தீவிகை அவள்🪔 வரையானல் அவன்🔥 -3

 தீவிகை அவள்🪔 வரையனல் அவன்🔥-3


ஆரவ் தனது வீட்டுக்கு வந்தபின் குறுக்கும் நெடுக்கும் அந்த அக்ரிமெண்டை வெறித்து பார்த்தான்.

     எத்தனை பேரோட கனவை சந்தோஷமா கொண்டாட முடியலை. எல்லாம் அவளால்... அவளால் மட்டும் தான்.

      'சம்யுக்தா...' என்ற பெயர் இருக்கும் இடத்தை கிழித்தெறிய முடியாது தனது ஷோகேஸ் இருந்த புத்தகத்தை எல்லாம் தள்ளி விட்டான்.

     சுபாங்கினி வந்து ஆரவ் அமர்ந்து இருக்கும் தோரணையே சரியில்லை. அதுவும் இந்த அறையை உலுக்கி எடுத்தது போன்ற செய்கை பயத்தை தந்தாலும் மகனிடம் எதனால் என்று துணிந்து கேட்டிட தடுத்தது.
     
    "ஜனனியே பார்த்ததா அவங்க அம்மா போனில் சொன்னாங்க. என்னப்பா நேர்ல பேசி பிடித்ததா?" என்றதும்

     "கல்யாணம் எப்பமா? அலுவலகத்தில் வேலையை எல்லாம் அதுக்கு ஏற்றாற்போல மாற்றிப்பேன்" என்று கலைத்த புத்தகத்தை அடுக்க ஆரம்பித்தான்.

     "அடுத்த மாதம் மார்கழி மாதம் ஆரவ் அதனால் இந்த மாதம் இரண்டு முகூர்த்த தினம் வருது 19, 28 . அதுல இரண்டாவது முகூர்த்தம் பேசிட்டோம் ஆரவ். வர்ற 28ஆம் தேதி திருமணம். அன்று இரவு வரவேற்பு என்று பேசியாச்சு. உனக்கு சவுகரியம் தானே?" என்றதற்கு ஆரவோ,

    "ஏம்மா... 19ஆம் தேதியை குறித்து இருக்கலாம். எதுக்கு அவ்ளோ நாள் தள்ளி? உங்களுக்கும் பயமே இல்லாம என் திருமணத்தை முணிச்சிட்ட திருப்தி கிடைக்குமே." என்றான். இதில் நக்கல் ஒளிந்து இருந்ததா? அல்லது நிஜமாகவே ஆரவ் திருமணத்தை முன்னே வைத்தால் நல்லது என்று எண்ணினானா அது அவனுக்கும் சுபாங்கினிக்கே வெளிச்சம்.

       "நகை டிரஸ், கல்யாண மண்டபம் என்று பார்க்கணுமே ஆரவ். இதுல சமையலுக்கு ஆர்கெஸ்ட்ரா எல்லாம் அரெஞ்சு பண்ணணும். மேலும் உன் அப்பா வழி சொந்தம் எல்லாம் ஊர்ல இருக்காங்க. அவங்க வந்து செல்ல பஸ் அரேஜ் பண்ணணும். வைஷ்ணவி இல்லை மாப்பிள்ளை சந்துருகிட்ட தெரிஞ்சவங்க இருக்காங்களான்னு கேட்கணும்.

    ஏன் ஆரவ் உனக்கு வைஷ்ணவி திருமணத்தப்ப விசிடிங் கார்டு எல்லாம் இப்ப இல்லை தானே?"

     "பழைய காண்டெக்ட் எதுவுமே இல்லைமா. உங்களுக்கு தெரிந்தவர்களையே கேட்டுக்குங்க." என்று கேசவிற்கு போன் செய்தான்.

   ஒரே ரிங்கில் எடுக்கப்பட  "கேசவ் டீல் கைக்கு வந்துடுச்சு. ஆபிஸ்ல அபிசியலா அனொன்ஸ் பண்ணிடுங்க.

அப்பறம் எனக்கு திருமணம் பெண் பார்த்தாச்சு. வருகின்ற 28 திருமணம் அந்த நேரத்தில் எந்த கமிட்மெண்ட்ஸ் இல்லாம பார்த்துக்கோங்க. நாளைக்கு சின்னதா மதியம் புட் ஸ்பான்ஸருக்கும் தயார் பண்ணிடுங்க." என்றதும்

    "ஓகே சார்... 
ஹார்ட்டி கங்கிராட்ஸ் சார்....
சூர் சார்... என்ற பதிலே வந்ததும் சலித்து கொண்டு போனை வைத்தான். அதற்குள் சுபாங்கினி புத்தகத்தை வரிசையாக அடுக்கி முடித்தாள்.

    "புத்தகத்தை எத்தனை முறை கலைத்தாலும் அடுக்கிடலாம். ஒழுங்குபடுத்திடலாம் ஆரவ். வாழ்க்கையை அப்படி எண்ணிட முடியாது. அதனால எடுத்த முடிவுல தீர்மானமா இருப்ப என்று நம்பறேன்." என்று வெளியேற ஆரவ் தலையை தாங்கி அமர்ந்தவன் மனதின் குரலோ ஒருபக்கம் மறுத்திடு உன்னால் இயலாது என்று எடுத்துரைக்க, மற்றொரு குரலோ உன்னால் முடியாதா? ஒரு பெண்ணால் முடியும் என்றால் உன்னால் இயலாதா  என்று எடுத்துரைக்க, மனம் என்னும் ஈகோ அவனுள் துணிந்து நின்றது.

     சுபாங்கினி தன் மகள் வைஷ்ணவிக்கு போனில் அழைத்து ஜனனியிடம் மைந்தன் நல்லவிதமாக சம்மதம் அளித்து பேசினானா என்று நாசுக்காக கேட்டிட சொல்லவும் வைஷ்ணவியோ "அம்மா நாளைக்கு கேட்கறேன். இப்ப பணி எட்டு சாப்பிட்டு மாத்திரை போட்டு தூங்கு. உன் பையன் தான் ஒரு காரியத்தில் முடிவெடுத்தா நிலையா இருப்பான் தானே?" என்று கேட்டதும்

     "நாளைக்கு சொன்னதை பக்குவமா கேட்டு சொல்லு. என் பையன் என் முடிவில் மாற மாட்டான்." என்று அணைத்து வைத்தார்.

     "இந்தம்மாவை புரிந்துக் கொள்ளவே முடியலை சந்துரு என்று வைஷ்ணவி அங்கலாயித்து சந்துருவிடம் சொல்ல அவனோ தன் நண்பன் தனக்கு திருமணமான பின் மச்சான் உறவு மட்டும் இருக்க பேச்சை குறைத்துக் கொண்டது ஒரு பக்கம் வலித்தாலும், அவனின் நிலை இந்தளவு மாற்றம் கொண்டதாக அமைந்தது அதிசயமாகவே எண்ணினான்.

      அடுத்த நாள் காலை எல்லாம் மறந்து அலுவலகம் சென்றான். மணி பதினொன்றையாக கேசவ் தலையை சொரிந்து, "சார் நம்ம கம்பெனி மீட்டிங் ஹால்ல புட் வந்து இருக்கும் போய் சரிபார்த்து அரேஜ்மெண்ட் முடிச்சிட்டா"

    "எதுக்கு?"

    "சார் ஒருமணிக்கு ஆபிஸ் ஸ்டாப் லஞ்சுக்கு நாம தானே வர வைத்து இருக்கோம். உங்க மேரேஜ் வேற டேட் அனொன்ஸ் பண்ணிடலாம் சார்" என்றதும் நினைவு வந்தவன்.

    "யாயா.. போய் பாருங்க." என்றவன் யோசனையில் முழ்கினான்.

    மணி ஒன்றிற்கு பார்ட்டி ஹால் வந்தவன் தனது கோட்டேஷன் டீல் பற்றி சொல்லி அடுத்த மாதம் முதல் அந்த சைட்டுக்கு எத்தனை பேர் போகணும் என்றும் குழுவை பிரித்து விவாதிட்டான். பெரிய கன்ஸ்டரக்ஷன் என்றால் மினிமம் இரண்டு மூன்று டீம் உதவியோடு சொன்ன நாட்களுக்குள் கட்டி முடித்து அதற்கு தேவையான டீல் எல்லாம் ஆளுக்கு ஒருவராக நியமிக்க பணித்தான்.

     கேசவோ மற்றொரு நற்செய்தி நம்ம சாருக்கு இந்த மாதம் 28ந்தேதி திருமணம். அதற்கும் சேர்த்து சாருக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க" என்று கேசவ் மைக்கில் அறிவிக்க, ஆரவ் அவனை உறுத்தியவாறு பார்த்து வைத்தான்.

    'இப்ப நான் என்ன சொல்லிட்டேன்' என்றவாறு கேசவ் விழிக்க அதற்குள் வாழ்த்துக்கள் சார். கங்கிராட்ஸ் சார். என்று குரல்கள் செவியில் எட்ட ஒரு சின்ன புன்னகை உதிர்த்து கடந்தான். 
   
     உணவுகள் முறையாக வந்துவிட்டதா? சுவை எப்படி என்று ஒரு பார்வை வீச, அங்கே புதிதாய் பணியில் அமர்ந்த இளம் பணியாளர்கள் செல்பி எடுக்க அதனை பார்த்தான்.

    "மச்சி ஸ்டேடஸ் அதுக்குள்ள வச்சிட்ட?" என்று ஒருவன் கலாய்க்க

     "லாஸ்ட் டைம் என் லவ்வர் ஓவரா பேசிட்டா டா. பார்ட்டி பெஸ்டிவெல் போட்டேன் வயிற்றெரிச்சல் ஆவா." என்று சிரிக்க,

     "ஆமா டா. என்னை கூட எங்க சொந்தகாரன் ஜாப் கிடைக்கலையா கிண்டல் பண்ணி இன்சல் பண்ணினான். இப்ப பாரு ஸ்டேடஸ் பேஸ்புக் போஸ்ட் பிக் போட்டேன் அதை பார்த்தே வயிரு கருகும்" என்று இளைஞர் பட்டாளம் தங்கள் சந்தித்த மனிதருக்கு இப்படி கூட பதிலடி தர எண்ணி சிரித்தான் ஆரவ். 
       
    மணி இரண்டரை ஆக "இது என் நம்பர் ஆரவ் -ஜனனி" என்று வாட்ஸப் மெஸேஜ் வரவும் அதனை பார்த்தவன் தன்னில் இதயத்தில் வேறூண்று இருக்கும் அந்த எண்ணின் நம்பரை தட்டச்சு செய்து சேவ் செய்ய அதில் கள்ளி செடி போட்ட முகப்பு படம் இருக்க வேகமாக அவ்வெண்ணை அழித்தான்.

     கண்கள் மூடி இருநிமிடம் இருந்தவன். உடனடியாக "ஷல் ஐ மீட் யூ" என்றான்.

    "ஆரவ் எனக்கு ஜாப் முடிய 5 ஆகும்"

     "பிரேக் டைம் என்று கூட இல்லையா?" என்றான். அவளை சந்தித்தே ஆகவேண்டுமென்ற நோக்கத்தோடு.

     "பிரேக் டைம்... த்ரி தேர்ட்டி. பட் இருபது நிமிஷம் தான் ஆரவ்." என்று ஜனனி கூறவும்.

    "வெல் ரெடியா இரு." என்றவன் தொடர்பை துண்டித்து புறப்பட்டான்.

    "ஆரவ்... ஆரவ்..." என்று ஜனனி கத்த துண்டித்த ஒலி கேட்டதும் 'இப்ப என்ன செய்ய? பர்மிஷன் கேட்டுட்டு ஆரவ் கூட போகலாமா?' என்று யோசிக்க, ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வரவே அதனை எடுத்து காதில் வைத்தாள்.

     "ஹலோ..?"

     "ஹலோ... ஜனனியா?" என்றது அக்குரல்.

      "ஆமா நீங்க?"

     "நான் வைஷ்ணவி. ஆரவோட  ." என்று அறிமுகமாக,

     "ஓ... அம்மா சொன்னாங்க. ஒரு தங்கை இருப்பதா" என்று ஜனனி கூறினாள்.

     "திருமணம் 28ஆம் தேதி முடிவு பண்ணிட்டாங்க. அதான் உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும் என்று தெரிந்தா சேலை எல்லாம் அதற்கு ஏற்றார் போல எடுப்பேன்." என்றதும்

     "மதினி உங்க விருப்பம் போல எடுங்க." என்றாள்.

     "வேலை நேரத்துல தொல்லை கொடுக்கறதா எண்ண வேண்டாம். ஆரவ் அண்ணாவை உங்களுக்கு பிடிச்சிருக்கா. அவருக்கும் பிடிச்சிருக்கா தெரிந்துக்க எண்ணி தான் கூப்பிட்டேன். அண்ணா முகம் திருப்பலையே" என்று குரலில் பயமும் அசவுகரியமும் கொண்டு கேட்க,

      "அதெல்லாம் பிடிச்சிருக்கு. அவர் நேற்று வந்தப்ப கூட நான் நம்பலை. ஆனா இப்ப பார்க்கணும் நேர்ல வருகின்றார். இருபது நிமிஷம் பிரேக் அதுக்குள்ள எப்படி தெரியலை. பட் பீலிங் ஹாப்பி"

     "நிஜமா... அப்போ சந்தோஷம். நீங்க பேசிட்டு போன் பண்ணுங்க. நான் இப்படி கேட்டதா அண்ணாவிடம் சொல்லிடாதீங்க. அம்மா தான் கேட்க சொன்னாங்க." என்று போட்டு உடைக்க, சரி யென்று அணைத்தாள்.

    நம்பரை சேவ் செய்து முடிக்க, எதிரே சம்யுக்தா வரவும் ஜனனி எழுந்து நிற்க, அதே நேரம் ஆரவ் ரிசப்ஷன் அறைக்கு வந்து நின்றான்.

     முக்கோண வடிவில் இருக்க, யார் யார் பக்கம் வந்து பேச என்று தவிக்க, ஆரவ் சம்யுக்தாவை தேடி வந்தான். தன் கைகடிகாரத்தை பார்த்து,

    "த்ரி தேர்டி பிரேக் டைம் நான் என் பியான்சியை எதிர்ல இருக்கற புட் கோர்ட் அழைத்து போகலாமென்று வந்தேன். கூட்டிட்டு போகலாம் தானே இல்லை... வேலை அது இது என்று காரணம் சொல்லி தடுக்க பார்ப்பீங்களா?" என்றதும் சம்யுக்தா ஆரவினை  கண்டு முறைக்க, அவனோ, வந்த வேலையில் கவனிக்க சந்தோஷமாக திரும்பினான்.

     "ஜனனி போகலாம். ஆப்டர் மேரேஜ் இந்த ஜாப் நீ பார்க்க மாட்ட." என்று சொல்வது சம்யுக்தா காதில் தெளிவாய் விழ சொல்ல வந்த பணியை அப்படியே சொல்லாது தனதறைக்கு எடுத்து சென்றாள்.

    தன் இருக்கையில் இருந்து சாய்ந்தமர்ந்தவள் ஜன்னல் வழியே எதிரே பார்க்க, ஆரவ் ஜனனிக்கு கதவு திறந்து விட அவள் நுழைவதை கண்டு மேஜையை குற்றினாள்.

    கதவை மூடும் சமயம் ஆரவ் பார்வை சம்யுக்தா அறையை தான் பார்த்தது. 

    மிதமிஞ்சிய சந்தோஷத்தோடு ஜனனியோடு பேசினான். 
    
    கையை பிடித்து கதை அளந்தான்.

      அடிக்கடி ஜனனியை புகைப்படம் எடுக்க செய்தான். சம்யுக்தா அறை திரைசீலை போட்டு மறைக்க, ஆரவ் ஜனனி அருகே இன்னமும் நெருங்கி வந்தமர்ந்து செல்பி எடுத்தான். உதடு குவித்து கையை வி வடிவில் வெற்றியாக பறைசாற்றி எடுக்க, சம்யுக்தா கார் வெளியே புறப்படுவதை கண்டு நிம்மதி அடைந்தான்.

     "ஓகே 28 நம்ம வாழ்க்கைய மாற்றிடும். அது வரை டச்ல இருப்போம். சேவ் மை நம்பர்" என்று நம்பரை கொடுத்து கிளம்பினான். 

     ஜனனிக்கு அளவில் சந்தோஷத்தோடு வந்தாள். ரிசப்ஷன் முன் செய்யும் பணியை குறிப்பிட்டு தலைவலி என்று  மட்டும் எழுதி வைத்து சம்யுக்தா சென்று இருப்பாள் போல அது மட்டும் இருந்தது.

    'இந்த மேம் என்ன ஆச்சு. நாம கிளம்பினா கூட ஒரு மணி நேரம் இருந்து நாளை ஒர்க் பார்ப்பாங்க. இரண்டு நாளா தலைவலி சொல்லறாங்க. நாம மதிவாணன் சாருக்கு போன் பண்ணி என்ன ஏது என்று கேட்போமா? என்று அது தேவையற்றது என்று பணியை தொடந்தாள்.

      ஆரவ் கார் வளைவில் செல்ல சம்யுக்தா கார் எதிலோ இடித்து தலையில் இரத்தம் வர ஸ்டியரிங்கில் கிடந்திட தன் காரை விட்டு இறங்கி வந்தவன், எதையும் யோசிக்காது அவளை தூக்கி தன் காரில் வைத்து மருத்துவமனையை நோக்கி விரைவு படுத்தினான்.

  செல்லும் வழியில் எல்லாம் 'இவ திமிருக்கு ஒதுங்கி போக பார்த்தா நானே இவளுக்கு காரோட்டி சேவகம் பண்ணறேன்.

    கையை கார் கதவில் இரு முறைக்கு மேலாக குத்தினான்.

     சம்யுக்தா அரை மயக்கத்தில் கண் திறந்து பார்த்தவள் கண்கள் சொருக இமை மூடினாள்.

  - வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

-பிரவீணா தங்கராஜ்

  படிக்கிற அனைவருக்கும் நன்றிகள். கருத்தளித்து உற்சாகம் தருவோருக்கு மிக்க நன்றிகள். மகிழ்ச்சி...😊 

  அடுத்த பதிவு திங்கள் வரும். இரு கதை தொடர் முடித்து விட்டாள் பிறகு இக்கதை வாரத்திற்கு இரு பதிவு தர முயல்கின்றேன். 

Comments

  1. Sis story arumai... Pavam samyuktha.. Aarav samyuktha love flash back eppo sis...

    ReplyDelete
  2. எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது

    ReplyDelete
  3. கல்யாணத்திலே டிவிஸ்ட் இருக்கும் போல!

    ReplyDelete
  4. Aarav n samyuktgavukulla oru panipor poguthu....
    Janani weds aarav ha illa samyuktha weds aarav ha🤔

    ReplyDelete
  5. சூப்பர் & சூப்பர் எபி, ஆனா ஒரு சின்ன சந்தேகம். ஆரவ் &
    சம்யுக்தா Something... Something...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1