முதல் முதலாய் ஒரு மெல்லிய-20




💘20

முதல் செமஸ்டர் வந்து முடியும் தருணம் அது. இன்றோடு பரீட்சை முடிந்து பத்து நாள் விடுமுறை இருக்க பவித்ரா அவள் ஊருக்கு போக முடிவு எடுத்தாள். அஸ்வின் அதற்காக ஆபீஸ் லீவு போட்டுக் காத்திருந்தான். அதற்காகவே பவித்ரா சீக்கிரம் வந்தாள். ஆனால் வீடு அமைதியாக காட்சி அளித்தது.


''
அத்தை இன்னியோட எக்ஸாம் முடிஞ்சுடுச்சு'' என நுழைய, விஸ்வநாதன் வீட்டில் இருந்தார். அவரோடு கணவன் மனைவி ஒரு இளைஞன் அமர்ந்திருந்தனர்.


ராதை பவித்ராவை அறைக்கு கூட்டி வந்து ''முகம் கழுவு பவித்ரா வேற டிரஸ் போடு'' என்கையில் குரல் கம்மியது.


''
எதுக்கு அத்தை ஊருக்கு கிளம்ப இன்னும் நேரம் இருக்கு?'' என்று உரைத்தாள்.
''
வந்து இருக்கறவங்க உனக்கு தூரத்து உறவாம். உன்னை போட்டோல பார்த்து இருகாங்க, உன்னைப் பிடிச்சதால பொண்ணுப் பார்க்க வந்திருக்காங்க, அவங்களும் சென்னை அதான் நீ இங்க இருக்கறதால உன்னைப் பார்க்க வந்துட்டாங்க.  உங்க அப்பா இப்ப தான் போன் பண்ணி அங்கிள்கிட்ட சொல்லி இருக்காங்க '' என ராதை கண்ணீர்துளி துடைத்தவாறுக் கூறி முடித்தார்.


''
அத்தை'' என்ற பவித்ரா குரல் அதிர்ச்சி அடைந்தது.
''
ரொம்ப நேரமா வெயிட் பண்றாங்க'' என்றதும் தந்தை போனில் அதையே கூற முகம் மட்டும் கழுவி உடைமாற்றி எந்தவித ஒப்பனை(மேக்அப்) இன்றி வந்தாள்.


''
இங்க வாம்மா உட்கார்'' என வந்தப் பெண்மணி அழைக்க, அஸ்வின் இங்கு நடப்பது தெரிஞ்சு தான் இருக்கானா? என நெஞ்சு திக்கென்று இருக்க அந்தப் பெண்மணி அருகே அமர்ந்தாள்.


அவளுக்கு தெரியும் அஸ்வின் கண்கள் சாதாரணமாக தான் தெரியும் அவன் தான் முகத்தில் எவ்வித மாற்றத்தையும் காட்டி கொள்ளாமல் இருப்பவன் ஆயிற்றே. தான் காதலித்த பெண் தன் வீட்டினிலே கண்டதும் எவ்வித சலனமும் இல்லாமல் முகம் பார்த்து எவ்வளவு இயல்பாக பேசினான். இப்பொழுதும் அப்படியே அவர்கள் போனதும் சினத்தை காட்டுவான். அது நிச்சயம் இவ்வளவு நாள் பழகி அஸ்வின் குணம் அறியாதவளா? இந்த அப்பா ஏன் இப்பாடி செய்தார்.


படிப்பு, கல்லூரி பற்றிப் பெயருக்கு விசாரித்தானர். உங்கிட்ட கொஞ்சம் பேசணும் என தனியாக வெளியில் இருக்கும் தோட்டத்திற்கு அழைத்து வந்தார் அந்த பெண்மணி.


''
என் மகன் சூர்யா உன்னை நேரில் பார்க்கணும்னு சொன்னான். அவனுக்கு உன்னை போட்டோவிலேயே பிடிச்சுப் போச்சு இருந்தாலும் நேர்ல பார்க்கலாம் என்று தொல்லை பண்ணி கூட்டிட்டு வந்தான். உனக்கு சூர்யாவை பிடிச்சிருக்கா?'' எனக் கேட்க, பவித்ரா பதில் சொல்வது அறியாது விழித்தாள்.

 

 அப்பெண்மணியே ''சரி நாங்க உன் அப்பாகிட்ட கேட்டுக் கொள்கிறோம்'' எனக் கிளம்பினார். போகும் போது ''நாங்க உங்க பர்வதம் ஆச்சிக்கு சொந்தம் இப்ப இன்னும் நெருக்கமான சொந்தமாக போறோம்'' என்றாள்.


''
பர்வதம் ஆட்சிக்கு நீங்க வந்து இருக்கறது தெரியுமா?'' என பவித்ரா சந்தேகம் வேறு கேட்டாள்.


''
இல்லை வீட்டுக்கு போய் போன் பண்ணி சொல்லணும். சூர்யா அவசரப்படுத்தவும் நீயும் இன்னிக்கு கிளம்பறதால பார்த்துட்டு போக உங்கப்பாவிடம் சம்மதம் கேட்டு வந்துட்டோம்'' என்று கூறி விடைப் பெற்றனர்.


ராதை பவித்ரா கிளம்பத் தேவையான உணவுப் பொருளை எடுத்து வைக்கச் செல்ல, விஸ்வநாதன் நந்தகோபாலனுக்கு போனில் பேச, அஸ்வின் கோபத்தின் உச்சியில் இருந்தான்.

 

பவித்ராவை கண்டதும், ''படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணி பாரின் போகப் போறிங்களா மேடம், ஆல் தி பெஸ்ட்'' என வார்த்தையை தேள் போல் கொட்டி அவன் அறைக்குச் சென்றான்.


விஸ்வநாதன் போனில் இன்னும் பேசுவதை கண்டவள் தான் பேசுவதாக செய்கையில் கூறினாள்.


''
நந்தா பவித்ரா பேசணுமாம் கொஞ்சம் இரு அவகிட்ட கொடுக்கறேன்'' என்று போன் கைமாறியது.


''
ஹலோ அப்பா என்னப்பா இப்படி?''


''
பவி குட்டி பத்து நாளைக்கு முன்ன அவங்க பர்வதம் ஆச்சியை பார்க்க வந்தாங்கடா அப்ப நம்ம குடும்ப புகைப்படத்தில் உன்னை அந்த பையன் பார்த்து இருப்பான் போல. அதுக்கு பிறகு ரெண்டு நாளைக்கு முன்ன என்கிட்ட அவங்க பையனுக்கு உன்னை திருமணம் செய்ய கேட்டாங்க...'' என்று பேசினார்.


பவித்ராவோ சிறு கோபம் கொண்டு ''அதுக்காக உடனே இங்க அனுப்பிட்டிங்களா?'' என்று தழதழத்து கேட்டாள்.

 
''
இல்லைடா குட்டி அவங்க கேட்டதுக்கு நான் உன் படிப்பு முடியலை என்று சொன்னேன். அவங்க தான் நேர்ல உன்னை ஒரு தடவை பார்த்துவிட்டு உனக்கும் பிடிச்சிருந்தா திருமணம் முடிஞ்சு அவங்க வீட்ல இருந்தே மேல படிக்கச் சொன்னாங்க.'' என்று கூறவும் பவித்ரா சமாதானமாகவில்லை.


''
அப்பா...''


''
குட்டிம்மா சும்மா பார்த்து விட்டு தானே போனாங்க. நீ இங்க வந்த பிறகு சேர்ந்து பேசுவோம். அப்பா உன் விருப்பம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டேன் உனக்கு தெரியாதா?'' என்று நந்தன்.

 
''
தெரியும்... ஆனா...''


''
உன்னை அவங்க பார்த்துவிட்டு போய் இருப்பதை நான் இன்னும் கயல்கிட்ட கூட சொல்லலை. சட்டுனு போன் போட்டு நீ எங்க இருக்கின்றாய் என கேட்டு உன்னை பெண்  பார்க்க ஆசைப்படறதா சொன்னாங்க. வேண்டாம் சொல்ல முடில'' பவித்ரா அமைதியாக இருந்தான்


''
என்னடா யோசனை பண்ற நீ கிளம்பிட்டியா?''


''
இல்...இல்லைப்பா பேக் பண்ணனும்''
''
சரி நேர்ல வா உன்னை பார்க்கணும் என்று வீடே ஆவலை இருக்கு''


''
சரிப்பா'' போனை விஸ்வநாதனிடம் கொடுத்து விட்டு, ''மாமா...''
''
போய் பேக் பண்ணு பவித்ரா... நடக்கறது எல்லாம் நன்மைக்கு மட்டும் தான்'' என விஸ்வநாதன் சென்றிட துணிகளை சில மட்டும் எடுத்து வைத்தாள். 


அதற்குள் சுவாதியும் தனுவும் வர செய்தனர்.


அவள் முகம் இன்னும் ஒருவித யோசனையில் இருப்பதை ராதை கவனிக்கவே செய்தாள்.


கடைசி பரீட்சை முடிந்ததால் ஊருக்குச் செல்லத் தயாராகி இருந்தாள். அதுவும் மீண்டும் அங்கே எப்படி செல்ல என்றும், இங்கிருப்பவர்களையும் எப்படி மிஸ் செய்ய போகின்றோம் என்று கலங்கி வந்தவளுக்கு இது பெரிய அதிர்ச்சியே. ஆனாலும் இதில் சின்ன ஆறுதல் உண்டு.


ஸ்ரீராமிற்கு நேற்றேக் ஊருக்கு செல்வதை கூறினாள். அவன் வேலை பளுக்காரணமாக வர இயலவில்லை. அஸ்வின் ஏற்கனவே பவித்ரா ஊருக்கு போவதால் பிரிவை தாங்கி கொள்ள இயலாமல் தவித்தான்.

 

   இப்பொழுது பெண் பார்த்து விட்டு போனதால் மேலும் மனம் ரணமாக இருந்தான்.
எல்லோரிடமும் விடைப் பெற்றுச் செல்ல எத்தனிக்க, அஸ்வின் மட்டும் அவன் அறையில் அடைந்துக் கிடந்தான். 
ராதை பவித்ராவிடம் ''அஸ்வினிடம் சொல்லிட்டு போ பவித்ரா'' என்றதும், அவளுக்கும் அவனைப் பார்க்க தோன்றியதால் மேலே அவன் அறைக் கதவைத் தட்டி உள்ளேச் சென்றாள்.


''
இங்க எதுக்கு வந்த வெளிய போ'' என்று காட்டு கத்து கத்தினான்.


''
ஊருக்கு கிளம்பறேன் அஸ்வின் உன்னிடம் சொல்லிட்டுப் போகலாம்னு''


''
கிளம்பு டி'' என்று கர்ஜித்தான்.


''
அஸ்வின் என்ன பெண்ப் பார்க்க வந்தது எனக்கே தெரியாது அப்படி இருக்க ஏன் என் மேல கோபபடற'' என்று அவனுக்கு தன்நிலையை விளக்க முயன்றாள்.


''
இங்கிருந்து போடி''


''
ஏன் என்னை விரட்டுற, அவங்களுக்கு என்னை பிடிச்சு இருந்தா என் மேல என்ன தப்பு'' என்றவளை அஸ்வின் வேகமாக இழுத்து அவளது இதழில் அவன் இதழ் பதித்து சில நொடியில் அதே வேகத்தோடுத் தள்ளி விட்டு வெளியேறினான். 


மேனி சிலிர்த்திட அவளை அறியாமல் கண்களில் நீர் காட்டாற்று வெள்ளமாக பொழிந்தன. கால்கள் அசைய மறுத்தன சிலையானாள். பவித்ராவிற்கு அஸ்வின் கொடுத்த முதல் முத்தம் வருடலையும் வலியையும் ஒரு சேர தந்தன.

 

 தனு வந்து, ''ஏன் அழுவுறிங்க அண்ணி? அண்ணா திட்டிட்டாங்களா? டைம் ஆச்சுனு அப்பா வர சொன்னாங்க'' என்றாள்.

 கண்ணீரை அழுத்தித் துடைத்து விட்டு அறையை பார்க்க அஸ்வின் அங்கு இல்லை. நேரத்தை காண வந்து பதினைந்து நிமிடம் காட்டியது. இவ்வளவு நேரம் இங்க இருந்தேன் அஸ்வின் எப்போ போனான் என யோசிக்க தலைவலியே தாக்கியது. அவனது அறையை விட்டு மனமின்றியே நகர்ந்தாள்.


விஸ்வநாதன்-ராதை இருவருக்கும் மட்டுமின்றி ஆகாஷ் சுவாதிக்கு, ஏன் பவித்ரா அழுகிறாள் என்று தெரியவில்லை அஸ்வின் ஏன் வெளியே கிளம்பி சென்றான் என்றும் புரியவில்லை. என்னா நடந்து எதற்கு இந்த அழுகை போன முறை போல அறைந்து விட்டானாயென விஸ்வநாதன் குழம்பினர்.


ஆகாஷ், விஸ்வநாதன் அவளை பஸ் ஏற்றி வழியனுப்பி விடைப்பெற்றனர். பஸ் நகர அவள் மனம் நகர மறுத்தது.

 

ஏன் அஸ்வின் இப்படிப் பண்ணின? என மனம் புலம்பியது.
அவளுக்குத் தெரியும் பெண் பார்த்துச் சென்றவர்கள் பர்வதம் பாட்டியிடம் சொல்லி இருப்பார்கள் அப்போது, தான் ஒரு அனாதை என தெளிவாக கூறுவார். பின் பெண் பார்த்துச் சென்றவர்கள் ஓட்டம் எடுப்பர். திருமணம் நடைப்பெறாது.

 

-மெல்லிய பூகம்பம் தொடரும் 
-பிரவீணா தங்கராஜ் 

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1