பஞ்ச தந்திரம்-16
பஞ்ச தந்திரம்-16 ஆறு மாத காலங்கள் கடந்தது. திரிஷ்யா பள்ளி வாளாகத்தில் அவளது குழந்தைக்காக காத்திருந்தாள். கோர்ட்டில் உதயிடம் அன்னையிடம் இருக்க போகின்றாயா? தந்தையிடம் இருக்க போகின்றாயா? என்று கேட்டதற்கு மழலை குரலில் "எங்கப்பா கூட" என்று கூறினான். அவ்விடத்திலேயே திரிஷ்யா உடைந்து போனவளாய் சுருண்டாள். கோர்ட்டில் தீர்ப்பு கூறும் போது மயக்கத்தில் ஆழ்ந்திருக்க, வெளியே வரும் போது தந்தையின் கைவளைவில் இருந்தான். கடைசியாக அருகே சென்று பேச முயன்றவளிடம், "ஐ ஹேட் மம்மி. நீ எனக்கு வேண்டாம்" என்று கூறி தந்தையை கண்டான் பாலகன். தந்தை கூறியதை அப்படியே ஒப்பித்தாயிற்றா என்று சரிபார்த்து கொண்டார்கள். 'அம்மா' என்ற அருகதை அற்றவளாக மாற்றிவிட்டார்களே என்று பரிதவிக்க, "அம்மா வாங்க போகலாம். உங்களோட சுதந்திர நாளை கொண்டாடலாம்" என்ற தனுஜா குரலால் உயிர்பெற்றாள். "வர்றேன் டா குட்டி" என்று மகிழ்ச்சி பொங்க கூறி "என்ன பார்க்கற பெத்த குழந்தையை நல்லவனா வளர்க்கறது பெரிய விஷயம். அதை விட பெறாத குழந்தையை பெத்த குழந்த