முதல் முதலாய் ஒரு மெல்லிய- 6

💘 6


     எல்லோரும் வேறு உடைக்கு மாற்றி தன்யா உறங்கும் வரைக் காத்திருந்தனர். பவித்ரா சுவாதி அருகே விசும்பலோடு அமர்ந்து இருந்தாள்.


அஸ்வின் கீழே வந்து, விஸ்வநாதனுக்கு எதிரே அமர்ந்து என்ன கேட்க வேண்டுமோ கேளுங்க என்பது போல் பார்த்திருந்தான்.


   ''என்னடா இது? இப்படி என்ன அவமானப்படுத்தற மாதிரி வீட்டுக்கு வந்தப் பெண்கிட்ட..'' எனச் சொல்லி முடிக்கக் கூட வில்லை.


   '' பவித்ராவை எனக்கு முன்னாடியே தெரியும். அந்த விஷயம் அவளுக்கும் தெரியும். நான் ஒன்னும் நீங்கக் கூட்டிட்டு வந்த கெஸ்டை விரும்பல, நான் விரும்பினப் பெண்ணை தான் நீங்க கூட்டிட்டு வந்திங்க'' என எழுந்து உள்ளே சென்று பவித்ரா கைப்பிடித்து அழைத்து வந்தான்.


     இப்படி ஒருவன் தாய் தந்தை முன் அழைத்து வர கைப்பிடிப்பாநென நினைத்தாள்.  '' என்ன உனக்கு முன்னாடியே தெரியுமா? தெரியாதா?’’ என்று அழுத்தமாய் கேட்டான்.

  

    பவித்ரா '' கண்ணீர் வழிய திக்கித்திணறி ''தெரியும்... ஒரு முறை பார்த்திருக்கேன் ஆனா''
   ''நான் விரும்பறேனு நேரிடைய சொன்னதில்லை சரியா''


''
ம்''


''
போதுமா'' என்றான். அதாவது உங்க கெஸ்டை விரும்பலை.


''
உனக்காக சுவாதி இருக்கா அஸ்வின்'' என்று ராதை இழுக்க,
''
அம்மா ப்ளீஸ், சுவாதியை நான் திருமணம் பண்ணிக்கறேனு என்னைக்கும் சொன்னதில்லை. நான் அவளை கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு சுவாதிகிட்டயே எப்பயோ க்ளியரா சொல்லிட்டேன்'' என்றான் அஸ்வின்.


   சுவாதியும் அங்கே வந்து '' ஆமாம் அத்தை அஸ்வின் முன்னவே சொன்னான். பெரியவங்க பேசரதை வச்சி எதுவும் திங்க் பண்ணாதே. நான் உன்னை லவ் பண்ண மாட்டேன்  அம்மா இல்லாதப்ப எங்க வீட்ல வச்சி சொன்னான். அதனால அஸ்வின் மேல எந்த ஆசையும் வைக்கல'' என்று உரைத்தாள்.


  '' அத்தையும் நீங்களுமா நினைச்சுகிட்டா அதுக்கு நான் பொறுப்பு இல்ல நான் விரும்புற பெண்ணை தான்  நான் நேசிக்க முடியும்'
  ''டேய்..., தவச்சுடருக்கு இது தெரிஞ்ச எங்களை இல்லை கேட்ப்பா.''

  ''அத நான் பார்த்துக் கொள்வேன். எனக்கு பவித்ராவை பிடிச்சிருக்கு'' என்று பவித்ராவை பார்த்தான்.


   ''உனக்கு மட்டும் பிடிச்சா போதாது'' என விஸ்வநாதன் வெடித்தார்.
  '' இங்கிருந்து படிச்சு முடிச்சு போறதுக்குள்ள பவித்ராவுக்கும் என்னை பிடிக்கும். பவித்ராவோட படிப்பு என்னால பாதிக்காது. டிரஸ்ட் மீ''

  பவித்ரா விசும்பல் அதிகரிக்க ''நான் யாரையும் விரும்ப மாட்டேன். என்னை விட்டுடுங்க நான் ஊருக்கே போறேன்'' என அழுதாள்.


  விஸ்வநாதன் பவித்ராவை அழைத்து அவரது அறைக்கு வந்தார்.
  ''அழாத பவித்ரா இங்கேயும் உன்னை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கிட்டேன். நீ இங்க வந்த காரணத்துல இதுவும் ஒன்னு . ரகு மாதிரி அஸ்வினும்'' என ஆரம்பிக்க,


  '' அய்யோ அங்கிள, ரகுவோட உங்க மகனை கனவுல கூடக் கம்பேர் பண்ணாதீங்க ப்ளீஸ். நான் அந்த மாதிரி இவரை யோசிக்கலை. எனக்கு வித்தியாசம் தெரியுது''  என்றாள் பவித்ரா.

 

கொஞ்ச நேரம் யோசித்தவர் '' சரி.., அப்படினா நீ திரும்ப ஊருக்கு போறனு சொல்லாதே அப்படி சொன்னா எனக்கு ரகு மாதிரி நினைக்க தோன்றும்.'' என்றார்.
 

   '' இல்லை அங்கிள். நான் போல ஆனா என்ன ஹாஸ்டல்ல சேர்த்துடுங்க ப்ளீஸ்'' என அழுதாள்.
  அஸ்வின் கதவைத் திறக்க ' ஹாஸ்டல்ல சேர்த்துடுங்க' எனும் வாக்கியத்தை மட்டும் கேட்டு முடித்தான். ''நீ இங்கிருந்துப் போன நான் உன்னை மறந்துடுவேனு நினைச்சியா பவித்ரா? ஹாஸ்டல் எங்கேயோ இருந்து என்னை பார்க்காம இருந்தா எல்லாம் சரியாகுமா? ஓ...இங்கேயே இருந்தா உனக்கும் என்னை பிடிச்சி, விரும்பிடுவியோனு பயமா?'' என கண் சிமிட்டி சீண்டினான்.

  

  ''இங்கேயே இருந்தாலும் நான் உங்களை எந்த சூழ்நிலையிலும் விரும்ப மாட்டேன். நான் இங்க படிக்க தான் வந்தேன்''

   ''அப்போ இங்கேயே இருந்து ப்ரூப் பண்ணு'' என சவால் விடும் தோரணையில் கூற, செய்வது அறியா விழித்தாள்.


   விஸ்வநாதனோ '' உனக்கு எந்த ஆட்சபனை இல்லைனா நீ இங்கேயே இரு பவித்ரா. நான் உனக்கு எப்பவும் துணையிருப்பேன். உனக்கு பிடிக்காம நீ எதுவும் செய்ய வேணாம்.

   நேற்று தான் நந்துகிட்ட கட்டாயப்படுத்தி நீ இந்த வீட்டிலே தங்கப் அனுமதி வாங்கினேன். இப்ப திடீருனு... ஹாஸ்டல்னா என்ன ஏதோனு பயப்படுவான். ஹார்ட் பேஷண்ட் கவலை தான் இன்னும் தாக்கும்.'' என்றார். அவருக்கு மகள் தன்யாவோடு பேசும் பொழுது தோன்றியது. பவித்ரா ஹாஸ்டல் செல்வதற்கு பதிலாக இங்கே இருக்கட்டுமென நண்பரிடம் பேசி அனுமதி வாங்கினார்.


பவித்ரா சற்று யோசிக்கத் துவங்கினாள். ராதை விஸ்வநாதனிடம் பேச அழைக்க அந்த இடைப்பட்ட நேரம்.

    '' உனக்கு இங்கிருக்க பயம், என்னை விரும்பிடுவியோன்னு சரி, நானே ஹாஸ்டல் பார்க்கிறேன். இந்தளவு உன் இதயம் பலகீனமா?'' என்றான் அஸ்வின்.
 

    கண்களை அழுத்த துடைத்து '' எனக்கு எந்த பயமும் இல்லை. நான் யாரையும் விரும்ப மாட்டேன். நான் இங்கேயே இருக்கேன் அங்கிள்'' என்றாள் கோவமாக.
 

  ''பார்க்கலாம்'' என இதை இதை தான் எதிர்பார்த்தேன் என்று வெற்றி புன்னகையோடு அஸ்வின் மாடிக்கு சென்றான்.

     விஸ்வநாதன் சுவாதியிடம் வந்து தலையை வருடி விட்டார். தங்கை மகள் மனதில் அஸ்வின் இருந்து அவள் பொய் உரைக்கின்றாளோ?
 

  ''மாமா... டோன்ட் ஒர்ரி, அஸ்வின் என்கிட்ட வந்து எனக்கு உன்னைக் கல்யாணம் பண்ணத் தோணல, அத்தையும் வேறு யாரும் பேசினா அதை வைத்துக் கணவு காணாதே என் முடிவு இதுதான்னு முன்பே சொன்னான். பியூட்சர்லையும் இதே முடிவு தான். எனக்கு பிடிச்சப் பொண்ண சந்திச்சு அவளை தன் மேரேஜ் பண்ணுவேன்னு சொல்லிட்டான். அம்மாகிட்ட சொன்னா ருத்ரதாண்டவம் ஆடுவாங்க அதனாலயே சொல்லலை உங்களுக்கே தெரியும் அவன் எப்பவும் நடக்காது என்றால் நடக்க விடமாட்டான். நடத்தி காட்ட முடிவு பண்ணினா அதை செய்துட்டு தான் மறுவேலை பார்ப்பான். அவன் என்னை விரும்பலை என்ற பிறகும் யோசிப்பேனா? அதுவும் இல்லாம அவன் முறைச்சு நான் சாம்பலாகிடுவேன்'' என சிரித்தாள்.


   ராதை அவளை அணைத்து முத்தமிட, ''அத்தை எப்பவும் எனக்கு இந்த வீட்ல உரிமையும், அன்பும் மட்டும் போதும்'' என்றாள்.
ஆகாஷிற்கு வானம் கைக்கு எட்டிய உணர்வுடன் கனவு உலகில் மிதந்தான். விஸ்வநாதன் ராதை அவர்கள் அறைக்குச் சென்று அஸ்வின் பவித்ராவை பற்றி விவாதித்தனர்.

 
சுவாதியும் பவித்ராவும் தனு அறையில் உறங்கச் சென்றனர். பவித்ராவுக்கு கண்ணீர் மட்டும் நிற்காமல் வர, சுவாதி பவித்ராவின் தோளை தொட்டு திருப்பினாள்.


   ''அஸ்வின் ரொம்ப நல்லவன் பவித்ரா. ஹண்டசம், நினைத்ததை முடிக்கிற சுபாவம் கொண்டவன். எனக்கு அவன் என்னை திருமணம் செய்ய மாட்டான்னு தெரியும், என்னைப் பார்த்து நீ சங்கடப்பட வேணாம். நீ எனக்கு எப்பவும் பிரென்ட் ஓகே.

   நீ அஸ்வினை விரும்பறது விரும்பாதது உன் இஷ்டம் நீ விரும்பலான கூட அஸ்வின் என்னை ஏற்றுக் கொள்ளமாட்டான். எனக்கு அது நல்லாவே தெரியும். அன்னைக்கு உன்னை ட்ராப் பண்ணியது கூட அவன் கேரக்டர்க்கு வித்தியாசமா இருந்தது அதான் கேட்க வந்தேன். என் பைக்ல யாருக்கும் இடமில்லைனு என்னை ஒரு முறை ஏத்தலை. அதனால தான் அன்னிக்கு அவன் உன்னை டிராப் பண்ணவும் கோவமா வந்தேன்.

    இங்க பாரு நீ ரொம்ப சோர்வா தெரியற தூங்கு. இங்க இருக்கற வரை சேப்பா இருக்கலாம்'' என்று சொல்ல பவித்ராவுக்கு சற்று ஆறுதலாக இருந்தன. 


  சுவாதிக்கு தன்னால் மனகாயம் இல்லை என்பதாலோ என்னவோ கண்ணீரை துடைத்து தலையாட்டினாள்.


  '' சரி எனக்கும் தூக்கம் வருது குட்நைட் '' என்று சுவாதி உறங்கிட , பவித்ராவும் படுக்க உறக்கம் மட்டும் வர மறுத்தது.
அஸ்வின் தன் செல்லில் பிடித்த பவித்ரா புகைப்படத்தைக் கம்ப்யூட்டரில் ஏற்றி அவளது முகத்தை ஸும்(zoom) செய்துப் பார்த்து ரசித்தான். அப்படியே உறங்கியும் போனான்.

-மெல்லிய பூகம்பம் தொடரும். 

-பிரவீணா தங்கராஜ் 

Comments

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1