முதல் முதலாய் ஒரு மெல்லிய-10

 

 💘 10

         காலை ராதை எழுந்து தினசரி பணியை மேற்கொள்ள, நேரம் ஆனபோதும் பவித்ரா எழுந்து வராததைக் கண்டு ராதை எழுப்ப, பவித்ரா உடல் காய்ச்சல் அடித்தது.

அஸ்வின் மாத்திரை கொடுத்தும் வாங்க மறுத்திட, ராதை கொடுத்த பாலையும் அருந்த மறுத்தாள்.


தன்யா, ஆகாஷ், விஸ்வநாதன், அஸ்வின் என பள்ளி, அலுவலகம் சென்ற பின்னர் ராதை சாப்பிட கூப்பிட்டும், ஸ்ரீராமை உள்ளே கூப்பிடாததை சொல்லி சாப்பிட வர மறுத்தாள்.


தொலைப்பேசி மணி அடிக்க ராதை எடுத்து பேசினாள். அஸ்வின் பவித்ராவைப் பற்றிக் கேட்க, பவித்ரா சொன்னதை அஸ்வின்கிட்ட சொன்னாள், காய்ச்சல் அதிகம் ஆனதையும் கூற, நான் அரை மணி நேரத்தில் வர்றேன் என அஸ்வின் போனை வைத்தான்.


அரை மணி நேரத்தில் அஸ்வின் ஸ்ரீராம் இருவரும் வந்துச் சேர்ந்தனர் .
''
உள்ள வா... வாங்க'' என அஸ்வின் வரவேற்க, ஒரு வெற்றிப் புன்னகையோடு ஸ்ரீராம் உள்ளே வந்தான்.


அஸ்வின், ராதையிடம் ஜூஸ், டிபன் எடுத்து வர சொன்னான்.
''
பவித்ரா அடம் பிடிக்காம சாப்பிடு''
''
எனக்கு ஏதும் வேணாம்'' என திரும்ப ஸ்ரீராம் அங்கே நின்றிருந்தான்.


''
ஹலோ''
''
நீங்க''
அஸ்வினை கை காட்டி நின்றான். ''சாப்பிடுங்க'' என்றதும், அஸ்வினிடம் இருந்து தட்டை வாங்கி ஒழுங்காக சாப்பிட்டாள்.

அஸ்வினுக்கு கோபமாக இருப்பினும் தற்போது அவள் உண்பது முக்கியம் என்று அமைதியாக ஹாலில் அமர்ந்தான்.


''
இப்படி பண்ணுவீங்கன்னு நான் எதிர் பார்க்கல''
''
எப்படி''
''
உண்ணாவிரதம்'' என்று ஸ்ரீராம் கூறினான்.
''
மனசு கேட்கல, நேற்று எவ்ளோ ஹெல்ப் பண்ணின உங்களை வாசலோட அனுப்பி... அதான்.''
''
இப்ப ஹாப்பியா?''
''
சாரி நேற்று நடந்ததுக்கும், இப்ப உங்க டைம் வேஸ்ட் பண்ணினதுக்கும் சாரி ஸ்ரீராம்.... ஸ்ரீராம் கூப்பிடலாமா?'' என்றாள்.
''
தாராளமா''
ராதை ஜூஸ்ஸை கொண்டு வந்து ஸ்ரீராமிடம் கொடுக்க வாங்கிப் பருகினான். அஸ்வின் பவித்ராவிடம் ஜுரம் மாத்திரையை நீட்ட, பெற்று விழுங்கினாள்.


''
ரெஸ்ட் எடுங்க டேப்லெட் போடுங்க இன்னொரு நாளை சந்திக்கலாம்'' என ஸ்ரீராம் புறப்பட்டான்.
''
ரொம்ப நன்றி தம்பி, அடுத்த முறை கண்டிப்பா சாப்பிட்டு போகணும்.'' என்று ராதை கூறவும்'' சரி ஆன்ட்டி'' என்றான்.


அஸ்வினுக்கு பவித்ராவை பார்க்க வலித்தது. தன்னிடம் மட்டும் பேச யோசிக்கிறாள், கன்னத்திற்கு மருந்து எடுத்து நீட்ட அதை முகம் பார்க்காது வாங்கிக் கொண்டாள்.
சற்று நேரம் கழித்து, டெலிபோன் மணி அடிக்க ராதை எடுத்தாள். போனில் விஸ்வநாதன் ''பவித்ரா சாப்பிட்டாளா, காய்ச்சல் குறைஞ்சு இருக்கா? '' என யுரைத்தார்.


''
ம்... அஸ்வின் அந்தப் பையனை கூட்டிட்டு வந்தான். பிறகு தான் சாப்பிட்டா, மாத்திரைப் போட்டு இருக்கா, இப்ப கொஞ்சம் குறைஞ்சு இருக்கு'' என்று கூறவும் கேட்டு கொண்டார்.
''
பத்திரமா பார்த்துக்கோ, ஜூஸ் போட்டுக் கொடு''
''
சரிங்க'' என்று அணைத்தார்.


தனு உடை மாற்றி பவித்ரா அருகே அமர, சுவாதியும் வந்தாள் ''ரம்யாவும் சஞ்சனாவும் உன்னை கேட்டாங்க ஏன் லீவுனு. உடம்பு சரியில்லைனு சொல்லிட்டேன்''
''
பவித்ரா ரெஸ்ட் எடுக்கட்டும் அவளை விடுங்க'' என ராதை கூறினார்.

'' பரவாயில்லை ஆன்ட்டி காய்ச்சல் தான் குறைஞ்சிருக்கே, ஆன்ட்டி ஒரு போன் பண்ணனும்''
''
பண்ணிக்கோ பவித்ரா இது உன் வீடு ஏன் பெர்மிசன் கேட்கற'' என்றார்.
''
தேங்க்ஸ் ஆன்ட்டி''
''
முதல்ல ஆன்ட்டி சொல்றது நிப்பாட்டு''
''
பின்ன எப்படிக் கூப்பிடறது ஆன்ட்டி''
''
ஆன்ட்டிக்கு தமிழ் அர்த்தம் அத்தை, அப்படியே என்ன கூப்பிடு ரெண்டும் ஒரே அர்த்தம் தானே.''
''
சரிங்க ஆன்ட்டி சாரி, சரிங்க அத்தை.''
''
ம்'' போனை எடுத்து தன் தந்தையிடம் பேசினாள்.


''
ஹலோ அப்பா நான் தான் பவித்ரா, என் போன் மிஸ் ஆகிடுச்சு, அங்கிள் வீட்டு லேண்ட் லைன்ல இருந்து பேசறேன்.''
''.............''
''
ஆமாம் அப்பா அனுப்புங்க. பாட்டி தாத்தா வந்துட்டாங்களா?''
'' ........''
''
அவங்களுக்கு என்மேல பாசம் அதான்''
'' ........''
''
வேணும்பா''
''' .........''
''
சரிப்பா வைக்கட்டுமா? உடம்பை பாத்துக்கோங்க டேப்லெட் போடுங்க என்னை பற்றி கவலைப்படாதீங்க''
'' .........''
ராதை, பவித்ராவையே பார்த்து இருக்க
''
என்ன அப்படிப் பார்க்கிறீங்க ஆன்.. இல்லை.., அத்தை?'' என பேசினாள். என் மகனுக்கு பொருத்தமா இருக்க என்று நினைத்தை சொல்லாமல், ''ஒன்னும் இல்லை பவித்ரா'' என்றார்.

அஸ்வின் வந்து அவன் பாட்டிற்கு இருந்தான்.


பின்னர் அஸ்வின் வெளியே செல்ல, விஸ்வநாதன் உள்ளே வந்தார்.
''
இப்ப காய்ச்சல் எப்படி இருக்கு பவித்ரா?'' என்று நலன் விசாரித்தார்.


''
அத்தை கொடுத்த ஜுஸ்ல நல்ல பிரெஸ் ஆகிட்டேன் அங்கிள். நோ பீவர்'' என சிரித்தாள். அத்தை என்று அவள் இயல்பாக கூறியதும் விஸ்வநாதனுக்கு ஏனோ மகிழ்ச்சி பொங்கியது.


''
நந்தகோபாலன்கிட்ட பேசினியா பவித்ரா ரெண்டு முறை போன் பண்ணிட்டான். அவன்கிட்ட போன் மிஸ் ஆகிடுச்சு என்று மட்டும் சொல்லி இருந்தேன்'' என்று கூறினான்.
''
பேசிட்டேன் அங்கிள். அப்பாகிட்ட பேசும் போதே அதை உணர்ந்தேன் அதான் நானும் வேற ஒன்றும் சொல்லவில்லை''


சற்று நேரம் போக டிவியில் நகைச்சுவை கண்டுக் களித்தனர். கையில் புது கிப்ட் பாக்ஸ் ஏந்தி அஸ்வின் வீட்டில் நுழைத்தான். நேராக பவித்ராவிடம் வந்து ''பிடி இது உனக்கு... மொபைல் தான், உன்னை உங்க அப்பா கூட அடிச்சிருக்க மாட்டாங்க... நான் உன்னை...'' என்று கூறுகையில் குரல் பிசிறு தட்டியது.   
''
ஐ ரியலி சாரி பவித்ரா, ப்ளீஸ்... இத வாங்கிகோ. இதுக்கும் என் ப்ரொபோஸ்கும் எந்த சம்பந்தமும் கிடையாது'' என நீட்ட பவித்ரா விஸ்வநாதனை பார்த்தாள்.


''
வாங்கிக்கோ பவித்ரா'' என விஸ்வநாதன் கூறிட,'' தேங்க்ஸ்'' என பெற்றுக் கொண்டாள். 


''
பிரிச்சு பாரு'' என்று சுவாதி சொல்ல மெதுவாக பிரித்தாள்.  
''
வாவ் சூப்பரா இருக்கு'' என்று சுவாதி கூறிட, தனுவிற்கு சற்று புரிந்தும் புரியாமலும் இருந்தன.
அடுத்த நாள் கல்லூரிக்கு கிளம்பினாள். தயாராகி வெளியே வந்த போது , நல்ல வெளிச்சத்தில் பவித்ரா கன்னம் தக்காளி பழம் போல் சிவந்துக் காணப்பட்டது.


''
இன்னைக்கும் லீவு போட்டு இருக்கலாம் கன்னம் ரெட்டா இருக்கு'' என்று அஸ்வின் வருத்தத்துடன் சொன்னான்.
''
பரவாயில்லை எனக்குப் பிரச்சனை இல்லை, எனக்கு புக்ஸ் ரெண்டு மிஸ் ஆகிடுச்சு, நல்ல வேலை ஏ.டி.எம் கார்டு விட்டுல இருந்துச்சு, ஐ.டி கார்டும் இன்னும் தரலை, ஏ.டி.எம் இருந்துச்சுனா நிப்பாட்டுங்க கேஷ் எடுக்கணும்'' என பெரிதாய் அலடடாமல் கூற பைக் புறப்பட்டது.

வழியில் ஏ.டி.எம் பூட்டி இருந்தன. கல்லூரியில் நின்றவுடன் ''ஒரு நிமிஷம்'' என்றவாறு பர்ஸை எடுத்து நூறு ரூபாய் தாள் ஐந்தை நீட்டினான்.  
''
வேண்டாம் நான் திரும்ப வரும்போது....'' எனச் சொல்ல எத்தனிக்க அஸ்வின் பர்சில் பவித்ராவின் தற்போதையை புகைப்படம் இருக்க பேச்சு வராது போயின.
இதற்கு மேல் இங்கிருந்தால் பேச்சு திசை மாறுமென அஞ்சி பவித்ரா கையில் பணத்தைத் திணித்து விட்டு பைக்கை ஓட்டி விரைந்தான்.


பவித்ராவுக்கு ஒரு கணம் அங்கேயே நிற்க, சஞ்சனா சொடக்கிட்டு வகுப்பறைக்கு அழைத்து சென்றாள். ரம்யாவிடமும், சஞ்சனாவிடமும் முந்தய நாள் போராட்டத்தை கூறி முடித்தாள். அஸ்வின் கொடுத்தப் போனையும் காட்டினாள். 'ஆகா ஓகோ' என புகழ்ந்து தள்ளினர்.


சஞ்சனா ஒரு படி மேலே சென்று,
''
அண்ணா செலெக்சன் சூப்பர் போனும் சரி உன்னையும் சரி''  என்றாள்.

ரம்யாவோ '' எனக்கு இப்படி ஒரு ஹாண்ட்சம் கிடைக்க மாட்டானா?! '' என பெரு மூச்சு விட்டாள்.
''
பார்த்து பவித்ரா, ரம்யாகிட்ட ஜாக்கிரதையா இரு அஸ்வின் அண்ணாவை தள்ளிட்டு போயிடப் போறா''
பவித்ராவோ , ''நான் யாரையும் விரும்ப மாட்டேன்னு ஆயிரம் முறை சொல்லிட்டேன்'' என்றதும் வகுப்பு நடைபெற ஆரம்பித்தன.


பஸ் இன்று கூட்டமாக வர சோர்ந்து வந்தாள். ராதை சூடாக காபி கொடுக்க வாங்கி ருசித்தாள். தனு வந்ததும் பவித்ராவின் புது போனை இருவரும் ஆராய்ந்தானர். தனு டியூஷன் கிளம்பிட விஸ்வநாதன் வந்தார்.

பவித்ராவிடம் ''அஸ்வின் அடிச்சதுக்கு ரொம்ப சாரி மா, அன்னிக்கு நீ வரலை என்றதும் அவனை ரொம்ப திட்டினேன்'' என்றார்.
''
அங்கிள் நீங்க என்கிட்ட போய், ஏற்கனவே அவரு என்கிட்ட சாரி கேட்டுட்டாரு. நான் யாரோட நம்பரையாவது தெரிஞ்சு வச்சியிருக்கனும். இல்லனா சொல்லிட்டாவது போயிருக்கணும், தப்பு என் மேல தான். அவர் அடிச்சதுல தப்பே இல்லை'' விஸ்வநாதன் அஸ்வின்காக வாதாடிய பவித்ராவை வினோதமாக பார்த்து வியந்தார்.


எல்லோரும் சாப்பிட்டு இருக்கும் போது தனு பவித்ராவிடம்,
''
பவித்ரா உன் ப்ரெண்ட்ஸ் போன் பார்த்தங்களா? என்ன சொன்னாங்க? அந்த அப்பளம் எடு பவித்ரா'' என தனு பவித்ராவை பெயரிட்டு அழைக்க அஸ்வின் அமைதியாக உண்டு முடித்தான். அவரவர் சாப்பிட்டு தம் பணியை மேற்கொள்ள, ஹாலில் அமர்ந்து செய்தியை கேட்டு கொண்டு இருந்த அஸ்வின் நீரை அருந்த வந்த தனுவிடம், '' தனு இங்க வா?'' என்றான்.


''
என்ன அண்ணா?''
''
பவித்ரா உன்ன விட சின்னவளா?''
''
இல்லை அண்ணா ரெண்டு வருஷம் பெரியவ.''
''
அப்ப பெயர் சொல்லிக் கூப்பிடற?'' என்றதும தனு பேந்த பேந்த விழித்தாள்.


''
பவித்ராவை அண்ணினு கூப்பிடு போ'' இன்னும் முழித்துக் கொண்டே, அறைக்கு வந்துப் படித்துக் கொண்டு இருந்த பவித்ராவை பார்த்தாள்.

 அஸ்வின் அண்ணா பவித்ராவை விரும்புவது நிஜம் தான். அதனால் தான் அண்ணினு கூப்பிட சொல்லி இருக்கான். பவித்ரா எனக்கு அண்ணி என நினைக்க,
''
வா தனு உட்காரு ஹோம் ஒர்க் முடிஞ்சதா? என்ன அபாரமான யோசனை'' என்று புத்தகத்தை எடுத்தாள்.


''
ம் யோசனை தான்.... அண்ணி...'' என்று அஸ்வின் அண்ணாவின் ஜோடி என்ற ரீதியில் கவனித்தாள்.


''
என்னது அண்ணியா?''
''
ஆமாம். இனிமே அப்படி தான் கூப்பிடுவேன் , அஸ்வின் அண்ணா பெயர் சொல்லிக் கூப்பிடக் கூடாதுனு சொல்லிட்டாங்க.'' என்றாள்.


''
ஏன்?'' நெற்றியில் முடிச்சு விழ கேட்க,
''
ஏன்னா... நீங்க என்னை விட பெரியவங்களாம் அதான்.''
''
பரவாயில்லை நீ என்ன பவித்ரா என்றே கூப்பிடு.''
''
அய்யோ அஸ்வின் அண்ணா சொல்லி அதை மீறி எனக்கு பழக்கம் இல்லை. இனி அண்ணி தான் கூப்பிடுவேன்'' என புக் எடுத்துப் படிக்க, பவித்ரா சிந்தனை வயப்பட்டாள்.

என்ன இது நேற்று ராதை ஆன்ட்டி, அத்தைனு கூப்பிட சொன்னாங்க, இப்ப பவித்ரா அண்ணினு கூப்பிடறா? அத்தையும் ஆன்ட்டியும் ஒரே அர்த்தம் தான் பரவாயில்லை.

 தனுவை அஸ்வின் மிரட்டி கூப்பிட சொல்லி இருப்பான் அவன் வார்த்தை என்ன கல்வெட்டா? எல்லோரும் அவன் சொல்வதை கேட்பதால் தான் இந்த திமிர் பிடிவாதம் என எண்ணினாள்.

 
     மெல்லிய பூகம்பம் தொடரும். 

   - பிரவீணா தங்கராஜ் 

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு