காதல் பிதற்றல் - 11 யார் சொன்னது

யார் சொன்னது மங்கையின் மான்விழிக்கு மட்டுமே மயக்கும் சக்தி உண்டென்று . உன் அடர்ந்த புருவம் ஒன்றே என் உறக்கத்தை பறித்து செல்ல போதுமானதென்று அறிவாயா ?! *** யார் சொன்னது பெண்மைக்கு மென்மை மட்டுமே பிடிக்குமென்று உன் வன்கரங்களில் தாமரை முகத்தை புதைத்திடவே பிடிக்குமென்பதை . *** யார் சொன்னது நீண்ட இடை தொடும் கூந்தலே வசீகரிக்குமென்று , உன் முன் நெற்றியில் வருடும் அடர்ந்த கேசம் போதும் என் மனதை பறித்து செல்ல ... *** - பிரவீணா தங்கராஜ் .