லட்சம் என்றே செல்ல செல்ல விளையாட்டாய் எண்ணிய விடுமுறை ஏனோ இம்முறை என்று இந்நிலை மாறும் என்றே எண்ணி வருந்தியது.
தினசரி நேரதிற்கு வெளியே செல்வது முதல் படிப்பு கூட கணினி வழியாக வந்திட இந்நிலை தான் நீடிக்குமா? என்றே அச்சம் மனதில் பேரலையாக உருவம் எடுத்தது.
அன்று சது வீட்டிற்கு செல்ல அங்கே அவளின் வீட்டுக்கு வெளியே பூட்டு தொங்கியது. அன்னையிடம் கேட்க 'மருத்துவருக்கு வீடு கொடுப்பதில்லை' என்ற புது பூகம்பதினை சத்தமே இல்லாமல் இறக்கினார்கள். எங்கு திரும்பினாலும் இதே நிலை. தந்தை இல்லா தனக்கு தாய் மட்டுமே இருக்க இன்று தானும் தாயும் தனிமரமாக.. மருத்துவர் என்ற பாந்தமான பணி இருந்தும் ஏனோ இன்று தனக்கு இந்த நிலை என்றே கண்ணீர் உகுத்தினாள்.
தனது தோழி சாரதாவிடம் சொல்லி இன்று தங்க இடம் எங்கேனும் கேட்க? அவளோ பதினைந்து நிமிடத்தில் ஆள் வரும்' என்றே தூண்டித்தாள்.
பத்தே நிமிடத்தில் வசீ வந்து சேர்ந்தான். சதுவை கண்டு ''காரில் ஏறு சது.'' என்றே கட்டளையிட்டவன் ''அத்தை அவ அப்படி தான் வரமாட்டா நீங்க ஏறுங்க'' என்றே உரிமையோடு பேசிட மகள் அமைதியில் தாய் திலகா
''அது இல்லை தம்பி.. சது?'' என்றே எடுத்துரைக்க
''அத்தை நீங்க ஏறுங்க அவள் ஏறுவா ஏறாம போகட்டும் நானே போயி தூக்கிட்டு வர்றேன்'' என்றதும் சது முறைக்க அவனோ எனக்கு என்ன முறைத்து கொள் என்றே அமர்ந்து இருந்தான்.
எவ்வளவு நேரம் தாயை பனியில் நிற்க வைக்க என்றே வசீ காரில் ஏற திலகாவும் ஏறிட வசீ மகிழ்ந்து காரினை தனது இடம் நோக்கி சென்று கொண்டு இருந்தான்.
வீட்டுக்கு வந்து முடிக்க அமுதவள்ளி வாசலில் ஆலம் கரைத்து அழைக்க தயங்கியே சது உள்ளே வந்து நின்றாள்.
வெந்நீரில் உப்பு மஞ்சள் டெட்டால் எல்லாம் கலந்து குளிக்க வைத்து அமுதவள்ளி தனது கணவர் விக்னேஸ்வரிடம் சைதன்யா மட்டும் திலகவதியை அறிமுகம் செய்து வைத்தார்.
விக்னேஷ்வர் மறைத்து பேசும் பழக்கம் இல்லாதவர் அடுத்த முகூர்த்ததில் மகனுக்கு திருமணம் பற்றி பேச சது பதில் தர இயலாது வசீயை காண அவனோ கண் சிமிட்டும் சூரியானக பிரகாசத்தோடு காட்சி அளிக்க திலகா மகள் அமைதியில் உங்க இஷ்டம் என்றதை தாண்டி பேசவில்லை. அமுதவள்ளி பேசவும் விட வில்லை.
தனக்கான அறையில் திலகா உறங்க இங்கு சது அறைவாசலில் வசீ நின்றான்.
''என்ன யோசிக்கிற இவன் அவனா வந்து நம்மளை வேணாம் சொன்னவன் திரும்ப நம்பலை தேடி வந்து இருக்கான். பச்சோந்தி மாதிரி மாறிடறேன் தோனுதா?'' என்றே கேட்டு அருகே வர
''வசீ... உன்னை அப்படி நினைத்தேன் தான். ஆனா என் மனசில் நீ தான் இருக்க அதனால தான் நீ ஏறு சொன்னதும் ஏறிட்டேன். ஆனா என் ஃபீல்ட்ல இப்ப இருக்கற சூழ்நிலை சரியில்லை எத்தனை மரணம் தெரியுமா?''
''சது நான் டிவி பார்க்காத குழந்தை இல்லை லட்சம் கணக்கில் மரணம் அமெரிக்கவுல பிணங்களை புதைக்க தான் இடம் இல்லாமல் அவஸ்தை நம்ம நாட்டில் கூட.. இறந்தவங்களுக்கு புதைக்க இடம் இல்லை தெரியும்.. அதுக்காக மனிதாபிமானம் அழியலை சது.
இன்னிக்கும் நாலு தெருவுக்கு ஒரு தெருவில் கபசுபநீர் தந்து மனிதம் சாகலை புரிய வைக்கின்றாங்க... மனிதருக்கு மனிதர் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யறாங்க... மனித நேயம் வளருது.. எத்தனை வைரஸ் இருந்தாலும் கடைசியில் ஒரு இடத்தில் தேங்குறோம்.''
''நான் சொல்றது உனக்கு புரியலை வசீ.. எல்லா கெட்டதிலும் ஒரு நன்மை இருக்கு தான். ஆனா என்னால உனக்கு ஏதாவது என்றால் வேண்டாம் வசீ நான் நாளைக்கே வேற இடம் சென்றிடுறேன்.'' என்றதும் கோவமாக சென்றான்.
சொல்லி விட்டாளே தவிர உறக்கம் தொலைந்து தான் போனது.
அடுத்த நாள் கண்ணுக்கு காணாமல் கண்ணாமூச்சி காட்டினான் வசீ. சது மருத்துவமனை சென்றாலும் அருகே இருக்கும் எங்கேனும் வீடு கிடைகின்றதா என்ற தேட சாதாரண கால கட்டதிலே கிடைக்காத சூழல் இது போன்ற சூழலில் கிடைக்குமா என்ன? அவள் சோழிய கெடு தாண்டி இரண்டு நாள் இருக்க அமுதா விக்னேஸ்வர் எல்லாம் அதை பற்றி கேட்டது போல தோன்றவில்லை. வசீ மட்டும் கண்ணுக்கு மறைவாக ஒதுங்கி கொண்டான்.
தாய் திலகா கூட அவனிடம் பேசுவதை திலகா பேச்சில் உணர முடிந்தது.
அன்று காலையிலே வீட்டுக்கு சிலர் வந்து சேர குழம்பி போக திலகா தனது மகளிடம் அழைத்து செல்ல அமுதவள்ளி பட்டு சேலை கொடுத்து கட்ட சொல்ல குழம்பினாலும் கட்டி கொண்டாள்.
அவளை போல வசீ பட்டு வேஷ்டி அணிந்து வர தான் நிலமை உணர செய்தாள்.
அங்கு நடக்கும் நிகழ்வுக்கு பொறுமையாக உடன் பட்டாள்.
தி கிரேட் வசீகரன் திருமணம் மிக எளிமையாக டாக்டர் சைதன்யாவுடன் பத்து பேர் தலைமையில் நடந்தேறியது.
இன்னமும் நம்பாத பார்வையை சது பார்க்க வசீயோ அவளை முறைத்தவண்ணம் ''எந்த வைரசும் இந்த உலகதில்(மேதினி) வரட்டும் ஆனா என்னோட உலகம் உதயமாகும்'' என்றான்.
காலங்களில் இன்னும் அந்த கோவிட்-19 போகாமலும் இருக்கலாம் ஆனால் மாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்ந்து கொண்டே இம்மேதினி உதயம் செயல் பட்டு கொண்டு தான் உள்ளது.
-முற்றும்-
- பிரவீணா தங்கராஜ்..
Comments
Post a Comment