முதல் முதலாய் ஒரு மெல்லிய-18

 

💘18

ராதை மட்டும் வீட்டில் இருக்க, ராதையிடம் “ஒரு ஆக்சிடென்ட் ரத்தம் பார்த்து அழுவுறா எப்படியாவது சமாதானம் படுத்துங்க ஆன்ட்டி” என்றதும், விஸ்வநாதன் அஸ்வின் வரவும் சரியாய் இருந்தன.


''
ஆக்சிடென்ட் ஆனவர்கள் நல்லா குணம் ஆகணும்னு வேண்டிக்கோ பவித்ரா அழாத'' என்று ராதை கூறியது பவித்ரா செவிகளுக்கு எட்டவில்லை.


விஸ்வநாதனுக்கும், ஸ்ரீராம்மிற்கும் அவளது அழுகையின் காரணம் தெரிந்தமையால் செய்வது அறியாது இருக்க, அஸ்வினுக்கு பவித்ராவின் அழுகை நெஞ்சை ஏதோ செய்ய அவளை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டு இறுக அணைத்து தலையை வருடி விட்டான்.


பவித்ராவுக்கு ஏதோ நிம்மதி பரவியது போல் உணர்ந்தாள். அழுகை அடங்கின ஆனால் முகம் மட்டும் வாட்டமாக இருந்தன. அவனிடம் இருந்தும் சட்டென விலகி கொண்டாள்.
அஸ்வினுக்கு அவளின் முகவாட்டத்தை சரிச்செய்ய பவித்ரா கை பிடித்தான்.


''
என் கூட வா'' இழுத்து செல்ல விஸ்வநாதன்'அஸ்வின் அவளே...'' என ஆரம்பிக்க கையை நிறுத்துமாறு செய்கை செய்தான்.


''
அப்பா நான் பவித்ராவை சந்தோஷமான நிலைக்கு மாற்றி பத்திரமா கூட்டிட்டு வர்றேன் பயப்படாதீங்க” என்று காரை எடுத்துக் கிளம்பினான்.


''
பார்த்துடா'' என்று ஸ்ரீராம் கூறினான்.


விஸ்வநாதன் ஸ்ரீராமை பார்த்து ''உனக்கு பவித்ராவை பற்றி?'' என வார்த்தை நுனி வரை வந்து நிறுத்தினார்.


''
தெரியும் அங்கிள் பவித்ரா சொல்லி இருக்கா'' என்றான்.
''
அஸ்வினுக்கு?'' என்று கேட்டு முடித்தார். அவருக்கு மகனுக்கும் தெரிந்தால் நல்லது தானே என்று எண்ணம்.


''
தெரியாது அங்கிள் நான் சொல்லியது இல்லை. கிளம்பறேன் அங்கிள் '' என்று அவனும் புறப்பட்டான்.


காரில் ''எங்க போறோம்?'' என்ற பவித்ரா கேட்டதிற்கு 'ம் அமைதியான இடத்துக்கு'' என்றான்.


''
என்ன வீட்லயே விட்டுடுங்க ப்ளீஸ்''


''
கொஞ்சம் பொறு பவித்ரா'' என அவள் கைப்பிடித்து அமைதிப்படுத்தினான்.


அவனது தொடுகை அத்தருணத்தில் ஆறுதல் அளித்தாலும் ''கையை விடுங்க'' என்றாள்.


காரினை மிதமான வேகத்தில் ஒட்டிக் கொண்டு அந்த இடத்துக்குள் நுழைந்தான். அவ்விடத்தில் மரங்கள், பூக்கள், குழந்தைகள், முதியவர்கள், மாற்று திறனாளிகள் எனக் கலவையாக இருந்தனர்.


இது வரை அழுகையை அடக்கினாலும் மனம் சமநிலை அடைய தவித்தது. ஆனால் இந்த நொடி சமநிலை அடைந்து புத்துணர்வு வந்ததுப் போல் உணர்ந்தாள்.


''
இங்க வருவதா இருந்தால் ஏதாவது வாங்கி வந்து இருக்கலாம், இப்ப பாருங்க வெறும் கையோடு வந்து இருக்கோம்'' என்று சுற்றிமுற்றி பார்த்தாள்.
''
ஏதாவது சொல்ல விட்டியாடி'' என கண்கள் குறும்போடு பார்த்து சொல்லிட, பவித்ரா கண்களுக்குள் ஏதோ ஊடுருவது போல குறுகுறுத்தது. 


இதற்கு முன் ஒரு முறை கோவிலில் 'போடி...' என்று கையை உதறி தள்ளி விட்டு இருக்கிறான் ஆனால் அன்று இல்லாத ஒரு உணர்வு இன்று அவளை தாக்கியது.


''
வா அஸ்வின் ரெண்டு மாசமா ஆளையே
காணோம் கண்ணன் நீ எப்ப வருவனு கேட்டுக்கிட்டே இருந்தான்'' என்று கண்ணாடி போட்டு ஜிப்பா அணிந்து ஒரு முதியவர் வந்தார்.


''
கொஞ்சம் வேலை அதிகம் சார், கண்ணனை பார்க்கலாமா?''
''
'' அருகில் இருந்த ஒருவரிடம் '' சுந்தரம் கண்ணனை  அழைச்சுட்டு வா'' என உத்தரவு பிறப்பித்தார்.

 
''
அப்புறம் யாரு இந்த பெண், கல்யாணம் செய்யப் போறப் பெண்ணா?'' என்று யூகித்து கேட்டுவிட்டார்.


அஸ்வினும், பவித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அஸ்வின் ''உங்க ஆசிர்வாதம் சார்'' என்றான்.


''
ரொம்ப நல்ல பெண்ணாக தெரியறா'' என்று சொல்லிவிட்டு ''சரி அஸ்வின் கண்ணன் வந்தா பேசிட்டு வாங்க நான் இதோ வர்றேன்'' எனச் சென்றார்.


ஒரு சிறுவன் ஓடி வந்து அஸ்வினிடம் ''அண்ணா எப்படி இருக்கிங்க, அண்ணா இது அந்த அக்கா தானே?'' என்று தவிப்பாய் கேட்டான்.


''
ஆமாம். உனக்கு நல்ல நினைவாற்றல் டா, ஒரு தடவை பார்த்ததும் நியாபகம் வச்சி இருக்க'' என்று தட்டி கொடுத்தாள்.


''
எனக்கு இப்படி ஒரு லைப் கொடுத்ததே அக்கா தானே அண்ணா எப்படி மறக்க முடியும்?!'' என்றான். பவித்ராவுக்கு ஒன்னும் புரியாமல் விழிக்க மட்டும் முடிந்தது.


''
அக்கா மறந்துட்டியா?'' என்று கேட்டதும்,
''
யாருனு தெரில'' என்று பவித்ரா தனது நினைவாற்றலை திட்டினாள்.


''
அண்ணா என்ன..'' என்றவனை அஸ்வின் “நீ போய் குடிக்க தண்ணி எடுத்துட்டு வா'' என்றான்.
''
சரி அண்ணா. அக்கா யோசிச்சு பார் இதோ வந்துட்டேன்.'' என்று ஓடினான்.


''
மார்ச் பஸ்ட் வீக் சென்னைக்கு வந்த ஞாபகம் இருக்கா? ''
''
ம் ..வந்தேன் ஒரு என்கேஜ்மென்ட்கு ஸ்கூல் பிரெண்ட் ஒருத்திக்கு சென்னையில மேரேஜ். அப்போ வந்தேன்'' என்றாள்.


''
அப்ப ஒரு பையன் பஸ் ஸ்டாப்ல பிச்சை எடுத்தான் ஞாபகம் இருக்கா?'' என்று கூறியதும் பவித்ரா '' ஆமாம் அந்த பையனா இவன்?'' என்று சந்தோஷம் கொண்டாள்.


''
ம் ...அன்னைக்கு தான் உன்னைப் பஸ்ட் டைம் பார்தேன். மால்ல செகண்ட் டைம்.''


அன்றைய நாட்கள் நினைவுப்படுத்தபட்டன.

பஸ் ஸ்டாப்பில் ''அக்கா அக்கா காசு இருந்தா குடுக்கா, பசிக்குது எதாவது வாங்கி சாப்பிட'' என்று கை ஏந்தி சிறுவன் நின்றான்.
''
ஏன்டா பிச்சை எடுக்கற... உனக்கு யாரும் இல்லையா'' எனக் கடுப்புடன் பவித்ராவின் தோழி நித்யா கேட்டாள்.


''
யாராவது இருந்தா நான் ஏன்கா பிச்சை எடுக்கறேன்'' என்று சற்றும் வருத்தமின்றி அச்சிறுவன் கூறிட, பவித்ராவுக்கு மனம் அவனுக்காக வருத்தப்பட்டது.


''
யாருமே இல்லையா...? ''என்று பவித்ரா கவலைப்பட, உதட்டை பிதிக்கியபடி இல்லை என்று தலை அசைத்தான்.


''
ரெண்டு ரூபா இருந்தா கொடுத்து அனுப்பு டி'' என நித்யா பவித்ராவிடம் மொழிந்தாள்.
''
நான் ஒரு அட்ரஸ் தர்றேன் அங்க மூனுவேளைச சோறு, தங்க இடம், டிரஸ், படிப்புக் கூடச் சொல்லித் தருவாங்க போறியா?'' என பவித்ரா நிதானமாய் கேட்டாள்.


''
அப்படி எல்லாம் கூட இடமிருக்கா?'' என்று அச்சிருவன் கேட்டான்.


''
இருக்கு போறியா?'' என்று பவித்ரா கேட்க சிறுவன் உற்சாகம் பற்றிக் கொள்ள,''போறேன் அக்கா'' என்று உரைத்தான்.


உடனே ஒரு பேனாவை எடுத்து 'நேச இல்லத்தின்' முகவரியை எழுதிக் கூடவே நூறு ரூபாய் நோட்டை சேர்த்துத் தந்தாள்.


நித்யாவோ ''ஏ என்னடி பண்ற'' என்றதை காதில் வாங்காமல் அந்த சிறுவனிடம் கொடுத்து “உனக்கு யாரும் இல்லைனு சொல்லு சேர்த்துப்பாங்க புரியுதா? '' என்றாள்.

''ம்'' என்று சிறுவன் சொன்னான். அந்த நேரம் அவளாக செல்ல முடியாமல் போனது.

 
''
ஏய் பஸ் வருது வா டி சீக்கிரம்'' என நித்யா சொல்ல சற்றுத் தள்ளி நிப்பாட்டிய பஸ்சை பிடிக்க நடந்தனர்.


''
ஏன்டி காசைக் கொடுத்த அவன் உன்னை நல்லா ஏமாத்திட்டான்'' என்றதற்கு, ''அந்த சின்ன பையன் அந்த நூறு ரூபாய் வச்சி கார் பங்களானா வாழ போறான். இப்படி யோசி... ஒரு வேளை அவனுக்கு யாரும் இல்லாம அந்த அட்ரஸ்க்கு போனான் என்றால் அவனக்குத் தானே நல்லது'' என்றாள்.

 நித்யாவோ  ''என்னமோ போ உன்னைத் திருத்தவே முடியாது'' என்று கூறி பேருந்தில் ஏறினார்கள்.
இதை எல்லாம் பஸ் ஸ்டாண்டில் ஸ்ரீராமிற்காக காத்திருந்த அஸ்வின், பைக்கில் இருந்தப்படிக் கவனித்தான்.

 முதலில் அவனது பார்வைச் சாதாரணமாக எல்லோரையும் நோட்டம் விட்டது. பவித்ராவின் நடவடிக்கையில் கவனித்தவன் அங்கிருந்த பெண்களில் பவித்ரா தனித்துவமாகக் காணப்பட்டாள். அதனாலேயே அவன் மனம் அவள் பக்கம் சாய்ந்தது. ஹெல்மெட் அணிந்து இருந்தமையால் பவித்ரா இவனை பார்க்க வாய்ப்பில்லை.


சட்டென பேருந்து புறப்பட்டுப் போனப் பின்னே அவள் இல்லாததை உணர்ந்தான். கண்ணன் மட்டும் பேப்பர் பணம் வைத்து கொண்டு முழித்து நின்றான்.


அஸ்வின் அவனைத் தானாக அழைத்துக் கொண்டு வந்து இல்லத்தில் சேர்த்து விட்டு அடிக்கடி வந்துப் பார்த்து விட்டு, மாதம் ஒரு முறை ஆயிரம் பணம் கொடுத்து விட்டு செல்வான். அவன் வர இயலாத போது மணி ஆர்டர் அனுப்பி விட்டு போன் செய்வான்.


''
அக்கா தண்ணி'' என்றவனிடம், ''இப்ப எப்படி இருக்க கண்ணன்'' என்றாள்.


''
எனக்கு என்னக்கா குறை நல்ல சாப்பாடு தங்க இடம், போட்டுக்க துணி, படிப்பு சொல்லி கொடுக்கறாங்க, இங்க இருக்கற தாத்தா பாட்டிக்கு எல்லாம் ஹெல்ப் பண்றேன், பூ செடிக்கு நீர் விடறேன், எனக்கு கைத்தொழில் கூடக் கத்துக் கொடுக்கறாங்க. நானே டீ கப், மெழுகுவர்த்தி எல்லாம் செய்யக் கத்துக்கிட்டேன்.'' என்று மகிழ்ச்சியாய் வெளிப்படுத்தி பேசினான். தான் செய்தது நன்மை ஒருவனுக்கு வாழ்வு வளப்படுத்தி விட்டதா என்ற ஆனந்தம் பவித்ராவுக்குள் பேரானந்தம் கொடுத்தது.

   மேலும் சற்று நேரம் பேசி விட்டு கண்ணன் விடைப் பெற்றான்.


''
அஸ்வின் எனக்கும் இங்கேயே இருக்கனும் போல இருக்கு'' என்று மனம் பேரானந்தம் கொண்டதில் அவன் பெயரை உச்சரித்தாள்.
''
என்ன சொன்ன?''
''
இங்கேயே இருக்கனும் போல இருக்குனு சொன்னேன்''


''
அதுக்கும் முன்னாடி''


''
அதானே சொன்னேன்''


''
ஒன்னுமில்லை'' என சிரித்துக் கொண்டான்.

 அவள் பெயரிட்டு அழைத்தது அவள் உணரவில்லை.
இதயத்தில் உள்ளிருந்த இயல்பாக வந்ததோ?!


மெல்லிய பூகம்பம் தொடரும். 

பிரவீணா தங்கராஜ். 

Comments

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1