கற்றுக்கொள்

கூவுகின்ற குயிலிடம் ,
இனிமையை கற்றுக்கொள் .
காட்டை ஆளும் சிங்கத்திடம் ,
தன்மானத்தை கற்றுக்கொள் .
வீட்டை காக்கும் நாயிடம் ,
நன்றியை கற்றுக்கொள் .
வீட்டை சுமக்கும் நத்தையிடம்  ,
நிதானத்தை கற்றுக்கொள் .
ஊர்ந்து செல்லும் எறும்பிடம் ,
சுறுசுறுப்பை கற்றுக்கொள் .
உயிரை  அற்பமாக நினைக்கும் மானிடம் ,
மானத்தை கற்றுக்கொள் .
பருந்திடம் குஞ்சியை காக்கும் கோழியிடம் ,
தாய்மையை கற்றுக்கொள் .
பாலும் , நீரும் பிரித்து உண்ணும் அன்னத்திடம் ,
உண்மை காதலை கற்றுக்கொள் .
ஒற்றைக்காலில் தவம் கிடக்கும் கொக்கிடம் , 
விட முயற்சியை கற்றுக்கொள் .
வெட்டினாலும் சிரிக்கின்ற மரத்திடம் ,
தியாகத்தை கற்றுக்கொள் .
ஐந்து அறிவு ஜீவனிடம் கற்றுக்கொள் .
தீமை உண்டு மனிதா 
அதை விடுத்து ,
 கற்றுக்கொள்  மனிதா 
நன்மையை மட்டும் .
உன்னிடம் பிறர் 
கற்றுக்கொள்ள தேடட்டும் 
நன்மையை ............!

              -- பிரவீணா  தங்கராஜ் .

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1