Posts

Showing posts from August, 2023

மர்ம நாவல் நானடா-1

            💙 மர்ம நாவல் நானடா 💙 மர்ம நாவல் நானடா கதை Pustaka தளத்திலும் amazon kindle தளத்திலும் இருப்பதால் இங்கே கதை நீக்கப்பட்டுள்ளது. pustka தளத்தில் புத்தகமாக வாங்கியும் ebook ஆகவும், kindle-லில் ebook வாசிக்கலாம்.     

யாரென்று யார் அறியும் முன்

Image
       யாரென்று யார் அறியும் முன்           இரயிலில் ஏறியதும் இருக்கையில் அமர தோதுவாய், ஈஸ்வரி ஏறியதும் கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு, கைப்பையில் இருந்த நீரை எடுத்து குடித்தார்.     தாகம் தீரவும் கைப்பையிலேயே வைத்துவிட்டு, பக்கத்து இருக்கையில் பெண்மணியை நோட்டமிட்டார். ஈஸ்வரிக்கு 56 வயது இருக்கலாம். அவர்களின் வயதிற்கு ஏற்றார் போல தோள்பை கண்ணாடி என்று இருந்தார். முகத்தில் தோள் சுருக்கம் மட்டும் சற்று குறைவாக இருந்தது.     இரயில் சிநேகிதம் என்பாரே அப்படி பார்த்ததும் சிரித்து முடிக்க, இருவரும் பரஸ்பரமாக முறுவல் புரிந்தனர்.     ''இந்த டிரையின் இன்னிக்கு காலியா இருக்கு. இப்ப தான் ஒரு டிரையின் போனதால ஏதோ இந்த டிரையின் காலி.. நமக்கு கொஞ்சம் நெருக்கடியில்லாம இருக்கு." என்று ஈஸ்வரி பேசவும், ஆமோதிப்பதாய் முன்பு போலவே புன்னகைத்தாள் பக்கத்து இருக்கை பெண்மணி.     "நீ வேலைக்கு போறியா மா?" என்று கேட்க, "இல்லிங்க ஹவுஸ் ஒய்ப்" என்று பேச்சை துவங்கினார்கள்.      "ஓ அப்படியா... நல்லது. நானும் வேலைக்கு போகலை. பகவதி பாபாவை பார்க்க போனேன்." என்றார் ஈஸ்வரி. தோள் பையும்

சக்தி

Image
                      சக்தி        இன்று திருமணம் முடித்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் யாவராக இருந்தாலும் கோவிலுக்கு செல்வார்கள். இல்லையேல்... ஹோட்டல், சினிமா, பீச், பார்க் என்று செல்லலாம். ஆனால் லீலா தற்போது வந்து நிற்குமிடம் தோழியான அட்வகேட் ஜெனியின் வீட்டில்.      "லுக் லீலா. கொஞ்சம் யோசித்து முடிவெடு. இப்ப வர்ற பெண்கள், தொட்டதுக்கு எல்லாம் டிவோர்ஸ் என்று நிற்கறாங்க. கொஞ்சம் விட்டு கொடுத்து பாரு. இன்னிக்கு இந்த முடிவு சரியா இருக்கலாம். ஆனா நாளைக்கு உனக்கு ஒரு துணையென்று தேடுறப்ப வெற்றிடமா இருக்கும். உங்கம்மா வேதராணி சொல்லறதை காது கொடுத்து கேளு. உங்க அத்தை புவனா உங்களுக்கு என்ன பிரச்சனையென்றாலும் அவங்களிடம் சொல்ல சொல்லறாங்க." என்று அட்வகேட் ஜெனிதா தோழியாகவே இப்பொழுதும் அறிவுரை கூறிமுடித்தாள்.     "இது நேத்து முடிவெடுத்து இன்னிக்கு சரியென்று இங்க வந்து நிற்கலை ஜெனி. யோசித்து தான் முடிவெடுக்கறேன் எடுக்கறேன். அவருக்கும் இதுல முழு சம்மதம் தான். நீ மேற்கொண்டு ஆகுற வேலையை பாரு" என்று கூறினாள் லீலாவதி.      சக்தியும் "எஸ் ஜெனி.. லீலாவதி விருப்பப்பட்டதை நிறைவேத்து

வலி உன்னை செதுக்கும் உளி

Image
             வலி           மருது எப்பவும் போல லுங்கியை கட்டிக்கொண்டு வாயில் ஹான்ஸை அதக்கி வைத்து கொண்டு, சட்டையை ஹேங்கரிலிருந்து எடுத்து மாட்டினான்.      சாவித்ரி பாத்திரம் துலக்கி கொண்டிருந்தவள், வேகமாக கையை துடைத்து கொண்டு, "என்னங்க பொண்ணுக்கு வாட்டர்பாட்டில் கீழே விழுந்து உடைஞ்சிடுச்சு. காசு வச்சிட்டு போ. வாட்டர் பாட்டில் வாங்கணும்.     இப்படியே டியூசனுக்கு போய் பிள்ளையை அழைச்சிட்டு வர்றப்ப இந்த பீடி ஹான்ஸு எதுவும் போட்டுட்டு வரக்கூடாதுனு டியூசன் பொண்ணு கண்டிப்பா சொல்லுச்சு.     தயவு செய்து அதை துப்பிட்டு மகளை அழைச்சிட்டு வா. இப்படியே போனா அந்த டியூசன் எடுக்குற நந்தினி பொண்ணு இனி உன்னை வரவேண்டாம் என்னை வந்து அழைச்சிட்டு போக சொல்லுது." என்று சாவித்ரி கூறவும் சட்டை பொத்தானை மாற்றியபடி இருந்த மருதுவோ மனைவியை ஏறயிறங்க பார்த்தான்.     "நான் பீடி புடிக்கிறேன், ஹான்ஸ் போடறேன். அதனால என் பிள்ளையை கூட்டிட்டு வரக்கூடாதா. என்னடி நியாயம். நான் என்ன எவனோ ஒருத்தனோட பொண்ணையா கூட்டியாற போறேன். என் பொண்ணு டி.     என்னை இப்படி வரக்கூடாது அப்படி வரக்கூடாதுனு எவ சொல்லறது?" என்று மரு

365 நாட்கள்

Image
            365 நாட்கள்    காலையிலேயே குளித்து முடித்து தனது இரண்டு மகளையும் பள்ளிக்கு அனுப்பிட தயாரானாள் ரேவதி.     சின்ன மகனை மட்டும் அழைத்து கொண்டு வேலை செய்யும் இடத்திற்கு செல்ல நேர்ந்தது.       அது குளத்தை சுத்தப்படுத்தும் பணி. நூறு நாள் வேலைக்காக வந்து சேர்ந்திருக்கின்றாள் ரேவதி. குழந்தையை மேட்டில் ஒரமாய் அமர வைத்துவிட்டு சேலை முந்தானையை நன்றாக இழுத்து சொருகினாள்.      குழந்தை மணற்மேட்டில் மண்ணை துழாவி கையில் உருட்டி வாயில் வைத்து முடித்தான்.     "ரேவதி உன் பையன் மண்ணு திண்ணுதே பாரு" என்றார் கூட பணிப்புரியும் சுந்தரி.    "அடவிடுங்கக்கா.. வீடும் மண்வீடு தான். அங்கயும் மண்ணை திண்ணுது. எத்தனை முறை தான் எடுத்துவிடறது. சாப்பிடுற சாப்பாட்டுலயே கல்லு கடக்கு. நம்ம வாழ்க்கையில கல்லும் மண்ணும் இருக்கறது தானே." என்று மண்வெட்டி கொண்டு தூர்வாறினாள்.     "ஏன் ரேவதி வூட்ல உன் புருஷன் இல்லை. யாரிடமாவது விட்டுட்டு வரலாம்ல. கைக்குழந்தையை போற வேலைக்கு எல்லாம் இழுத்துட்டு வர்ற. ஒரு நேரம் போல ஒரு நேரம் கெட்டது நடந்திடப்போகுது." என்றதும் ரேவதி குழந்தையை பார்த்து விட்டு, &

அகமா முகமா?

Image
                                   அகமா முகமா?     குழந்தைகள் வந்ததும் அவர்களை  கவரும் விதமாக ஆங்காங்க கார்டூன் பொம்மை உடையணிந்து  மனிதர்கள் அவ்விழாவிற்கு காத்திருந்தனர்.        குழந்தைகள் தினத்தை குதுகலமாக அவர்களுக்கு பிடித்த வகையில் அந்த அப்பார்ட்மெண்ட்டில் நடைப்பெற்றது.     மொத்த அப்பார்ட்மெண்ட் குழந்தைகளும் கலந்து பரிசை வெல்ல பல போட்டிகள் நடைப்பெற்றது.    குழந்தைகளுக்கு போட்டி மட்டுமா பிடிக்கும். அவர்கள் கார்டூன் உலகத்தின் மக்களையும் வரவைக்கவே அந்த அசோஷியேட் ஆட்கள் முடிவெடுக்க இதோ கார்டூன் உலகத்தின் ஆடையை மனிதர்கள் அணிந்து நடமாடி பார்க்கும் குழந்தைக்கு எல்லாம் கையை அசைக்க, குழந்தைகளோ ஆர்வமாக கை குலுக்குவதும், போட்டோ எடுப்பதுவுமாக இருந்தனர்.     உள்ளுக்கு அத்தனை புழுக்கம் ஏற்படும் அந்த ஆடை அணிந்தால், முகம் வேர்த்து வேர்வை தண்ணீர் சொட்டும் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை தனியாக சென்று அசுவசப்பட்டு கொள்வார்கள். சற்று நேரம் ஆளில்லை என்றால் கூட வரவேற்பில் இருக்கும் பணம் கொடுத்த ஆட்கள் "என்னப்பா வாங்கற காசுக்கு நிற்க வேண்டாமா" என்பார்.     "என்னப்பா... எங்க காலத்துல இருந்து இ

மர்ம நாவல் நானடா (completed)

Image
  மர்ம நாவல் நானடா EPISODE-1 மர்ம நாவல் நானடா EPISODE-2 மர்ம நாவல் நானடா EPISODE-3 மர்ம நாவல் நானடா EPISODE-4 மர்ம நாவல் நானடா EPISODE-5 மர்ம நாவல் நானடா EPISODE-6 மர்ம நாவல் நானடா EPISODE-7 மர்ம நாவல் நானடா EPISODE-8 மர்ம நாவல் நானடா EPISODE-9 மர்ம நாவல் நானடா EPISODE-10 மர்ம நாவல் நானடா EPISODE-11 மர்ம நாவல் நானடா EPISODE-12 மர்ம நாவல் நானடா EPISODE-13 மர்ம நாவல் நானடா EPISODE-14 மர்ம நாவல் நானடா EPISODE-15 மர்ம நாவல் நானடா EPISODE-16 மர்ம நாவல் நானடா EPISODE-17 மர்ம நாவல் நானடா EPISODE-18 மர்ம நாவல் நானடா EPISODE-19 மர்ம நாவல் நானடா EPISODE-20 மர்ம நாவல் நானடா EPISODE-21 மர்ம நாவல் நானடா EPISODE-22 மர்ம நாவல் நானடா EPISODE-23 (முடிவுற்றது) வாசித்தவர்களுக்கு நன்றி. உங்கள் கருத்தை கமெண்ட்ஸில் பதிவு செய்யலாம். முகநூலில் ரிவ்யு வழங்கலாம்.   

பஞ்ச தந்திரம்-17

Image
 பஞ்ச தந்திரம்-17      நைனிகாவுக்கு இரண்டாம் வருடம் துவங்கியது.      முதல் வருடம் பயின்ற போது மூன்றாம் வருட மாணவர்களும் இரண்டாம் வருட மாணவர்களும் அதிகபட்சமாக கேலி கிண்டல் செய்து ஓய்ந்திருக்க, தற்போது தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கின்றவளை யாரும் அதிகமாக சீண்டுவதில்லை.       ஏற்கனவே காதலனிடம் தான் கற்பை கொடுத்ததால் காதலித்து ஏமாந்தவளென்று சற்று நிலவரம் மாறியிருந்தது.    என்ன பெண் தோழிகள் சுத்தமாக இல்லை. உண்மையில் தோழமை என்று இல்லாமல் தனித்து இருந்தாள்.       நேரத்திற்கு கல்லூரி வருவதும், வகுப்பில் நுழைவதும், பாடத்தை கவனிப்பதும் என்று இருக்க சின்ன சின்ன பிரச்சனைகளை சந்தித்தாள்.          திரிஷ்யாவுமே விவாகரத்து ஆனவளென்ற அடைமொழியை சுமந்து, ஒரு பெண் குழந்தைக்கு தாயென்ற பதவியும் பெற்றாள்.      நைனிகா போல தோழமை இல்லாமல் இல்லை. சேல்ஸ் கேர்ள் என்பதால் பலரிடமும் பேசி பழகிட வேண்டிய கட்டாயம். திரிஷ்யாவும் பழக அஞ்சவில்லை. யாராக இருந்தாலும் எடைப்போட்டு பழகினாள்.      எல்லோரிடமும் கூடிய சீக்கிரத்தில் திரிஷ்யா நல்ல அறிமுகமானாள்.      கடையில் பொங்கல் கொண்டாட்டத்திற்கு தனுஜாவை கூட அழைத்து வந்தாள்

தித்திக்கும் நினைவுகள்-18 (முடிவுற்றது)

Image
  அத்தியாயம்-18 ஞாயிறு வர காரில் ஜோதி வேதா இருவருமே பேசியபடி வந்துகொண்டு இருந்தார்கள். எந்த பிரச்னையும் இல்லாமல் போய் வரணும் கடவுளே என்று வேண்டி கொண்டு ஓட்டினான். வீட்டில் நுழைந்ததும் '' என்னம்மா மண்டபம் பிடிக்கலயா ?'' என்றான். '' இல்லை கௌதம் அவங்க வீட்ல இன்னும் சில நெருங்கிய உறவுக்காரர்கள் முறிக்கிட்டு இருக்காங்களாம் அதனால் சிம்பிளா இருக்கட்டும் என்று வீட்டில் வச்சிகிட்டோம் '' என்றாள் சியாமளா. '' எத்தனை மணிக்கு விழா ?'' '' பதினோரு மணிக்கு இப்பதானே மணி எட்டு ஆகுது '' என்றதும் மாடிக்கு சென்றான். சனா வந்துவிட்டாளா ? இல்லையா ? என்று பரிதவித்தான். ஒரு வேலை தாமரை அத்தை நான் கண்டிப்பா வருவேன்னு சனாவை வராமல் செய்து விட்டார்களா ? '' எனக்கு ஒரு கைக்கு மருதாணி போதும் ஜோதி '' என்ற சனா குரல் கேட்க வேகமாக ஜன்னலில் சென்று எட்டி பார்க்க அவனுக்கு முகம் தெரியவில்லை ஆனால் அது தனது சனா என்று புரிந்தது. '' ஐயோ அண்ணி இரண்டு கைலயும் மருதாணி வைத்தால் தான் நல்லா இருக்கும் '' என்று வற்புறுத்தி மற்றொரு