நீர்
நீர் நீ அல்லவா !
தீயினை தனிக்க வந்தவளே !
நீர் நீ அல்லவா !
தரணி எங்கும் செழிப்பை தர
தன்னை தருபவளே !
நீர் நீ அல்லவா !
அகிலத்தின் முப்பகுதி ஆள்பவளே !
நீர் நீ அல்லவா !
காலத்தின் கட்டாயத்தினால்
ஆண்டவன் அன்பாய்
அருளும் மழையும்
நீர் நீ அல்லவா !
பூமியில் மறைந்து
புதுமைதனை செய்து
புரட்சி புரிபவளே !
நீர் நீ அல்லவா !
மலைகளின் மகுடத்திலிருந்து
மண்ணில் தவழ
வரும் நதியே !
நீர் நீ அல்லவா !
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment