தீவிகை அவள்🪔வரையனல் அவன்🔥-6 ஆரவ் கன்னத்தில் அடித்து விட, தன் இடது கையால் கன்னத்தை அழுத்த பிடித்து, மறு கையான வலது கரத்தால் தன் மார்பில் ஆரவ் கட்டிய தாலியை இறுகப் பற்றியபடி கண்கள் சொறுக மயங்கி சரிந்தாள். ஆரவ் அடித்ததும் மறுப்பு தெரிவிப்பால், அல்லது தாலி கட்டியதால் சண்டையிடுவால் அல்லது அடித்ததிற்காது கோபிப்பாள் என்று இருக்க மயங்கி சரியவும் ஆரவ் அவளை கீழே விழும் முன் தாங்கி நின்றான். "ஹேய்.... யுக்தா... என்ன டிராமா பண்ணற? எழுந்துரு... எதுக்கு மயங்குற?" என்று தட்டி எழுப்ப அவளோ, "தூக்க மாத்தி...ரை" என்று சொல்லி முடித்து மயங்கிவிட்டாள். தூக்கமாத்திரை என்றால் சூசைட் அட்டன் பண்ணியிருப்பாளோ என்று அச்சம் வரவும், "இங்க யாராவது டாக்டர்ஸ் இருக்கீங்களா?" என்ற மண்டபம் அதிர கத்தவும், ஒரு பெண் முன் வந்து நின்றாள். சம்யுக்தாவின் பல்ஸ் செக் செய்து பார்த்தாள். "பல்ஸ் டவுன் ஆகலை. இவங்க நார்மலா தூங்கற லெவலுக்கு தான் மாத்திரை போட்டு இருப்பாங்க. எழுந்ததும் சரியாகிடுவாங்க." என்று கூறவும் ஆரவ் யாருமறியாது பெ
கருத்துகள்
கருத்துரையிடுக