முதல் முதலாய் ஒரு மெல்லிய-24
💘24
அறைக்கு வந்தும் அவனால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. இந்த அஸ்வினுக்கு நிஜமாவே பயம் என்பது எல்லாம் இல்லையா? எனக்கு மட்டும் ஏன் இப்படி உதறுது. இதைத்தான் 'மூத்தது கோழை இளையது காளை' என்கின்றனரோ? இப்ப நான் இருக்கற டென்ஷனுக்கு பழமொழி வேற, என்று சலிக்க சுவாதியிடம் இருந்து மெசேஜ் வந்தது.
''ஹாய் என்னடா செல்லம் பண்ற?'' என்று கொஞ்சல் மொழியாக வந்தது.
''சுவாதி அங்க ஏதாவது
பிரச்சனையா?'' என்று விஷயம் கூறாது கேட்டான்.
''இல்லையே ஏன்?''
''நாளைக்கு லீவ் போடா
சொன்னார்களா அத்தை மாமா?''
''போடா ட்யூப்லைட் காலேஜே
லீவ்... பவித்ரா கூட லீவ்க்கு தானே ஊருக்கு போய் இருக்கா'' என்றாள் சுவாதி.
''ஆமால. நாளைக்கு ஏதாவது
ப்ரோக்ராம் சொல்லி இருக்காங்களா?'' என்று கேட்டான்.
''இல்லை அப்பாவுக்கு ஆபீஸ்
இருக்கு. அம்மா அப்பாவோட உறவுமுறைல ஒரு விழாவுக்கு கிளம்பறாங்க. நானும் வர்றேன்
என்று சொன்னேன் அம்மா ஒன்னும் வேண்டாம் என்று சொல்லிட்டாங்க'' என்று கூறினாள்.
''ஓஹ் சரி நான் அப்பறம்
பேசறேன் தலைவலி'' என்று சொல்லி மெசேஜ் அனுப்பி ''பை'' என்றான் அவளும் ''ஓகே டா பை டேக்கேர்'' என்றாள்.
‘அப்பா நிஜமாவே விளையாடறாரா? நான் எப்படி ஆரம்பிக்க? அப்பா அஸ்வின் பவித்ராவை
லவ் பண்றான் என்று சொன்னதுக்கு திட்டவோ அடிக்கவோ செய்யலை. கூப்பிட்டு பேச தான்
செய்தார். அப்படி இருக்க நான் ஏன் பயப்படணும். அதுவும் சுவாதி என் அத்தை பொண்ணு
அவளும் என்னை விரும்பறா. ஓகே நாளைக்கு எப்படியாவது பேச ஆரம்பிக்கலாம் என்று
உறங்கினான்.
காலையில் எழுந்து எப்படி
பேசுவது என்று யோசிக்க சாப்பிடும் நேரம் சரியாக இருக்கும் என்றெண்ணி விஸ்வநாதன்
சாப்பிட அமர்ந்ததும் அவருக்கு நேர் எதிரில் அஸ்வின் அமர அஸ்வின் அருகே ஆகாஷ்
அமர்ந்தான்.
ராதை சுடசுட இட்லி பரிமாறி சாம்பார் ஊற்ற அதனை ஒரு வில்லை வாயில்
போட்டவன்.
''அம்மா சுவாதிக்கு மாப்பிள்ளை
பற்றி சொன்னிங்க நீங்க கிளம்பலையா?'' என்றான் ஆகாஷ்.
''நாம எதுக்குடா. அவங்க அப்பா
வீட்டு சொந்தம் தான் முக்கியம்''
என்றே விஸ்வநாதனை பார்த்து
பதில் சொல்லி முடித்ததார்.
''அத்தை இங்க வந்து சொன்ன
மாதிரியே தெரியலையே அப்பறம் நீங்களா பொண்ணு பார்க்கறதை பத்தி சொல்றிங்க'' என்றதும் அஸ்வின் நீரை எடுத்து சிரிப்புடன் குடித்து முடிக்க, ராதைக்கு அஸ்வின் செய்கையில் இவன் ஏதாவது அட்வைஸ் செய்து இருப்பானோ? என்றே நினைக்க விஸ்வநாதன் அஸ்வினை ஒரு அர்த்தமான பார்வை பார்த்தே
தட்டில் கவனம் செலுத்தினார்.
''அம்மா... சுவாதிக்கு இதுல
சம்பந்தம் இருக்கா என்று கேட்டாச்சா?''
''இது அவங்க அப்பா அம்மா கவலை
நமக்கு எதுக்கு?'' என்று ராதை கூற
விஸ்வநாதன் மகனை முறைத்தார். கொஞ்சம் கூட வேகமில்லையே என்று
வருந்தினார்.
''என்னம்மா இப்படி சொல்றிங்க.
அவள்.. அவள்... அப்பவோட தங்கை பொண்ணு''
''டேய் உனக்கு என்ன அவளுக்கு
எப்படி முடிஞ்சா? எதுக்கு உங்க அம்மாவை நொய் நொய் என்று கேள்வி
கேட்கற?'' விஸ்வநாதனின் அதட்டலில் வாயை மூடினான்.
''ஏன் கேட்டா என்ன தப்பு
அவனுக்கு அத்தை பொண்ணு அக்கறையில் கேட்கறேன்'' என்று அஸ்வின் பேசியபடி இட்லி
விழுங்கினான்.
''அது அவன் சொல்லட்டும்'' என்று விஸ்வநாதன் சொன்னதும், அஸ்வின் இருக்கும்
தைரியத்தில் ''அப்பா... எனக்கு... சுவாதியை பிடிச்சு இருக்குப்பா'' என்றான் உலர்ந்த நாவோடு, விஸ்வநாதன் ‘அப்படி வா
வழிக்கு’ என்று அவனை போலியான கோவத்தை முகத்தில் தேக்கி முறைத்தார்.
''அவளும் என்னை விரும்பறா'' இங்க பாருங்க டெய்லி மெசேஜ் கால் பண்ணி
பேசிட்டு தான் இருக்கோம்'' என்று உளறினான்.
''உன்கிட்ட ப்ரூப் கேட்டாங்களா?'' என்று அஸ்வின் கடுப்புடன் சொன்னான்.
''ஏன்டா உனக்கு இதை சொல்ல
இவ்வளவு நேரமா?'' என்றதும் தான் தனது தந்தை மறுத்து பேசவில்லை என்று
தோன்ற, நிம்மதி அடைந்தான் ஆகாஷ்.
“காதலில் தைரியம் வேண்டும்
டா சுவாதியை யாரும் பொண்ணு பார்க்க வரலை. நாம தான் இப்பபொண்ணு பார்க்க போறோம்
கிளம்பி ரெடியாகு” என்று கூறவும் ஆகாஷ் மகிழ்ச்சியாய் தயாரானான்.
அன்றே பூ, பழம் என கையில் ஏந்தி தவசுடர் முன் நிற்க, தவசுடருக்கு ஆனந்தம் எல்லை கடந்தது. ஆகாஷ்-சுவாதி திருமண நிச்சயம்
வீட்டில் மிக எளிமையாக நிச்சயக்கப்பட்டது. அண்ணன் வீட்டில் மகள் வாழ செல்வதில் தான்
தவசுடர் விரும்பினார்.
சுவாதி பவித்ராவுக்கு
தொலைபேசியில் கூறி வாழ்த்தை பெற்றாள். தனுவை ஆகாஷ் ''இனிமே சுவாதியை அண்ணின்னு
கூப்பிடு'' என அதிகாரம் செய்ய தனுவும் சிரித்தவாறு '' சரிசரி '' என தலையாட்டினாள்.
''ஆகாஷ் நான் டா'' என்றான் அஸ்வின்.
''நீ என்னையே அண்ணா என்று
சொல்ல மாட்ட, சுவாதியை... கூப்பிடுவது டவுட் தான்'' என்று மொழிந்தான்.
''உனக்கு அது ஒரு கவலை
இருக்கா?'' என்றான் அஸ்வின் புன்னகையோடு.
''நீ எல்லாம் என்னை அண்ணா
என்று சொல்லிட்டா சூரியன் வேற பக்கமா உதிக்காது'' என்றான் ஆகாஷ்.
-பிரவீணா தங்கராஜ்.
Comments
Post a Comment