மதிப்பிற்குரிய பெண்மை...
நிமிர்ந்த நடை வேண்டாம்குனிந்தே செல் நேர்பார்வை பார்க்காதே இமையை தாழ்த்து உதடு இழுத்து புன்னகைக்காதே வாய்க்கு பூட்டிடு சுட்டுவிரல் நீட்டி நியாயம் பேசாதே சுடுதண்ணீர் கொதிக்கும் அடுதலறை கவனி இடை தெரியும் உடை சேலையென்றாலும் இழுத்து போர்வையாய் போர்த்திக் கொள் தந்தை தனயன் அடுத்து தாலி கட்டியவனின் பாதசுவடின் அச்சில் கால் பதி இப்படி இப்படி சென்று நீ வாழ்ந்தாலும் இன்னல் என்று வரும் சமயம் உலகம் உன்னை தூற்ற தான் செய்யும் மதிப்பிற்குரிய பெண்மை மண்டியிட்டு அடங்கும் வரை... - பிரவீணா தங்கராஜ்.