முதல் முதலாய் ஒரு மெல்லிய-11

 

 💘 11

          

நாட்கள் கொஞ்சம் வேகமாக நகர்ந்தன.
தவசுடர் (சுவாதியின் அம்மா விஸ்வநாதனின் தங்கை) குழி பணியாரம் செய்து, விஸ்வநாதன் வீட்டுக்குள் வந்தாள். ராதையோடு பேசிக் கொண்டு இருக்க, பவித்ரா உள்ளே நுழைத்தாள்.


''
யார் இந்த பொண்ணு?'' எடை போட்டு கேட்டார்.


''
உங்க அண்ணாவின் நண்பர் பொண்ணு அண்ணி. பெயர் பவித்ரா, இங்க தான்  தங்கியிருக்கா. சுவாதி சொல்லலையா அண்ணி'' என்று கேட்டார்.


''
இல்லை'' தவசுடர் பவித்ராவை உன்னிப்பாக கவனிக்க தவறவில்லை.


''
பவித்ரா... இவங்க அங்கிளோட தங்கை சுவாதிவோட அம்மா. பெயர் தவசுடர்''


''
வணக்கம் ஆன்ட்டி'' என கை எடுத்து கும்பிட, ''பொண்ணு மரியாதையை தெரிஞ்சு வைச்சு இருக்காளே, நல்லா இரு'' என ஆசிர்வதித்தாள்.


சற்று நேரம் கழிந்தன. தனு வந்து தவசுடரை கட்டிக் கொண்டு குழி பணியாரம் சாப்பிட்டு மகிழ்ந்தாள், சுவாதியும் வந்து சேர்ந்தாள். சுவாதியிடம்,
''
ஏண்டி ஒன்னு விடாம உளறுவ, இங்க பவித்ரானு ஒரு பொண்ணு வந்து இருக்கறது சொல்லவே இல்லையே'' என தவசுடர் குடைந்தார்.


'
எப்படி சொல்றது அஸ்வின் பவித்ராவை விரும்பறது தெரிஞ்சா நீ ருத்ராதாண்டவம் ஆடுவியேனு' மனதில் நினைத்தைக் கூறாமல் ''ம்... உங்களுக்கு தெரியும்னு நினைச்சேன் அம்மா அதான் சொல்ல மறந்துட்டேன்'' என மழுப்பினாள்.


ராதை சூடாக பஜ்ஜி செய்து தனுவிடம் கொடுத்து கொடுக்க சொல்ல, ''அத்தை எடுத்துக்கோங்க'' சுவாதி சொல்லாமலே எடுத்துக்க, ''பவித்ரா அண்ணி நீங்களும் எடுத்துக்கோங்க'' என்றாள் தன்யா.


சுவாதியை அண்ணி என்று அழைக்காமல் நேற்று வந்த ஒருவளை தனு அண்ணி என்று அழைத்தது தவசுடருக்கு பிடிக்கவில்லை.


''
தனு அண்ணாவின் மனைவியை தான் அண்ணினு கூப்பிடுவாங்க இல்லைனா அத்தை மாமா உறவு பெண்களை அண்ணினு கூப்பிடுவாங்க. யாரோ ஒருத்தியை அப்படி கூப்பிட மாட்டாங்க'' என்று பேசிவிட்டார்.


''
அவ கரெக்ட்டா தான் கூப்பிடறா அத்தை, பவித்ரா யாரோ ஒருத்தி இல்லை'' என அஸ்வின் குரல் வாசலில் இருந்து வந்தது.


   அஸ்வின் என்றாலே தவசுடருக்கு தந்தை மறுஅவதாரம் ''வா அஸ்வின் உனக்கு பிடிக்குமேனு பணியாரம் செஞ்சு இருந்தேன். ஆமாம் அப்படின்னா பவித்ராவை ஆகாஷ்க்கு பார்த்து இருக்கற பொண்ணா? அவனுக்கு சொந்தம் ஆக போகின்றாளா?'' என குழைவாக கேள்வி கேட்டார்.


  '' இல்லை அத்தை. எனக்கு சொந்தமாக போகின்றவள்.” என்று பேசினான். பவித்ராவுக்கோ என்ன இவன் பிரச்சனையை கிளப்புகின்றானென தோன்றியது.


''
அஸ்வின்'' என தவசுடர் கத்த ''என் பொண்ணு சுவாதி தான் உனக்குனு எப்பவோ பேசி வச்சி இருக்கோம்'' என்று எரிமலையாக வெடித்தார்.


''
அத்தை, அது நீங்க நினைச்சு பேசிக்கிட்டே விஷயம். நான் சுவாதிகிட்ட தெளிவா சொல்லிட்டேன் அவளை திருமணம் செய்ய மாட்டேன்னு, உங்ககிட்ட நேரில் பார்த்து சொல்லணும் நினைச்சேன் சொல்லிட்டேன்'' என்று தோளை குளுக்கினான்.

 
''
நீ சின்ன பையன் நான் என் அண்ணாகிட்ட...'' என்று பேச இடை வெட்டினான்.
''
கல்யாணம் பண்ணிக்க போறது நான். நான் டிசைட் பண்ணனும் அத்தை. நான் ஒன்னும் சின்ன பையன் இல்லை'' என்று தீர்க்கமாக உரைத்தான்.


''
என் பொண்ணை விட நேற்று வந்தவள் உனக்கு முக்கியமாப்படுதா அஸ்வின்''


''
அவளை சந்திக்கலைனாலும் சுவாதியை கல்யாணம் பண்ணி இருக்க மாட்டேன் அத்தை.  பவித்ரா என் லைப்ல வரும் வரை வெயிட் பண்ணி இருப்பேன்.''
அனலாக தகித்த தவசுடர் ராதையை பார்க்க ராதை என்ன செய்வது என்று கையை பிசைந்து நிற்க அதே நேரம் விஸ்வநாதன் வர ''என்ன அண்ணா அஸ்வின் என்ன என்னோவோ சொல்றான்'' என்று முறையிட்டார்.


''
உண்மை தான் தவசுடர் என்று அழைத்துச் சென்று சோபாவில் அமர வைத்து நிதானமாக அஸ்வின் செயல் முழுதும் கூறி முடித்தார். பவித்ரா அழுகையோடு நிற்க ராதை தனுவிடம் அறைக்கு அழைத்து செல்ல செய்கை செய்ய பவித்ராவை தனு அழைத்து சென்றாள்.

எல்லாம் கேட்ட தவசுடர் அஸ்வினிடம் ''பவித்ரா உன்னை ஏற்று கொள்ளவில்லை என்றால் சுவாதியை ஏற்று கொள்வாயா அஸ்வின்.'' என்று கேட்டார்.


''பவித்ரா என்னை விரும்பலை என்றாலும் சுவாதியை என் லைப்ல கல்யாணம் பண்ண மாட்டேன்னு ஏற்கனவே போன வாரம் மாமாகிட்ட தெளிவா பேசிட்டேன் போதுமா'' என்று திடமாக தெரிவித்தான்.


'
, அதான் என்னை உங்க அண்ணா வீட்டுக்கு போய் பார்த்துட்டுவானு அனுப்பினாரா, என மனதில் நினைத்து கொண்டார்.


''
இப்படி சொல்றியே அஸ்வின் நல்லா யோசி''
''
முடிவு எடுத்த பிறகு யோசிக்கற வழக்கம் எனக்கு இல்லை அத்தைதெரியும் தானே?'' என்று கூர்ந்து கேட்டான்.  


சுவாதி தவசுடரை அணைத்து, '' என்னாலையும் அஸ்வினை
கல்யாணம் பண்ணிக்க முடியாது அம்மா''
தவசுடருக்கு கோபம் குறையவில்லை அவளது வீட்டை நோக்கி வேகம் எடுத்தாள். யாரும் அவளை தடுக்கவில்லை. சுவாதி கூட இரவு உணவு முடித்தே கிளம்பினாள்.

 

பவித்ரா மட்டும் தன்னால் தான் இத்தகைய குழப்பம் ஏற்பட்டுவிட்டதோ... என நொந்து கொண்டாள். இவன் ஒருவனின் காதல் பிதற்றலிற்கு இன்னும் எத்தனை மனம் வலிக்க செய்வானோ? என்றே குழம்பினாள்.

 

 நிச்சயம் அவனின் காதலுக்கு செவி சாய்க்ககூடாதென தீர்மானமாக இருக்க முடிவு எடுத்தாள்.


-மெல்லிய பூகம்பம் தொடரும். 

-பிரவீணா தங்கராஜ் 

Comments

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1