பிரவீணா தங்கராஜ் நாவல்கள்(26-50)
(குடும்பம், காதல், நட்பு, உறவு, சமுகம், மர்மம், திகில், க்ரைம் ஃபேண்டஸி, நகைச்சுவை தன்னம்பிக்கை போன்ற உணர்வுகளின் உள்ளடக்கிய நாவல்கள்)
26. தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

நாயகன் நாயகி : ஆரவ்-சம்யுக்தா
சந்தர்ப்பத்தால் பிரிந்த காதலர்கள் மீண்டும் சந்திக்கின்றனர். ஆனால் தெரியாத ஆட்களாக மாயபிம்பத்தை உருவாக்கி தள்ளி செல்ல விதியானது தேவ பந்தம் உங்களுக்குள் தொடர விடுவேன் என்றே அவர்களை மணமாக்களாய் மாற்றி விளையடுகின்றது.
கல்லூரியில் காதல் பறவையாய் பறந்த ஆரவ்-யுக்தா வாழ்வில் யார் விளையடியது. இவர்களுக்குள் என்ன நிகழ்ந்தது? எப்படி பனிப்போர் உறைந்து கூழ்பதமாகும். காத்திருப்போர் புதினம் வாயிலாக.
Blog Link : தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥
Amazon link : தீவிகை அவள் வரையனல் அவன் amazon link
27. சிரமமில்லாமல் சில கொலைகள்
நாயகன் நாயகி : சர்வேஷ்-மெர்லினா
முன் ஜென்ம தேடலில் தொலைத்த காதலை இந்த ஜென்மத்தில் உயிர் கொடுக்க முயலுக்கின்றது ஒரு ஆன்மா. கூடவே தன் காதலை தண்டித்த காரணத்தால் பழி வெறியை சேர்த்தே கருவருக்கிறது அவ்வுருவம்.ஜென்மம் தாண்டி காதல் சேருமா? காதலிக்கும் அப்பேதையே அறியாத காதல்? காண்போம் சில கொலைகளில் சிரமமில்லாமல்..
முதல் ஜென்மம் ராஜா ராணி காலம் யவனரதி-இளவழகன்
இரண்டாம் ஜென்மம் வானொலி காலக்கட்டம் சர்வேஷ்-அபரஞ்சி
Amazon Link : சிரமமில்லாமல் சில கொலைகள்
28. Oh My Butterfly (u r everthing 2 me)
நாயகன் நாயகி : வித்யுத்- ஆர்கலி
தன் நீரோடை வாழ்வில் சலசலத்து தெளிவாக போக இடியாக பிரச்சனை தாக்கி கொல்கின்றது நாயகி ஆர்கலியின் வாழ்வு.
தங்கை ஆருத்ரா தன்வீர் என்பவனால் சிதைக்க படுகின்றாள். தாய் தந்தை காணாமல் தவிக்கின்றாள். நிலத்தின் நீர் நல்ல நிலையால் குளிர் பானத்திற்கு விற்க அதனை தடுக்கும் நாயகியின் குடும்பம் சின்னா பின்னமாகின்றது.
நாயகன் வித்யுத் யாதுமாகி அவளை காப்பானா? அவளின் பிரச்சனைகளின் தீர்வை கலைத்து அவன் காதலை புரியவைப்பானா?
எக்ஸ்பிரஸ் வேகம் கொண்டு பயணிக்கும் கதை. ஆத்விக், சரண் மற்றும் ஜானி(வளர்ப்பு நாய்) என்று மேலும் கதா நாயாகனோடு, மஹதி சின்ன உதவியாக ஆர்கலிக்கு உதவுகின்றாள்.
வேகத்தோடு பட்டாம் பூச்சியோடு பயணிக்கும் ஆக்ஷன் கதை.
Amazon link : Oh My Butterfly (u r everthing 2 me)
29. முத்தமிட்டு சுவடுபதி ஆலியே
நாயகன் நாயகி : சைதன்யன்-அகமேந்தி
தனது காதலுக்குக்காக போராடும் சைதன்யன். நாயகி அகமேந்தி விரும்புவது
தருணேஷை. இருவரில் யார் அகமேந்தியின் இதயத்தை வென்று மணம் புரிந்து
ஜெயிப்பது என்பது கதையின் போக்கு.
இதில் அம்மாவாக நடிக்க அழைத்து வரும்
பிரியங்கா யார்?
தருனேஷ் சைதன்யன் போட்டி போடுவது எதனால்?
சைதன்யனை இளக
வைக்கும் ருத்ரேஷ் யார்?
இவர்கள் வாழ்வில் புரிதல் ஒன்றுபட்டு ஆனந்த மழை வர
தருனேஷ் அறிந்திடும் உண்மை என்ன?
வருணிகாவால் தருனேஷ் மனம் நிம்மதி
கொள்ளுமா? அறிந்திட படிக்கலாம்.
Amazon link : முத்தமிட்டு சுவடுபதி ஆலியே amazon link
30. பூட்டி வைத்த காதலிது
(புத்தகமாக வெளியான மூன்றாவது நாவல்)
நாயகன் நாயகி : மிதுன்-அதிதி, ஷீரவன்-பூஜா, ரித்விக்-ஜோஷ்னா
கணவன் மனைவியான மிதுன்-அதிதியின் வாழ்வியல் நிதர்சன கொண்டும். ஜோஷ்னா-ரித்விக்கின் அதிரடி கொண்ட கல்லூரி காதல் ஜோடியும், பூஜா-ஷ்ரவன் மென்மையான காதல்களும் கலந்த குடும்ப கதை.
31. உள்ளத்தில் ஒருத்தி(தீ)
நாயகன் நாயகி : ப்ரனித்-நன்விழி
வெள்ளித் திரை நாயகன் ப்ரனித். சாதாரண போலிஸ் சப்இன்ஸ்பெக்டர் நாயகி நன்விழி. நாயகனை கடத்துவதில் ஆரம்பித்து எதனால் கடத்தப்பட்டோம் என்ற ஆர்வத்தை தேடி நாயகியின் பின்னனி அறிய நேர்ந்து காரணம் புரியவும் அதற்குள் நாயகி மீது காதலை மூட்டையளவு வளர்க்க பின் அதனை மறைக்க முயல்கின்றான்.
தன்னை மீறி காதல் வெளிப்பட்டு இந்த இரு துருவங்கள் இணைகின்றதா. நடுவில் மர்மமும் த்ரில்லரும் கலந்து காதலோடு தீ மூட்டுகின்றனர் ப்ரனித்-நன்விழி.
32. இமயனே இதயனே
நாயகன் நாயகி : இமயன்-ஸ்ருதி
காதல் ஒரு முறை தான் மலரும் என்றே கூறப்பட்டு வரும் அறநெறி. இங்கே நாயகன் இமையனுக்கு இரு தோல்வி தழுவியும் மூன்றாம் முறையும் வருமா? உண்மை காதலை தேடுவது சரியா?
இன்னல்களை உழலும் மணமான பெண்ணொருத்தி ஸ்ருதி. அவள் வாழ்வில் வலிகளை கண்டு அமுதமாக கிடைப்பானா நாயகன்? வலி கொண்ட அழுத்தமான கதை.
Amazon link :இமயனே இதயனே
33. காலமறிதல்

நாயகன் நாயகி : சமர்-கிட்டி
காலமும் கடந்து போவோம் வா என்ற டைம் டிராவல் கதையின் தொடர்ச்சி. அக்கதையின் நாயகன் நாயகியின் மற்றும் கதை மாந்தர்களின் வாரிசை வைத்து தொடர்கிறது கதை. (அறிவியலை தேடாதீங்க, நேற்று இன்று நாளை போன்ற9 அதே இல்லை) கதையாக வரும் அறிவியல் இல்லை... இல்லை...)
நாயகன் சமர் நாயகி கிட்டி(கௌரி) மற்றும் ஷாஸ்ரீ இவர்களோடு காலம் அறிவோம்.
எல்லோருக்கும் இறந்த காலத்தின் நிகழ்வால் நிகழ்கால வாழ்வு மாறும். இங்கோ எதிர்கால பயணத்தின் நிகழ்வால் நிகழ்கால வாழ்வு மாறுமா? அப்படி மாறினாலும் எல்லாம் சரியாய் கொண்டு செல்ல நாயகன் சமர் எடுக்கும் முடிவுகள் என்ன?
34. துஷ்யந்தா... ஏ... துஷ்யந்தா...
நாயகன் நாயகி : விதுரன்-பிரகதி
தன் தலைமையில் நடக்கவிருக்கும் அண்ணன் திருமணத்தை காண வரும் நாயகன் விதுரன். தோழிக்கு திருமணம் பிடிக்கவில்லையென தடுத்து நிறுத்தும் நாயகி பிரகதி.
இருவரின் மோதலில் நாயகன் எண்ணியதை நடத்தி காட்டி நாயகியை அவள் தாயை பணயவைத்து உயிர் பயம்காட்டி மணக்கும் போது டெவில் போன்று அராஜகம் செய்ய, அவன் செய்தவை எல்லாம் பொறுமையின் பிறப்பிடமாய., நியாயமாய் தோன்ற மனதை தொலைக்க ஒரு கொலையை செய்து நாயகி மனதில் வெறுப்பை சம்பாதித்து பிரிகின்றனர். மீண்டும் இணைவார்களா ? எப்படி இணைகின்றார்கள் என்பதே கதை.
35. நதி தேடும் பெளவம்
நாயகன் நாயகி : குரு-மஹா
முக்கோண காதல் கதையில், நெய்தல் நில வாழ்வில், மீன் வாசம் வீசும் சென்னை தமிழில், யார் காதல் கடலை விட பெரிது என்று நதி தேடும் பௌவமாக குரு அடையும் மகா(ஹா)கடல்.
Amazon Link : நதி தேடும் பெளவம்
36.நன்விழி
நாயகி : நன்விழி
அபார்ட்மெண்ட் ஆண்டு விழாவில் பிணைய கைதியான நிலையில், கர்பிணியான ராணுவ வீரனின் மனைவி நன்விழி எடுக்கும் முடிவு என்ன? நெஞ்சை நெகிழ வைக்கும் செயல்.
Blog link : நன்விழி
Amazon Link : நன்விழி
37. இணையவலை கட்செவிஅஞ்சல்
நாயகன் நாயகி : சாந்தனு-நிரல்யா
போனால் ஏற்படும் ஆபத்தின் இன்னொரு விழிப்புணர்வு கதை. திரில்லர் மற்றும் சமுதாய கருத்து சார்ந்து சுவாரசியமாக எழுதபெற்றது.
பிரதிலிபி நடத்திய மகாநதி போட்டியில் குறிப்பிட தகுந்த கதையில் ஒன்றாக இடம் பெற்றவை.
Amazon link : இணையவலை கட்செவி அஞ்சல்
38.தழலில் ஒளிரும் மின்மினி
நாயகன் நாயகி: ஜெயதேவ்-மின்மினி
மின்மினி என்ற விலைமகளின் சின்ன சின்ன ஆசையும் அவளின் தவிப்பும். அவளை தேடி ஜெயதேவ் வந்து தன் வலியை இறக்கி வைத்து பின்னர் அவளிடம் புதையலாய் வாழ்வை பெற்றவனின் கதை.
நாயகன் நாயகி : வசீகரன்-விருஷா
புரபஸர் ஸ்டூடண்ட் கதை. மோதலில் ஆரம்பித்து ஹைக்கூ கவிதையாக புரியாமல் சென்று பின்னர் அக்கா மகள் சந்தனா மற்றும் அவள் காதலன் ஹர்ஷாவை தேடி த்ரில்லருடன் மாறி வசீகரன் பயணிப்பது.
வசீகரனோடு அவள் மாணவி விருஷா மற்றும் ஸ்வப்னா, ராகுல் தேடுதலில் செல்கிறது கதை.
சந்தனா ஹர்ஷா காதலில் இணைந்தாலும் இறந்தனரா? அல்லது அவர்களுக்கு என்னானது? என்பதே நாமும் வசீ விருஷாவோடு ஹைக்கூ கவிதையில் காதலனை வசீ மூலம் வாசிப்பில் அறிவோம்.
Pratilipi link : ஹைக்கூ காதலனே
40.மனதோடு மாய மின்சாரம்
நாயகன் நாயகி: நீரஜ்ஆழியன்-ஸ்ரேயா
நாயகன் நீரஜ் ஆழியனின் தங்கை நிகத்ரா கார் ரேஸர் 'ரே'வின் க்ரஷ். ரே என்பவர் யார்? 'ரே' வை கண்டு நாயகன் தடுமாறும் நிலை எதனால்?
விபத்தில் தற்காலிகமாக உடல் நிலையை இழந்த ஸ்ரேயா நிகத்ரா உற்சாகமாக வரவேற்பது எதனால்?
ஸ்ரேயா மணக்க போகும் அத்தை மகன் அவளுடனான திருமணத்தை நிறுத்துவது எதனால்?
ஸ்ரேயா-நீரஜ் இணைவது எப்படி? தன்னம்பிக்கை கொண்ட பெண்ணும் மென்மையான காதலும் கதை.
புத்தகமாக கிடைக்கும்
41.மீண்டும் வருவேன்
நாயகன் நாயகி : கிருஷ்ணா-பிருந்தா
பாட்டன் சொத்து பேரனுக்கு மட்டும்மா..? பாட்டன் பகையும் காலம் தாண்டி வந்து பழிவாங்கினால்? அதுவும் பேயாக? என்ற கற்பனையின் கதை.
42.செந்நீரில் உறையும் மதங்கி
க்ரைம் கதை.
நதியா இறப்பை கண்டறிய வரும் தர்ஷன். நதியாவை யார் கொன்றது எதனால்?
43.ஏரெ(றெ)டுத்து பாரடா முகிலனே
நாயகன் நாயகி : வெண்முகிலன்-நுவலி
விவசாயம் மையமாக கொண்ட கிராமத்து கதை. வாயாடி நுவலியும் சைலன்ட் மன்னன் வெண்முகிலனும் உறவு முறை கொண்டாளும் பேசாமல் தவிர்க்க நுவலியின் விடாது துரத்தி காதல் கொண்டு, முகிலின் அமைதிக்கு காரணம் அறிந்து அவனுக்கு துணைவியாய் துணையாய் மாறும் கதை.
44.வல்லவா எனை வெல்லவா
நாயகன் நாயகி : யஷ்வந்த்- தன்வீ, ஆதிரன்- மிருணாளினி
துஷ்யந்தா கதையின் தொடர்ச்சி
தந்தை மரணத்துக்கு பழிவாங்க வரும் யஷ்வந்த். தன்வியை பழிவாங்க இயலாது காதலை வெளிபடுத்தவும் இயலாது இரு தலை கொள்ளியக இருக்கின்றான். தனது தாயின் மறுமணத்தில் பிறந்த தங்கை மிருணாளினி தன்வி தம்பி ஆதிரன் அதிரடியாய் மணந்து பழிவாங்கும் எண்ணத்தை கடந்து, கடக்க வைக்கும் காதலை ஏற்கும் கதை. நிறைவில் வில்லன் ஒருவன் பொது எதிரியாய் நுழைய களையெடுக்கும் ஆக்ஷன் கலந்த குடும்ப காதல் கதை.
45. உயிர் உருவியது யாரோ
நாயகன் நாயகி : மதிமாறன் நற்பவி
அரசியல் கட்சி தலைவர் ஒருவர் இறந்திட எதிர் கட்சி ஆட்கள் மீது சந்தேகம் விழுகின்றது. எதிர் கட்சி ஆள் கொலை செய்ய சொன்ன ஆளோ, நான் செல்வதற்குள் யாரோ கொன்று விட்டார் என்று கூறுகின்றான். சந்தேகம் எதிர்கட்சி ஆள் மீது சென்றாலும் நாயகி நற்பவி யார் கொன்றது என்ற தேடுதலில் தவிக்கின்றாள்.
யார் கொன்றது? நாயகன் நற்பவிக்கு உதவுவானா? இவர்களுக்குள் காதல் எவ்வாறு நுழைக்கின்றது? க்ரைம் திரில்லர் கொண்ட கதை.
46. பிரம்மனின் கிறுக்கல்கள்
நாயகன் நாயகி: ஆத்விக்-யஷ்தவி
மறுமணம் கதை. கொராணாவில் பலரும் துணையை இழந்து வாழ்வை தொலைத்தவர்கள். அவர்களில் மையப்படுத்தி பாவனா என்ற குழந்தையால் ஒன்று சேரும் ஆத்விக்=யஸ்தவி இருவரின் உள்ளத்து உணர்வு கதை. ராணி முத்து நாளிதழில் ஜூன் 16 அன்று வெளியாகியது.
47 விலகும் நானே விரும்புகிறேன்
நாயகன் நாயகி: அட்சரன்-மேகா
தனது கணவன் அட்சரனின் இன்பத்தை கெடுத்து,துன்பத்தை கொடுத்து ரசிக்கும் நயவஞ்சகன் யார் என அறியும் பொருட்டு கணவன் சொல்லவதை கூட பொருட்படுத்தாது சென்னை நோக்கி 5 பேர் குடியிருக்கும் நயவஞ்சகன் யாரென அறிய பக்கத்து வீட்டில் தூரத்து உறவில் இருக்கும் அண்ணன் வீட்டில் தங்கி அறிகின்றாள் மேகா.
யார் அந்த துரோகி? அவனுக்கு அட்சரன் கொடுக்கும் தண்டனை என்ன? மாத நாவல் புத்தகத்திற்கு அனுப்பி உள்ளேன்.
48. 90' பையன் 2 k பொண்ணு
நாயகன் நாயகி : ரிஷி வேந்தன்-ஷிவாலி
தலைப்பே சொல்லிவிடும் 90 கிட்ஸ் பையான ரிஷி வேந்தனுக்கு 2k பொண்ணான ஷிவாலிகக்கும் நடக்கும் போரும் பொறுமையும் கதை. நகைச்சுவை கலந்து குடும்ப கதை. கடைசியா சின்னதா சோசியல் messeage அவளோ தான். கியூட் லவ் எண்டர்டெயின்மெண்ட் ஸ்டோரி.
49. அவளைத்தேடி
நாயகன் நாயகி: தக்ஷன்-ஆருஷி
விடாது துரத்தும் ஒரு கனவை களைய வைக்க நாயகனை பலியிட துடிக்கும் நாயகி. பலியால் கனவு களையுமா? அல்லது நாயகன் மறு வழி வைத்து தனது உயிரை காத்திடுவானா? இருவருக்குள் காதல் வருமா அல்லது காதல் வந்தாலும் உயிரை பறிக்க என்னும் ஆரூஷியை கைபற்றுவானா? மர்மம் திகில் கலந்த சமூக கருத்து கொண்ட கதை.
50. இதயத்திருடா
நாயகன் நாயகி : மதிமாறன் -நற்பவி
உயிர் உருவியது யாரோ
கதையில் வந்த நற்பவி மாறன் இருவருக்குள் வரும் தென்றலான காதலும், சமூககருத்தும் சேர்ந்த குடும்ப கதை. ஹோட்டல் காரன் மற்றும் போலீஸ் பெண்ணும் மோதிக்கொள்ளும் கதைக்களம்.
-to be continue.. பிரவீணா தங்கராஜ் நாவல்கள் 51-56
கருத்துகள்
கருத்துரையிடுக