கூவுகின்ற குயிலிடம் , இனிமையை கற்றுக்கொள் . காட்டை ஆளும் சிங்கத்திடம் , தன்மானத்தை கற்றுக்கொள் . வீட்டை காக்கும் நாயிடம் , நன்றியை கற்றுக்கொள் . வீட்டை சுமக்கும் நத்தையிடம் , நிதானத்தை கற்றுக்கொள் . ஊர்ந்து செல்லும் எறும்பிடம் , சுறுசுறுப்பை கற்றுக்கொள் . உயிரை அற்பமாக நினைக்கும் மானிடம் , மானத்தை கற்றுக்கொள் . பருந்திடம் குஞ்சியை காக்கும் கோழியிடம் , தாய்மையை கற்றுக்கொள் . பாலும் , நீரும் பிரித்து உண்ணும் அன்னத்திடம் , உண்மை காதலை கற்றுக்கொள் . ஒற்றைக்காலில் தவம் கிடக்கும் கொக்கிடம் , விட முயற்சியை கற்றுக்கொள் . வெட்டினாலும் சிரிக்கின்ற மரத்திடம் , தியாகத்தை கற்றுக்கொள் . ஐந்து அறிவு ஜீவனிடம் கற்றுக்கொள் . தீமை உண்டு மனிதா அதை விடுத்து , கற்றுக்கொள் மனிதா நன்மையை மட்டும் . உன்னிடம் பிறர் கற்றுக்கொள்ள தேடட்டும் நன்மையை ............! -- பிரவீணா தங்கராஜ் .