முதல் முதலாய் ஒரு மெல்லிய-7

    
💘 7

விடியல் அனைவருக்கும் புதியதாய் இருந்தன. பவித்ராவிற்கு இமைக்கூடத் திறக்கயியலவில்லை. அவ்வளவு பாரமாக இருக்கக் கஷ்டப்பட்டு எழுந்தாள். நேரமாகி எழுந்து குளித்து புத்துணர்வு பெற்றாலும் சற்று சோர்வுக் காணப்பட்டது.

   பவித்ராவை தேடி ராதை காபி கொண்டு வர தர்மசங்கடமாக வாங்கினாள். ராதை தன்னை உற்று நோக்குவதாக பட ராதையை ஏறிட்டு பார்க்க நாணினாள்.
  

  ''இன்னிக்கு வேணும்னா ரெஸ்ட் எடு நாளைக்கு காலேஜிக்கு போயேன் பவித்ரா, ரொம்ப சோர்வா இருக்க,'' என்று அக்கறையாய் கூறினார்.
 பவித்ரா திக்கியபடி '' பரவா....யில்லை ஆ...ன்ட்டி அங்க போன சரியாகிடும்'' என்றாள். தலையை வருடிய படி, ‘’உன் இஷ்டம்’’ என்று கூறிச் சென்றார். அந்த வருடலில் சற்று மனம் நிம்மதியை தந்தது.


     விஸ்வநாதன் அறைக்கு சென்று ''அங்கிள் நான் பஸ்ல போகறேன்'' என மொழிந்தாள்.

    ''நீ இப்படிக் கேட்பேன்னு தெரியும். உன் விருப்பபடிச் செய்'' என்றார்.


'
ம்'' என்று சந்தோஷமாக திரும்பினாள்.


''
இதுக்கு முன்னாடியும் இதே காரணத்துக்காக தான் பஸ்ல போறேன்னு சொன்னியாமா'' என்று கேட்டதும் தான் நிலையாக நின்றாள்.


''
அது வந்து அங்கிள்'' என தலை கவிழ்ந்தாள்.

 
''
சரி சரி ரகு மாதிரி ஏதாவதுனா உடனே சொல்லும்மா.”  என்றார்.


''
அங்கிள் ப்ளீஸ், நேற்றே சொல்லிட்டேன். ரகு சீட் பிராடு. உங்க பையனை ரகுவோட கம்பேர் பண்ணாதீங்க. அவனைப் பற்றி பேசாதீங்க.'' என்று தன்னிலை மாறி போனாள்.


''சரி மா'' என இருவரும் சாப்பிட அமர்ந்தனர். அஸ்வின் வந்து எதிரே அமர்ந்தான். அவன் முகத்தில் ஒரு உற்சாகம் தென்பட்டது. பவித்ரா அவசர அவசரமாக சாப்பிட்டு கிளம்ப, அவனும் பைக்கை உயிர்பித்தான். பவித்ரா கேட்டிற்கு நடந்து சென்றுக் கொண்டு இருக்க கண்டான்.

 
 கோபம் எரிமலையாக பிரவாகித்தது. ''ஏய்! நில்லு, இப்ப உன்னை என்ன பண்ணிட்டேன்னு பஸ்ல போறே? உனக்கு என்ன அவொய்ட் பண்ணனும்னா பஸ்ட்டே எப்படியாவது பஸ்ல போய் இருக்கணும். இப்ப லவ் ப்ரபோஸ் பண்ண பிறகு இப்படி போன என்ன பத்தி வீட்ல என்ன நினைப்பாங்க? சீப்பா எடை போடா மாட்டாங்க'' என பேசிக் கொண்டே போனான்.


''
இல்லை, எவ்வளவு நாள் ட்ராப் பண்ண முடியும் நான் தனியாப் பழகிக்கறேன்னு அப்பவே சொன்னேன்'' என்று அவனின் உருமலில் கிட்டத்தட்ட பயந்தாள்.
''
நீ பிடிவாதமா அப்பவே சொல்லி இருக்கனும், இப்ப என்னை தப்ப நினைப்பாங்க'' என்றான் அதே காட்டமாக.


''
இல்லை எனக்கு..''


''
உன்னை ஒன்னும் கடிச்சி சாப்பிட மாட்டேன் வந்து ஏறு, எனக்கு டைம் ஆகுது.'' என முறைக்க, அவன் பார்வைக்குப் பயந்து பைக்கில் ஏறினாள்.


இதை எல்லாம் ஜன்னல் வழியாக பார்த்த விஸ்வநாதன், இனி கடவுள் விட்ட வழியென நினைத்துக் கொண்டார்.
பைக்கில் பேசாது வந்தனர்.

  காலேஜ் வந்து இறங்கி பவித்ரா நடக்க, அஸ்வின் பவித்ராவிடம் ''சாரி'' என்று புறப்பட்டான்.
நிம்மதியை நன்றாக களைத்து விட்டு சாரி என்ற ஒற்றை வார்த்தையில் என்ன நிம்மதி கிடைக்க பெறுமென மனதில் நினைத்து கொண்டாள்.

   ரம்யாவும், சஞ்சனாவும் அடிக்கடி யார் அது உன் ஆளா? என்று கேள்வி எழுப்ப, ''அதெல்லாம் இல்ல, அங்கிளோட மகன்''
''
ஓ... ஓ...''


''
நீங்க நினைப்பது போல அல்ல ஜஸ்ட் ட்ராப் பனண்றாரு, தட் இஸ் இட்''  என்பாள்.


''
ஆனா அந்த ஹாண்டசம் உன்ன பார்க்கற பார்வையில் காதல் தெரியுதே? என விடாது கேட்பாள் ரம்யா.


''
ஆமாம் அவரு என்னை விரும்புறாரு நான் இல்லை போதுமா''


''
ஏன் டி , அழகா அம்சமா இருக்கான். சோ''


''
ப்ளீஸ் ரம்யா வேற ஏதாவது பேசுவோம். எனக்குப் பிடிக்கலை'' என்றதும் தோழிகள் இதற்கு மேல் வருத்தி எடுக்கவில்லை.


    மேலும் ஐந்து நாட்கள் சென்றது .பொதுவாக கூடும் சாப்பிடும் நேரம் தவிர அஸ்வின் இருக்கும் போது எல்லாம் ரூமில் அடைந்துக்கிடக்க இம்முறை அனைவருக்கும் காரணம் அறியபட்டதால் பவித்ராவை யாரும் வற்புறுத்தவில்லை. அஸ்வின் மட்டும் அவளை அதிகம் காணாது தவித்தான்.


ஞாயிறு வந்ததும் அஸ்வினுக்கு தான் போன ஞாயிறு காதலை தெரியப்படுத்திய நினைவு எழ, பவித்ராவோ எல்லா நாளும் போல் வெளிக்காட்டிக் கொண்டாலும் அவளுக்குள்ளும் அந்த நிகழ்வு நிழல் ஆடின.


எல்லோரும் அருகில் இருக்கும் கோவிலுக்கு செல்ல ஆயுத்தம் ஆனார்கள். சுவாதியும் வந்து சேர்ந்தாள். அஸ்வின் அதிகம் கோவிலுக்கு செல்வது இல்லை. ஆனால் பவித்ரா வருவதால் முதல் ஆளாக தயாரானான்.


கார் புறப்பட்டு கோவிலில் நின்றது. அது சற்று மேடாக இருக்கும் பகுதி என்பதால், கீழேவும் இல்லாது கோவில் அருகே இல்லாது நடுவில் உள்ள பகுதியில் காலணியைக் கழற்றினார்கள்.

 

ராதை அர்ச்சனைக்கு தேவையானதை எல்லாம் வாங்கிக் கொண்டு பூ வாங்கி எல்லோருக்கும் கொடுத்தாள். மலர் சூடிய சிகைக்கு தனி அழகு உண்டு.
அஸ்வின் பவித்ராவை நொடிக்கு ஒரு முறைப் பார்த்து ஏமாந்தான். பவித்ரா அவனைப் பார்க்கக் கூடாதென கவனமா இருந்தாள். அஸ்வினுக்கு பொறுமை எல்லை கடந்தது.


கோவிலுக்குள் அர்ச்சனை ஆராதனை முடிந்து ஸ்தலம் சுற்றி அமர்ந்த போது அமைதியே குடி இருந்தன. அருகில் பிரசாதம் வழங்க, வாங்கி சுவைத்தனர். ஆகாஷிடம் அஸ்வின் காதில் ஏதோ கூறி கார் சாவியை கையில் கொடுத்தான்.


''
அஸ்வின் அப்பா உதைப்பார் டா.''


''
நான் பார்த்துபேன் நீ சொன்னதை மட்டும் செய்.''


''
என்னமோ போ நீ அண்ணனா? இல்லை நான் அண்ணனா? என்றே தெரியலை'' என்றான் ஆகாஷ்.


வீட்டிற்குச் செல்லக் கிளம்பினார் அஸ்வின் வேகமகா படியிறங்கி படியில் அமர்ந்தான். காலணியை மாட்டி ஒருவர் பின் ஒருவராக கீழே இறங்க பவித்ரா மட்டும் அஸ்வின் அருகே நின்றாள். காரணம், அஸ்வின் பவித்ரா காலணி ஒன்றை மிதித்து செல்போனை நோண்டி கொண்டு இருந்தான்.

 

பவித்ரா சற்று மெல்லிய குரலில்,
''
என் செப்பல் வேணும்'' என்றாள்
''
போட்டுக்கோ'' என்றான்.


''
காலை எடுத்தா தானே''
''
உன்கிட்ட பேசணும் உட்காரு ''
''
நான் போகணும் காலை எடுங்க''
''
முடியாது என்ன ஏன் ஏற்று கொள்ள யோசிக்கற? என்ன உனக்கு பிடிக்கலையா? என்கிட்ட என்ன குறை? உன்ன உருகி உருகி விரும்புறது தவறா?'' என்று கோவத்தை குறைத்து பொறுமையாய் பேசினான்.


அதற்குள் யாவரும் காரில் ஏறிட, ஆகாஷ் வண்டியை எடுத்தான். தனு ஆகாஷிடம், '' அண்ணா, பவித்ராவும், அஸ்வின் அண்ணாவும் வரலை'' என்பதை சுட்டி காட்டினாள்.


விஸ்வநாதனோ '' வெயிட் பண்ணு வரட்டும்'' என்றார்.
''
அவன் தான் வண்டியை எடுத்துட்டுப் போகச் சொன்னான். பவித்ராவையும் அவனே கூட்டிட்டு வருவதாய் சொன்னான்.''  என்று உரைத்தான்.

 

  ஏதோ யோசித்த விஸ்வநாதன் '' சரி போ'' என்றார். அங்கே பவித்ரா ''கார் கிளம்பிடுச்சு நான் போகணும்.'' என்று சிணுங்கினாள்.
''
பதில் சொல்லிட்டு போ, எதுக்கு என்னை அவாய்ட் பண்ற, நான் இருக்கறப் பக்கமே திரும்பறது இல்லை... நான் வந்தாலே ரூமுக்குள்ள ஓடிடற.., நான் உன்னை பார்க்கக் கூட கூடாதா?” என்று தன்னை ஒதுக்குவதை தாங்கி கொள்ள இயலாமல் கேட்டான்.


''
இப்ப நீங்க செப்பல் போடா விடலான நான் அப்படியே நடந்து போயிடுவேன்'' என்று வீம்பு பிடித்தாள்.


'
எனக்கு பதில் தெரியாம உன்னை போக விடமாட்டேன்'' என்றான் இவனும்.


''
அப்ப நான் போறேன்'' என எத்தனிக்கையில் அவளது கையைப் பிடித்துக் கொண்டான்.


     இதுவரை யாரும் இத்தனை அவமதிப்பு செய்ததில்லை. எல்லாம் இயல்பாய் இவனின் அதட்டலில் ஒதுங்கி அமைதியாக மாறுவர்கள். பவித்ரா ஒதுக்கம் அவனை கிறுக்கனாக மாற்றியது.

 

 ''கை வலிக்குது விடுங்க''
''
என்னை விரும்புறேன்னு சொல்லு விடறேன்''


''
எப்பவும் சொல்ல மாட்டேன்'' என்று கோவமாக கத்தினாள்.

  சட்டென அவளது முகம் அருகே தன் முகத்தைக் கொண்டுச் சென்று, அவளது கண்களை உற்று நோக்கினான். கையை அழுத்திப் பிடிக்க வலியை தாங்காது கண்ணீர் சிந்தினாள்.

 

என்ன நினைத்தானோ ''போடி.'' என கையை உதறி விட்டான். அவனது 'போடி' என்ற வார்த்தை அவளுக்கு கோபத்தை ஏற்படுத்தவில்லை என்பது அதிசயமே?!
பெண்களுக்கு பொதுவாக தனக்கு பிடித்த நபர் மட்டுமே 'வாடி, போடி' என்று சொல்வது பிடிக்கும். அதுவே பிடிக்காத நபர் கூறி விட்டால் அது பெரிய சண்டையை ஏற்படுத்தி கோபத்தை வரவழைக்கும்.


தன் காலணி அணிந்து வேகமாக கீழே இறங்கினாள . அவளுக்கு சென்னை புது இடம் ஆட்டோ பிடித்து ஆட்டோக்காரரிடம் அட்ரஸ்சை ஒப்புவிக்க, அவள் அருகே வந்து அமர்ந்து ''அடையார் போங்க அண்ணா'' என கூறினான்.

 

 ஆட்டோக்காரன் இருவரையும் மாறிமாறி பார்க்க, அஸ்வினோ ''கோபத்தில் இருக்கா நீங்க போங்க அண்ணா'' என்றதும், பவித்ரா அமைதியாக இருக்க டிரைவர் வண்டியை கிளப்பினார்.


வீடு வந்ததும் இறங்கி அஸ்வின் பணத்தைக் கொடுக்க
''
நான் கொடுக்கறேன்'' என்றவளிடம் ''இதயத்தை கொடு போதும்'' என மீண்டும் ஆரம்பிக்க வீட்டுக்குள் ரூமில் அடைந்துக் கொண்டாள்.


தன்யாவிற்கு நடப்பது ஒரே குழப்பமாக இருந்தன. அவர்தம் வேளையில் மூழ்கினர். இரவு உணவினை பவித்ரா பெயருக்கு உண்டுச் சென்றாள்.

 

-மெல்லிய பூகம்பம் தொடரும் 

-பிரவீணா தங்கராஜ்,

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...