இறைவன் ஒருவனே !
எங்கு இருக்கிறாய் என்பார் விஞ்ஞான மேதை
எங்கும் இருக்கிறாய் என்பார் மெய்ஞான மேதை
எங்கும் இல்லை என்பார் அறியாமை பேதை
நீ படைத்த மனிதனுக்கு பலவித பெயர்
நீ இன்றி அசையாதோ உலகத்தில் உயிர்
நினைப்பது எல்லாம் நடந்தால் உனக்கேது பேர்
உன் அருளோ ஜாதி , மதம், பேதம் கடந்தது
உன்னையும் பிரிப்பது மனிதனின் முட்டாள் தனமானது
உண்மை அறிந்தேன் "கடவுள் ஒருவனே "என்று புரிந்தது
உன்னை என்னில் ஏழுத வைத்ததும் நீயே என விளங்கியது
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment