முதல் முதலாய் ஒரு மெல்லிய-30 & 31 (முடிவுற்றது)

 💘30

      விஸ்வநாதன் வீட்டில் அஸ்வின் உட்பட அனைவரும் ஏதோ கோவில் காணிக்கை என்றும், அருகே திருமண ரிசப்ஷன் என்றும் கூறி புறப்பட்டனர். அஸ்வினுக்கு வர இஷ்டம் இல்லாமல் இருப்பினும் பவித்ரா ஊர் அருகே என்பதால் அவள் வரவாய்ப்பு இருக்க கூடுமோ?! என்று ஆவலோடு வந்தான்.

காரிலேயே புறப்பட்டனர்.

 

 ஸ்ரீராம், ஆகாஷ், அஸ்வின் என மாறிமாறி காரினையோட்டி வந்தனர். நடுவில் அஸ்வின் கண் அசந்த நேரம் பூ, பழம், வெத்தலை பாக்குயென இன்னப்பிறவும் வாங்கினார்கள்.


      ஸ்ரீராம் ஒரு வீட்டின் அருகே காரை நிறுத்த அனைவரும் புன்னகை தவழ இறங்கினர்.

  அஸ்வின் மட்டும் ''கோவில்னு சொன்னிங்க வீடு மாதிரி தெரியுது, மண்டபம் மாதிரியும் தெரில'' என்று வினவினான்.


  '' உள்ள வா தெரியும் '' என ஆகாஷ் கிண்டல் செய்ய துவங்கினான்.


   ''வாங்க வாங்க'' என வரவேற்றார் நந்தகோபாலன். 


  ''என்னடா விஸ்வா சொல்லாம கொள்ளாம வா உள்ள வா. வாங்கம்மா'' என்று நந்தன் வரவேற்றார்.


 ''யார் வீடு டா இது?'' என முகவாயில் கை வைத்து சுற்றிமுற்றி பார்த்தவாறு அஸ்வின் ஸ்ரீராமிடம் கேட்டான்.


''
ம் ம்... உன் மாமனார் வீடு'' என மென் குரலில் சொல்ல,


''
என்னது பவித்ரா வீடா?''என்று ஆச்சரியம் கொண்டான்.

    விஸ்வநாதன் உள்ளே நுழைகையிலேயே, ''சாரி டா சொல்லிட்டு வந்து இருக்கனும் ஆனா நீ எப்படியும் சம்மதிப்பனு வந்துட்டேன். எனக்கு பவித்ராவை எங்க வீட்டு மருமகளா, கேட்க வந்து இருக்கோம். எங்களுக்கு மனப்பூர்வமா சம்மதம். உனக்கும் சம்மதம்னா தட்டை மாற்றி கொள்ளலாம்'' என்று சட்டென கூற, நந்தனுக்கு ஒரு கணம் செய்வது அறியாது திகைத்தார்.

 

    கரும்பு தின்ன கூலியா? என்பது போல், அது எனக்கு அதிர்ஷ்டம் டா'' என்றார் நந்தன்.

    வீட்டினுள் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி, உடனே கயலிடமும், மங்கையிடமும் விரைவாக பவித்ராவை அலங்கரிச்சு கூட்டிட்டு வாங்கயென வீரட்டினார்.


  ''அதெல்லாம் வேணாம் நாங்க பவித்ராவை பார்த்துப் பழகி இருக்கோம்ல, சும்மா வந்தா போதும்'' என்றார் ராதை.


மங்கை பாட்டி பவித்ரா அறைக்கு சென்று, ''பவித்ரா உன்னை பொண்ணு பார்க்க வந்து இருக்காங்க. கொஞ்சம் வெளியே வா'' என அழைத்தார்.

   ''பாட்டி என்ன சொல்லறீங்க. எனக்கு கல்யாணம் வேணாம் பாட்டி ப்ளீஸ்'' என தடுமாறினாள்.


  ''முதலில் வெளிய வா...அப்பா கூப்பிடறாரு'' என்று அழைத்தார்.

   ''பாட்டி...ப்ளீஸ்....'' மங்கை கையை பிடித்து இழுத்து வர வெளியே வந்த போது, அஸ்வின் கண்கள் அவளை வருடியது.

பவித்ரா இன்ப அதிர்ச்சி அடைந்தாள்.

    மங்கை விரைவுப்படுத்த, கயல்விழி வேகமாக கிட்சேனுக்குள் நுழைந்து காபி கலந்தாள். ''பவித்ரா இந்தக் காபி எடுத்துக்கிட்டு போய் எல்லோருக்கும் கொடு'' என்று கயல்விழி பவித்ராவிடம் சொல்ல பவித்ரா தன் அம்மா தன்னிடம் இயல்பாக பேசுவதை எண்ணி கண்கலங்க கயலும் கண்கலங்கினாள்.


      ''
பவித்ரா அம்மா சொன்னது தப்பு தான்டா செல்லம். நீ என்னை மன்னிச்சுடு டா'' என கண்ணீரோடு சொல்லி கைப்பற்ற, ''என்னம்மா நீங்க போய்.'' என தாயை அணைத்து கேவி அழுதாள்.


     மங்கை பாட்டி ''என்ன இது கண்ணை துடை, என்ன நினைப்பாங்க, போய் முகம் அலம்பிட்டு காபிக் கொடு பவித்ரா. இங்க பாரு கயல்விழி நீயே அழுதா பிள்ளை பாவம்'' என்று அதட்ட அம்மா மகள் இருவரும் நிதானித்தார்.


    ''ம்... ஆமா அத்தை. அவளை பொண்ணு பார்க்க வந்து இருக்கற நேரத்துல நான் வேற... குழந்தையை கஷ்டப்படுத்திகிட்டு. நீ இந்த காபி தட்டை எடுத்து கொண்டு போடா'' என பழைய கயலாக பேசிட பவித்ரா மகிழ்ந்தாள்.


சந்தோஷத்தோடு பழைய பவித்ராவாக வலம் வந்தாள். அவள் எதிர்பார்த்தது இதை தான். பழைய அன்பை மீண்டும் மீட்டிட முடியாதென்று மறுகினாள். இன்று அந்தநிலை மாறவும் நெகிழ்ந்து விட்டாள். போதாதற்கு அஸ்வின் வந்து விட்டான்.

 

   காபி தட்டை தலைக்குனிந்தே எல்லோருக்கும் கொடுத்தாள். அஸ்வின் முறை வரும் போது தானாக குனிந்த தலை மெல்ல நிமிர்ந்து அடுத்த கணம் மீண்டும் தாழ்ந்திட நந்தனுக்கும், ஈஸ்வரமூர்த்திக்கும் பவித்ராவுக்கு அஸ்வினை பிடித்திருப்பது புரிந்து விட்டது.
அஸ்வினை பற்றி படிப்பு உத்தியோகம், இன்னப் பிறயாவும் ஈஸ்வரமூர்த்தி கேட்டுக்கொண்டார்.


ஒரு வழியாக பவித்ரா விருப்பம் கேட்க அவள் வீட்டார் அவளை அறைக்கு சென்று கேட்க சென்றனர்.

 

   அந்நொடி ''எப்படி டா எங்க சர்ப்பிரைஸ்?'' என்றான் ஆகாஷ்.
''
இதுல என்ன டா சர்ப்பிரைஸ்? உன் லவ் தெரிந்த அடுத்த நொடி அப்பா நிச்சயம் பண்ணி கல்யாணத்தை முடிச்சார். என் லவ் வீட்ல எல்லோருக்கும் தெரியும் அதனால எப்படியும் அப்பா ஒரு நாள் இந்த முடிவு எடுப்பார் என்று தெரியும்'' என்றான் அஸ்வின். அங்கிருந்த பேப்பரை எடுத்து நிதானமாக வாசித்தான்.


   ''அப்போ உனக்கு இது ஷாக், சர்பிரைஸ் எதுவும் இல்லையா?'' என்று அதிர்ந்தான் ஆகாஷ்.


  ''ஏன்டா..?'' 


  ''அஸ்வின் எனக்கு ஒரு டவுட்?'' என்றான் ஸ்ரீராம்.


  ''ஏன்டா நீயுமா?''


  ''டேய் அது இல்லை. இதுக்கு நீ ரியாக்ஷன் இது தான் பண்ணுவனு தெரியும். என் டவுட் அங்கிள் எப்படி லவுக்கு சப்போர்ட் அதான்'' என்றான்.


  ''அதுவா ஒருத்தரோட லவ் பெய்லியர் ஆனா அவங்களுக்கு மற்றவர்களின் லவ் தோற்கக்கூடாது அதான் ரீசன். அதுவும் நாங்க அவர் பசங்க மருமகளுக்கு என்ன குறைச்சல் என்று ஓகே என்று முடிவு செய்து இருப்பார்'' பதிலுரைத்தான் அஸ்வின்.


   ''டேய் நான் லவ் பெய்லியர் என்று உனக்கு யார் சொன்னது?'' விஸ்வநாதன் இடையில் ரகசியம் குட்டுபட்டதாக எண்ணி கேட்டார்.

 
    ''யார் சொல்லணும் தாத்தா டைரி படிச்சேன். உங்க லவுக்கு மறுப்பு சொல்லிட்டு உள்ளுக்குள் ஓகே படிப்பு முடியட்டும் என்று இருந்தாராம். பட் நீங்க லவ் பண்ணின பொண்ணு மறுப்பு என்று சொன்னதும் காத்திருக்கமா வேற பையனை கல்யாணம் பண்ணிகிட்டாங்களாம். நீங்களும் உங்க அப்பாகிட்ட தைரியமா நிற்கலையம்.

  

    தைரியம், காத்திருப்பு இந்த இரண்டும் இல்லாம போனதால்..  இப்போ ஆகாஷ் காதலில் அதை எதிர்பார்த்தீங்க, இப்ப என் காதலிலும்...சரியா''  என்று முடித்தான்.


  ''என்னடா எனக்கும் ராதைக்கும் சண்டை மூட்டிவிட பார்க்கறியா? அவளுக்கு எல்லாம் தெரியும்'' என்று விஸ்வநாதன் மகனிடம் கூறி ராதையை தோளில் சேர்த்தணைத்தார்.


   ''அதுவும் எனக்கு தெரியுமே. தாத்தா அதையும் டைரில எழுதி வச்சி இருக்கார் அவர் மருமகளிடம் எல்லாம் சொல்லி இருப்பதை'' என்று கூறினான். அனைத்தும் யாம் அறிவோன் என்று.

 
    ''பாவம் என் சின்ன மருமகள் பவித்ரா'' என்று விஸ்வநாதன் தலையை உலுக்கமற்றவர்கள் சிரிக்க, அஸ்வின் பவித்ரா வீட்டினர் எல்லோரும் இன்முகத்துடன் வருவதை கண்டு மனம் நிறைந்தான்.


    எல்லோருக்கும் அந்த நொடியே நிச்சயம் பேசி முடிவு செய்தனர். அதே நேரத்தில் பர்வதமும் ரகுவும் உள்ளே நுழைந்தனர்.

   விஷயம் அறிந்து பர்வதம், பவித்ராவுக்கு வந்த வரனை ஏற்கனவே ஒரு முறை தட்டி விட்டு மனம் வருந்தினாள். அதனால் இந்த முறை வாய் திறவாது இருந்தாள். ஆனால் ரகு பவித்ராவிடம் வாங்கிய அடியை மறக்காது சதிச்செய்ய ஆர்வமானன்.

 
   ''மாமா உங்க வளர்ப்பு மகளுக்கு என்ன வரதட்சணை கொடுக்க போறீங்க'' என்று அந்த 'வளர்ப்பு மகள்' என்ற சொல்லில் அழுத்தம் கொடுத்தான்.

   விஸ்வநாதன் ஸ்ரீராமை தவிர யாவரும் குழம்ப, ராதை அதிர்ந்தார். அஸ்வின் கண்கள் பவித்ராவை கூர்ந்தது.

 

  கயல்விழி இம்முறை ''ஆமாம் பவித்ரா எங்க வளர்ப்பு மகள் தான், ஆனா அது மறந்து போச்சு நாங்க எங்க மகளா தான் அவளை எடுத்து வளர்த்து பார்க்கிறோம். அதனால எங்களுக்கு சொல்லப் பிடிக்கல. இப்படி யாராவது சொன்ன தான் நினைவே வருது'' என்று பவித்ரா தலைவருடி புன்னகையோடு முடித்தாள்.


    ராதை அதே நேரத்தில் '' அதனால் என்ன? எங்களுக்கு பவித்ராவை பிடிச்சிருக்கு அது மட்டும் போதும். வேற எதுவும் சொல்லணும்னு அவசியம் இல்லை'' என்றாள். மற்றவரும் அதை ஆமோதிப்பது போல் புன்னகை தவழ விட்டனர்.
     பவித்ரா '' அம்மா'' என கயல்விழியை அணைத்து கொள்ள பர்வதம் மகளின் மனம் போல பவித்ராவை பேத்தியாக பார்க்க ஆரம்பித்தார்.

 

   பர்வதம் ரகுவை பார்த்து, ''ரகு என்னை விட்டுல விட்டாச்சா  உங்க வீட்டுக்கு கிளம்பு! கூடிய சீக்கிரம் என் பேத்தி பவித்ராவோட திருமண அழைப்பிதழ் எடுத்து கொண்டு உங்க வீட்டுக்கு வர்றேன்'' என முறைக்க இனி தன் வேலை செல்லுபடி ஆகாது என ரகு கிளம்பினான்.

 

 ஸ்ரீராம் ரகுவை முறைப்பதை அஸ்வின் கண்டான். என்னவோ பண்ணி வச்சிருக்கானோ?’’ என்று வேடிக்கை பார்த்தான். இன்னொரு முறை காணும் பொழுது அஸ்வின் வேலையை காட்டிக் கொள்வோம் என பொறுமைகாத்தான்.


     வருணோ சிறிது நேரத்திலே அஸ்வின் பேச்சில் தனது ஹீரோவாகவே எண்ண துவங்கினான். மாமா எனக்கு உங்களை போல ஆர்ம்ஸ் வர என்ன செய்யனும்?''  “எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சுருக்கு என அன்பு மழை பொழிந்தான். அவனது கள்ளமில்லா உள்ளத்தை அஸ்வினுக்கு பிடித்து போனது. இல்லையா பின்ன பவித்ராவின் உடன் பிறப்பாயிற்றே...


      மங்கை பாட்டி பவித்ராவிடம் ''அம்மா பவித்ரா வீட்டை சுத்திக் காட்டு போம்மா '' என்றதும் '' சரிங்க பாட்டி'' என்றாள்.


   அதற்கெனவே காத்திருந்தது போல எழுந்தான் அஸ்வின். அவனுக்கு பவித்ராவிடம் கொஞ்சம் பேச வேண்டியதாய் இருந்தன.
             

 

      பவித்ரா அனைவரையும் அழைத்துக் கொண்டு ஒவ்வொரு அறையாக காட்டினாள்.

   பழைய காலா மரவேலைப்பாடுகள் நிறைந்த தூண்களும் ஓவியங்களும் இருந்தன.

  மாடியில் முல்லை பூக்கள் பூத்து காணப்பட்டன. மாடியில் இருந்து சுற்றி பார்க்க மரம், வயல், தோட்டமென காட்சி அளித்தது. மனம் ரம்மியமானது.

 

 கொஞ்ச நேரத்தில் ராதை கயலுடன் பேசி நெருக்கமானர்கள்.

அங்கே இருக்கும் அறையில் சுவாதி அமர்ந்து ஆகாஷ் இழுத்து அமர்த்தினாள்.

    ''அவங்க போகட்டும் இங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம் ரொம்ப நேரம் கார் ட்ராவல் அசதியா இருக்கு '' என்றாள் சுவாதி.


  ''என்னாச்சு ஏன் அசதி?''


  ''தெரியல வாந்தி வர மாதிரி இருக்கு''


  '' ஏய் ... லெமன் ஜூஸ் ஏதாவது குடிக்கறியா?''


  ''வேண்டாம். எனக்கு டவுட்டா இருக்கு ஆகாஷ்''


  ''என்ன டவுட்?'' என்று அங்கிருந்த இருக்கையில் அவனும் அமர்ந்து சாய்ந்து அமர்ந்தான்.


  ''கன்ஸிவா இருக்கிறேனோ'' என்றதும் நிமிர்ந்து அமர்ந்தவன் அவளின் அருகே வந்தான்.
  ''சுவாதி நிஜமா சொல்றியா? எனக்கு அப்படியே சத்தம்போட்டு கத்தனும் போல இருக்கு'' என்றவன் அவளின் நெற்றியில் இதழ் பதித்தான் ஆகாஷ். 

 

    தேதி எண்ணி பார்த்தா அப்படி தான்” என்று கூறி மகிழ்வை கூட்டினாள்.
 

   ஸ்ரீராமோ தனுவையும் வருணையும் எப்படி கழற்றி விட என யோசித்தான். நண்பன் அஸ்வின் தோழி பவித்ராவிடம் பேசும் தனிமைக்கு வழிவகுக்க திட்டமிட்டான்.

 வருணிடம், ''வருண் எனக்கு கொஞ்சம் மெயில் அனுப்பனும் கம்ப்யூட்டர் எங்க இருக்கு?'' என்றிட வருண் துள்ளி கொண்டு,
''
வாங்க அண்ணா நான் காட்டறேன்'' என்றான்.


   ''தனு நீயும் ஒரு நிமிஷம் என் கூட வா'' என தனுவை முதல் முறையாக கைப்பற்றி ஸ்ரீராம் இழுக்க, தனு மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல ஸ்ரீராமுடன் சென்றாள்.

 

   தன்யா-ஸ்ரீராம் இருவருமே ஒருவித பயம் கலந்த மிரட்சியோடு இருந்தனர் .


''
வருண் இளநீர் வெட்ட ஆளை கூட்டிட்டு வாடா'' என மங்கை குரல் கேட்டு, வருணோ ''வர்றேன் பாட்டி.'' என்று குரல் கொடுத்துவிட்டு. “அண்ணா இதோ கம்ப்யூட்டர்” என்று காட்டிவிட்டு கீழே ஓடினான்.


     அடுத்த நொடி ஸ்ரீராம் தனு கையை விட்டான். எங்கே தன்யா பவித்ராவை தேடி ஓடிவிடுவாளென இத்தனை நேரம் பிடித்திருந்தான்
     ''சாரி தன்யா அஸ்வின் பவித்ரா இரெண்டு பேரும் தனியா பேச வைக்க தான் உன்னையும் வருணையும் இங்க வர கைப்பிடிச்சு கூட்டிட்டு வந்துடேன்'' என்று கூறியும் அவன் கைகள் நடுங்கியது.


    ''ம்'' என ஒற்றை பதிலை தந்தவள் பிறகு அமைதியே உருமாறினாள். ஓயாத பேச்சு அப்பொழுது இல்லை.
பவித்ராவும் அஸ்வினும் தனித்து விடப்பட்டனர்.


  ''என்னை அவாய்ட் பண்ணினதுக்கு ரகு சொன்னது தான் ரீசனா?''
''
ம்..'' என தலை அசைத்தாள்.


    ''முட்டாள்தனமா தெரிலயா டி?! நீ யாரு? எங்க இருக்கனு தெரியாதப்பவே உன்னை என் ரூம்ல புகைப்படமா வச்சி உயிரா மதிச்சவன். நீ அனாதைனு தெரிஞ்சா விட்டுடுவேன்னு எப்படி யோசிச்ச.''  என சினத்தோடு அதட்டினான்.


   '' அது பயம் அஸ்வின் உனக்கு சொன்னா புரியாது. கயல் அம்மா என்னை எடுத்து வளர்த்து ஆளாக்கினவங்க. சொந்தமான ரகுவா? எடுத்து வளர்த்த நானா? என்ற கேள்வி வந்தப்ப ‘எவளோ ஒருத்தி’என்று சொன்னாங்க அப்படியிருக்க படிக்க வந்த இடத்துல காதலிக்கறியேனு யாராவது சொன்னாலும், இல்லை நீங்களே ஒரு சிட்ஷூவேஷன் ஏதாவது சொல்லிட்டா? என்னால தாங்காமுடியாது அச்சு.'' என்று முகம் பொத்தி அழுதாள்.


    '' கொன்னுடுவேன்''. என்று கூறி அதே சினத்தோடு கையை ஒங்கினான்.

 

      மற்ற உறவுக்கும் காதலுக்கும் முதல் அடித்தளமே நம்பிக்கை தானே டி. அப்படியிருக்க உன்னால எப்படி டி நான் அப்படி தப்பா யோசிப்பேனு முடிவு பண்ணின? என்னோடஇத்தானை நாள் என்னோட கேரக்டர் அப்போ உனக்கு தெரியலை? ஒரு வார்த்தை சொல்லியிருந்தா என்ன கேடு உனக்கு? அந்த ஸ்ரீராம் அவனும் எதுவும் சொல்லலை. இப்ப போய் கேட்டேன் என்ன சொல்வான் தெரியுமா? உன்னோட பிரெண்ட்ஷிப் உண்மையா இருந்தேன் என்று சொல்வான்.

  கடைசில இந்த அஸ்வின் நட்பில் காதலில் தோற்றுட்டான்ல? என்று கூறவும் பவித்ரா இல்லையென மறுத்தாள்.

        அஸ்வின் கூப்பிடாமல அஸ்வின் வீட்டுக்குள்ள ஸ்ரீராம் கார் நுழைஞ்சிடுச்சு? ஏன் வாசல் வரை ராம் வந்துட்டான். இந்த அஸ்வின் தான் அப்ப வேகமாக அவன் ரூமுக்கு போனதும் அஸ்வின் ஃப்ரெண்ட் ராமுக்கு போன் போட போறான் அதனால முதலில் ஃப்ரெண்ட்கிட்ட பேசறது முக்கியமென்று ராம் போயிட்டானாம். அதனால நீ நட்பில் தோற்கலை. இது உன் பிரெண்ட் ஸ்ரீராம் தான் சொன்னான்.

 

  அதே போல என்னிடமும் நீ தோற்கலை. நானும் உன்னை விரும்பினேன்” என்று தாமதமாக காதலை ஒப்புக் கொண்டாள்.

 

   அஸ்வின் நண்பன் ராமின் நட்பில் மகிழ பவித்ரா கூறியதில் அவளிடம் விளையாட எண்ணினான்.

    ''அது சரி நீ என்ன விரும்பறியா?! '' என ரசனையோடு பார்த்தான்.


''
அது...அது...'' என்றவளின் தயக்கத்தை அஸ்வின் உடைத்தான்.
     ''நீ என்னை பார்த்து ஷாப்பிங்க்-மால்ல ஓடினப்பவே, உன் மனசுல நான் ஏதோ செய்யறேன்னு தோணிச்சு, அப்பவே உன் கண்ணுல பட்டாம்பூச்சி மாதிரி படபடனு அடிச்சுது, அடுத்து எங்க வீட்ல பார்த்தப்ப ரொம்ப அமைதியா மாறியிருந்த. உன் முகத்தில் ஏதோ மிஸ்ஸிங். பொறுமையா பேசி லவ் சொல்ல நினைச்சேன். என்னவோ கடற்கரைல பிரப்போஸ் பண்ண தோன்றவும் சொல்லிட்டேன்.

 

   அதுக்கு பிறகு நீ ஹாஸ்டலுக்கு போறேனு ஒற்றை காலில் நின்னப்ப ஓகேனு கன்பர்ம் ஏதோ நான் உன் மனசுல சலனம் ஏற்படுத்தறேன் புரிஞ்சுடுச்சு.”


    ''ஆமாம் அஸ்வின். உன்னை வீட்ல முதலில் பார்த்தப்ப பயம் வந்துச்சு. உன் கண்கள் என்னை அறியமா உன் பக்கம் ஈர்க்குறதை உணர்ந்தேன். அதனால தான் எப்படியாவது ஹாஸ்டலுக்கு போயிட்டா நிம்மதியா இருக்கும்னு நினைச்சேன். அது உன் மேல காதல் வந்திடும் என்ற பயத்தில தானு இப்ப புரியுது''


   '' ம் அது மட்டுமா!? அடிச்சா என்மேல கோவம் வரனும் நீ என்னடானா என் அப்பாகிட்ட நான் அடிச்சது தப்பில்லைனு சொல்ற” என்று கையை கட்டி அவளை கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கினான்.

 

   ''உண்மை அச்சு நீ அடிச்சப்ப கூட அது எனக்கு மனசுல வலிய தரல'' என பவித்ரா சிரிக்க,
''
ம்..அச்சு வா? ஓஹ்ஹோ அப்பறம்'' என அஸ்வின் கேலியில் கூறி மேலும் பேச ஊக்குவித்தான்.
 

    ''யாராவது ஒரு தடவை பார்த்த பெண்ணை பெட் ரூம்ல பிரேம் போட்டு வைப்பாங்களா? எனக்கு அப்பவே உன் மனசுல நான் எந்த அளவு ஆழமா இருக்கேனு தெரிஞ்சுடுச்சு. கஷ்டம் என்றாலே உன் அருகாமை இருக்க மாட்டேனா ஏக்கமாச்சு.” என பேசவும் லேசாய் கண்கள் கலங்கியது. 


  அஸ்வின் செருமி கொண்டு தொடர்ந்தான். ''ம்...அன்னிக்கு ஒரு நாள் ஆக்சிடென்ட் பார்த்துட்டு அழுதப்ப உன்னை அணைச்சேன். நீ என்னை விலகி தள்ளி போக முயற்சிக்கலையே! அப்பவே அப்படி தான் நினைச்சேன். நேசஇல்லத்தில் கூட என் பெயரை உச்சரித்தது உனக்கே தெரியலை உன் உள்ளத்தில் இருந்து கூப்பிட்டது.

 

   பவித்ராவோ ''உண்மையிலே எனக்கு உங்க பெயரிட்டு கூப்பிட்டது அப்பறம் தான் புரிஞ்சது. உன் அருகாமையில் இருக்கும் பொழுது எனக்கு ரகு சொன்ன மாதிரி அனாதையாவே உணரவேயில்லை. எல்லா உறவுகளும் சேர்ந்து நீயா தெரிஞ்ச'' என கண்ணீர் துளி மேலிட, அஸ்வின் பேச்சினை மாற்ற முயன்றான்.


  ''அன்னிக்கு கால் பண்ணின அட்டேன் பண்ணாம கட் பண்ற... எனக்கு எவ்வளவு வருத்தம் தெரியுமா?'' என்று எதனால் நிகழ்ந்தது என நினைவூட்டினான்.


  '' தப்பு நீங்க செஞ்சுட்டு என் கூட நீங்க பேசல.'' என செல்லமாக கோபித்துக்கொள்ள ஆரம்பித்தாள் அஸ்வினின் காதலி பவித்ரா.


   ''அது தப்பா'' என அப்பாவியாய் உதட்டை வருடி கேட்டான்.


  ''அஸ்வின்'' என்று வெட்கப்பட்டு அவன் நெஞ்சில் தலை சாய்ந்தாள்.


  '' ஏன்டி... என்ன இப்படி பாடுப்படுத்தின?! உனக்கு நான் இருக்கேன்னு தோணலையா? ஏன் என்கிட்ட காதலை சொல்லல?'' என்று தாடை நிமிர்த்தி கேட்டான்.


  ''சொல்ல வந்தேன். நீ தான்... திட்டிட்டா''


  ''இது எப்போ?'' என்று என்று மாடி சுவரில் சாய்ந்து நின்றான்.


  ''அங்கிருந்து வர்றப்ப  எல்லோருக்கும் கிப்ட் கொடுத்துட்டு உனக்கு ஒரு ப்ரெசென்ட் வாங்கினேன். உன்கிட்ட தனியா கொடுக்கணும்னு நினைச்சேன். நீ தான் ரூமுக்கு வந்தா ஏதாவது பண்ணிடுவேன்னு மிரட்டின'' என மான் விழிகள் மிரண்டு கூறினாள்.


  ''அடடா நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிட்டேன். பரவாயில்லை
இப்பவும் அதே தான் சொல்றேன். ரூமுக்கு வந்த ஏதாவது பண்ணிடுவேன்'' என சிரித்தபடி அவளின் அருகே வந்தான்.

 

  மெதுவாய் அவளின் கன்னம் பற்றி இதழை சுண்டு விரலால் வருடி இடையை பிடித்து நெருக்கம் கூட்டி தனது இதழை அவளிதழில் சேர்த்து மெதுவாய் மெது மெதுவாய் அச்சுவின் பச்சரிசியாக மாற்றினான். நீண்ட நெடிய இதழ் முத்தம் பரிமாறும் நேரம் ஸ்ரீராம் கத்தினான்.


   ''டேய் அஸ்வின், பேசி முடிச்சுட்டியா.. அங்க சாப்பிட கூப்பிடறாங்க வாடா ரொம்ப நேரமா செக்யூரிட்டி வேலை பார்க்கறேன். கஷ்டமாயிருக்கு'' என ஸ்ரீராம் படிக்கட்டில் நின்று கூப்பிட்டான்.

 
   ''முதலில் இவனுக்கு ஒரு வாயாடியப் பார்த்து கல்யாணம் பண்ணனும்'' என அஸ்வின் சொல்ல பவித்ரா வெட்கப்பட்டாள்.

 

 பவித்ரா வேகமாக செல்ல முயல, “ஏ பச்சரிசி... மெதுவா போகலாம். யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க” என்றான்.

 

   பவித்ராவோ “பச்சரிசியா?” என்று கேட்க “நான் அச்சு வெல்லம்னா நீ பச்சரிசி தானே டி” என்று கூறி அவளின்  கையை உரிமையாய் பிடித்து மகிழ்ச்சியாய் இறங்கி வந்தார்கள்.
                                                    
       
                                                 
                                   💘 --------சுபம்-------- 💘

                                                                   -பிரவீணா தங்கராஜ் 

ஸ்ரீராம்-மை தனியா விட்டுட்டேனா? இல்லை ஜோடியோட விட்டுட்டேனா? ஸ்ரீராம் பற்றி அறிந்திட விழிகளில் ஒரு வானவில் நாவலில் ராமின் காதல் கதையாக காணலாம். 

 

              

Comments

Post a Comment

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1